![]() |
Author: அருள் வளன்அரசு ரா
|
வானத்தில் நிலாவும், நட்சத்திரங்களும் ஒரு காலத்தில் சந்தோசமாக இருந்தார்கள். இரவின் மடியில் வானத்துடனும், மேகத்துடனும் மனசு பேச முற்படும் போதெல்லாம், நமக்கு முன்னாள் நிலாவும் நட்சத்திரங்களும் கொஞ்சி குலாவி சந்தோசமாகப் பேசி சிரிப்பைக் காணமுடியும். அந்த அழகின் மகிழ்வின், நாம் பேச நினைத்ததை நம்மையும் அறியாமல் மறந்து போவோம். அப்படிபட்ட மகிழ்வில் திடீரென்று ஒரு நாள் பெரிய பூதம் வந்து, நான்கு நட்சத்திரங்களைப் பிடித்து சாப்பிட்டுவிட்டு சென்றுவிட்டது. அடுத்தடுத்த நாட்களில் பூதம் வருவதும், நட்சத்திரங்களை பிடித்து சாப்பிடுவதும் தொடர் கதையானது. என்னை பார்த்த நிலாவுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. மனதுக்குள் வலி வெளியே சொல்ல நாளுக்கு நாள் நட்சத்திரங்கள் வானில் வருவது குறைந்துகொண்டே இருக்கிறதே என்று நிலா ரொம்பவே கவலையானது. முடிவாக, இது தொடர்பாக சூரியனிடம் புகார் கூறியது. தினமும் இரவு நேரத்தில் பூதம் வந்து நட்சத்திரங்களைக் கொன்று தின்று விட்டு செல்கிறது. இது தொடர்ந்தால் வானம் இருட்டாகி விடும் வானம் ஜொலிக்கவே ஜொலிக்காது. இதை இப்படியே விட்டு விட்டால், எதிர்பாராத பேரழிவு ஏற்பட்டு விடும் என்று தன் உள்ளத்து குமுறல்களை எல்லாம் சொல்லி அழுதது நிலா .
சூரியனும், நிலாவை சமாதானப்படுத்தியது. இது அப்படி நடக்காது, நான் பார்த்து கொள்கிறேன் என்று சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தது.
இப்படி ஒரு கதை இருந்தால் இதற்கு என்ன முடிவு தரலாம்.அந்தச் சூரியன் என்ன நடவடிக்கை எடுத்திருந்தால், நட்சத்திங்களைச் சாப்பிடாமல் இருந்திருக்கும் என்பது ஒரு கற்பனை கதை.
இந்தக் கதையில்… நாம் என்னவாக இருக்கிறோம்? நட்சத்திரங்களாகவா? நிலாவாகவா? சூரியனாகவா? பூதமாகவா? என்று கேள்வி நீள்கிறது. யோசிக்க வேண்டிய தருணம் இது.
நம் ஒவ்வொருத்தருக்குள்ளேயும் நட்சத்திரம் இருக்கிறது. சூரியன் இருக்கிறது. நிலா இருக்கிறது. பூதமும் இருக்கிறது. நம்மில் நினைத்துத்தான் நாம் பயந்துகொண்டே இருக்கிறோம். அந்தப் பூதத்திற்கு நாம் என்ன வேண்டுமானாலும் பெயர் வச்சுக்கலாம்.
“சரியா நான் படிக்கவில்லை. சரியாக எனக்கு எழுத வராது. எனக்கு விளையாட்டுனா பயம். யாராவது ஆங்கிலம் பேசினாலே 10 அடி தள்ளி நிற்பேன்.மேடையில் சில பேரு பேசும் போது, நானும் இது மாதிரி பேசலானு நினைப்பேன்.ஆனால் நான் மேடையேறினால், தொடையெல்லாம் தானா நடுங்கும். அலுவலகத்தில் மேனேஜரைப் பார்த்தால் பயம். அரசியல்வாதிகளைப் பார்த்தால் பயம். அன்றாடம் நடக்கும் சமூக அவலங்களைப் பார்த்தால் பயம். சினிமாவுல, டிவியில பார்க்கிறசண்டை காட்சிகள் எல்லாம் நம்ம விட்டிலும் நடந்துவிடு மோங்கிறபயம் என்று இப்படி நமக்குள்ள பலவிதமான பூதங்கள் இருந்துகொண்டேதான் இருக்கிறது.
இந்த இதழை மேலும்
Share

June 2018



















No comments
Be the first one to leave a comment.