Home » Cover Story » சட்ட மன்றத்தில் உரை

 
சட்ட மன்றத்தில் உரை


பழனிச்சாமி என்.என்
Author:

“நீரின்றி அமையாது உலகு”, “நீர் வளம் இன்றி நில வளம் இல்லை”, குன்றாத விளைச்சலுக்கு, குறையாத நீர் வளம் வேண்டும். தேசிய நீரோட்டத்தில் தமிழகம் இருக்கிறது என்பது உண்மையானால் நீர் வளங்கள் கனிவளங்களைப் போல தேசிய மயமாக்கப்பட்டு அது தேவைப்படும் இடங்களுக்குத் திருப்பிவிட வேண்டும். அதனால் நீர்வழிப் போக்குவரத்தும் மின்சாரமும் கிடைத்து பசுமைபுரட்சி ஏற்பட்டு தொழில் புரட்சிக்கு வழிவகுத்துக் கொடுக்கும். பசுமைப் புரட்சிக்கு பிறகுதான் உலக நாடுகளில் தொழில் புரட்சி ஏற்பட்டுள்ளது.

‘கங்கை நதிப்புரத்துக் கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்’

என்று தேசியகவி பாரதியின் தீர்க்க தரிசனமான கவிதைக்கு செயல்வடிவம் கொடுக்கத் தமிழக அரசு மத்திய அரசோடு இணைந்து செயல்படுத்த வேண்டும்; கங்கை காவேரி இணைப்பு ஒரு தொலைநோக்குத் திட்டமாக இருந்தாலும், தென் மாநில நதிகளாகிய மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, துங்கபுத்திரா, வடபெண்ணை, தென்பெண்ணை, பாலாறு, காவேரி, வைகை என எல்லா ஆறுகளும் இணைக்கப்பட்டால் வெள்ளத்தின் அழிவும் வறட்சியின் கொடுமையும் ஒழிந்து வெள்ள நிவாரணம், வரட்சி நிவாரணம் என கோடி கோடியாய் ஆண்டுதோறும் செலவழிக்கப்படும் பணம் மக்களுக்குச் சென்று அடையாமல் விரையமாவது தடுக்கப்படும். காவிரிநீர் தாவா போன்ற நதி நீர் பிரச்சினைகள் மாநிலத்திற்கு மாநிலம் ஏற்படாமலும் இருக்கும்.
-என்.என். பழனிச்சாமி, எம்.ஏ.
எம்.எல்.ஏ. கிணத்துக்கடவு


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1991

தென்னக நதிகள் இணைப்பு இயக்கம்
அமெரிக்காவில் கங்கை காவிரி இணைப்பு இயக்கம்
சட்ட மன்றத்தில் உரை
யாரோ செய்யும்பொழுது நம்மால் மட்டும் ஏன் முடியாது?
நீங்கள் மனவலிமை பெற வேண்டுமா?
இதோ… உங்கள் வாழ்வை வளமாக்க ஒரு நூல்
ஓடை அல்ல நீ… ஊற்று நீர்!!
மத்திய மாநில அரசுகளுக்கு வாழ்த்து
உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை