Home » Cover Story » நீங்கள் மனவலிமை பெற வேண்டுமா?

 
நீங்கள் மனவலிமை பெற வேண்டுமா?


இராமநாதன் கோ
Author:

அதோ அவர் வருகிறார்: சரியாக அலுவலகத்திற்கு ஐந்து நிமிடம் முன்னதாக வந்து அமருகிறார். அவரைப் பார்த்ததும் அங்குள்ள அனைவரும் உற்சாகத்துடன் “குட் மார்னிங் சார்” என்கிறார்கள்Ð எல்லோருக்கும் ஒரு புத்துணர்வு, கல்யாண விருந்தில் பங்கு கொள்ளச் செல்வது போல மனதில் உற்சாகம்! மகிழ்ச்சி, அவரவர் வேலைகளைச் சரியாகச் செய்து முடிக்கப் பம்பரமாய் ஓடுகிறார்கள். அப்படி ஏன் அவரிடம் எந்த உத்தரவும் இல்லாமல் இவர்கள் செயல்பட வேண்டும்? அவர் நல்லவர்Ð வல்லவர்Ð எண்ணியதைச் செய்து முடிப்பார். கோபமோ கொந்தளிப்போ இல்லை; தம்மைவிட உயர்அதிகாரி வந்தாலும் பதட்டமோ பயமோ கிடையாது. மரியாதையுடன் அவருடைய பைல்களை எடுத்து வைப்பார்; அவர் நினைப்பது சரியாக நடக்கும். எந்த பெரிய வெற்றியும் ஆணவத்தையோ தோல்விகள் மனச்சோர்வையோ உண்டாக்குவதில்லை. அவர்தான் தன்னை வென்றவர்; தன் மனத்தை வென்றவர்; எண்ணங்களை ஆள்பவர். எண்ணங்கள் அவரை ஆட்டுவிப்பதில்லை. மன உறுதி மனவலிமை பெற்றவர் அவர்.

எல்லாரையும் போலவே இவருக்கும் உடலமைப்புகள் இருந்தாலும், இவர் மட்டும் எப்படி உயர்ந்து நிற்கிறார்? இவருக்குள் என்ன நடக்கிறது?

மன உறுதி – வன்மை படைத்தவர், உடல் எவ்வாறு இயங்குகிறது?

இயற்கையின் படைப்பில் ஒவ்வொரு செயலும் ஒரு வகை முறைமை (Rhythm)யுடன் நடக்கிறது. “இரவிற்குப் பின் பகல்; கோடைக்குப் பின் வசந்தம்” என முறைப்படி நடக்கின்றன. இயற்கையின் படைப்பான நமது உடலிலும் எல்லா உறுப்புகளும் ஒரு முறைமையுடன் இயங்கி உடலைச் சீராக வைக்கிறது. செயல்பட வைக்கிறது.

உடலில் நரம்பு மண்டலம் தான், எல்லா உறுப்புகளையும் இயக்கும் தலைமையிடம். இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று நல்விருந்திற்குக் கட்டுப்பட்டு நாம் விரும்பியவாறு செயல்படும் நரம்புகள் (Somatic Nervous System) நாம் ஒரு பேனாவை எடுத்து எழுத நினைத்தவுடன், மூளையிலிருந்து செய்திகள் கை நரம்புகளுக்குச் சென்று கையிலுள்ள தசைகளை இயக்கி, பேனாவை எடுத்து – மேலும் சில அசைவுகள் மூலம் எழுதுகிறோம். இவை அனைத்தும் நாம் விரும்பியவாறு எப்படி வேண்டுமானாலும் செய்ய முடியும்.

இரண்டாவது நம் விருப்பத்திற்கு அப்பாற்பட்டு, இதயம், நுரையீரல், இரைப்பை, கல்லீரல், இரத்தக் குழாய்கள், சுரப்பிகள் போன்ற முக்கிய உறுப்புகள் (Autonomous Nervous System). இவை சரியாகச் செயல்படும்போது நமது இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிகிறது. அதன் மூலம் உடலின் எல்லாப் பாகங்களுக்கும் நல்ல இரத்தம் செல்கிறது. இரைப்பை நம் சுரப்பியின் மூலம் நாளொன்றுக்கு மூன்று லிட்டர் திரவங்களைச் சுரந்து ஜீரணத்தைச் செய்கிறது. குடல்கள் முறையாக அசைவு செய்து சத்துப் பொருட்களை உறிஞ்சி கழிவுப் பொருள்களை வெளியேற்றுகின்றன. உடலிலுள்ள சுரப்பிகள் சரியான ஹார்மோன்களைச் சுரந்து வளர்ச்சியை உண்டாக்குகிறது. பெண்களுக்கு கரு வெளியாதலும்; ஆண்களுக்கு விந்து வெளிப்படுத்தலும் முறையாக நடக்கின்றன. இத்தனைச் செயல்களிலும் முக்கியப் பங்கு கொள்வது, தானியங்கு நரம்பு மண்டலம் தான். இப்படி சரியாக செயல்படும்போது, மனம் தெளிவாக – அமைதியாக சிறப்பாகச் செயல்படுகிறது. தீய எண்ணங்கள், குழப்பங்கள் தொடர்ந்து நீடிக்கும்போது தானியங்கு நரம்புகள் பாதிக்கப்பட்டு பல்வேறு உறுப்புகள் நோய்க்குள்ளாகின்றன.

இதன் விளைவுகள் என்ன?

கோபம், கவலை, பயம், குற்ற உணர்வு போன்றவைகளால் உண்டாகும் மன உளைச்சல் தானியங்கு நரம்புகளைப் பாதித்து ஹார்மோன்கள் சுரக்கும் உறுப்புகளை மாற்றிச் செயல்படச் செய்கிறது. இதன்விளைவாக, சில நோய்கள் உண்டாகின்றன. சில நோய்கள் அதிகமாகின்றன. சில நோய்கள் தாமாகக் குணமாகின்றன. சில நோய்கள் குணமாவதில்லை.

1. இதயத்துடிப்பு பன்மடங்கு அதிகமாகிறது; இரத்த அழுத்தம் கூடுகிறது; இதயம் சுருங்கி விரிவது துரிதப்படுத்தப்படும்போது வழக்கத்திற்கு அதிகமான ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது; இந்த அதிகத் தேவையை ஈடுசெய்ய முடியாத நிலையில் மாரடைப்பு சிலருக்கு உண்டாகலாம்.

2. மன உளைச்சல் அதிகமாகும்போது, மூளையிலிருந்து செய்திகள் நரம்புகள் வழியாக இரைப்பைக்குச் சென்று அங்குள்ள செல்கள் தூண்டப்பட்டு அதிகமான ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைச் சுரக்கிறது. இந்நிலை தொடர்ந்து நீடிக்கும்போது வயிற்றுப்புண் உண்டாகிறது. மேலும் குடல்கள் அசைவில் மாற்றம் ஏற்பட்டு, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயுக்கோளாறு போன்றவை உண்டாகின்றன.

3. அளவிற்கதிகமாக காம உணர்வுகள், ஆண்களுக்கு ஆண்மையின்மை, சுய இன்பம் போன்றவைகளில் தானியங்கு நரம்புகள் முக்கியப் பங்கு கொள்கின்றன.

4. சர்க்கரை நோய், ஆஸ்துமா, மற்ற நரம்பு நோய்களும் அமைதியில்லாத மனநிலையால் அதிகமாகிறது.

மனஉறுதி – மனவலிமை எப்படி உண்டாகிறது?

தானியங்கு நரம்புகள் நமது விருப்பத்திற்கு கட்டுப்பட்டவை அல்ல; ஆனால் நமது எண்ணங்களுக்கு அதன் இயக்கத்தைக் காணும் தன்மை உண்டு.

நல்ல நூலகம்; நல்ல சிந்தனைகள்; நல்ல செயல்களைத் தொடர்ந்து செய்யும்போது இயல்பிலேயே சிலருக்கு மனவலிமை உண்டாகிறது.

தியானம், யோகப்பயிற்சிகள், உடல் பயிற்சிகள் போன்றவைகளும் மன வலிமைக்கும் துணை புரிகின்றன.

பொதுவாக எண்ணம், சொல், செயல்கள் நன்றாக அமைத்து – ஊக்கத்துடனும், முயற்சியுடனும் செயலாற்றும்போது, தானியங்கு நரம்பு மண்டலம், நம் உடலுறுப்புகளை முறைமையுடன் செயல்படுத்தும்; மன உறுதி பெருகும்; உடல் நலமும் வளமும் உண்டாகும் வாழ்த்துக்கள்.

-டாக்டர் ஜி. இராமநாதன் எம்.டி.
உடையாம்பாளையம், கோவை


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1991

தென்னக நதிகள் இணைப்பு இயக்கம்
அமெரிக்காவில் கங்கை காவிரி இணைப்பு இயக்கம்
சட்ட மன்றத்தில் உரை
யாரோ செய்யும்பொழுது நம்மால் மட்டும் ஏன் முடியாது?
நீங்கள் மனவலிமை பெற வேண்டுமா?
இதோ… உங்கள் வாழ்வை வளமாக்க ஒரு நூல்
ஓடை அல்ல நீ… ஊற்று நீர்!!
மத்திய மாநில அரசுகளுக்கு வாழ்த்து
உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை