Home » Articles » சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்

 
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்


கிரிஜா இராசாராம்
Author:

மனிதன், தன்னுடைய பிறப்பிலி ருந்து வாழ்க்கையின் இறுதி கட்டம் வரை அன்பு, பாசம், கருணை, மகிழ்ச்சி, துன்பம், பகை என்றபல்வேறு உணர்வுகளுக்கு கட்டுப்பட்டு வாழ்கின்றான். இவற்றுள் ‘பகை’ கொடிய நோய். பகைமையால் ஏற்படும் தீயன பற்றியும், பகைமையால் வரும் துயரை வெல்லும் முன்னெச்சரிக்கை பற்றியும் சிறு கதை மூலம் அறியலாம்.

‘பகைவன் என்றும் பகைவன் தான்’ அவன் மாறிவிடுவான் இல்லை மாறிவிட்டான் என்பது நாம் கொண்ட அறியாமை ஆகும். நாம் வளர்த்திய பகை நம்மிலும் வளரலாம், நம்மை சுற்றியும் வளர்ந்து நிற்கலாம். நம்மில் வளர்ந்து நிற்கும் பகை உயிர் நாடியை ஒருமுறைஆட்டி வடும். இதனையே வள்ளுவர்,

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்

பொன்றாமை ஒன்றல் அரிது (குறள்: 886)

என்ற பாடல் மூலம் விளக்கியுள்ளார். நம்மில் வளர்ந்த பகையும் நம்மை சுற்றியுள்ள பகையும் ஒன்றிர்கொன்று சளைத்தவை அல்ல. அதனால் பகைமைறைவள்ளுவர் ஒரு முள்மரம் என்றும், அதனை முட்செடியாக இருக்கும் பொழுதே களைத்து விட வேண்டும். அது முதிர்ந்து நின்றால் அதனை களைப்பவருக்கே பெரும் பாதிப்பாய் அமையும். ‘களைய வேண்டிய பகையை, அதன் தொடக்க நிலையிலேயே களைத்து விட வேண்டும். அக்கணமின்றி அது வலுத்தபின் பலர் கூடி தாக்கினாலும் அது தாக்குபவரையே அழித்து விடும்’ என்றார் வள்ளுவர்.

காக்கைகளுக்கும் ஆந்தைகளுக்கும் நடந்த போர்:

மகிழரோப்யம் என்ற ஆலமரம் ஒன்று நகரின் அருகில் இருந்தது. எண்ணற்கிளைகள் காக்கைகளின் உறைவிடமாக இருந்தது. மேகவர்னா என்ற காக்கையே அரசனாய் வலம் வந்தது. ஆலமரத்தின் அருகில் குகை ஒனறு இருந்தது. அதில் அரிமரதனா என்ற ஆந்தையின கீழ் ஆந்தைகள் கூட்டம் வாழ்ந்து வந்தது.

ஆந்தைகள் ஒவ்வொரு நாளும் இரவில் காக்கைகள் வாழும் ஆலமரத்தை முற்றுகையிட்டு, அவர்களால் முடிந்த அளவு காக்கைகளுடன் சண்டையிட்டு கொன்று வந்தன. காக்கைகளுக்கு இரவில் பார்க்கும் சக்தியற்று, ஆந்தைகளை எதிர்க்க இயலாது அழிந்து வந்தன.

மேகவர்னா, தன்னுடைய அமைச்சர் அவையில் இருக்கும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியது. ஆலோசர்களான உஜீவ், சஞ்ஜீவ், அநுஜீவ், பிரஜீவ் மற்றும் சிரஞ்ஜீவ் இவர்களை அழைத்து ஆலோசனை நடத்த ஐவரும் அவர்கள் திட்டங்களை கூறினர். உஜீவ் ‘பகைவர்களுடன் சமாதானமாய் போய்விடலாம்’ என்க, ‘அவர்கள் கொடூரமானவர்கள், சமாதானம் வேண்டாம். போராடுவோம்’, அநுஜீவ் ‘அவர்கள் போர் தர்மங்களை பின்பற்றமாட்டார்கள். அதனால் நாம் வேறு இடம் செல்வோம்’ என்றது. உடனே, பிரஜீவ், ‘வேறு இடம் சென்றால் திரும்ப இயலாது’ எனக் கூறவே, சிரஞ்ஜீவ் ‘நாம் நம் நண்பர்கள் உதவியை நாடலாம்’ என்றது.

ஐவரின் ஆலோசனையும் பிடிபடாத மேகவர்னா, தன் தந்தையின் ஆவோசகர் ஸ்திரஜ்வின் உதவியை நாடியது. அக்காக்கை ‘மேகவர்னா! உன் ஆலோசகர்கள் கூறியவை தவறில்லை. நீதிக்கு உட்பட்டவை தான். ஆனால் இந்த சூழ்நிலையில் அது தீர்வாக அமையாது. நீ ஒற்றர்களை ஏற்பாடு செய். அவர்கள் மூலம் ஆந்தைகளின் பலவீனங்களை அறிந்து அழித்து விடு. என்னை அடித்து இரத்தம் வர இங்கு விட்டு வெளியேறி விடு. நான் அவர்கள் நல் மதிப்பை பெற்று அழிக்கும் வழியை கூறுகின்றேன். அதுவரை ரிஷ்யமுகம் மலையில் பதுங்கியிருங்கள்’ என்றது. ஸ்திரஜ் கூறியது போல் மேகவர்னா தன் இனத்தோடு வெளியேறியது.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2018

உள்ளத்தோடு உள்ளம்
பள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பழக்க வழக்கங்கள்
தடை அதை உடை
வெற்றியாளர்கள் நீங்கதான்!
எனிமாவும் நீள் ஆயுளும்
தோல்வியைத் தவிர்த்து வெற்றி பெறுவது எப்படி?
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
முயன்றேன் வென்றேன்
வாழ்வை வளப்படுத்தும் தத்துவங்கள்
எங்கிருந்து வர வேண்டும் மாற்றம்
வாழ்வின் இலக்கு
தேர்வும் பேராறும் நட்பும் பாலமும்
வாழநினைத்தால் வாழலாம்- 17
முயற்சியே முன்னேற்றம்
மனிதத்தை புனிதமாக்கும் ஸ்டெம் செல் தானம்
வெற்றி உங்கள் கையில் 54
வெற்றியை வாழ்க்கையாக்கு
தன்னம்பிக்கை மேடை
இடைவிடாத முயற்சி! வாழ்க்கையில் மகிழ்ச்சி!!…