Home » Cover Story » உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை

 
உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை


ராம் மோகன்
Author:

‘தமிழால் வளம் கூட்டுக’ ‘Enrich Thru tamil’ என்ற குறிக்கோளுடன் “உலகத்தமிழ் மொழி அறக்கட்டளை ” International Tamil Language Foundation என்ற அமைப்பு ஒன்று, வரி விலக்கு ஆணை பெற, வழிமுறைகள் செய்து நிறுவப்பட்டுள்ளது.

எண்ண அளவில் இருந்த குறிக்கோள் இன்று செயல் ஆற்றத் துவங்கி விட்டது. இந்த முயற்சியில் தாங்களும் எங்களுடன் இருந்து தோள்கொடுக்க இந்தக் கடிதம் மூலம் பணிவுடன் வேண்டுகோள் விடுத்து இந்த அழைப்பை அனுப்பவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

மூன்று திட்டங்களை முதலில் செயல்படுத்த எண்ணியுள்ளோம் அவை யாவன.

1. திருக்குறள் திட்டம்.

2. ‘தத்து எடுப்போம் ஒரு பள்ளியை திட்டம்.

3. தமிழ் இசை மறுமலர்ச்சித் திட்டம்.

இத்திட்டங்களின் விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

பொருளாதாரம்:

நம் அறக்கட்டளைகளை உலகம் முழுவதும் வாழும் தமிழ்ப் பற்றுக கொண்டு 200 புரவலர்களிடமிருந்து தலா $1000/- நன்கொடை பெற்று நிதி திரட்டும். அந்த 200 புரவலர்கள் பெயர்களும் திருக்குறள் புத்தகத்தில் புரவலர் பட்டியலில் என்றும் இடம்பெறும். அதன் துணைக் கொண்டு 25000 பிரதிகள் அச்சடிக்கப் பெற்று, அதில் புரவலர்களுக்கு அன்பளிப்பாக்க் கொடுக்கப்படும். 200 பிரதிகள் போக, மற்ற 23000 பிரதிகள் ஒவ்வொன்றும் $15க்கு பொது மக்களுகு விற்கப்படும். இதன் மூலம் $ 345000/- நிதி கிடைக்கும். அதனைக் கொண்டு மற்ற இரண்டு திட்டங்களும் நிறைவேற்றப்படும்.

நிர்வாக அமைப்பு முறை:

தமிழ்த்தொண்டு ஒன்று தான் தலையாயக் குறிக்கோள். இந்த அறக்கடளை உறுப்பினர்களைச் சேர்க்காது. இது தேர்தல் முறையில் உறுப்பினர்களை நடத்தும் சங்கம் அல்ல.

இதைத் தவர, அறக்கடளையின் செயற்குழுவாக உலகமெங்கும் உள்ள முக்கியமானத் தமிழர்கள் செயற்குழுவில் அங்கம் வகித்து சிறப்புப் பணியாற்ற அழைக்கப்படுவார்கள்.

சாதி, சமய அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ‘தமிழால் வளம் கூட்டுக’ என்ற ஒரே குறிக்கோளை மட்டும் கருப்பொருளாக வைத்து இந்த அறக்கட்டளை இயங்கும், உங்களின் பெயருக்கு களங்கம் ஏற்படாவண்ணம் அறக்கட்டளை தன் பணிகளைப் புரியும்.

இது ஒருவரால் செயல்படுத்தக்கூடிய காரியம் அல்ல. தமிழ் உணர்வு கொண்டத் தமிழர்கள் தமிழ் காக்க நடத்தும் ஒரு வேள்வியாகும்.

நல்ல உள்ளங்கள் எங்கு ஒருங்கிணைகின்றனவோ அங்கே நல்ல எண்ணங்கள் பிறக்க வழியுண்டு. நல்ல எண்ணங்களே நல்ல செயல்களுக்கு வித்து. தமிழ்ச் சங்கை எடுத்து முழங்கிவிட்டோம். உங்கள் ஆதரவு மட்டுமில்லாமல் எங்களோடு துணை நின்று அறக்கட்டளையின் செயல்களில் பங்கு ஏற்றப் பணி புரிய இயலுமா?

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி Al. Ram mohan
(701-985-314) Director inter national Tamil Language Foundation
8417 Autm Drive, woodRidge illinois 60517 USA


Share
 

1 Comment

  1. Rajendran.G says:

    தமிழ் உணர்வு கொண்டத் தமிழர்கள் தமிழ் காக்க நடத்தும் ஒரு வேள்வியாகும்.

Post a Comment


 

 


August 1991

தென்னக நதிகள் இணைப்பு இயக்கம்
அமெரிக்காவில் கங்கை காவிரி இணைப்பு இயக்கம்
சட்ட மன்றத்தில் உரை
யாரோ செய்யும்பொழுது நம்மால் மட்டும் ஏன் முடியாது?
நீங்கள் மனவலிமை பெற வேண்டுமா?
இதோ… உங்கள் வாழ்வை வளமாக்க ஒரு நூல்
ஓடை அல்ல நீ… ஊற்று நீர்!!
மத்திய மாநில அரசுகளுக்கு வாழ்த்து
உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை