Home » Cover Story » அமெரிக்காவில் கங்கை காவிரி இணைப்பு இயக்கம்

 
அமெரிக்காவில் கங்கை காவிரி இணைப்பு இயக்கம்


உதயமூர்த்தி எம்.எஸ்
Author:

“கங்கையையும் காவிரியையும் இணைக்க வேண்டும்” என்ற குரல் அமெரிக்காவிலிருந்து கேட்டது. அதுவும் சில கர்நாடக மாநிலத்து அறிஞர்கள் இதற்காகப் பாடுபட்டு வருகிறார்கள் என்று அறிந்த போது ஆச்சரியம் ஏற்பட்டது. கடந்த 1989 பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் வாழும் கங்கா காவேரி டிரஸ்டைச் சேர்ந்த பத்துப்பேர் அகில இந்தியாவையும் நான்கு மாதம் சுற்றினார்கள். விவசாயிகளைச் சந்தித்தார்கள். நிபுணர்களுடன் கலந்து பேசினார்கள். அப்போதுதான் அவர்கள் எங்களுக்கு அறிமுகமானார்கள்.

மக்கள் சக்தி இயக்கம் குடந்தையில் நடத்திய நதிநீர் மாநாடு அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்தது. நான் இம்முறை அமெரிக்கா சென்றபோது நதிநீர் இணைப்புக்காக கம்ப்யூட்டர் மூலம் ஒரு மாடல் தயாரிக்க ஒரு மாநாட்டை பிட்ஸ்பார்க்கில் கூட்டினார்கள்.

அமெரிக்க நாட்டில் வாழும் தலைசிறந்த இந்திய வல்லுனர்கள் இதில் கலந்து கொண்டார்கள். செயற்கை அறிவு என்ற கம்ப்யூட்டர் முறையில் புகழ் பெற்ற கார்னிகி மெலான் பல்கலைக்கழக ராஜ்ரெட்டி, கனடா நாட்டு மெக்மாஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜசேகர மூர்த்தி, கலிபோர்னிய பல்கலைக்கழகத்து டாக்டர் பிரேம் செயின்ட், இந்தியத் திட்டக் கமிஷனின் ஆலோசகரும், டேக்ஸ் பல்கலைக்கழகத்து பேராசிரியருமான டாக்டர் மகேஷ் சதுர்வேதி, டாக்டர் சுப்பாராவ், டாக்டர் நல்லுசாமி இப்படி ஒரு தேர்ந்து எடுத்த கூட்டம்.

அந்தக் கூட்டத்தில் நான் தென்னகத்து நதிகளை இணைக்க வேண்டிய அவசியத்தையும், அவசரத்தையும், சாத்தியத்தையும் பேசினேன்.

எங்கோ பல்லாயிரம் மைல்களுக்கப்பால் இந்திய நாட்டின் தலைசிறந்த அறிஞர்கள் காவிரிக்குத் தண்ணீர் கொண்டுவருவது பற்றித் தங்கள் நேரம், உழைப்பு, பணம், அறிவு எல்லாவற்றையும் பயன்படுத்தி ஒரு பல்கலைக்கழகத்தின் இரண்டாவது மாடியில் தமிழ் மக்களின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால் நாம் அதுபற்றியே சிந்திக்க வேண்டும். அதுபற்றிய விஷயம் தெரிந்த அறிஞர் பெருமக்களுடன் விவாதிக்க வேண்டும். பின் திட்டம் தீட்ட வேண்டும். பின் செயல்படுத்த வேண்டும்.

பிட்ஸ்பர்க் நல்ல துவக்கம்Ð


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1991

தென்னக நதிகள் இணைப்பு இயக்கம்
அமெரிக்காவில் கங்கை காவிரி இணைப்பு இயக்கம்
சட்ட மன்றத்தில் உரை
யாரோ செய்யும்பொழுது நம்மால் மட்டும் ஏன் முடியாது?
நீங்கள் மனவலிமை பெற வேண்டுமா?
இதோ… உங்கள் வாழ்வை வளமாக்க ஒரு நூல்
ஓடை அல்ல நீ… ஊற்று நீர்!!
மத்திய மாநில அரசுகளுக்கு வாழ்த்து
உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை