Home » Articles » வெற்றியாளர்கள் நீங்கதான்!

 
வெற்றியாளர்கள் நீங்கதான்!


சதீஸ் குமார் சி
Author:

நீங்கள் ஒவ்வொருவரும் உலகுக்கு அல்ல ஊருக்கு அல்ல நாம் வாழும் வீட்டிற்கு கூட  அல்ல, அவரவர் உள்ளத்தில் தட்டி எழுப்பும் கனவு தேசத்திற்காவது ஹீரோவாகவோ அல்லது ஹீரோயினாகவோ திகழவேண்டும் என்றால் உங்கள் எண்ணம் எப்பொழுதும் உயர்ந்ததாகவே இருக்க வேண்டும்….. இதனை நீங்கள் உங்கள் வீட்டு கண்ணாடியில் முகம் பார்க்கும் பொழுது உணர முடியும்.

நம் முகம் கண்ணாடியில் எவ்வளவு அழகாக தெரியவேண்டும் என விரும்புகிறோமோ அவ்வாறே நம் வாழ்க்கை முறையும் இருக்க வேண்டும்….. உலகிலேயே மிக சிறந்த வளமாகப் போற்றப்படும் மனிதவளம் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் நம் தேசம் இரண்டாவதாக இருந்தாலும் இளம் தலைமுறைகள் வாழும் இளம் தலைமுறைகள் வாழும் இணையற்ற தேசமாக நம் இந்திய தேசம் முதன்மையாக இவ்வுலகப் பந்தில் சுழன்று வருகிறது……

தம் ஏவுகணை நாயகன் கலாம் கண்ட கனவு இந்தியா கூட இந்த நம்பிக்கையில் உதித்தது தான். அதனால் தான் கலாம் அவர்கள் கடைசி வரை மாணவர்களைத் தேடும் தலைவராக விளங்கியதோடு மட்டுமல்லாமல் மாணவர் சபையினிலே தம் இறுதி மூச்சிலும் சுவாசித்துவிட்டு சென்று இருக்கிறார். இம்மண்ணுலகை விட்டு விடை பெற்று செல்லும் போது வெறுமனே செல்ல வில்லை வல்லரசுக் கனவை  ஒவ்வொரு இடத்திலும் விதைத்துவிட்டு சென்றிருக்கிறார்.

அடுத்ததாக இந்த உலகம் கொண்டாடிய ஆன்மிக ஞானி அமெரிக்க தேசத்தில் எம் சகோதர சகோதரிகளே என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க உரை நிகழ்த்திய சுவாமி விவேகானந்தர், இந்திய தேசத்தை வழிமையான தேசமாக மாற்றிக் காட்ட பொன்னையோ பொருளையோ என்னிடம் கொடுங்கள் எனக் கேட்கவில்லை…… வலிமையான நூறு இளைஞர்களை மட்டும் கொடுங்கள் இந்த தேசத்தை மாற்றி காட்டுகிறேன் என்றுதான் சொன்னார். அதனால் தான் அவர் இன்றளவும் இளைஞர்கள் கொண்டாடும் தலைவராகவும்,  இளைஞர்களைக் கொண்டாடிய தலைவராகவும் போற்றப்படுகிறார்.  அப்படிபட்ட வளமும் வலிமையும் கொண்டவர்கள் நீங்கள். உங்களுக்கு உடனடித் தேவை உங்களின் தேவையை உங்களது திறமையை ஒரே ஒருவரால் தான் புரிந்துக் கொள்ள முடியும். அந்ந ஒருவர் நீங்கள் தான்…..

நவீன இந்தியாவின் சிற்பி எனப் போற்றப்படும் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படக்  காரணம் என்ன? அவர் குழந்தைகளது இருப்பை உணர்ந்து அவர்களது ஆற்றல் உணர்ந்து கடைசி வரை அவர்களைக்  கொண்டாடிய தலைவராக இருந்ததின் காரணமாகத் தான். இந்த உலகை காப்பாற்றநாம் போராட வேண்டியதில்லை.  பொருள் சேர்க்க வேண்டியதில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகளால் இந்த தேசத்தைப் புரட்டிப் போட வேண்டியதில்லை. பிறகு என்ன தான் செய்ய வேணடும் என அதிகம் யோசிக்காதீர்கள்.

சிறிது கூட யோசிக்காமல் நீங்கள் ஒன்றேஒன்றைசெய்தால் போதும்.  ஆம் மழலைகளையும்,  மரங்களையும் இம்மண்ணில் நல்ல வண்ணம் விதைத்து விட்டால் போதும்….  இந்த பூமி தப்பித்துக்கொள்ளும். மரங்கள் தழைத்து இம்மண்ணைப் பாதுகாப்பது போல  மழலைகளை நல்ல வண்ணம் வளர்த்து விட்டால் இந்த பூமி புதிய  பூமியாக மலரும்….

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2018

உள்ளத்தோடு உள்ளம்
பள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பழக்க வழக்கங்கள்
தடை அதை உடை
வெற்றியாளர்கள் நீங்கதான்!
எனிமாவும் நீள் ஆயுளும்
தோல்வியைத் தவிர்த்து வெற்றி பெறுவது எப்படி?
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
முயன்றேன் வென்றேன்
வாழ்வை வளப்படுத்தும் தத்துவங்கள்
எங்கிருந்து வர வேண்டும் மாற்றம்
வாழ்வின் இலக்கு
தேர்வும் பேராறும் நட்பும் பாலமும்
வாழநினைத்தால் வாழலாம்- 17
முயற்சியே முன்னேற்றம்
மனிதத்தை புனிதமாக்கும் ஸ்டெம் செல் தானம்
வெற்றி உங்கள் கையில் 54
வெற்றியை வாழ்க்கையாக்கு
தன்னம்பிக்கை மேடை
இடைவிடாத முயற்சி! வாழ்க்கையில் மகிழ்ச்சி!!…