Home » Online News » வெற்றியை வாழ்க்கையாக்கு

 
வெற்றியை வாழ்க்கையாக்கு


ஆசிரியர் குழு
Author:

இராம வேல்முருகன்

வலகைமான்

வாழ்க்கையின் பெரும்பாலான தருணங்கள் இப்படித்தான் அமையும்  ஒரு தேர்வு வெற்றி நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை ஒரு தேர்வில் பெறும் மதிப்பெண்கள்  நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில்லை . அவை நமக்கு சிறிது ஊக்கத்தை வேண்டுமானால் தரலாம் ஆனால் அவை வாழ்க்கை முழுவதும் நம்முடன் வாரா.

பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர் தமிழகத்தின் முதல்வரான வரலாறெல்லாம்  நம் நாட்டில் நிறைய உண்டு. எனக்கு தெரிந்து பத்தாம் வகுப்பில் மூன்று முறை தோல்வியடைந்த ஒருவர் தற்போது கணிதப் பேரசிரியராக அரசு கல்லூரியில் பணியாற்றி வருகிறார். அவர் பத்தாம் வகுப்பில்  கணிதப் பாடத்தில் தோல்வியடைந்தவர். தோல்வியைக் கண்டு துவளாமல் படித்துத் தேர்ச்சியடைந்து எநடப் பாடம் தனக்கு வரவில்லையோ அதே பாடத்தில் இளங்கலை , முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டங்கள் பெற்று தற்போது மாதம் ஒரு லட்சம் ஊதியம் பெற்று வருகிறார். தோல்வியால் துவண்டிருந்தால் இன்று அந்த கணித ஆசிரியரை நாம் காணமுடிந்திருக்காது.

இது போன்ற நிறைய உதாரண மனிதர்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். நாமும் அந்த மனிதராக மாற முயல வேண்டும். எது நம் குறிக்கோளோ அதில் விடாப்பிடியாக இருப்பது நல்ல விசயம் தான் .அதே நேரத்தில் அது ஏதோ ஒரு காரணத்தால் கை கூடாத போது வரும் வாய்ப்புகளை நமக்கு சாமகமாக்கிக் கொள்ள வேண்டும்.

எனக்கு தெரிந்த மற்றொரு நண்பர் பள்ளி கல்லூரி காலங்களில் நன்கு படிப்பவர். ஆசிரியர் பயிற்சியில் சிறந்த மாணவராத் தேர்ச்சி பெற்று  அமைச்சர் கைகளில் விருது பெற்றவர். ஆனால் அரசின் கொள்கை முடிவுகளால் அவருக்கு ஆசிரியர் பணி கிடைக்கசவில்லை. தனியார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத் தேர்வுகளை எழுதி இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார். தற்போது பதவி உயர்வு பெற்று உயர் பதவியில் உள்ளார். ஆசிரியர் பெறும் ஊதியத்தைவிட அதிகம் பெறுகிறார். வரும் பணி எதுவெனினும் அதனை ஏற்றுக் கொண்டால் உயர்வு என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.

எனவே நாம் வாழ்வில் வெற்றி பெறுவதை விட வெற்றிகரமான மனிதராக வாழ்வதே நன்று. சோர்வடையாத உழைப்பு, எதிர்பார்ப்பு இல்லாத செயல்பாடுகள் எதையும் நேர்மறை எண்ணத்தோடு பார்க்கும் தன்மை வரும் யாவற்றையும் நமக்கு சாதகமாக்கிக் கொள்ளும் பாங்கு இவையாவும்  நத்தை வெற்றிகரமான மனிதராக வாழ வழி அதைக்கும்.

விடாமுயற்சியே விஸ்வரூப வெற்றி என்பார்கள். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் தெய்வருத்த கூலி தரும் என வள்ளுவரும், வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் என நவீனக் கவிஞர் ஒருவரும், முயற்சி திருவினையாக்கும் என்றும் முயலாதிருத்தல் இன்மை புகுத்திவிடும் என்றும் பொய்யில் புலவர் கூறியுள்ளார். வாழ்க்கையில் முன்னேற விடாமுயற்சி மிகவும்  அவசியம்.

வருவதை ஏற்கும் மனப்பக்குவம் விடாமுயற்சியை விட மேலானது. முயற்சி செய்கிறோம் பலன் நாம் எதிர்பார்த்த  அளவு கிடைக்கவில்லை. உதாரணமாக தேர்வு எழுதுகிறோம் கடின உழைப்பு கொண்டு படித்து எழுதுகிறோம். தேர்வில் மதிப்பெண் நாம் எதிர்பார்த்த அளவு கிட்டவில்லை மதிப்பீடு செய்த ஆசிரியர் கூட கவனக்குறைவுடன் மதிப்பெண் குறைந்திருக்கலாம். அதற்காக நாம் சோர்வடைதலோ, விரக்தியடைதலோ கூடாது. அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்ய வேண்டும். அடுத்தக்கட்ட நகர்வுகளுக்குச் செல்ல வேண்டும். அடுத்த தேர்வை இன்னும் கூடுதல் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும். நிச்சயம் ஒரு நாள் பலன் கிட்டும்.

நம்பிக்கையே வாழ்க்கை நாளை என்பது உண்டு என்று நம்பித்தான் இரவு தூங்கச் செல்கிறோம். வாழ்க்கை நிலையில்லாதது என்று தத்துவம் பேசிக்கொண்டால்  அது நம் வாழ்விலும் செயலிலும் எதிரொளிக்கும் நம்மால் முடியும் என்று எப்பொழுமும் நம்புவோம்.

நம்மால் முடியாவிட்டால் யாரால் முடியும்

இப்போது இல்லாவிட்டால் எப்போது முடியும்

என்பன போன்ற வாசகங்களை நாம்  வசிக்கும் வீடு அலுவலகம் அறைகளில் நம் கண்களில் படும்படி ஒட்டி வைப்போம். தன்னம்பிக்கை  குறித்தச் செய்திகளை  பற்றி பேசுவோம். அது குறித்த வாசகங்களை நம் கண்களில் படும்படி வைத்திருப்போம் வாழ்வில் வெற்றி நிச்சயம்.

அவநம்பிக்கை தரும் செய்திகளைத் தவிர்ப்போம். அவ நம்பிக்கை தரும் மனிதர்களை தவிர்ப்பொம். வரும் விளைவுகளின் இரண்டு பக்கங்களையும் பார்ப்போம். இரணஙடு பக்கங்கள்  வரும் போதும் எவ்வாறு அணுகலாம் என முன்கூட்டியே சிந்திப்போம். நாம் வாழ்வில் வெற்றிபெற விடாமுயற்சி தன்னம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணங்களே…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2018

உள்ளத்தோடு உள்ளம்
பள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பழக்க வழக்கங்கள்
தடை அதை உடை
வெற்றியாளர்கள் நீங்கதான்!
எனிமாவும் நீள் ஆயுளும்
தோல்வியைத் தவிர்த்து வெற்றி பெறுவது எப்படி?
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
முயன்றேன் வென்றேன்
வாழ்வை வளப்படுத்தும் தத்துவங்கள்
எங்கிருந்து வர வேண்டும் மாற்றம்
வாழ்வின் இலக்கு
தேர்வும் பேராறும் நட்பும் பாலமும்
வாழநினைத்தால் வாழலாம்- 17
முயற்சியே முன்னேற்றம்
மனிதத்தை புனிதமாக்கும் ஸ்டெம் செல் தானம்
வெற்றி உங்கள் கையில் 54
வெற்றியை வாழ்க்கையாக்கு
தன்னம்பிக்கை மேடை
இடைவிடாத முயற்சி! வாழ்க்கையில் மகிழ்ச்சி!!…