– 2018 – June | தன்னம்பிக்கை

Home » 2018 » June

 
 • Categories


 • Archives


  Follow us on

  ஒன்று சேர்ந்து செயல்படு

  நான்கு எருதுகள் ஒன்று சேர்ந்து

  நன்கு மேய்ந்து வாழ்ந்ததும்

  பிரிந்து சென்று மேயும்போது

  சிங்கம் கொன்று தின்றதும்

  நாமறிந்த கதை யன்றோ

  நாளும் நினைவில் கொள்ளுவீர்!

  ஒன்றுசேர்ந்து செயல் படின்

  நன்று ஆகும் காரியம்

  பலரின் மூளைச் சிந்தனை

  பலரின் வேலைத் திறமைகள்

  ஒன்று பட்ட இலக்குடன்

  உழைக்க வெற்றி நிச்சயம்!

  பாடல் நன்கு பாடினும்

  பக்க வாத்தியம் வேண்டுமே

  ஆடல் நன்கு ஆடினும்

  அனைவர் உழைப்பும் தேவையே!

  தஞ்சை பெரிய கோவிலும்

  தாஜ்மஹால் கட்டலும்

  வந்த கதை தெரியுமா?

  வாய்த்த பலரின் கரங்களால்!

  தேனி கூடு கட்டலும்

  எறும்பு இரையை உருட்டலும்

  கூட்டு முயற்சி என்பதை

  கூறும் நல்ல செய்தியே!

  கூடி வேலை செய்திடின்

  புதிய ஆக்க சிந்தனை

  பொறுப்புணர்வும் வந்திடும்

  தரஉயர்வு செலவு குறைவு

  மனவுணர்வும் செழித்திடும்!

  ச. வெங்கடேஷ்,

  திருப்பூர்

  வெற்றியை வாழ்க்கையாக்கு

  இராம வேல்முருகன்

  வலகைமான்

  வாழ்க்கையின் பெரும்பாலான தருணங்கள் இப்படித்தான் அமையும்  ஒரு தேர்வு வெற்றி நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை ஒரு தேர்வில் பெறும் மதிப்பெண்கள்  நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில்லை . அவை நமக்கு சிறிது ஊக்கத்தை வேண்டுமானால் தரலாம் ஆனால் அவை வாழ்க்கை முழுவதும் நம்முடன் வாரா.

  பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர் தமிழகத்தின் முதல்வரான வரலாறெல்லாம்  நம் நாட்டில் நிறைய உண்டு. எனக்கு தெரிந்து பத்தாம் வகுப்பில் மூன்று முறை தோல்வியடைந்த ஒருவர் தற்போது கணிதப் பேரசிரியராக அரசு கல்லூரியில் பணியாற்றி வருகிறார். அவர் பத்தாம் வகுப்பில்  கணிதப் பாடத்தில் தோல்வியடைந்தவர். தோல்வியைக் கண்டு துவளாமல் படித்துத் தேர்ச்சியடைந்து எநடப் பாடம் தனக்கு வரவில்லையோ அதே பாடத்தில் இளங்கலை , முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டங்கள் பெற்று தற்போது மாதம் ஒரு லட்சம் ஊதியம் பெற்று வருகிறார். தோல்வியால் துவண்டிருந்தால் இன்று அந்த கணித ஆசிரியரை நாம் காணமுடிந்திருக்காது.

  இது போன்ற நிறைய உதாரண மனிதர்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். நாமும் அந்த மனிதராக மாற முயல வேண்டும். எது நம் குறிக்கோளோ அதில் விடாப்பிடியாக இருப்பது நல்ல விசயம் தான் .அதே நேரத்தில் அது ஏதோ ஒரு காரணத்தால் கை கூடாத போது வரும் வாய்ப்புகளை நமக்கு சாமகமாக்கிக் கொள்ள வேண்டும்.

  எனக்கு தெரிந்த மற்றொரு நண்பர் பள்ளி கல்லூரி காலங்களில் நன்கு படிப்பவர். ஆசிரியர் பயிற்சியில் சிறந்த மாணவராத் தேர்ச்சி பெற்று  அமைச்சர் கைகளில் விருது பெற்றவர். ஆனால் அரசின் கொள்கை முடிவுகளால் அவருக்கு ஆசிரியர் பணி கிடைக்கசவில்லை. தனியார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத் தேர்வுகளை எழுதி இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார். தற்போது பதவி உயர்வு பெற்று உயர் பதவியில் உள்ளார். ஆசிரியர் பெறும் ஊதியத்தைவிட அதிகம் பெறுகிறார். வரும் பணி எதுவெனினும் அதனை ஏற்றுக் கொண்டால் உயர்வு என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.

  எனவே நாம் வாழ்வில் வெற்றி பெறுவதை விட வெற்றிகரமான மனிதராக வாழ்வதே நன்று. சோர்வடையாத உழைப்பு, எதிர்பார்ப்பு இல்லாத செயல்பாடுகள் எதையும் நேர்மறை எண்ணத்தோடு பார்க்கும் தன்மை வரும் யாவற்றையும் நமக்கு சாதகமாக்கிக் கொள்ளும் பாங்கு இவையாவும்  நத்தை வெற்றிகரமான மனிதராக வாழ வழி அதைக்கும்.

  விடாமுயற்சியே விஸ்வரூப வெற்றி என்பார்கள். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் தெய்வருத்த கூலி தரும் என வள்ளுவரும், வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் என நவீனக் கவிஞர் ஒருவரும், முயற்சி திருவினையாக்கும் என்றும் முயலாதிருத்தல் இன்மை புகுத்திவிடும் என்றும் பொய்யில் புலவர் கூறியுள்ளார். வாழ்க்கையில் முன்னேற விடாமுயற்சி மிகவும்  அவசியம்.

  வருவதை ஏற்கும் மனப்பக்குவம் விடாமுயற்சியை விட மேலானது. முயற்சி செய்கிறோம் பலன் நாம் எதிர்பார்த்த  அளவு கிடைக்கவில்லை. உதாரணமாக தேர்வு எழுதுகிறோம் கடின உழைப்பு கொண்டு படித்து எழுதுகிறோம். தேர்வில் மதிப்பெண் நாம் எதிர்பார்த்த அளவு கிட்டவில்லை மதிப்பீடு செய்த ஆசிரியர் கூட கவனக்குறைவுடன் மதிப்பெண் குறைந்திருக்கலாம். அதற்காக நாம் சோர்வடைதலோ, விரக்தியடைதலோ கூடாது. அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்ய வேண்டும். அடுத்தக்கட்ட நகர்வுகளுக்குச் செல்ல வேண்டும். அடுத்த தேர்வை இன்னும் கூடுதல் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும். நிச்சயம் ஒரு நாள் பலன் கிட்டும்.

  நம்பிக்கையே வாழ்க்கை நாளை என்பது உண்டு என்று நம்பித்தான் இரவு தூங்கச் செல்கிறோம். வாழ்க்கை நிலையில்லாதது என்று தத்துவம் பேசிக்கொண்டால்  அது நம் வாழ்விலும் செயலிலும் எதிரொளிக்கும் நம்மால் முடியும் என்று எப்பொழுமும் நம்புவோம்.

  நம்மால் முடியாவிட்டால் யாரால் முடியும்

  இப்போது இல்லாவிட்டால் எப்போது முடியும்

  என்பன போன்ற வாசகங்களை நாம்  வசிக்கும் வீடு அலுவலகம் அறைகளில் நம் கண்களில் படும்படி ஒட்டி வைப்போம். தன்னம்பிக்கை  குறித்தச் செய்திகளை  பற்றி பேசுவோம். அது குறித்த வாசகங்களை நம் கண்களில் படும்படி வைத்திருப்போம் வாழ்வில் வெற்றி நிச்சயம்.

  அவநம்பிக்கை தரும் செய்திகளைத் தவிர்ப்போம். அவ நம்பிக்கை தரும் மனிதர்களை தவிர்ப்பொம். வரும் விளைவுகளின் இரண்டு பக்கங்களையும் பார்ப்போம். இரணஙடு பக்கங்கள்  வரும் போதும் எவ்வாறு அணுகலாம் என முன்கூட்டியே சிந்திப்போம். நாம் வாழ்வில் வெற்றிபெற விடாமுயற்சி தன்னம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணங்களே…

  உள்ளத்தோடு உள்ளம்

  ஒரு அழகிய ஜென் கதை

  தலைமைத்துறவி ஒருவர் உடலை விட்டு உயிர் போகும்  நிலையில் இருந்தார். அப்போது அந்த அவையிலேயே சிறந்த சீடன் ஒருவனை அழைத்து இந்த மடாலயத்திற்கு அடுத்த தலைமைத்துறவியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் இதனால் தூரத்தில் உள்ள சில மடாலயத்திற்குச் சென்று அங்கியிருந்து 100 சீடர்களை அழைத்து வாருங்கள் என்று அவரிடம் சொன்னார்.

  ஓரே தலைமைத்துறவி பதவி தான் அதற்கு எதற்கு 100 பேர் என்று யோசித்தார். இருந்தாலும் சொன்னது தலைமைத்துறவி அல்லவா? இதனால் எதிர்பேச்சு எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்றார்.

  போகும் பாதை கடுமையான பயணம், மலைகள், பள்ளத்தாக்குகள், மழை, வெயில், ஆபத்தான ஆறுகள் போன்றவற்றை கடக்க நேர்ந்தது. ஆனாலும் விடாப்பிடியாக செல்லும் தொலைவை சென்று அடைந்தார்.

  தலைமைத்துறவியின் சொல்லின் படி  100 சீடர்களைப் பெற்றுக் கொண்டு அங்கியிருந்து திரும்பினார். வரும் வழியில் ஒரு நாட்டில் போட்டி ஒன்றை அறிவித்திருந்தார்கள். அதில் வெற்றிப் பெறுபவர்களுக்கு பொன்னும் மன்னனின் பெண்ணும் பரிசாகத் தரப்படும் என்று கூறினார்கள். அதைக் கேட்ட 50 பேர் அங்கு சென்று விட்டார்கள். மீதி 50 பேருடன் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

  மற்றொரு நாட்டில் மன்னனுக்கு வாரிசுக்கு ஆள் தேடிக்கொண்டிருந்தார்கள்.  அதை கேள்விப்பட்டவர்கள் 25 பேர் சென்று விட்டார்கள். மீதியிருந்தவர்களும் நாங்கள் பிறகு வருகிறோம் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள். இதனால் ஏமாற்றத்துடன் தலைமைத்துறவியைச் சந்தித்தார்.

  அவரின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்த தலைமைத்துறவி நீ மட்டும் தான் இங்கு வருவாய்  என்று எனக்கு முன்கூட்டியே தெரியும் என்றார். அப்படி யென்றால் அடுத்த தலைமைத்துறவி யார் என்று கேட்டார் அவர்.

  அதற்கு நீதான் என்று பதிலளித்தார் தலைமைத்துறவி.

  இங்கு எல்லோரும் உயர்ந்த குறிக்கோளை நோக்கி தான் பயணிக்கிறார்கள் ஆனால் எல்லோரும் அதை அடைகிறார்கள் என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். போகும் பாதையில் முள்ளும் இருக்கும் மலரும் இருக்கும் அதை எல்லாம் யார் கடக்கிறார்களோ அவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள் என்பதைக் இக்கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

  பள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பழக்க வழக்கங்கள்

  இவ்வுலகில் நோயின்றி வாழ வேண்டுமானால் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வது அவசியமாகும். நல்ல பழக்கவழக்கம் என்பது தன் சுத்தம் பேணிக் காப்பதேயாகும். ஆரோக்கியமாய் வாழ்வதற்கு சுத்தமாய் இருப்பது அவசியமாகும். பொதுவாய் சுத்தமாய் இருத்தல் என்பது ஒருவர் தன் உடம்பை அதாவது தோல் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளான முடி, கால், கை, நகங்கள் மற்றும் வாயையும் சுத்தமாக வைத்திருப்பதாகும். குழந்தைப் பருவத்தில் எப்படி சுத்தம் செய்வது என்று அறியாமல் போகும் பொழுது பல துன்பங்கள், நோய்கள் வர நேருகிறது.

  சுத்தமாய் இருப்பதன் முக்கியத்துவம்

  • நல்ல ஆரோக்கியமான வாழ்விற்கு சுத்தமாய் இருத்தல் அவசியம்.
  • காலைச் சிற்றுண்டியை குழந்தைக்குக் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். எந்த ஒரு உணவு வேளைகளிலும் சாப்பிடாமல் இருக்க கூடாது.

  அரசாங்கம் மற்றும் ஒழுங்குமுறை

  அமைப்புகளின் பங்கு

  • ஆரோக்கியமான வாழ்க்கை முறை, மக்களுக்கு எடுத்துரைக்கும் சுகாதாரத் திட்டங்களை உருவாக்குதல்.
  • ஆரோக்கியமான உணவுப் பண்டங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அரசாங்க நிதி உதவி அளித்தல்.
  • உடற்பயிற்சி மற்றும் ஊட்டசத்து குறித்தத் திட்டங்களை ஊக்குவிக்கும் பள்ளிகளுக்கு நிதி உதவி அளித்தல்.
  • நடைபயிற்சி, மிதிவண்டி மற்றும் சீரான ஓட்டம் (ஒர்ஞ்ஞ்ண்ய்ஞ்) முதலியவற்றை ஊக்குவிக்கப் பாதை அமைத்து நிதி உதவி செய்தல்.
  • துரித உணவை ஊக்குவிக்கும் விளம்பரங்களைத் (முக்கியமாக குழந்தைகளைத் தாக்கும்) தடை செய்ய வேண்டும்.

  உடல் பருமனை கையாளுமுறை

  • பெரியவர்களுக்கு உடல்பருமன் பற்றிய விழிப்புணர்ச்சி கொடுப்பதைக் காட்டிலும் சிறு வயதில் இருந்தே விழிப்புணர்ச்சி கொடுக்க வேண்டும்.
  • உடல் பருமனைக் கையாள பயிற்சி பெற்ற மருத்துவர்களை அணுக வேண்டும்.

  சிகிச்சையில் இலக்குகள்

  மருத்துவ இலக்கு

  • மருத்துவ இலக்கின் முக்கியக் கொள்கைள் என்னவென்றால் பின் விளைவுகளைத் தடுப்பது.

  பழக்கவழக்க இலக்கு

  • உணவு பழக்கமுறை மற்றும் உடற்பயிற்சி பழக்கங்கள் சீராக இருந்தால் உடல்பருமனைத் தடுக்கலாம்.

  எடை இலக்கு

  • உடல் எடையை அடிக்கடி பார்க்க வேண்டும். ஆஙஐ யின் அளவை சரியான முறையில் வைக்க வேண்டும்.[hide]

  பொதுவான சிகிச்சைமுறைகள்

  • பொதுவான சிகிச்சை முறையில் பெற்றோர்கள் மற்றும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களை உட்படுத்த வேண்டும்.
  • உடல் பருமனைக் குறைப்பதற்கான வழிமுறைகளை விரைவாக தொடங்க வேண்டும்.
  • மருத்துவர்கள் பெற்றோர்களை ஊக்குவிக்க வேண்டும்.

  சிகிச்சையின் கொள்கைகள்

  • அதிக அளவு கலோரி நிறைந்த உணவுகள் உட்கொள்ளுவதைக் குறைக்க வேண்டும்.
  • உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
  • இருந்த இடத்தில் இருந்து வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சையில் பங்கு பெறவேண்டும்.
  • நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுத்துதல்

  தீவிர சிகிச்சை

  மருந்துகள் தவிர இந்த சிகிச்சையில் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் உறுதுணை அளிக்க வேண்டும். இவ்வாறு உறுதுணை அளித்தால் மட்டுமே உடல்பருமனைக் குறைக்க முடியும்.

  உடல்பருமனால் வரும் பின் விளைவுகள்

  • ஆஸ்துமா
  • நீரிழிவு நோய்
  • இரத்த அழுத்தம்
  • பித்தப்பை கற்கள்
  • இரத்த நாளங்களில் அடைப்பு
  • இருதய நோய்
  • மூட்டுகளில் தேய்மானம்
  • பெண்களுக்கு ஓவரியில் வீக்கம்
  • கல்லீரல் பிரச்சனைகள்
  • மனச்சோர்வு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.[/hide]

  இந்த இதழை மேலும்

  தடை அதை உடை

  வானத்தில் நிலாவும், நட்சத்திரங்களும் ஒரு காலத்தில் சந்தோசமாக இருந்தார்கள். இரவின் மடியில் வானத்துடனும், மேகத்துடனும் மனசு பேச முற்படும் போதெல்லாம், நமக்கு முன்னாள் நிலாவும் நட்சத்திரங்களும் கொஞ்சி குலாவி சந்தோசமாகப் பேசி சிரிப்பைக் காணமுடியும். அந்த அழகின் மகிழ்வின், நாம் பேச நினைத்ததை நம்மையும் அறியாமல் மறந்து போவோம். அப்படிபட்ட மகிழ்வில் திடீரென்று ஒரு நாள் பெரிய பூதம் வந்து, நான்கு நட்சத்திரங்களைப் பிடித்து சாப்பிட்டுவிட்டு சென்றுவிட்டது. அடுத்தடுத்த நாட்களில் பூதம் வருவதும், நட்சத்திரங்களை பிடித்து சாப்பிடுவதும் தொடர் கதையானது. என்னை பார்த்த நிலாவுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. மனதுக்குள் வலி வெளியே சொல்ல நாளுக்கு நாள் நட்சத்திரங்கள் வானில் வருவது குறைந்துகொண்டே இருக்கிறதே என்று நிலா ரொம்பவே கவலையானது. முடிவாக, இது தொடர்பாக சூரியனிடம் புகார் கூறியது. தினமும் இரவு நேரத்தில் பூதம் வந்து நட்சத்திரங்களைக் கொன்று தின்று விட்டு செல்கிறது. இது தொடர்ந்தால் வானம் இருட்டாகி விடும் வானம் ஜொலிக்கவே ஜொலிக்காது. இதை இப்படியே விட்டு விட்டால், எதிர்பாராத பேரழிவு ஏற்பட்டு விடும் என்று தன் உள்ளத்து குமுறல்களை எல்லாம் சொல்லி அழுதது நிலா .

  சூரியனும், நிலாவை சமாதானப்படுத்தியது. இது அப்படி நடக்காது, நான் பார்த்து கொள்கிறேன் என்று சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தது.

  இப்படி ஒரு கதை இருந்தால் இதற்கு என்ன முடிவு தரலாம்.அந்தச் சூரியன் என்ன நடவடிக்கை எடுத்திருந்தால், நட்சத்திங்களைச் சாப்பிடாமல் இருந்திருக்கும் என்பது ஒரு கற்பனை கதை.

  இந்தக் கதையில்… நாம் என்னவாக இருக்கிறோம்?  நட்சத்திரங்களாகவா? நிலாவாகவா? சூரியனாகவா? பூதமாகவா? என்று கேள்வி நீள்கிறது. யோசிக்க வேண்டிய தருணம் இது.

  நம் ஒவ்வொருத்தருக்குள்ளேயும் நட்சத்திரம் இருக்கிறது. சூரியன்   இருக்கிறது. நிலா இருக்கிறது. பூதமும் இருக்கிறது. நம்மில்  நினைத்துத்தான் நாம் பயந்துகொண்டே இருக்கிறோம். அந்தப் பூதத்திற்கு நாம் என்ன வேண்டுமானாலும் பெயர் வச்சுக்கலாம்.

  “சரியா நான் படிக்கவில்லை. சரியாக எனக்கு எழுத வராது. எனக்கு விளையாட்டுனா பயம். யாராவது ஆங்கிலம் பேசினாலே 10 அடி தள்ளி நிற்பேன்.மேடையில் சில பேரு பேசும் போது, நானும் இது மாதிரி பேசலானு நினைப்பேன்.ஆனால் நான் மேடையேறினால், தொடையெல்லாம் தானா நடுங்கும். அலுவலகத்தில் மேனேஜரைப் பார்த்தால் பயம். அரசியல்வாதிகளைப் பார்த்தால் பயம். அன்றாடம் நடக்கும் சமூக அவலங்களைப் பார்த்தால் பயம். சினிமாவுல, டிவியில பார்க்கிறசண்டை காட்சிகள்  எல்லாம் நம்ம விட்டிலும் நடந்துவிடு மோங்கிறபயம் என்று இப்படி நமக்குள்ள  பலவிதமான பூதங்கள் இருந்துகொண்டேதான் இருக்கிறது.[hide]

  இப்படி,  நமக்குள்ளே இருக்கக்கூடிய  இந்தப் பூதத்தை ஜெயிக்காமல் வானத்தில் நட்சத்திரமாய் பிரகாசிக்கவும் முடியாது. நிலாவாய் ஜொலிக்கவும் முடியாது.  சூரியன் மாதிரி ஆற்றலுடன் சுற்றி வரவும் முடியாது. முக்கியமாக அந்த பூதத்தை எப்படி ஜெயிப்பது, எப்படி எதிர்கொள்வது என்பதை, நமக்கு நாம் தான் அடையாளம் காண வேண்டும். இதற்கெல்லாம் வானிலிருந்து எந்த வான தேவதையும் இறங்கி வரப்போவதில்லை. ஜெயித்தப் பிறகு அதை விழவாகக் கொண்டாடும் நாம் தான் அதை அடைய வேண்டிய வழியையும் இடையில் உள்ள தடையை உடைக்கும் வலிமையை, வல்லமையையும் பெறவேண்டும்.

  இப்படி நம்மிடம் இருக்கக்கூடிய பெரிய  பூதம்  எதுவென்றால்  அது தயக்கம் மட்டும்தான். ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருப்பார்கள் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்பார். உடனே முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் துடுக்கான மாணவன் சட்டுனு எழுந்து பதில் சொல்வான்.ஆனால் அதே பதில் பின் வரிசையில் கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும்  மாணவனுக்கும் தெரிந்திருக்கும். ஆனால் நம்ம சொல்வது தப்பாகிவிடுமோ அதுதான் சரியான விடையாக இருக்குமோ ஆசிரியர் கோபப்படுவாரோ எல்லோர் முன்னாடியும் அசிங்கமா போயிருமோ அப்படிங்கிறதயக்கத்தின் காரணமாகவே பின் வரிசை மாணவன் வாழ்க்கை முழுவதும் பின்தங்கியே விடுகிறான். அங்கு உடைத்து எறிய வேண்டியது தயக்கத்தை தான். இன்று நாம் எந்த இடத்திற்குப் போனாலும் முதலில் நமக்குத் தடையாக இருப்பது வேறொன்றுமல்ல நமது உடலில் மனதில் சிந்தனையில் இருக்கக்கூடிய தயக்கம் மட்டும் தான்.அதை முதலில் தூக்கி எறிய வேண்டும்.

  அலுவலக நேர்காணலுக்கு பொது மேடையில் பேசுவதற்கு நாம் செல்கிறோம் என்றால் நமக்கு என்ன தெரிகிறதோ அதை முதலில் தைரியமாக பேச வேண்டும். நம்முடைய விசய ஞானத்தை விடவும் நாம் அணுகும் மனப்பான்மை அந்த இயல்புகள் தமக்கான வெற்றியை தேடித் தரும்.

  ஒரு நீச்சல் வீரன் தண்ணீரில் நீந்துவதற்காகக் குதித்துவிட்டு தயக்கத்துடன் பயத்துடன் கை கால்களை ஆட்டாமல் இருந்தால் அவன் என்னாவன்  அவன் வீரனாக இருந்தாளுமே முழ்கித்தான் இறப்பான்.இதுதான் நமக்கான எச்சரிக்கை.

  நம் தயக்கப்படும் ஒவ்வொரு கணமும் நம்மையே  அறியாமல் நம் கைகளை நாம் கட்டிக்கொண்டு வாழ்கை என்னும் கடலில் மூழ்கிவிடுகிறோம்.

  இங்கே உடைக்கப்பட வேண்டியது தடைகளை அல்ல, தயக்கத்தை.”

  தகர்போம்,

  வாழ்க்கையில் கரை சேர்வோம்!

  பிரகாசிப்போம்! ஜொலிப்போம்![/hide]

  இந்த இதழை மேலும்

  வெற்றியாளர்கள் நீங்கதான்!

  நீங்கள் ஒவ்வொருவரும் உலகுக்கு அல்ல ஊருக்கு அல்ல நாம் வாழும் வீட்டிற்கு கூட  அல்ல, அவரவர் உள்ளத்தில் தட்டி எழுப்பும் கனவு தேசத்திற்காவது ஹீரோவாகவோ அல்லது ஹீரோயினாகவோ திகழவேண்டும் என்றால் உங்கள் எண்ணம் எப்பொழுதும் உயர்ந்ததாகவே இருக்க வேண்டும்….. இதனை நீங்கள் உங்கள் வீட்டு கண்ணாடியில் முகம் பார்க்கும் பொழுது உணர முடியும்.

  நம் முகம் கண்ணாடியில் எவ்வளவு அழகாக தெரியவேண்டும் என விரும்புகிறோமோ அவ்வாறே நம் வாழ்க்கை முறையும் இருக்க வேண்டும்….. உலகிலேயே மிக சிறந்த வளமாகப் போற்றப்படும் மனிதவளம் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் நம் தேசம் இரண்டாவதாக இருந்தாலும் இளம் தலைமுறைகள் வாழும் இளம் தலைமுறைகள் வாழும் இணையற்ற தேசமாக நம் இந்திய தேசம் முதன்மையாக இவ்வுலகப் பந்தில் சுழன்று வருகிறது……

  தம் ஏவுகணை நாயகன் கலாம் கண்ட கனவு இந்தியா கூட இந்த நம்பிக்கையில் உதித்தது தான். அதனால் தான் கலாம் அவர்கள் கடைசி வரை மாணவர்களைத் தேடும் தலைவராக விளங்கியதோடு மட்டுமல்லாமல் மாணவர் சபையினிலே தம் இறுதி மூச்சிலும் சுவாசித்துவிட்டு சென்று இருக்கிறார். இம்மண்ணுலகை விட்டு விடை பெற்று செல்லும் போது வெறுமனே செல்ல வில்லை வல்லரசுக் கனவை  ஒவ்வொரு இடத்திலும் விதைத்துவிட்டு சென்றிருக்கிறார்.

  அடுத்ததாக இந்த உலகம் கொண்டாடிய ஆன்மிக ஞானி அமெரிக்க தேசத்தில் எம் சகோதர சகோதரிகளே என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க உரை நிகழ்த்திய சுவாமி விவேகானந்தர், இந்திய தேசத்தை வழிமையான தேசமாக மாற்றிக் காட்ட பொன்னையோ பொருளையோ என்னிடம் கொடுங்கள் எனக் கேட்கவில்லை…… வலிமையான நூறு இளைஞர்களை மட்டும் கொடுங்கள் இந்த தேசத்தை மாற்றி காட்டுகிறேன் என்றுதான் சொன்னார். அதனால் தான் அவர் இன்றளவும் இளைஞர்கள் கொண்டாடும் தலைவராகவும்,  இளைஞர்களைக் கொண்டாடிய தலைவராகவும் போற்றப்படுகிறார்.  அப்படிபட்ட வளமும் வலிமையும் கொண்டவர்கள் நீங்கள். உங்களுக்கு உடனடித் தேவை உங்களின் தேவையை உங்களது திறமையை ஒரே ஒருவரால் தான் புரிந்துக் கொள்ள முடியும். அந்ந ஒருவர் நீங்கள் தான்…..

  நவீன இந்தியாவின் சிற்பி எனப் போற்றப்படும் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படக்  காரணம் என்ன? அவர் குழந்தைகளது இருப்பை உணர்ந்து அவர்களது ஆற்றல் உணர்ந்து கடைசி வரை அவர்களைக்  கொண்டாடிய தலைவராக இருந்ததின் காரணமாகத் தான். இந்த உலகை காப்பாற்றநாம் போராட வேண்டியதில்லை.  பொருள் சேர்க்க வேண்டியதில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகளால் இந்த தேசத்தைப் புரட்டிப் போட வேண்டியதில்லை. பிறகு என்ன தான் செய்ய வேணடும் என அதிகம் யோசிக்காதீர்கள்.

  சிறிது கூட யோசிக்காமல் நீங்கள் ஒன்றேஒன்றைசெய்தால் போதும்.  ஆம் மழலைகளையும்,  மரங்களையும் இம்மண்ணில் நல்ல வண்ணம் விதைத்து விட்டால் போதும்….  இந்த பூமி தப்பித்துக்கொள்ளும். மரங்கள் தழைத்து இம்மண்ணைப் பாதுகாப்பது போல  மழலைகளை நல்ல வண்ணம் வளர்த்து விட்டால் இந்த பூமி புதிய  பூமியாக மலரும்….[hide]

  குழந்தைகளுக்கும் குமரர்களுக்கும் மட்டும் தான் இந்த கட்டுரை? எழுதபட்டதாக என யோசிக்காதீர்கள்… மாற்றத்தை விரும்பும் ஒவ்வொரு மானுடருக்குமானது இந்தக் கட்டுரை….

  இன்று வயதாலும் உடலாலும் வளர்ந்து நிற்கும் ஒவ்வொருவரும் குழந்தைப் பருவம், மாணவ பருவம், குமரப் பருவம் என்பதனை கடந்தே உலகில் உலவிக் கொண்டு இருக்கிறோம்…. ஆனால் மனதிற்கு வயது அதிகரித்துக் கொண்டே போகவேண்டும் என்னும் கட்டாயமில்லை குழந்தைதனம் நிரம்பிய எத்தனையே பெரியவர்களை நாம் கண்டுக் கொண்டு தான் இருக்கிறோம். என்ன சமுகத்திற்காக தன் குழந்தை தனத்தை மறைக்கத் தொடங்கி, தன் இயல்பை மறைக்கத் தொடங்கி, தம் இயல்பை மறைக்க தொடங்கிய பின்னர் மனிதநேயமும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கி விடுகிறது குழந்தைகளிடத்து தலைவர்கள் ஒழிந்து கிடப்பதை போல பெரியவர்கள் இடத்தில் குழந்தை தனமும் ஒழிந்து கிடக்கிறது அவற்றைத தட்டி எழுப்ப வேண்டும்….

  குழந்தை தனம் கொண்ட எம்..ஜி. ராமசந்திரன், குழந்தைகளை நேசித்த காமராசர் ஆதரவற்றகுழந்தைகளே தன் உலகம் என வாழ்ந்த அன்னை தெரசா இப்படி இயல்பைத் தொலைக்காமல் வாழ்ந்தவர்களெல்லாம்  மறைந்த பின்னரும் கூட மக்களின் மனங்களில் மாபெரும் தலைவர்களாக இன்னும் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றனர் என்பதை விட இனியும் வாழ்ந்து கொண்டு இருப்பர் என்பதே உண்மை.

  குழந்தையாய் இருந்த மனிதன் வளர வளர அவனது ஆடைகளின் அளவு மாறலாம் அதன் வண்ணம் மாறலாம். ஆனால் மாறாமல் வளர வேண்டியது தான் இந்த சமூகத்திற்கு பயன்படக்கூடிய சிறந்த மனிதநேயமும் சமூக அக்கறையும் கொண்ட மனிதனாக மலர்ந்து நிற்க வேண்டும் என்பதே ஆகும். அப்போதுதான் இந்த சமூகத்தில் வாசனை பொருந்திய மலரைப் போல வற்றாத ஜீவ நதி போல தொடர்ந்து நிலைத்த தன்மையுடைய மனிதனாக தடம் பதிக்கும் வாழ்க்கையை வாழ முடியும். நல்ல மனிதன் என்னும் பெயர் பெற்றவர்களால் மட்டுமே மாண்புறு தலைவனாக பரிமளிக்க முடியும்.

  இது சாத்தியமா? என ஆச்சிரயத்தோடு புருவம் உயர்த்தலாம்….. எப்படி என் போருக்கு எளிதான பதில் இதுதான். அடுத்தவர் இடத்தில் உங்களால் அன்பு காட்ட முடியும் என்றால் உங்கள் இடத்தில் அன்னை தெரசா இருக்கிறார். ஆயுதம் ஏந்துவோரிடம் பகைமை பாராட்டாமல் நட்பு பாராட்டும் அகிம்சை உங்கள் இடத்தில் உள்ளது என்றால் காந்தி இருக்கிறார். எத்துனை படை வரினும் எதிர்த்துனை படை வரினும் எதிர்த்து நிற்கும் நெஞ்சுரம் உங்களிடத்தில் இருக்கிறது என்றால் உங்களிடத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இருக்கின்றனர். இப்படியாக உங்களது குணாதிசியங்கள் ஒவ்வொன்றும் ஒரு தாய் தன் கருவறையில் குழந்தையை சுமப்பது போல பல ஆளுமைகளை சுமந்துக் கொண்டேதான்  பயணிக்கின்றனர்…

  உங்களுக்குள் இருக்கும் தேவையில்லாத பகுதிகளை ஒவ்வொன்றாய் களையத் தொடங்குங்கள் பின்பு உங்களுக்குள் இருக்கும் தலைவன் என்னும் சிற்பம் தானே வெளிப்படும். ஒன்றுமே  இல்லதா பாறைகள் கூட சூரியனின் ஒளிகற்றைகளை வாங்கி சந்திரனாய் ஒளி தரும் பொழுது உயிருள்ள உணர்வுள்ள நம்மால் ஏன் சந்திரனை விடவும் பிரகாசிக்க முடியாது.  உங்கள் கேள்வி புரிகிறது. எங்களுக்கான சூரியன் எங்கே? என்னும் கேள்வி புரிகிறது. பாறைகளுக்கு தான் சுடுகின்றசூரியன் தேவை…. பண்பாடு தெரிந்த மனிதர் நமக்கு நம்மை சுற்றி கிடைக்கின்ற அனுபவங்களும் நடக்கின்ற நிகழ்வுகளுமே நம்மை ஒளிரச் செய்யும் சூரியன்கள்….. அதே நேரத்தில் குழந்தைகளாய் இருப்போரும் மணவர்களாய் இருப்போரும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சுற்றத்தாரும் கொடுக்கும் உற்சாகவும் ஆதரவும் தான் ஒளிக்கீற்று….. அனுபவங்களைச் சரியாக பெரும் எவரும் தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் தேவையான நபரிடம் இருந்து பெரும் எந்தக் குழந்தையும் வருங்காலத்தை ஒளிரச் செய்யும் விண்மீன்களே

  விளையாடுதலில் வெற்றி பெறவேண்டும் என்னும் வேட்கையினையும் தோல்வியடையும் போது மீண்டும் வெற்றி பெறமுடியும் என்னும் உற்சாகம் கிடைப்பது போல வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் தன்னம்பிக்கையினையும் தளராமல் வளர்த்து வர வேண்டும்….. ஏனெனில் எல்லோருக்கும் தேவை ஒரு வெற்றி மட்டுமே. அது எப்போது வேண்டுமானாலும் கிடைக்கலாம். எல்லோரையும் போல கீழே விழுந்த ஆப்பிளை எடுத்து தின்றுவிட்டுப் போயிருந்தால் நியூட்டனின் புவிஈர்ப்பு விசை கிடைத்திருக்காது. எல்லோரையும் போல குளியல் தொட்டியில் குதித்துக் குளித்து விட்டு போயிருந்தால் ஆர்கிமிடிஸ் கோட்பாடு கிடைத்திருக்காது.

  உலக கண்டுபிடிப்புகளில் பெரும் பகுதியை தன் பெயரில் வைத்திருக்கும் எடிசனுக்கு ஒரு மின் விளக்கைக் கண்டறிய 1000 தோல்விகள் தேவைப்பட்டது. அந்த ஆயிரம் தோல்விகளும் அவர் பெற்றஅனுபவங்களை பாடமாக பத்திரப்படுத்திக் கொணடால் தான் கண்டுபிடிப்புகளின் கதாநாயகனாக எடிசன் இன்னும் திகழ்கிறார். தலைவராக இது தான் தகுதி என எதுவும் வரையரை கிடையாது. ஆண் பெண் பேதம் கிடையாது. ஏழை பணக்காரன் என்னும் வித்தியாசம் கிடையாது. மதம், இனம், மொழி என எதுவும் கிடையாது.  தன்னம்பிக்கையுடன் கூடிய உறுதியும் நேர்மையுடன் கூடிய இலட்சியமும் முயற்சியுடன் கூடிய பயிற்சியும் வரலாற்றைப் படிக்க மட்டுமல்ல நாளைய வரலாற்றில் இடம்பிடிக்கவும் நான் தயாராகவே இருக்கிறேன் என்னும் வேட்கை இருந்தால் ஒருவர் மட்டும் சாதனையாளர் அல்ல நாம் ஒவ்வொருவருமே சாதனையாளர்கள் தான்….

  என்ன தலைவராக முடிவெடுத்து விட்டீர்களா? எதை மாற்றவேண்டும் என யோசிக்காதீர்கள் நம்மால் எதையும் மாற்றமுடியும் என யோசியுங்கள்.  இலக்கு நோக்கி செல்ல வழி இல்லையே என எண்ணாதீர்கள். எல்லோரும் பின்பற்றத்தகுந்த பாதையை நீங்கள் உருவாக்குங்கள். அந்தப் பாதையில் முதலில் நீங்கள் பயணித்து இது எனக்கான பாதை மட்டுமல்ல முன்னேறிச்செல்ல வேண்டும் என்னும் எண்ணம் கொண்ட ஒவ்வொருவருக்குமான பாதை என இந்த அகிலத்திற்கு அறிவியுங்கள். உங்களுக்கான தலைவர் யார்? எனத் தேடாதீர்கள் நாளைய தேசம் காக்கப் போகும் தலைவர்கள் நீங்கள் தான் என நம்பிக்கை கொள்ளுங்கள்….

  என்ன தலைவரா? என அதிர்ச்சி அடையாதீர்கள். சக மனிதன் மீது அக்கறையும் வாழும் தேசத்தின் மீது பற்றும் கொண்டால் எவரும் தலைவரே உங்களை தகரம் என ஒரு போதும் எண்ணாதீர்கள். தகரங்கள் ஒரு பொழுதும் சுடுநெருப்பில் மீள்வதில்லை. வெப்பம் தாங்கும் தங்கங்கள் மட்டுமே சுடுநெருப்பில் இருந்து அழகிய ஆபரணங்களாய் உருபெறுகின்றன. வலிகளில் இருந்து வலிமை பெற்று சோதனைகளைக் கடந்து சாதனை படைத்து தேசம் காக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டால் ஹீரோவும் நீங்களே ஹீரோயினும் நீங்களே.[/hide]

  இந்த இதழை மேலும்

  எனிமாவும் நீள் ஆயுளும்

  இயற்கை மருத்துவ முறையின் அகிம்சை எனிமா எடுப்பதால் நம் குடலும், உடலும் சுத்தமாவதோடு நம் உடலின் உஷ்ணம் கணிசமாகக் குறைகிறது. நம் உடலின் உஷ்ணம் குறைவதால் நம் கல்லீரல் புத்துணர்வு பெறுகிறது. உடல் உஷ்ணமானச் சூழலில் நம் கல்லீரலின் நொதிகள் அழிந்து போகிறது என்று ஏற்கனவே நாம் பார்த்தோம். ஆகவே, கல்லீரலின் புரதம் மற்றும் கொழுப்புச் செரிமானம் சிறப்பாக நடக்க நாம் தினமும் எனிமா எடுப்பது நல்லது. அன்பு நண்பர்களே! எனிமா எடுப்பதால் நம் ஆயுள் எவ்வாறு நீட்டிக்கப்படுகிறது என்று இனிப் பார்ப்போம்.

  1. சக்தி செலவின்றி உடல்கழிவு நீக்கம்: கழிவு வெளியேற நம் உடல் சக்தி செலவு செய்ய வேண்டும். எனிமா எடுப்பதால் உடல் சக்தி செலவின்றி கழிவு வெளியேற்றம் நிகழ்கிறது. இதனால் நம் உடலின் சக்தி உள்ளுறுப்புகளை புத்துணர்வாக்க பயணப்பட்டு நம் ஆயுளை நீட்டிக்க உதவுகிறது.
  2. உடற்கழிவு நொதித்து கெடுவதற்கு முன் நீக்கம் செய்யப்படுகிறது: உடலின் கழிவு பெருங்குடலில் சேர்ந்தவுடன் நீக்கப்படுவதால் அது நொதித்து, புளித்து, நுரைத்து கிருமியை வரவழித்து உடல் நலனை சீர்கெட வைப்பதைத் தவிர்க்கிறது. இதனால் நோய்க்கு செலவிடும் சக்தி மிச்சமாகிறது.
  3. உடல் உஷ்ணம் தணிப்பு: பெருங்குடலின் இறுக்கம் தளர்த்தப்படுவதால் உடலின் கணிசமான உஷ்ணம் தணிக்கப்படுகிறது. இதனால், கல்லீரல் இரணம் தவிர்க்கப்பட்டு, புரதம் மற்றும் கொழுப்புச் செரிமானங்கள் சிறப்பாக நடைபெற்று ஆயுள் நீள வழியாகிறது.
  4. இலகுவான வாய்வு வெளியேற்றம்: நம் உடலில் வாய்வானது சிறு குடலில் அதிகமாக சிக்கியிருக்கும். எனிமா மூலம் பெருங்குடலின் கழிவு நீக்கப்படுவதால், சிறுகுடல் கழிவு இலகுவாகிப் பெருங்குடலில் இறங்கி வருகிறது. இதனால் சிறுகுடல் வாய்வும் நீக்கப்பட்டு மாரடைப்பு நிகழ்வுகள் தவிர்க்கப்படுகின்றன.
  5. நுரையீரல் சுமை குறைதல்: பெருங்குடல் இறுக்கத்திற்கும், நுரையீரல் செயல்திறனுக்கு சக்தியோட்டத் தொடர்பு இருக்கிறது. பெருங்குடலின் பாரம் குறைக்கப்படும்போது நுரையீரலின் செயல்திறன் சிறப்படைந்து ஆயுள் நீட்டிப்பு வாய்க்கிறது.
  6. சிறுநீரக பாரம் குறைதல் : கழிவு நீக்க வெளியிலிருந்து நீர் செலவு செய்யப்படுவதாலும், பெருங்குடல் குளிர்விக்கப் படுவதாலும் உடலின் நீர்த்தேவை கணிசமாகக் குறைக்கப்படுகிறது. இதனால், சிறுநீரகங்கள் வழியாக வெளியேற வேண்டிய நீரின் அளவு குறைந்து சிறுநீரக பாரம் குறைக்கப்படுகிறது.
  7. உடல் எடை குறைதல்: எனிமா எடுப்பதால் உடல் கழிவு நீக்கப்பட்டு எடை குறைப்பு நிகழ்கிறது. இதன் பயனாய் நம் உள்ளுறுப்புகளின் ஆயுள் நீட்டிக்கப்பட்டு நாமும் நீண்ட காலம் வாழ முடியும்.
  8. காய்ச்சல் மற்றும் சளி குறைதல்: காய்ச்சல் மற்றும் சளி அதிகமாக இருக்கும் போது எனிமா எடுத்தால் விரைவாக குணமாவோம். இதுவும் நம் ஆயுள் நீட்டிப்புச் செயலே ஆகும்.
  9. நாட்பட்ட நோய்கள் விரைவாக குணமாதல்: எனிமா எடுப்பதால் நோய் வளர்வதற்கான உடல் உஷ்ணம் மற்றும் உடற்கழிவு நீக்கப்படுவதால், நாட்பட்ட நோய்கள் விரைவாக குணமாக, நம் ஆயுளும் கூடும்.[hide]

  சரி, எனிமா எப்பொழுதெல்லாம் எடுக்க வேண்டும்? எனிமாவை தினமும் கூட எடுக்கலாம். நாம் காலை எழுந்தவுடன் காலைக் கடனை முடித்த உடன் நம் மலக்குடலை முழுமையாக சுத்தமாக்க எனிமா எடுக்கலாம். அதே போல் மலச்சிக்கல் காரணமாகக் காலைக் கடனை கழிக்க முடியாது போனாலும் எனிமா எடுக்கலாம். அதிகாலையில் பிரயாணம் மேற்கொள்வதற்கு முன்னரும், நீண்ட பிரயாணம் மேற்கொண்ட பின்பும் எனிமா எடுப்பது நல்லது. உடல் கலைப்புற்று சோர்வடையும் போது எனிமா எடுத்துவிட்டு ஓய்வெடுத்தால் விரைவாக புத்துணர்வு கிடைக்கும். எனிமாவை மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை எடுக்கக்கூடாது. காரணம் இந்த கால நேரத்தில்தான் பெருங்குடலானது ஓய்வெடுக்கும். இரவு படுக்கப்போகும் முன் எனிமா எடுக்கலாம். அப்படி எடுப்பதால் நல்ல தூக்கமும் ஓய்வும் கிடைக்கும்.

  எனிமா என்பது மலக்குடலைச் சுத்தப்படுத்தும்

  பின்விளைவற்ற நுட்பமாகும்.

  எனிமாவை தினமும் எடுத்தால் புத்துணர்வும்

  நீள் ஆயுளும் நமக்குக் கிடைக்கும்.[/hide]

  இந்த இதழை மேலும்

  தோல்வியைத் தவிர்த்து வெற்றி பெறுவது எப்படி?

  “தன்னுடைய தவறு எது என்று கண்டுபிடிப்பவன் வெற்றியின் முதல்படிக்கட்டில் கால் வைத்து விடுகிறான்”

  லத்தின் பழமொழி

  வெற்றி ஒரு தற்செயலான நிகழ்வு என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு தவறான எண்ணம்.

  வெற்றி தற்செயலாய் நிகழ்வதில்லை. ஒரு முடிவு எடுத்து அதை செயல்படுத்துவதன் மூலம் , நாம்தான் அந்த வெற்றியை நிகழ்த்துகிறோம். நம் வெற்றிக்கும் தோல்விக்கும் நாம் தான் பொறுப்பு.

  நமது மனதில் உண்டாக்கிக் கொள்ளும் தன்னம்பிக்கை எண்ணங்களும், நம் குறைகளை உணர்ந்து கொள்ளும் தன்மையும், நம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவைகளை அடையாளம் கண்டு கொள்ளுதலும் நம்மைத் தோல்வியிலிருந்து மீண்டு வெற்றியைப் பாதையை நோக்கி நகரச் செய்கிறது.

  ஒரு முயற்சியில் ஒருவர் தோல்வியடைவது என்பது பல காரணங்களினால் நிகழ்கிறது.

  தோல்விக்குரிய முக்கிய காரணங்கள்

  • அனுபவமின்மை
  • அனுபவம் பெற்றவர்களுடைய அறிவுரையைப் பெறாதிருத்தல்.
  • அவசரமான முடிவுகள்
  • அர்ப்பணிப்பு உணர்வு இன்மை
  • அனுசரித்துப் போகும் பக்குவமின்மை
  • ஆர்வமும், ஈடுபாடும் போதிய அளவு இன்மை
  • உடனிருப்போரின் ஒத்துழைப்பை சரியாகப் பெறாமலிருக்கும் தன்மை
  • எதிர் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் இருக்கும் போக்கு
  • ஒத்திப்போடும் மனப்பான்மை
  • ஒவ்வொரு பிரச்சனைக்கும் இன்னொரு பார்வை, இன்னொரு கோணம், இன்னொரு அணுகுமுறை , இன்னொரு செயல்முறை இருப்பதை அறியாது இருக்கும் தன்மை
  • கடின உழைப்பை மேற்கொள்ளாமை
  • காரண காரியமின்றி முன்கோபம்
  • சரியாக திட்டமிடாத தொடக்கம்
  • சரியில்லாத அணுகுமுறை
  • சரியில்லாத செயல்முறைகள்
  • சிறு சிறு தொய்வுகளை சரி செய்யாமல் சமாதானமாகிக் கொள்ளும் தன்மை
  • சிக்கல்களை எதிர்கொள்ளும் துணிவு இன்மை
  • சிக்கலை சமாளிக்கும் ஆற்றலின்மை
  • சுயபுத்தியும், சொல்புத்தியும் இல்லாமை
  • செயல்படுவதில் ஒருங்கிணைப்பின்மை
  • செயல்படுவதில் பேதிய வேகமின்மை
  • தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஒரு மேதாவித்தனம்
  • தன்னுடைய பலத்தையும், செய்யப்போகும் வினையின் பலத்தையும் தவறாகக் கணித்தல்
  • தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை
  • தன்னம்பிக்கையும், தைரியமும் இன்மை
  • நவீன தொழில் நுட்பங்கள் பற்றிய தெளிவின்மை
  • நெருக்கடி நேரங்களில் நிதானம் தவறும் தன்மை
  • புதிய யுக்திகளை பின்பற்றாமை
  • மாற்றி யோசிக்கும் மனப்பக்குவம் இன்மை
  • முனைப்புக் காட்டுவதிலே வேகக்குறைவு
  • முயற்சிகளில் சோர்வடைதல்
  • உற்சாகக் குறைவு

  இவைகளெல்லாம் தோல்விக்குரிய முக்கிய காரணங்களாக  அமைகிறது.[hide]

  தோல்வியைத் தவிர்க்கும் வழிமுறைகள்

  • எதிர்பாராததை எதிர்பார்த்தல்
  • 100% அர்ப்பணிப்பு உணர்வோடு இருத்தல்
  • குறைவில்லாத ஈடுபாட்டோடு இருத்தல்
  • காரியத்தின் மீது கண்ணாக கவனக்குறிப்போடு இருத்தல்
  • முயற்சியை இடையிடையே நிறுத்தாமல் இருத்தல்
  • உடனிருப்பவர்களின் உணர்வுகளை அறிந்து கொள்ளுதல்
  • உங்களுடன் இருப்பவர்கள் ஒரு சிலர் நேர்மறைவாதிகளாகவும், சிலர் எதிர்மறைவாதிகளாகவும் இருப்பார்கள். நேர்மறைவாதிகள் உங்கள் கருத்துக்கு துணையாக இருப்பார்கள். ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை உங்களுக்கு வழங்குவார்கள்.வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையை விதைப்பார்கள்.

  எதிர்மறை சிந்தனையுடையவர்கள் உங்கள் தன்னம்பிக்கையை குலைப்பார்கள். சந்தேகங்களை மனதிலே உண்டாக்குவார்கள். வரப் போகும் பிரச்சனைகளை பட்டியலிட்டுக் காட்டுவார்கள்.

  உடனிருப்பவர்களங உங்களுக்கு  ஒத்த குணம் கொண்டவர்களாகவும், தன்னம்பிக்கை ஊட்டுபவர்களாளவும் ,

  உங்களது முயற்சிகளை உற்சாகப்படுத்துபவர்களாகவும், ஆதரவு தருபவர்களாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் உங்களது பலம் இரட்டிப்பாகும்.

  நிறுவன கலாச்சாரத்தை உருவாக்குதல்

  தொழில் முனைவோர்கள் தங்கள் செயல்களாலும் நடத்தையாலும் தன்னை ஒரு நிறுவனத்தின் தலைவராக உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும். நான் சொல்வதைச் செய். ஆனால் என்னை போல் செய்யாதே என்ற தத்துவம் இங்கு பொருந்தாது. தங்களின் திறமைகளை முன்னிறுத்தி தாங்களே முன் மாதிரியாக இருந்து தொழில் சார்ந்த பிரச்சனைகளில் உற்பத்தி பெருக்கத்தில் சாதிக்க வேண்டும்.

  ஒரு பொருளின் மதிப்பையும் லாபத்தையும் உயர்த்தும் முறையை கண்டறியும் திறமையை மேம்படுத்திக் கெள்ளுதல் உங்கள் நேரத்தையும் பணத்தையும் தொழிலில் முதலீடு செய்யும் போது அந்த உற்பத்தியாகும் பொருள் மதிப்புமிக்கதாகவும் லாபம் ஈட்டுவதாகவும் இருக்கும் படி திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

  உற்பத்தி செலவைக் குறைத்து உற்பத்தியாகும் பொருளின் மதிப்பை கூட்டி லாபம் ஈட்டும் இலக்கை நிர்ணயித்து முயற்சித்தல் வேண்டும்.

  எது தேவையோ அதை உருவாக்குதல்

  சந்தையில் எந்த பொருள் அதிகமாக தேவைப்படுகிறதோ எந்த பொருள் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறதோ எது சந்தையில் அவசியமாக உள்ளதோ அந்த பொருளை உற்பத்தி செய்தால் லாபமாக இருக்கும். சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தன் உற்பத்தித் திறனை மாற்றும் சக்தியை வளர்த்தல் வேண்டும்.

  உற்பத்திக்கு முன்பாகவே விற்பனை யுக்தியை ஆரம்பித்தல்

  ஒரு பொருளை உற்பத்தி செய்யும் முன்பாகவே அந்தப் பொருள் பற்றிய விளம்பரத்தை அதிகப்படுத்தி மக்களிடையே ஆர்வத்தை தூண்டி வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தி எதிர்பார்பை உண்டாக்கி விற்பனை யுத்தியை ஆரம்பித்து கொண்டால் வெற்றி நிச்சயம்.

  சரியான அமைப்புக்களை உருவாக்குதல்

  உங்களுடைய நிறுவன மேம்பாட்டை சரியான துணை அமைப்புக்கள் இல்லாமல் மேம்படுத்த முடியாது. உற்பத்தியாகும் பொருளின் தரத்தை உயர்த்த வேண்டுமென்றால் உற்பத்தி முறையும் சரியாக இருக்க வேண்டும். விற்பனை முறையும் சரியாக இருக்க வேண்டும். வாடிக்கையாளரகளின் சேவை பிரிவில் இருக்கும் பணியாளர்களுக்கு அதற்கான முறையான பயிற்சியை அளிக்கவும் வேண்டும்.

  ஒரு அடையாளக் குறியீட்டை ஏற்படுத்திக் கொள்ளுதல்

  உங்களுக்குக்கென்று உங்களது திறமைகளை பறைசாறறுகின்ற உயர்ந்தது, தரமானது என்று பெயர் சொல்லக்கூடிய அளவு ஒரு அடையாளக் குறியீட்டை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். அதற்குரிய பெயரை பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும். அடையாளக்குறியீடு உள்ள பெயர் சந்தையில் மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும்.

  இவைகளெல்லாம் முயற்சிகளில் தொழிலில் தோல்வியைத் தவிர்க்கும் வழி முறைகள் ஆகும்.

  தோல்வியை ரசித்தேன்

  உன்னிடம் தோற்கும் போது

  என்று காதலிடம் சொல்லாம். ஆனால்

  முயற்சியில் தோற்கும் போது வாழ்க்கையை இழக்கிறோம்

  என்பதை உணர வேண்டும்.

  வாழ்க்கை வசப்பட வெற்றியை ரசித்து ருசித்துப் பாருங்கள்

  என்றும் எங்கும் எதிலும் வெற்றியின் வாசல்கள் திறக்கும்.[/hide]

  இந்த இதழை மேலும்

  சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்

  மனிதன், தன்னுடைய பிறப்பிலி ருந்து வாழ்க்கையின் இறுதி கட்டம் வரை அன்பு, பாசம், கருணை, மகிழ்ச்சி, துன்பம், பகை என்றபல்வேறு உணர்வுகளுக்கு கட்டுப்பட்டு வாழ்கின்றான். இவற்றுள் ‘பகை’ கொடிய நோய். பகைமையால் ஏற்படும் தீயன பற்றியும், பகைமையால் வரும் துயரை வெல்லும் முன்னெச்சரிக்கை பற்றியும் சிறு கதை மூலம் அறியலாம்.

  ‘பகைவன் என்றும் பகைவன் தான்’ அவன் மாறிவிடுவான் இல்லை மாறிவிட்டான் என்பது நாம் கொண்ட அறியாமை ஆகும். நாம் வளர்த்திய பகை நம்மிலும் வளரலாம், நம்மை சுற்றியும் வளர்ந்து நிற்கலாம். நம்மில் வளர்ந்து நிற்கும் பகை உயிர் நாடியை ஒருமுறைஆட்டி வடும். இதனையே வள்ளுவர்,

  ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்

  பொன்றாமை ஒன்றல் அரிது (குறள்: 886)

  என்ற பாடல் மூலம் விளக்கியுள்ளார். நம்மில் வளர்ந்த பகையும் நம்மை சுற்றியுள்ள பகையும் ஒன்றிர்கொன்று சளைத்தவை அல்ல. அதனால் பகைமைறைவள்ளுவர் ஒரு முள்மரம் என்றும், அதனை முட்செடியாக இருக்கும் பொழுதே களைத்து விட வேண்டும். அது முதிர்ந்து நின்றால் அதனை களைப்பவருக்கே பெரும் பாதிப்பாய் அமையும். ‘களைய வேண்டிய பகையை, அதன் தொடக்க நிலையிலேயே களைத்து விட வேண்டும். அக்கணமின்றி அது வலுத்தபின் பலர் கூடி தாக்கினாலும் அது தாக்குபவரையே அழித்து விடும்’ என்றார் வள்ளுவர்.

  காக்கைகளுக்கும் ஆந்தைகளுக்கும் நடந்த போர்:

  மகிழரோப்யம் என்ற ஆலமரம் ஒன்று நகரின் அருகில் இருந்தது. எண்ணற்கிளைகள் காக்கைகளின் உறைவிடமாக இருந்தது. மேகவர்னா என்ற காக்கையே அரசனாய் வலம் வந்தது. ஆலமரத்தின் அருகில் குகை ஒனறு இருந்தது. அதில் அரிமரதனா என்ற ஆந்தையின கீழ் ஆந்தைகள் கூட்டம் வாழ்ந்து வந்தது.

  ஆந்தைகள் ஒவ்வொரு நாளும் இரவில் காக்கைகள் வாழும் ஆலமரத்தை முற்றுகையிட்டு, அவர்களால் முடிந்த அளவு காக்கைகளுடன் சண்டையிட்டு கொன்று வந்தன. காக்கைகளுக்கு இரவில் பார்க்கும் சக்தியற்று, ஆந்தைகளை எதிர்க்க இயலாது அழிந்து வந்தன.

  மேகவர்னா, தன்னுடைய அமைச்சர் அவையில் இருக்கும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியது. ஆலோசர்களான உஜீவ், சஞ்ஜீவ், அநுஜீவ், பிரஜீவ் மற்றும் சிரஞ்ஜீவ் இவர்களை அழைத்து ஆலோசனை நடத்த ஐவரும் அவர்கள் திட்டங்களை கூறினர். உஜீவ் ‘பகைவர்களுடன் சமாதானமாய் போய்விடலாம்’ என்க, ‘அவர்கள் கொடூரமானவர்கள், சமாதானம் வேண்டாம். போராடுவோம்’, அநுஜீவ் ‘அவர்கள் போர் தர்மங்களை பின்பற்றமாட்டார்கள். அதனால் நாம் வேறு இடம் செல்வோம்’ என்றது. உடனே, பிரஜீவ், ‘வேறு இடம் சென்றால் திரும்ப இயலாது’ எனக் கூறவே, சிரஞ்ஜீவ் ‘நாம் நம் நண்பர்கள் உதவியை நாடலாம்’ என்றது.

  ஐவரின் ஆலோசனையும் பிடிபடாத மேகவர்னா, தன் தந்தையின் ஆவோசகர் ஸ்திரஜ்வின் உதவியை நாடியது. அக்காக்கை ‘மேகவர்னா! உன் ஆலோசகர்கள் கூறியவை தவறில்லை. நீதிக்கு உட்பட்டவை தான். ஆனால் இந்த சூழ்நிலையில் அது தீர்வாக அமையாது. நீ ஒற்றர்களை ஏற்பாடு செய். அவர்கள் மூலம் ஆந்தைகளின் பலவீனங்களை அறிந்து அழித்து விடு. என்னை அடித்து இரத்தம் வர இங்கு விட்டு வெளியேறி விடு. நான் அவர்கள் நல் மதிப்பை பெற்று அழிக்கும் வழியை கூறுகின்றேன். அதுவரை ரிஷ்யமுகம் மலையில் பதுங்கியிருங்கள்’ என்றது. ஸ்திரஜ் கூறியது போல் மேகவர்னா தன் இனத்தோடு வெளியேறியது.[hide]

  ஸ்திரஜை அடித்து இரத்தத்தை உடலில் தேய்த்து அங்கு எறிந்து விட்டு சென்றன காகங்கள். ஸ்திரஜ் அடிபட்டிருப்பதை அரிமரதனா ஒற்றர்கள் கூறியதும் அங்கு இரவில் வந்த ஆந்தைகள் ஆலமரத்தின் அடியில் வீழ்ந்து கிடந்த ஸ்திரஜை காத்தனர். ஸ்திரஜ், அரிமரதனாவை உலகத்தில் பெரும் நல்லவன் என்றும், மேகவர்னாவை மிக கொடியவன் என்றும் கூறியது. தான் குணமானதும் அவர்கள் இருக்கும் இடத்தை கூறுவதாய் கூறவே,  ஒற்றர்கள் கூறியது உண்மை என்று அரிமரதனா ஸ்திரஜை நம்பி குகைக்கு அழைத்து சென்றது. தான் குகைக்கு வெளியே கூடு அமைத்து தங்குவதாய் கூறியது. அதனை நம்பி வெளியே காய்ந்த இலைகளை கொடுக்க ஸ்திரஜ் குகையை மூடும் அளவிற்கு பரப்பியது. ஆந்தைகள் சில பறந்து வேறு இடம் சென்றன.

  ஸ்திரஜ், சமயம் அறிந்து ரிஷியமலைக்கு சென்று மேகவர்னாவையும் காகங்களையும் அழைத்து வந்தது. கம்பங்களில் தீயை பற்றி, காய்ந்த இலைகளில் வைத்தன. இதனை அறியாத ஆந்தைகள் தீயில் கருகி இறந்தன.

  பாம்பின் வேடம்:

  இரை தேடி, உணவு உண்டு வாழும் பாம்பு ஒன்றிற்கு வயதாகி விட்டதால் நகர மிகவும் சிரமம் கொண்டது. இரை இன்றி மெலிந்த பாம்பு ஒரு உக்தியை கை கொண்டது.  கிணற்றில் வாழும் தவளைகளை நோக்கி சென்று சோர்வோடு படுத்து கொண்டது. அதனை பார்த்து பயந்த தவளைகள் பாம்பு சோர்வோடு இருப்பதை கண்டு அதன் அருகே சென்றன.

  “ஏன் சோர்வாய் இருகின்றாய் உனக்கு என்ன நடந்தது” என்று கேட்கவே, பாம்பு தன் திட்டத்தை செயல் படுத்த துவங்கியது.

  “நான் ஒரு பிராமிணன் ஒருவனை கடித்து விட்டேன். அவன் எனக்கு சாபம் இட்டு விட்டான். தினமும் தவளைகளுக்கு சேவை செய்ய கூறி சபித்து விட்டான்” என்று கூறவே அதனை முழுவதும் நம்பியது தவளைகளின் தலைவன்.

  நீ தினமும் எங்களை உன் முதுகில் சுமந்து செல்” என கூறவே பாம்பு தன் திட்டம் வென்றதாய் எண்ணி சுமந்து சென்றது. பசியை பொறுக்காத பாம்பு, தவளையின் தலைவனிடம்  “நான் தினமும் மற்ற தவளைகளை சுமக்கின்றன். வயதானவன் நான் உணவிற்கு எங்கு செல்வது. எனக்கு தவளை ஒன்றை உணவாக அளித்து விடுங்கள்” என்று கேட்க தவளையின் தலைவன் “தினம் நீ ஒரு தவளையை உண்டு கொள்” எனறது. காலம் நகர தவளைகள் குறைந்தன. வயதான பாம்பு நன்றாக வளர்தியது உடலை. நல்ல பாம்பு ஒன்று அதன் உக்தி புரியாமல்   அதனிடமே உண்மை அறிய கேட்டது. “தவளைகள் அனைத்தும் வேறு வேறு சுவையில் உள்ளன.நான் அவைகளை தினமும் ஒவ்வொன்றாக உண்டு வாழ்கின்றேன்” என்றது. நல்ல பாம்பு அந்த கிணற்றில் வாழ்ந்த அனைத்து தவளைகளையும் அதில் வாழ்ந்த பாம்புகளையும் கொன்று தின்றது.

  மேற்கண்ட இரண்டு கதைகளிலும் தன் பகைவர்களின் பொய் மொழி கேட்டு தவளையின் தலைவன் தன் இனமே அழிய காரணமாய் நின்றது. தன்னை விட பலமற்றவர்கள் உக்தியில் விழுந்த ஆந்தை தானும் தன் இனமும் தீயில் கருகி இறக்க காரணமாய் நின்றது. பகைவர்கள் என்றும் பகைவர்கள் தான் நண்பர்களாக மாட்டார்கள் என்பதை மறந்தனர். பகைவனின் நயமான பேச்சை கேட்காது, அவர்கள் என்றும் பகைவர்கள் தான் என்பதை மறவாது நான் எப்பொழுதும் விழிப்புடன் செயல்பட வேண்டும். எந்த ஒரு தொழிலும் பகைவன் இருப்பான். அவனுடைய பலம் பலவீனங்கள் அறிந்து அதற்கு தகுந்தாற்போல் தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். பகைவனின் நட்பை முளையிலேயே கிள்ளி எறிபவனே வாழ்க்கை என்னும் வீதியில் தன்னம்பிக்கையோடு பயணிப்பான்.

  தொடரும்.[/hide]

  இந்த இதழை மேலும்

  முயன்றேன் வென்றேன்

  இர. பிரேம் ஆனந்த்

  தமிழ் ஆசிரியர், நாகர்கோவில்

  இறைவன் கொடுத்ததை பகிர்ந்து கொள், பதுக்கி கொள்ளாதே!” என்று நாட்டிற்கு எடுத்துரைத்த, பிரேம் ஆனந்த்யுடன் ஒரு சிறு சந்திப்பு.

  இயற்கை அழகு பூத்து குலுங்கும் இந்த தமிழகத்தில் நெல்லை மாவட்டம் தென்காசியில் ஜீன் மாதம் ஒன்றாம் நாள் 1985 இல் இரவி மற்றும் அழகுபார்வதிக்கு பிறந்தேன்.  நான் என் வாழ்வின் தொடக்கத்தை சிறு எதிர்பார்ப்பற்று துவங்கினேன். தென்காசிக்கு அன்மையில் உள்ள மின்னடிச்சேரி துவக்கப் பள்ளியை சேனைத் தலைவர் துவக்கப்பள்ளியில் பயின்றேன். என் நண்பர்கள் என் படிப்பிற்கு பெரிதும் உதவினர்.

  என் படிப்பிற்கு மட்டுமல்ல அனைத்திற்கும் எனது பொற்றோரும் நண்பர்களுமே உதவினர். என் இரு தம்பிகளும் தங்கையுமே என் பெரும் நம்பிக்கை. என் படிப்பின் காலங்களில் என் பயணம் ஆட்டோக்களில் தான் என்னை சில வேளைகளில் நண்பர்கள் அவர்களின் இருசக்கர வாகனங்களில் அழைத்து சென்றனர். எனது படிப்பு மேற்கொண்டு நேரு மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்தேன்.

  எனக்கு சிறு வயதிலிருந்தே தமிழ் மீது பற்றுதல் அதிகம். தமிழ் உணர்ந்து பல அர்த்தங்களை தருவதாய் தோன்றும். அதன் காரணமாக நான் தமிழில் உள்ள உள்யுணர்வினை எடுத்துணர்த்த வேண்டும் என்று கிரிஷ்ணாராஜா நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சியை பட்டயமாக அமைய எண்ணி தமிழையே கற்றேன்.

  பல மேதைகளை சுயநலமின்றி பெறும் அறிஞர்களாக மாற்றும் பணியான ஆசிரியர் பணியை நாகர்கோவிலில் உள்ள அருமநல்லூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றுகின்றேன்.

  என் வாழ்வில் பெரும் மாற்றம் என்றால் நான் ஆசிரியராக பணியாற்றியது தான். என் வாழ்வில் நான் என்றும் மறக்க இயலாத நிகழ்வு என்றால் என் பள்ளி தோழர்கள் உதவியது தான். அவர்களின் உதவியால் மட்டும் தான் இவ்வுயரத்தை அடைந்துள்ளேன். சுரேஸ் சந்தரனும் தோழர் கந்தன் இருவரும் தான் என்னை அவர்கள் இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றனர். என் துவக்கப்பள்ளி ஆசிரியர் ஜெயந்தி நாயுகாரி தான் என் தமிழ் ஆர்வத்தை தூண்டினார். அவரது உந்து சக்தியால் தான் நான் தமிழ் எடுத்து பயின்றேன்.

  தமிழில் நான் இளம் வயதிலிருந்தே கவிதை எழுதும் ஆர்வம் உண்டு. என் நண்பர்களின் தூண்டுதலினால் நான் அதிகமாக எழுத துவங்கினேன். நான் ஆசிரியர் பட்டைய பயிற்சியை படிக்கும் போது என் நண்பர் ஜான்பால் அவர்கள் தான் எனக்கு பெரும் உதவியாய் இருந்தார். இவர் எனக்கு மற்றோரு அம்மா, அப்பா போல் தான். இன்று அவர் புதுக்கோட்டையில் ஆசிரியராக பணியாற்றுகின்றார்.[hide]

  “எவ்வுறவும் எனைவிட்டு பிரிந்தாலும்

  பிரியாமல் என்னருகினில் நீயிருந்தால்

  அகிலமாவும் வென்றிடுவேன் நின்

  அன்பான ஆசியினாலே…!” என்றஅம்மாவின் தூய அன்பை போற்றியதால் என் மனம் பெறும் சிகரத்தை தொட்டது.

  “தங்களையும் தனக்கான ஓர் அன்னை

  தான் அன்பான அண்ணன்களுக்கு…!” என்று தங்கை அன்னை ஒப்பிட்டு பார்த்து பேசியதில் பலர் அன்பை பெற்றேன்.

  எக்காரியம் செய்யினும் விரைவாக முடிக்க வேண்டும் வைத்திருந்து பார்த்து கொண்டிருந்தால் நேரம் தான் விரையமாகும். நமக்கு ஏற்படும் பிரச்சைனைகள் அனைத்தும் சூரியக்கதிர் பட்ட பனிப் போல மறைந்து போகும். நின்று உன்னை வாட்டும் நீ அதனை மறக்கும் வரை. இக்கால இளைஞர்கள், பெரிதும் பொழுது போக்குகளிலேயே ஈடுபடுகின்றனர். அந்த ஈடுபாட்டை சிறிது பாடத்திலும் கவனம் செலுத்தினால் நன்மையாக அமையும்.

  இன்றைய சூழலுக்கு கல்வி திட்டம் சிறந்தது தான். ஆனால் இன்னும் பல மாற்றங்களை கொண்டு வருதல் நல்லது. தனியார் பள்ளியிலுயுள்ள திட்டங்கள் அரசு பள்ளிகளி லும் வரும் போது சோர்க்கை அதிகமாகவும்.

  “மண்ணிற்குள் மண்டிக்கிடக்கும் வரை

  யாருக்கும் தெரிவதில்லை

  வெளிவரவிருப்பது முட்புதரா

  பயன் தரும் தருவாயென்பது…!”  என்பது தான் இன்றைய இளைஞர்களின் நிலையாக உள்ளது. அவர்களாக இது வரை வெளிவரவில்லை. இதற்கு மேல் அவர்கள் வெளிவரும் போது வேறு புது சமுதாயம் உருவாகும்.

  இன்றைய இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவது இணையதளத்தில் தான். அனைத்து விதமான எளிய செயல்முறைகளிலும் ஓர் தீமை இருக்கும். இணையத்தில் ஒரு தீமை என்றால் இளைஞர்களை எளிதில் அதற்கு அடிமையாக மாறிவிடுகின்றனர். இது தான் இளைஞர்களின் வளர்ச்சியை பின்னோக்கி நகர்த்துகின்றது.

  போதை பழக்கம் தான் நாட்டின் தன்னிலையை அழிகின்றது. பெரும் சீர்கேடாய் மது உள்ளது. இதனை விரைவில் ஒழிக்கவேண்டும். பள்ளி குழந்தைகளுக்கு கொடுத்தலை நிறுத்த வேண்டும்.

  என்னுடைய வாழ்வின் இறுதிவரை நான் எனது ஆசிரியர் பணியை திறன்பட செய்தல் வேண்டும் என்பது தான் என் ஆசை.

  பெண்களுக்கு நடக்கும் எதிரான வன்முறைக்கு அவர்கள், அவர்களுக்கு தான் உதவி. ஆயுதங்களை மறைத்து எடுத்து செல்ல வேண்டும். தன்னம்பிக்கை என்னும் பெறும் ஆயுதத்தை எடுத்து நாம் முன்னேறவேண்டும்.

  தொன்னூறுகளில் விட இன்று தமிழின் ஆர்வம் குறைந்து தான் உள்ளது. ஆங்கில வழி கல்வி தான் மேலை நாடுகளுக்கு செல்ல உதவும் என்றமனநிலையை மாற்றவேண்டும். தமிழ் வழி கல்வி கற்றவர்களும் மேலை நாடுகளுக்கு செல்ல இயலும். என்னுடன் பகின்றவர்கள் பலரும் அங்கு பணிபுரிகின்றனர்.[/hide]

  இந்த இதழை மேலும்