Home » Articles » முயன்றேன் வென்றேன்

 
முயன்றேன் வென்றேன்


ஆசிரியர் குழு
Author:

இர. பிரேம் ஆனந்த்

தமிழ் ஆசிரியர், நாகர்கோவில்

இறைவன் கொடுத்ததை பகிர்ந்து கொள், பதுக்கி கொள்ளாதே!” என்று நாட்டிற்கு எடுத்துரைத்த, பிரேம் ஆனந்த்யுடன் ஒரு சிறு சந்திப்பு.

இயற்கை அழகு பூத்து குலுங்கும் இந்த தமிழகத்தில் நெல்லை மாவட்டம் தென்காசியில் ஜீன் மாதம் ஒன்றாம் நாள் 1985 இல் இரவி மற்றும் அழகுபார்வதிக்கு பிறந்தேன்.  நான் என் வாழ்வின் தொடக்கத்தை சிறு எதிர்பார்ப்பற்று துவங்கினேன். தென்காசிக்கு அன்மையில் உள்ள மின்னடிச்சேரி துவக்கப் பள்ளியை சேனைத் தலைவர் துவக்கப்பள்ளியில் பயின்றேன். என் நண்பர்கள் என் படிப்பிற்கு பெரிதும் உதவினர்.

என் படிப்பிற்கு மட்டுமல்ல அனைத்திற்கும் எனது பொற்றோரும் நண்பர்களுமே உதவினர். என் இரு தம்பிகளும் தங்கையுமே என் பெரும் நம்பிக்கை. என் படிப்பின் காலங்களில் என் பயணம் ஆட்டோக்களில் தான் என்னை சில வேளைகளில் நண்பர்கள் அவர்களின் இருசக்கர வாகனங்களில் அழைத்து சென்றனர். எனது படிப்பு மேற்கொண்டு நேரு மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்தேன்.

எனக்கு சிறு வயதிலிருந்தே தமிழ் மீது பற்றுதல் அதிகம். தமிழ் உணர்ந்து பல அர்த்தங்களை தருவதாய் தோன்றும். அதன் காரணமாக நான் தமிழில் உள்ள உள்யுணர்வினை எடுத்துணர்த்த வேண்டும் என்று கிரிஷ்ணாராஜா நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சியை பட்டயமாக அமைய எண்ணி தமிழையே கற்றேன்.

பல மேதைகளை சுயநலமின்றி பெறும் அறிஞர்களாக மாற்றும் பணியான ஆசிரியர் பணியை நாகர்கோவிலில் உள்ள அருமநல்லூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றுகின்றேன்.

என் வாழ்வில் பெரும் மாற்றம் என்றால் நான் ஆசிரியராக பணியாற்றியது தான். என் வாழ்வில் நான் என்றும் மறக்க இயலாத நிகழ்வு என்றால் என் பள்ளி தோழர்கள் உதவியது தான். அவர்களின் உதவியால் மட்டும் தான் இவ்வுயரத்தை அடைந்துள்ளேன். சுரேஸ் சந்தரனும் தோழர் கந்தன் இருவரும் தான் என்னை அவர்கள் இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றனர். என் துவக்கப்பள்ளி ஆசிரியர் ஜெயந்தி நாயுகாரி தான் என் தமிழ் ஆர்வத்தை தூண்டினார். அவரது உந்து சக்தியால் தான் நான் தமிழ் எடுத்து பயின்றேன்.

தமிழில் நான் இளம் வயதிலிருந்தே கவிதை எழுதும் ஆர்வம் உண்டு. என் நண்பர்களின் தூண்டுதலினால் நான் அதிகமாக எழுத துவங்கினேன். நான் ஆசிரியர் பட்டைய பயிற்சியை படிக்கும் போது என் நண்பர் ஜான்பால் அவர்கள் தான் எனக்கு பெரும் உதவியாய் இருந்தார். இவர் எனக்கு மற்றோரு அம்மா, அப்பா போல் தான். இன்று அவர் புதுக்கோட்டையில் ஆசிரியராக பணியாற்றுகின்றார்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2018

உள்ளத்தோடு உள்ளம்
பள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பழக்க வழக்கங்கள்
தடை அதை உடை
வெற்றியாளர்கள் நீங்கதான்!
எனிமாவும் நீள் ஆயுளும்
தோல்வியைத் தவிர்த்து வெற்றி பெறுவது எப்படி?
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
முயன்றேன் வென்றேன்
வாழ்வை வளப்படுத்தும் தத்துவங்கள்
எங்கிருந்து வர வேண்டும் மாற்றம்
வாழ்வின் இலக்கு
தேர்வும் பேராறும் நட்பும் பாலமும்
வாழநினைத்தால் வாழலாம்- 17
முயற்சியே முன்னேற்றம்
மனிதத்தை புனிதமாக்கும் ஸ்டெம் செல் தானம்
வெற்றி உங்கள் கையில் 54
வெற்றியை வாழ்க்கையாக்கு
தன்னம்பிக்கை மேடை
இடைவிடாத முயற்சி! வாழ்க்கையில் மகிழ்ச்சி!!…