– 1991 – August | தன்னம்பிக்கை

Home » 1991 » August

 
  • Categories


  • Archives


    Follow us on

    தென்னக நதிகள் இணைப்பு இயக்கம்

    தன்னம்பிக்கை ஆசிரியர் அவர்கட்கு

    வணக்கம்,

    “ஏர் ஓட்டுவதிலிருந்து – ஆடு மாடு மேய்த்துச் சாணம் எடுப்பது வரை, எல்லாப் பணிகளையும், செய்தவன்” என்பதை படித்தவுடன் எனது உள்ளத்தில் சகோதர உணர்வல்ல, பாசம் கட்டிப்பிணைக்கிறது.

    Continue Reading »

    அமெரிக்காவில் கங்கை காவிரி இணைப்பு இயக்கம்

    “கங்கையையும் காவிரியையும் இணைக்க வேண்டும்” என்ற குரல் அமெரிக்காவிலிருந்து கேட்டது. அதுவும் சில கர்நாடக மாநிலத்து அறிஞர்கள் இதற்காகப் பாடுபட்டு வருகிறார்கள் என்று அறிந்த போது ஆச்சரியம் ஏற்பட்டது. கடந்த 1989 பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் வாழும் கங்கா காவேரி டிரஸ்டைச் சேர்ந்த பத்துப்பேர் அகில இந்தியாவையும் நான்கு மாதம் சுற்றினார்கள். விவசாயிகளைச் சந்தித்தார்கள். நிபுணர்களுடன் கலந்து பேசினார்கள். அப்போதுதான் அவர்கள் எங்களுக்கு அறிமுகமானார்கள்.

    Continue Reading »

    சட்ட மன்றத்தில் உரை

    “நீரின்றி அமையாது உலகு”, “நீர் வளம் இன்றி நில வளம் இல்லை”, குன்றாத விளைச்சலுக்கு, குறையாத நீர் வளம் வேண்டும். தேசிய நீரோட்டத்தில் தமிழகம் இருக்கிறது என்பது உண்மையானால் நீர் வளங்கள் கனிவளங்களைப் போல தேசிய மயமாக்கப்பட்டு அது தேவைப்படும் இடங்களுக்குத் திருப்பிவிட வேண்டும். அதனால் நீர்வழிப் போக்குவரத்தும் மின்சாரமும் கிடைத்து பசுமைபுரட்சி ஏற்பட்டு தொழில் புரட்சிக்கு வழிவகுத்துக் கொடுக்கும். பசுமைப் புரட்சிக்கு பிறகுதான் உலக நாடுகளில் தொழில் புரட்சி ஏற்பட்டுள்ளது.

    Continue Reading »

    யாரோ செய்யும்பொழுது நம்மால் மட்டும் ஏன் முடியாது?

    பழைய கருத்துக்கள், பழமொழிகள் ஆகியவற்றிலிருந்து காலத்தைப் பொறுத்து புதுப்புதுச் சிந்தனைகள் பிறப்பதைப்போன்றே, நமக்கு முன்பு தோன்றி வாழ்ந்து வருபவர்களின் வாழ்க்கை நேரடி முன்னுதாரணமாகவோ, மறைமுகமான வழிகளிலோ பயனளிக்கிறது என்பது உண்மை. புதுத்துறை, புதிய தொழில், புதிய செயல்பாடு ஆகியவற்றை நாம் தொடங்கும்போது, இவை நாம் போக இருக்கும் வழியை நெறிப்படுத்தப் பெரிதும் உதவுகிறது. சின்னச் சின்ன தடைகள் கூடப் பல சமயங்களில் நம்மைச் சிறைப்படுத்திவிடும் தருணங்களில் அத்தகைய மனிதரும் அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களும் பெரிதும் கைகொடுக்கின்றன. மேலும், அக்கரை மட்டுமே பச்சையல்ல; இக்கரையும் தான். எங்கிருந்தாலும் நம் சிந்தனை; செயல்பாடுகளுக்குத் தகுந்தாற்போல் நம் வளர்ச்சி இருந்துகொண்டு தானிருக்கும் என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

    Continue Reading »

    நீங்கள் மனவலிமை பெற வேண்டுமா?

    அதோ அவர் வருகிறார்: சரியாக அலுவலகத்திற்கு ஐந்து நிமிடம் முன்னதாக வந்து அமருகிறார். அவரைப் பார்த்ததும் அங்குள்ள அனைவரும் உற்சாகத்துடன் “குட் மார்னிங் சார்” என்கிறார்கள்Ð எல்லோருக்கும் ஒரு புத்துணர்வு, கல்யாண விருந்தில் பங்கு கொள்ளச் செல்வது போல மனதில் உற்சாகம்! மகிழ்ச்சி, அவரவர் வேலைகளைச் சரியாகச் செய்து முடிக்கப் பம்பரமாய் ஓடுகிறார்கள். அப்படி ஏன் அவரிடம் எந்த உத்தரவும் இல்லாமல் இவர்கள் செயல்பட வேண்டும்? அவர் நல்லவர்Ð வல்லவர்Ð எண்ணியதைச் செய்து முடிப்பார். கோபமோ கொந்தளிப்போ இல்லை; தம்மைவிட உயர்அதிகாரி வந்தாலும் பதட்டமோ பயமோ கிடையாது. மரியாதையுடன் அவருடைய பைல்களை எடுத்து வைப்பார்; அவர் நினைப்பது சரியாக நடக்கும். எந்த பெரிய வெற்றியும் ஆணவத்தையோ தோல்விகள் மனச்சோர்வையோ உண்டாக்குவதில்லை. அவர்தான் தன்னை வென்றவர்; தன் மனத்தை வென்றவர்; எண்ணங்களை ஆள்பவர். எண்ணங்கள் அவரை ஆட்டுவிப்பதில்லை. மன உறுதி மனவலிமை பெற்றவர் அவர்.

    Continue Reading »

    இதோ… உங்கள் வாழ்வை வளமாக்க ஒரு நூல்

    அறிவாளர்களைத் துணைகொள்ளுதல்

    வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள நல்ல அறிவாளர்களின் நூல்கள் – கருத்துக்கள், அனுபவம் நிறைந்தவர்களின் வெற்றி தோல்விகள் – அவர்கள் உயிரோடு இருந்தாலும் இறந்து போயிருந்தாலும் அவர்களது கருத்துக்கள் ஆகியவற்றைத் துணையாகக் கொள்வது மிகவும் நல்லதாகும். இந்த உயர்ந்த மக்களின் ஆற்றலை (Power of Master Mind) நாம் அவர்தம் கருத்துக்கள் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம். நமக்குச் சிக்கல்கள் வரும்போது அவர்களது கருத்துக்களை அணுகித்தீர்வுகளைப் பெறலாம். நம்முடைய துறைக்கு ஏற்ற பத்து அறிஞர்களைத் தேர்ந்து அவர்களை மனதால் ஒன்றுகூட்டி நம் வளர்ச்சிக்கு வழி பெறலாம்.

    Continue Reading »

    ஓடை அல்ல நீ… ஊற்று நீர்!!

    ஓடை நீரல்ல
    நீ
    அடிக்கடி
    வற்றிப் போக!

    Continue Reading »

    மத்திய மாநில அரசுகளுக்கு வாழ்த்து

    முன்னுரிமை கொடுத்துச் செய்ய வேண்டியவை

    மத்திய அரசுக்கு

    • விலை வாசியைக் கட்டுப்படுத்துதல்
    • அரசின் ஆடம்பரச் செலவினங்களைக் குறைத்தல்
    • அரசு நட்டப்படும் தொழில்துறைகளில் தனியார் நிறுவனங்களை ஊக்குவித்தல்
    • குடும்பக் கட்டுப்பாட்டினைத் தீவிரப்படுத்துதல்
    • Continue Reading »

    உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை

    ‘தமிழால் வளம் கூட்டுக’ ‘Enrich Thru tamil’ என்ற குறிக்கோளுடன் “உலகத்தமிழ் மொழி அறக்கட்டளை ” International Tamil Language Foundation என்ற அமைப்பு ஒன்று, வரி விலக்கு ஆணை பெற, வழிமுறைகள் செய்து நிறுவப்பட்டுள்ளது.

    Continue Reading »