Home » Cover Story » தென்னக நதிகள் இணைப்பு இயக்கம்

 
தென்னக நதிகள் இணைப்பு இயக்கம்


நல்லசிவம் க.ர
Author:

தன்னம்பிக்கை ஆசிரியர் அவர்கட்கு

வணக்கம்,

“ஏர் ஓட்டுவதிலிருந்து – ஆடு மாடு மேய்த்துச் சாணம் எடுப்பது வரை, எல்லாப் பணிகளையும், செய்தவன்” என்பதை படித்தவுடன் எனது உள்ளத்தில் சகோதர உணர்வல்ல, பாசம் கட்டிப்பிணைக்கிறது.

அறிவு வராக் கூட்டமும் – மண்ணோடு ஒட்டியவர்களும் இந்த ‘தன்னம்பிக்கை இதழை மீண்டும் மீண்டும் படித்தால் நாடு பயன்பெறும். உங்களது கட்டுரை டாக்டர் கே.எல். ராவ் அவர்களது கருத்துக்கள் ஆகியவைகளை மேலும் விளம்பரப்படுத்த என்னால் ஆன முயற்சிகளைச் செய்கிறேன்.

தங்களது உயிரோடு ஒன்றிய உணர்வை நான் தானே புரிந்து கொள்ள முடியும்.

எனது முன்னோர்கள் 100 ஆண்டுகளுக்கு முன் சேலம் மாவட்டத்தில் புஞ்சையில் பஞ்சை வாழ்க்கை நடத்தி – இருக்கும் நிலத்தை விற்றுவிட்டு அன்றைய கோவை மாவட்டம் கொடுமுடி பகுதியில் குடியேறி இன்றைய நிலைக்கு உயர்ந்தவர்கள் 1 அந்த நிலையில் இன்று நான் தண்ணீர் தண்ணீர் என்று எழுத – பேசத் தூண்டுகிறது.

காவிரி – பவானி – வைகை போன்ற நதிகள், வரும் 10 ஆண்டுகளில் குடிதண்ணீருக்கே பற்றாத நிலை ஏற்படும் தமிழ் குடிமக்களில் எத்தனை சதவிகிதத்தினர் இந்த உண்மையை உணர்ந்திருக்கின்றனர்?

நீங்கள் – சிறப்பாக முறையாக சிந்திக்கிறீர்கள் – வழி காட்டுகிறீர்கள். தங்கள் முயற்சியில் நான் எல்லா ஒத்துழைப்பையும் கொடுக்கிறேன்.

நான் 1963-69 வாக்கில் சட்ட சபையில் இன்று ஏற்பட்டிருக்கும் அதிகபட்சமான விஸ்தரிப்பைத் தடுக்க தி.மு.க.வுடன் முட்டி மோதி முயற்சித்தேன். அவர்கள் இந்திராவிடம் பயந்து கோட்டை விட்டுவிட்டனர்.

கடந்தவாரம் பெங்களூரில் இருந்தேன்; காவிரி நீர் பெயரில் கர்நாடகத்தை உணர்ச்சிப் பூர்வமான நெருப்புக்கேந்திரமாக அரசியல்வாதிகள் ஆக்கிவிட்டதைக் கண்டேன்; தமிழகம் அதற்கு ஈடுகட்டி காவிரித் தண்ணீரின் நியாயத்தைப் பெறுமா?

Ä கடவுள் என்பது வேறல்ல – சத்தியம்தான் கடவுள்
Ä சத்தியம் என்பது உண்மை பேசுவது மட்டுமல்ல; உள்ளத்திலும் உண்மையோடு இருப்பதேயாகும் – காந்தியடிகள்
Ä எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும் மனஉறுதி இல்லாதவர்களை உலகம் கைவிட்டு விடுகிறது – திருவள்ளுவர்
Ä எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும் மனஉறுதி இல்லாதவர்களை உலகம் கைவிட்டு விடுகிறது – திருவள்ளுவர்
Ä “வெற்றி என்பது முற்றுப் பெற்றதுமல்ல; தோல்வி என்பது முடிவானதும் அல்ல”
Ä நல்ல எண்ணங்கள் நம் வாழ்க்கையை நல்வழியில் செலுத்த உதவுகின்றன
“Success is never ending; Failure is never Final” – Dr. Schuller
Ä தேவையான நான்கு:
இன்று நம் இந்தியத் திருநாட்டிற்குத் தேவையான நான்கு:
1. நாட்டுப்பற்று
2. தேச ஒற்றுமை
3. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை
4. கடின உழைப்பு
இந்த நான்கு தன்மைகளையும் எண்ணி தன்னிறைவு பெறும் ஒவ்வொரு குடிமகனும் செயல்பட்டால், இந்தியா உலக அரங்கில் உயர்ந்து நிற்கும். இந்த விடுதலை நாளில் ஆகஸ்டு 15ல் இதனை நினைவு கூர்ந்து செயல்படுவோம்
-தன்னம்பிக்கை


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1991

தென்னக நதிகள் இணைப்பு இயக்கம்
அமெரிக்காவில் கங்கை காவிரி இணைப்பு இயக்கம்
சட்ட மன்றத்தில் உரை
யாரோ செய்யும்பொழுது நம்மால் மட்டும் ஏன் முடியாது?
நீங்கள் மனவலிமை பெற வேண்டுமா?
இதோ… உங்கள் வாழ்வை வளமாக்க ஒரு நூல்
ஓடை அல்ல நீ… ஊற்று நீர்!!
மத்திய மாநில அரசுகளுக்கு வாழ்த்து
உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை