– 2016 – July | தன்னம்பிக்கை

Home » 2016 » July

 
 • Categories


 • Archives


  Follow us on

  வழிகாட்டி…

  மாலை மயங்கிக்கொண்டிருக்கிறது. கதிரேசன் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள் “பூவாணி” என்னும் ஸ்தலத்தில் இருக்கின்ற தோட்டக்கலைப் பண்ணை. அருகே இருக்கின்றார். ‘மா’, மர நாற்றுக்கள் நூற்றுக்கணக்கில் செழிப்பாக வளர்ந்து கொண்டு இருந்தன.

  மாங்கனி வகைகளின் அரசன் என்று அழைக்கப்படும் ஹிமாயுதீன் வகை மாங்கனி குறித்து தெரிந்து கொண்டார். அவை மிகப்பெரிய உருவத்தில் இருப்பதாலும், இனிப்பு தன்மை அதிகமாக இருப்பதாலும், இந்த அரசர் பட்டம் பெற்று உள்ளதாம். தவிரவும் பஞ்சவர்ணம் என்று மற்றொரு உள்ளூர் மாங்கனி வகை உண்டாம். ஒவ்வொரு மாமர இலையும் ஒவ்வொரு வகையான அடையாளம் கண்டறியக்கூடிய தன்மைகளுடன் இருந்தும் குறித்தும் அங்கிருந்த தோட்டக்கலை நிபுணர் விளக்கிக் கொண்டு இருந்தார். அந்த வழிகாட்டி சென்ற இடங்களில் எல்லாம் தொடர, தொடர Scion சையான் Root Stock ரூட் ஸ்டாக் என்று அறிவியல் பதங்கள் விளக்கங்களோடு பரிமாறப்பட்டன. தொழில்நுட்ப வழிகாட்டிகள் நுணுக்கமான விஷயங்களை எளிமையாக்கி கற்றுத்தருகின்றனர்.

  பழந்தோட்டம் பசுமையை கண்களுக்கு விருந்தாக்க, பறவையினங்கள் ‘குப்’ என எழுந்து பறக்கத் தொடங்கின. நீலவானில் பின்புலம் தொடுவானம் அருகே நிறம் மாறி ஆரஞ்சு வண்ணம் பூசிக் கொண்டு இருந்தது. தொலைதூரம் செல்லும் பறவைகளும் பெருங்கூட்டமாக செல்வது தெரிந்தது. அவை மைக்ரேடரி பறவைகளாக இருக்கக்கூடும். இருபதினாயிரம் கிலோமீட்டர் தூரம் கூட வருட வருடம் காலந்தவறாமல் சரியாக வேடந்தாங்கள், இரங்கன் திட்டு போன்ற இடங்களுக்கு பறந்து வந்து சேரும் என்று அறிவியலில் படித்தது நினைவில் வந்தது.  அதுபோன்ற மூன்றாவது கண்ணை மூளைக்குள்ளேயே புதைத்து கடவுள் அல்லது இயற்கை படைத்து இருப்பதாக அறிவியல் கூறுகின்றது. அதை பைனியல் சுரப்பி என்றும் கூறுகின்றனர். பறவைகள் தமது பயணத்தை தொடங்குகையில் முழு வழியும் அறிந்திருக்குமா…? என்ற கேள்விக்கு கேள்விகுறுல் தான் பதிலாக அமைந்துள்ளது. இன்றுவரை, ஆச்சரியங்கள் நிரம்பிய பயணம் இது. வழிகாட்டி யார்…? என்று கேட்டால்…? அவனாகத்தான் இருக்கும் என்று தோன்றும்…அவன்…? எவன்…? எல்லாம் அவன் செயல் என்கின்றோமே…!

  பழங்காலத்தில் கைôட்டிப் பலகைகள், சுமைதாங்கிக்கற்கள் எல்லாம் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. வழிப்போக்கர்கள் திசை தெரிந்து கொள்வதற்காக கைகாட்டிப்பலகைகள் பயணிகளோடு சேர்ந்து பயணிக்க வருவதில்லை. ஆனால், அவை இல்லாமல் பயணம் நடைபெறாது. எண்ணற்ற திருப்பங்கள், நான்கைந்து வழிகள் குறுக்கிடும் சந்திப்புகள் எல்லா இடங்களிலும் வழிகாட்டும் அடையாளங்கள் அவசரப் பயணங்களுக்கு உயிர்காக்கும் மருந்துகள் என்றால் மிகையாகாது. பயணப்பாதைகள் குறித்த விபரங்களும் வர்ணனைகளும், அடுத்து அதே இலக்கை நோக்கி பயணிபப்வர்களுக்கு தடயங்கள் ஆகிவிடுகின்றன. ஆசிரியர்கள் அப்படிப்பட்ட வழிகாட்டிகள் மற்றும் சுமைதாங்கிகள். பல்வேறு மாணவர்களை அவர்கள் வருடந்தோறும் சந்தித்தாலும் யாரோடும் தமது இடத்தை விட்டு, உடன் சென்று விடுவதில்லை. ஒவ்வொருவருடைய குணாதிசயங்களையும் தம்முள் கிரகித்துக் கொண்டு மாணவர்கள் வெற்றியடைந்தார்களா…? அல்லது எந்த இலக்கை அடைந்தார்கள் என்பதையும் மனதில் கொண்டு அடுத்த தலைமுறைக்கான புதிய பாடங்களோடு வழிகாட்டிகள் தம்மை செம்மைப்படுத்திக் கொள்கின்றனர்.

  திருக்குறள் உலகப்பொதுமறை என்று அனைவருக்கும் விருப்பமான பாடமானாலும் சில குறள்களுக்கு நண்பர்கள் பொருள் கேட்டுக் கொண்டேதான் இருக்கின்றார்கள். வழிகாட்டியவர்களுக்கு, குருதட்சணை கொடுப்பது என்று ஒரு வழக்கு உண்டு. ஏலைவன் அளித்த கட்டைவிரல் தட்சணை கண்களில் உடனே நீர் வரவழைக்கின்றது. துரோணாச்சாரியரின் கோணத்தில் கட்டைவிரல்தான் சரியான தட்சணையாக தோன்றி இருக்கின்றது. இன்றைய ஆசிரியர்கள் ஊதியம் பெறுகின்றவர்கள். தமது கடமையை சரிவர ஆற்றுவதற்காக ஊதியம் பெறுகின்றனர். தட்சணையாக பெருமையாக கருதலாம். தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாயும், தன் மாணவனை, மாண்பு மிக்க சாதனையாளன் என்று கேள்விப்படும் ஆசிரிய வழிகாட்டியும் மகிழ்ச்சி மட்டற்றதாகும். திருக்குறளில் செய்நன்றி அறிதல் என்னும் அதிகாரம் அறத்துப்பாலின் பதினோராவது அதிகாரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

  அதில் வரும் குறள்களுக்கு குறள் வானம் என்னும் தமது புத்தகத்தில் திரு. சுப. வீரபாண்டியனார் இருபது உரைகளுக்கும் மேல் அலசி பொருள் நுட்பத்தை விளக்கி உள்ளார். நன்றி அறிதல், நன்றி பாராட்டுதல் என்னும் இவ்விரண்டு சொற்களுகுக்கிடையே ஆன வேறுபாடு அற்புதமானது. ஒருவர் தமக்குச் செய்த உதவியினை நினைவில் வைத்து இருப்பதும் அவருக்கு சந்தர்பத்தில் திரும்ப உதவுதலும் நன்றி அறிதல். நம்மை படிக்க வைத்த ஆசிரியரை, நாம் திரும்ப படிக்க வைத்திட முடீயாது. அதை அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. உண்மையில், எதையுமே, எதிர்ப்பார்ப்பதில்லை. ஒரு பெரிய தொழீல் அதிபர் பள்ளி ஒன்று நடத்தி  மாணவர்களை படிக்கச் செய்தால்… அது நன்றி பாராட்டுதல் ஆகும். அவரது ஆசிரியர் அவருக்கு, செய்த உதவியைப் போல தாமுமு; பலருக்கு கற்ளுக் கொள் உதவி செய்தால் அது நன்றி பாராட்டுதலில் சேரும். இத்தகைய பண்பு உலகம் தழைத்தோங்க உதவும்.

  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஜெயராஜ் என்னும் விவசாயியின் தோட்டத்தில் தேன்கூடு ஒன்றை மிக அருகில் சென்ற பார்க்க நேர்ந்தது. பரபரப்பாக தேனீக்கள் பறந்து கொண்டிருக்க அவற்றின் கூட்டைத் தொட்டு உயர்த்திப் பிடித்தபோதும் கூட ஒன்றுமே செய்யவில்லை. நகர்ப்புறத்தில் பூங்காவில் விளையாடிய குழந்தைகளை துரத்தித் துரத்திக் கொட்டி கோப தேனீக்கள் நினைவில் வந்தன. ஒவ்வொரு தேனீக்களும் ஒவ்வொரு வகை போலும். மனிதர்களிலும் அப்படித்தான் என்று தோன்றியது. கொட்டாத தேனீக்கள் இருக்கக்கூடும். நம்பிக்கையோடு நாம் கையாள வேண்டும். மரப்பெட்டிக்குளு; உள் சட்டங்களில் தமது இராணித்தேனியின் வழிகாட்டுதலில் தேன்மெழுகால் கூடுகட்டிக் கொண்டிருந்தன. இந்த வகை தேனீக்கள், அதிக கோபமில்லாதவை என்ற படிக்க நேர்ந்தது. அவற்றை பூக்கள் அதிகமில்லாத காலங்களில் சர்க்கரைப் பாகினை கூட்டுக்குள் வைத்து அருந்தச் சய்து பாதுகாப்பார்களாம். தேனீக்களுக்கே சர்க்கரை கொடுக்கக்கூடிய வழிகாட்டிகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டோம். எல்லாம் காலத்தை பொறுத்தது என்ற தோன்றியது. யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வழிகாட்டலாம். சிலந்தி, ஸ்காட்லாந்து அரசன் இராபர்ட் தி ப்ண்ஸ்ண்க் வழிகாட்டியது தனி கதை.

  சமீபத்தில் 2015 ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகள் வெளியாகின. தமக்கு வழிகாட்டிய நிறுவனங்கள், பயிற்சி மையங்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் குறித்து வெற்றியாளர்கள் நாளிதழ், வார இதழ் போட்டிகளில் குறிப்பிட்டு நன்றி அறிவித்துக் கொள்வது இயல்பு. அவர்கள் எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு நன்றி பாராட்டுவார்கள் என்பதிலும் ஐயமில்லை. கர்ணன் கதாபாத்திரம் மஹாபாரதத்தில் உன்னதமானது. எவ்வளவோ தானங்கள் செய்தும், அன்னதானம் செய்யாததால் அவருக்கு சொர்க்கத்தில் பசி தீரவில்லையாம். கண்ணன் வழிகாட்டி அறிவுரை கூற, அதன்படி கர்ணன் தனது வலது கை சுட்டுவிரலை வாயில் வைக்க பசி தீர்ந்ததாம். ஏனெனில், அதோ அங்கே – என்று யாருக்கோ, முன் காலத்தில் உணவு கிடைக்கும் இடத்தை கர்ணன் சுட்டிக்காட்டியதால் அந்த சுட்டு விரலுக்கு அவ்வளவு புண்ணியமாம் என்று கதை செல்கின்றது. வழிகாட்டிகளுக்கு எவ்வளவு புண்ணியம் பாருங்கள்.

  பாரதி…

  “அன்னச் சத்திரம் ஆயிரம் நாட்டல்

  ஆலயம் பதினாயிரம் சாட்டல்

   அன்ன யாவினும் புண்ணியம் கோடி

  ஆங்கோர் ஏழைகளுக்கு எழுத்தறி வித்தல்”.

  என்று பாடியுள்ளார்…

  கர்ணன் கதைக்கும் சம்பந்தம் உள்ளது. ஒரு ஏழை என்றால் பொருளில் ஏழை என்று பொருள் கொள்ளாமல் கல்வியல் தேவை உள்ளவர் என்றே பொருள் கொள்ளுதல் பொருந்தும். அல்லது, தான் கற்கும் கல்விக்கட்டணம் கட்ட வழி காணாதவராகவும் பொருள் கொள்ளலாம். டாக்டர் சங்கர சரவணன் தன்னிடம் தமிழ் கற்க விழைந்த மாணவன் ஒருவன் கட்டணப் பொருள் இல்லையே என தயங்க… அதைப்பற்றி அப்புறம் யோசிக்கலாம் என்று கற்றுக்கொடுத்து அவன் தேர்வில் வெற்றிப் பெற்றதை உள்ளார்ந்த திருப்தியோடு பகிர்ந்து கொண்டார். ஆத்ம திருப்தி வழிகாட்டிகளுக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. டாக்டர் சங்கர சரவணன் ஒரு முனைவர் படிப்பு மாணவராக கால்நடை மருத்துவக்கல்லூரியில் தற்போதும், படிப்பதும், ஆண்டுதோறும் விகடன் பிரசுரம் வெளியிடும் போட்டித் தேர்வு புத்தகங்களுக்கு பங்களிப்பதும் குறிபிடத் தகுந்தது. வழிகாட்டிகள், கற்றது கையளவு என்னும் ஒளவையின் வாக்கிற்கிணங்க தம்மை தொடர்ந்து செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டியது கண்கூடு. அவ்வப்போது மாறிவரும் பாடத்திட்டங்களுக்கும், அதற்கேற்ப மாற்றிக் கொள் வேண்டிய தயாரிப்புத் திட்டங்களுக்கும் வழிகாட்டிகள் தேவைப்படுகின்றார்கள்.

  சென்ற வருட வெற்றியாளர்கள் கடந்து சென்ற பாதைகளின் பேசும் சாட்சிகளாகத் திகழ்பவர்கள் வழிகாட்டிகள். கதிரேசனின் நண்பர் ஒருவரின் மகள் மிகவும் பிரைட் மாணவி. ஐ.ஏ.எஸ். படிக்க விரும்பினார். சென்னையில் ஒரு பயிற்சி நிலையத்திலும் சேர்ந்தார். வீடு வாடகை மட்டுமே இருபதினாயிரம். மாணவியின் அம்மா, மகளே பாபநாசம் திரைப்படம் பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுகின்றாளே என்று ஆச்சரியப்பட்டார். இயல்பாகவே திரைப்படம் பார்க்காமல் படிப்போம் என்று தானாக மனமுவந்து நினைத்தால் அது நன்று. ஆனால், மற்றவர்கள், கட்டுப்பாட்டால், பாபநாசம் செல்லாமல் கட்டுப்படுத்தினால் அது பாடநாசம். நினைவுகள் திரையரங்கத்தில் இருந்தால், அதைப் பார்த்துவிட்டு இவ்வளவு படிப்போம் என்று குறிக்கோள் வைக்கலாம் அல்லது இவ்வளவு படித்தபிறகே பார்க்கலாம் என்றும் சொல்லாம். படம்கூட பாடமாக வேண்டும். மூன்று மணிநேர திரைப்பட நேரத்தில் மூளையின் மற்ற பகுதிகள் தூண்டிவிடப்பட்டு ஒரு உணர்வு ரீதியான புத்துணர்ச்சியை போட்டியாளர்கள் பெறக்கூடும்.

  ஒரே மாதிரியான படிப்பு முறையை பின்பற்றுவதால் படிப்பிலிருந்து சற்றே பாதை மாறி ஒரு புத்துணர்ச்சியை திரைப்படம் மூலம் தேடலாம் என்று தோன்றியிருக்கலாம். அதனால், மியூஸியம், நூலகம் முதலிய இடங்களுக்கு செல்லுமாறு ஊக்குவிக்கலாம் என்று ஒரு புதிய உத்தியை தெரிவித்தோம். பாபநாசம் திரைப்படம் கூட திரைப்படங்கள் மூலம் வாழக் கற்றுக்கொண்ட திரைக் கதாநாயகன் குறித்துதான். திரைப்படங்கள் கூட வழிகாட்டியாகி விடக்கூடும். டாக்குமென்டரி திரைப்படங்கள், வரலாற்ற திரைப்படங்கள் என பெரிய பட்டியலே பிறகு தயாரிக்க வேண்டியிருக்கும். வழிகாட்டிகள் பல திரைகளை காட்டினாலும் பயணிப்பவர்களின் மனப்பாங்கிற்கேற்ப இலக்குக்கான வேகமும் தூரமும் பயண முறையும் மாற்றிக் கொள்ளப்படுகின்றது.

  இரமண மஹரிஷி அவர்களது வழிகாட்டும் வாக்கியங்கள் அடங்கிய வசனாமிர்தம் புத்தகம் திருவண்ணாமலை, இரமணாஸ்ரமத்தில் கிடைக்கின்றது. அதில் ‘குரு’ என்பவர், ‘ஆத்மா’ தான் என்று கூறியிருப்பார். ‘ஆத்மா’, தான் யார் என்று அறிந்து கொள்ள முடியற்சிக்க வேண்டும் என்று கூறியிருப்பார்.

  புறத்தே குருக்களையும் வழிகாட்டுதலையும் தேடினாலும், அவை அமைவது ஆத்மாவின் ஈடுபாட்டினால் தான் நிறைவேறுகின்றது என்று கூறியிருப்பார். எட்கார்ட் டல்லி எழுதிய, ‘தி பவர் ஆஃப் நப்’ (The Power of Now) என்னும் ஆங்கில புத்தகம். அந்த தருணத்தில் வாழ:வது என்பதன் முக்கியத்துவம் குறித்து பேசியிருப்பார். கடிகார நேரம் மற்றும் உளவியல் நேரம் என்கின்ற கருத்துக்கள் படிக்கத் தகுந்தன. அதாவது கடிகாரம் காட்டும் நேரம் அப்போதைய நேரம். மனிதர்கள் அதை மட்டும் காண்பது இல்லை. கடந்த காலத்தில் என்ன நடந்தது, எதிர்பாலத்தில் என்ன நடக்க உள்ளது என்கின்ற கவலைகளும், எதிர்பார்ப்பும் சேர்ந்து கடிகார நேரத்தை முள்ளாக குத்திக் கிழிக்கின்றன. எனவே நேரம் நினைவுகளால் மாசுபட்டு வருகின்றது. அப்படி இல்லாமல் மனதின் பாதிப்பிலிருந்து விடுபட்ட தூய்மையான கடிகார நேரத்தை நம்மால் பிரித்துணர முடியும் என்றால், பரிபூரண மகிழ்ச்சி கிடைக்கின்றது. இந்த கருத்தைத்தான் ஜென் தத்துவத்தில் – ‘அந்த நேரத்தில் வாழ்’ என்று கூறி இருப்பார்கள். ‘பவர் ஆஃப் நவ்’ புத்தகம் இதனை ஆங்கிலத்தில் மனதை களைதல் என்கின்ற கருத்து மூலம் விளக்கி உள்ளது. வழிகாட்டுதலில் ஆன்மீக வழிகாட்டிகளின் பங்கு கணிசமானது. மனித வாழ்வின் அடிநாதமாக, பின்புலமாக ஒரு ஆன்மீக திருப்தி இருக்க வேண்டும் என்ற ஸ்டீவன் கோவே தனது (Seven Habits of Effective People) என்கின்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார்.

  இரண்டு நெருங்கிய நண்பர்கள், கதிரேசனிடத்தில், “தயவு செய்து, சுய முன்னேற்ற புத்தகங்களை குறித்து பேசாதீர்கள்” என்று சொல்லி இருந்தார்கள். இந்தக்கருத்தும் மிகவும் கவனிக்கத் தக்கது. “ஏறத்தாழ எட்டு மணிக்கு”, என்ற சொற்றொடர் போல “சுயம்” என்பதும் “முன்னேற்றம்” என்பதும் முரணான வார்த்தைகள் தான். சுயத்தை வெளியிலிருந்து முன்னேற்ற வேண்டும் என்கின்ற கருத்துக்களை திணித்தோமேயானால் சுயமான பாதையும் பயணமும் – ஒரு (Stage Managed) விஷயமாக மாறிவிடுகின்றது என்னும் அவர்களது கருத்தும் சரிதான். பின்பற்றுவதற்காக என்று அல்லாமல், சுயத்தை பாதிப்பதற்காக என்றும் கொள்லாமல், என்ன…? என்று  தெரிந்து கொள்வதற்காக என்று தத்துவங்கலந்த சுயமுன்னேற்ற புத்தகங்களை படித்துப் பார்த்துவிட்டு பிறகு முடிவு செய்யலாமே… என்று கூறிப்பார்த்தேன். அப்படிப் பார்த்தால் திருக்குறள் கூட ஒரு சுயமுன்னேற்ற புத்தகமே என்றும் தோன்றியது. சமூகத்தை அனுசரித்துப் போவதற்காக மனித இயல்புகள் குறித்து அறிவதற்காக இலக்கியங்கள் மறைமுகமாகச் செய்வதை சுயமுன்னேற்ற புத்தகங்கள் நேரடியாக செய்கின்றன. சில நண்பர்கள் பாடத்தைத் தவிர எந்த புற இலக்கியத்தையுமே படிக்கவில்லை. சிலர் படிக்கவேயில்லை. ஆனால், அவர்கள் எல்லோருக்குமே ஏதாவதொரு அல்லது யாராவதொரு… முன்மாதிரிகள் அல்லது வழிகாட்டிகள் இருப்பார்கள் என்பது வரை நிச்சயம்.

  சமீபத்தில் அவுட்லுக் பத்திரிக்கை அட்டையில் இராஜிங்க்யா இஸ்லாமிய மக்களின் சிரமம் குறித்த கட்டுரை இடம் பெற்று இருந்தது. மியான்மார் நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் போதிய அடிப்படை வசதிகள் இன்றி இருக்கின்றனராம். மலாக்கா ஸ்ட்ரெய்ட் என்னும் அந்தமான் மற்றும்  தாய்லாந்து பகுதிகளû சுற்றியுள்ள கடல்பகுதியில் சுமார் எட்டாயிரம் மக்கள் அந்த நாட்டினாலும் விருப்பப்படாமல் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டே உணர்வுக்கும் நீருக்கும் போராடி வாழ்வதும், வீழ்வதுமாக இருக்கிறார்கள் என்கின்ற செய்தி நெஞ்சை நெருடியது. வழிகாட்டிகள் யாருமின்றி புலம் பெயர்ந்த மக்களின் துயரம் ஆற்றப்படுவதற்கான அமைதித் தீர்வினை நோக்கி உலக நாடுகள் நகர்வதற்கு உகந்த சூழல் விரைவில் பிரார்த்திக் கொண்டார் கதிரேசன்.

  உலகத்தின் நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியாய் வழிகாட்டிய, ரோம, கிரேக்க சாம்ராஜ்யங்களை கட்டியாண்ட மன்னர்கள் பலர். உலகை ஓர் குடையின் கீழ் ஆளுவேன் என்று கிளம்பிய கிரேக்க மாவீரன் அலெக்ஸாண்டரின் கதை நாடறியும். அவர் குதிரையின் பெயரை (பெகாசஸா, பூசெபாலஸா என்று இமெய்ல் செய்யுங்கள்) L.K.G. குழந்தைகளின் அப்பாக்கள் அறிவார்கள்… அத்தகைய கிரேக்க நாடு இன்று கடனில் தத்தளிக்கின்றதாம். அங்கு வாழும் மக்கள் அனைவரும் ஐம்பத்தேழு வயதானாலும் ஓய்வூதியம் உண்டாம். ஐரோப்பிய யூனியன் அவர்களுக்கு கடன் கொடுக்க அதுவும் காலியாகி விட்டது. வழிகாட்டியவர்களுக்கு வழிகாட்ட பலமுறை கூட்டங்கள் நடந்துள்ளன. ஜெர்மனி கிட்டத்தட்ட கைவிரித்துவிட்ட நிலை என்று செய்தித்தாள்கள் பரபரப்பாக செய்தி சொல்லிக் கொண்டிருக்கின்றன. வழிகாட்டுதல் சமயத்தில் திரும்பி விடுகின்றது. முன்பு இரண்டாம் உலகப்போர் முடிந்த நிலையில் ஜெர்மனிக்கு கிரீஸ் கடன் உதவி செய்ததாக சமூக வலைதளங்கள் தெரிவிக்கின்றன.

  ஒரு தலைமுறை பெயரும் புகழும் பெற்று வாழ்வதும் அதனை தொடர்ந்து வரும் தலைமுறைகள் சிரமப்படுவதும் பின்னர் மீண்டும் சிறிது காலம் கழிந்து சீரும் சிறப்பும் திரும்ப வருவதுமாகத்தான் வரலாறு அமைகின்றது. வழிகாட்டிகள் நிரந்தரமானவர்கள் இல்லை போலும்…

  முக்கனிகளில் பழங்களின் அரசன் மாங்கனிதான், அவற்றின் பல வகைகளில் கலப்பினங்களை உருவாக்குவது குறித்து பூவாணி தோட்டக்கலைப் பண்ணையில் ஆராய்ச்சியாளர் விளக்கினார். ஒரே மரத்தில் ஐந்து வகை மரங்களை ஒட்டவைத்து ஐந்து வகை கனிகளை உருவாக்கியிருந்தனர். செம்பருத்தியிலும் இதுபோலவே ஒரே அடிமரத்தில் பலநிற மலர்கள் பூத்துக் குலுங்க வைத்திருந்தனர். இவை எல்லாம் நல்ல குணங்களை வழிகாட்டிகள் தேடிப்பிடித்து நம்முள் பதியம் செய்து வளர்த்து விடுவார்கள் என்கின்ற நம்பிக்கையை விதைக்கின்றனர்… விரைவில் பலன் பழம் கனியாகட்டும்… சுவை பரவட்டும்…

  பழ(ல) வழிப்பயணம்… தொடரும்…

  என் பள்ளி

  பல வேர்களை நினைவு கூறும் விழுதுகள்…
  கே. உமாமகேந்திரன்
  மேலாண்மை இயக்குநர்
  டாரக் ஹெச்.ஆர்.சர்வீஸ் இந்தியா (பி) லிட்

  ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியை நிர்ணயிக்கக்கூடிய இடமாக இருப்பது பள்ளிகள். எது நம்முடைய பலம்? எது நம்முடைய பலவீனம்? எனத் தீவிரமாக ஆராய்ந்து நற்பண்புகள் நிறைந்த ஒரு சிறந்த குடிமகனை உருவாக்குவதே பள்ளிகளின் நோக்கம்.

  அத்தகைய உயரிய நோக்கத்தில் இருந்து இம்மியளவும் தடமாறாத பள்ளியாக இருந்து என்னை உருவாக்கியது இப்பள்ளிகள் என்று பாப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியையும், பீடம்பள்ளி எஸ்.கே.என் அரசு மேனிலைப்பள்ளியையும் பெருமிதத்துடன் கூறுகிறார் உமாமகேந்திரன்.

  அப்பள்ளிகள் பற்றிய அவரின் நினைவுகள் அவர் மொழியிலேயே…

  என் ஆரம்பக் கல்வியை பாப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியல் தான் படித்தேன். அப்போது தலைமையாசிரியர் திரு. செ.சீனிவாசன் அவர்கள்.

  வாழ்க்கையில் வெற்றி வேண்டுமானால் புதிய புதிய முயற்சிகளை எடுத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று கூறி பல புதிய முயற்சிகளுக்கு தூண்டுதலாக இருப்பார். அந்தத் தூண்டுதல் நாங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் முன்பைவிட சரியாகவும், செம்மையாகவும் செய்ய உத்வேகப்படுத்தியது. அவரின் அந்த ஊக்கம் தாழ்வு மனப்பான் மையோடு இருக்கும் மாணவர்களை மேலும் மேலும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தன்னம்பிக்கையைக் கொடுத்தது.

  ஆசிரியப் பணி என்பது சம்பாதிக்க உதவுவது அல்ல இந்த நாட்டிற்கு சிறந்த நற்பண்புகள் நிறைந்த குடிமக்களை உருவாக்குவதுதான் என்ற உயர்ந்த எண்ணத்துடன் அவர் கற்றுத் தந்ததால் தான் இன்றும் பலரின் ரோல்மாடலாக அவர் இருக்கிறார்.

  அவரைப் போலவே அப்பள்ளியில் பணியாற்றிய ஏனைய ஆசிரியர்களும் இருந்தார்கள். பள்ளித் தேர்வானாலும் சரி, விளையாட்டுப் போட்டி, கலை நிகழ்ச்சிகளானாலும் சரி ஒவ்வொரு மாணவரும் கலந்துகொண்டு வெற்றி பெறவேண்டும் என்று முனைப்புடன் மாணவர்களைத் தயார் செய்வார்கள்.

  மதிப்பெண்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை போல நற்பண்புகளை உருவாக்கும் விளையாட்டு போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

  குறிப்பாக அங்கு பணியாற்றிய திரு. தண்டபாணி ஆசிரியர், திரு.துரைசாமி ஆசிரியர், திரு மௌனசாமி ஆசிரியர், திரு. சுந்தரம் ஆசிரியர், திரு. பாலகிருஷ்ணன் ஆசிரியர், திரு. சபாபதி ஆசிரியர், திருமதி. ராஜம்மாள் டீச்சர், திருமதி. ஜோதிமணி டீச்சர், திருமதி. லோகநாயகி டீச்சர் என்று அங்கு பணியாற்றிய அனைவரும் தம்மிடம் வந்த குழந்தைகளின் திறன்கள் என்ன, பலம் மற்றும் பலவீனம் என்ன, பெற்றோரின் கனவு, லட்சியம், அவர்களின் பொருளாதார நிலை என அனைத்தையும் அறிந்து கற்றுக்கொடுத்ததால் தான் இன்றும் அவர்களை இதயத்தில் மிக உயர்ந்த இடத்தில் வைத்து பூஜிக்கிறேன்.

  தொடர்ந்து மேல்நிலை வகுப்பிற்காக பீடம்பள்ளி எஸ்.கே.என் அரசு மேனிலைப் பள்ளிக்கு சென்றேன். அங்கு தலைமையாசிரியர் திரு. ஆர்.வரதராஜன் அவர்கள்.

  முழுமையின் முக்கியத்துவம்

  அன்பு நண்பர்களே! நொடிப் பொழுதும் பஞ்ச பூதங்களால் ஆன அந்த அண்டமும் இந்தப் பிண்டமும் அதனதன் காந்த அலைகளால் பிணைக்கப் பட்டுள்ளன. அண்டத்திலும் சரி பிண்டத்திலும் சரி எந்த ஒன்றையும் தனியே பிரித்து இயக்க வைக்க முடியாது. இதைத்தான் ஒரு செடியின் இலையைக் கிள்ளினாலும் இந்த அண்டசராசரத்தில் அதற்குண்டான அதிர்வலையை ஏற்படுத்தவே செய்யும் என்று ப்ராய்டின் தத்துவம் சொல்கிறது. அதேபோல், அந்த அண்டத்தில் உள்ளதுதான் நம் பிண்டத்திலும் இருப்பதாக ஞானியர் கூறுவர். ஆக, நம் உடலும் முழுமைத் தன்மையின் ஒரு பிரதிநிதிதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நம் உடலைப் பகுதிப் பகுதியாகப் பிரித்து ஆராய்ந்து ஒவ்வொரு பகுதிக்கும் சிறப்பு நிபுணர்கள் என்றுச் சொல்லிக்கொண்டு தனித் தனியே வைத்தியம் பார்க்கும் ஞானமற்றஆங்கில மருத்துவத்திற்கு இந்த முழுமைத் தத்துவமெல்லாம் புரிய வாய்ப்பில்லை. சரி அன்பர்களே! நாம் இளமையாக இருக்க முழுமைத் தத்துவம் எவ்வாறு பயன்படும் என்று இனிப் பார்ப்போம்.

  நாம் ஆற்றலாகவும் இளமையாகவும் இருக்க வேண்டுமாயின் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் முழுமைத் தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். இயற்கையை நாம் கவனித்தோமாயின் ஒரு தாவரத்தின் இனிக்கும் பழத்தை அதன் கசக்கும் அல்லது துவர்க்கும் தோல்தான் பாதுகாக்கிறது. அதேபோல் செடியிலிருந்து பறித்த பழத்தின் தோல் நீக்கப்பட்டால் அது விரைவாக கெட ஆரம்பிக்கிறது. ஒரு தானியம் முளைக்க வேண்டுமாயின் அதனை அதன் தோலோடு விதைக்க வேண்டும். உதாரணமாக ஒரு நெல்லை அதன் தோலோடு விதைக்கும்போது அது முளைவிட்டு நாற்றாக வளர்கிறது. அதுவே, தீட்டிய அரிசியை மண்ணில் புதைத்தால் முளைப்பதில்லை. ஆக, ஒரு உயிர் உருவாக முழுமைத் தன்மை வேண்டும் என்று புரிகிறதா?

  நாம் உண்ணும் உணவும் முழுமைத் தன்மையைக் கொண்டதாக இருந்தால்தான் நமக்கு அது சக்தியளிப்பதாக இருக்கும்.  ஒரு கோதுமை தாணியத்தை எடுத்துக்கொண்டால், அதன் உள்ளே இருக்கும் மாவுச் சத்தை தரமாகச் செரிக்க அதன் தோலில் உள்ள பி-உயிர்ச் சத்துக்களே துணைபுரிகின்றன. தோல் தீட்டப்பட்ட இன்றைய அரிசியோ அல்லது கோதுமையின் மையப் பகுதியைக் கொண்ட மைதாவோ நமக்கு முழுச் சக்தியை அளிப்பதில்லை. அவைகள் அளிக்கும் தரம் குறைந்த குளுக்கோஸே நமக்கு நீரழிவு நோயை உண்டாக்குகின்றன. ஆக, நீரழிவு நோயும் கூட ஒரு முதுமை உண்டாக்கி நோயே. தீட்டிய அரிசியை நாம் சாப்பிடும்போது கண்டிப்பாக அதன் குறைகளை ஈடு செய்ய நாம் கனிசமான காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்புறம் சாப்பிடும்போது கறிவேப்பிலையை வாய்க்குள் போடுவதற்கு பதில் தட்டுக்கு வெளியே போடுபவர்களுக்கு எப்போதும் மாப்பிள்ளை போன்றஇளமையை பெறமுடியாது. கறிவேப்பிலையைத் தூக்கி எரிபவர்கள் தங்கள் இளமையும் சேர்த்துதான் தூக்கி எரிகிறார்கள்.

  நிர்வாக மேலாண்மைக்கு சமயோசித அறிவு அவசியமா…?

  நேர நிர்வாக மேலாண்மை என்பதும், மனிதவள நிர்வாக மேலாண்மை என்பதும் இன்றைய நிர்வாகவியலில் முக்கிய காரணிகளாக கருதப்படுகின்றன.

  நேர நிர்வாக மேலாண்மை தனி மனிதனுடைய வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது.

  மனிதவள நிர்வாக மேலாண்மை ஒரு நிறுவனத்தை கட்டிக்காப்பது மட்டுமல்லாமல் அந்த நிறுவனத்தினுடைய வளர்ச்சிக்கும், நிர்வாக சிறப்பிற்கும் அதனுடைய விரிவாக்கத்திற்கும் அடித்தளமாக அமைகிறது..

  ஒரு மிகப்பெரிய கம்பெனியில் நிர்வாக மேலாண்மை துறைக்காக ஒரு அதிகாரியின் பதவிக்கு நேர்காணல் நடைபெற்றது. நேர்காணலுக்கு வந்திருந்த தகுதி பெற்ற இளைஞரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. நீங்கள் இரவு 9.00 மணிக்கு மேல் காரில் உங்கள் வீட்டிற்கு போய் கொண்டிருக்கிறீர்கள். இடி மின்னலுடன் கடுமையான மழை பெய்து கொண்டிருக்கிறது. பேய் காற்று வேகமாக வீசிக்கொண்டிருக்கிறது.

  நீங்கள் பஸ் நிறுத்தத்தை கடக்கும் தருணத்தில் அந்த பஸ் நிறுத்தத்தில் மூன்று பேர் காத்திருப்பதை பார்க்கிறீர்கள், முதலாம் நபர் வயதான பெண்மணி.

  அவர் மிகுந்த காய்ச்சலுடன் உயிருக்கு போராடும் நிலையில் உள்ளார். 2-வது நபர் உங்களுடைய உயிரை ஒருமுறைகாப்பாற்றிய பழைய நண்பர், 3- வது நபர் நீங்கள் எதிர்கால மனைவி என்று எண்ணிக்கொண்டிருக்கின்ற உங்களுக்கு அறிமுகமான ஒரு இளம்பெண்.

  உங்கள் காரில் ஒருவருக்குத்தான் இடம் உண்டு.

  இந்த நிலையில் நீங்கள் யாரை உடன் கூட்டிச் செல்ல தேர்வு செய்வீர்கள்…?

  மனிதாபிமான அடிப்படையில் அந்த வயதான, நோய்வாய்ப்பட்டு, சாகும் தருவாயில் உள்ள பெண்ணைத்தான் கூட்டிச் செல்ல வேண்டும். ஏனென்றால் அது அவளது உயிரை காப்பாற்றும் அல்லது உங்களை ஒருமுறை ஆபத்திலிருந்து காப்பாற்றிய உங்கள் நண்பனுக்கு இந்த நேரத்தில் உதவி செய்தால், அவர் செய்த உதவிக்கு நன்றி காட்ட ஒரு வாய்ப்புக் கிடைக்கும் அல்லது நீங்கள் கனவு காண்கின்ற எதிர்கால மனைவி என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற அந்தப் பெண்ணுக்கு உதவி செய்யாவிட்டால் நீங்கள் மறுமுறை அவளை சந்திக்கும் வாய்ப்பை இழந்து விடுவீர்கள். இந்த இக்கட்டான நிலையில் நீங்கள் யாருக்கு உதவி செய்வீர்கள்…?

  அவர் சிறிதும் யோசிக்காமல் பட்டென பதில் சொன்னார். நண்பனை அழைத்து என் கார் சாவியை அவரிடம் தந்து இந்த நோய் வாய்ப்பட்ட வயது முதிர்ந்த பெண்ணை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல் என்று சொல்வேன். பின்னர் நான் எந்தப்பெண்ணை விரும்புகிறேனோ அந்த பெண்ணுக்கு பாதுகாப்பாகவும், துணையாகவும் நின்று அவளைக் கூட்டிச் செல்ல பஸ் வரும்வரை காத்திருப்பேன் என்று சொன்னார்.

  இந்த பதில் மிகச்சரியான பதிலாக அமைந்ததால் அவர் அந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். சில தவிர்க்க முடியாத அவசர தருணங்களில் எடுக்கப்படுகிற சமயோசித அறிவு பூர்வமாக எடுக்கப்படும் முடிவுகளைக் கொண்டுதான் ஒரு மனிதனுடைய திறமை பரிசோதிக்கப்படுகிறது.

  மனிதவள நிர்வாக மேலாண்மைக்கு இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்…

  இந்தப்பணி செய்து முடிக்க இவர் மிகச்சரியானவர் என்று ஒருவரை தேர்வு செய்தல், அவருக்குள்ள சாதக, பாதகங்களை ஆராய்ந்து அதற்கேற்ப இலக்குகளை நிர்ணயித்தல் ( இலக்கு என்பதை கட்டளைகள் அல்ல. அவை இருதரப்பும் எடுத்துக் கொள்ளும் உறுதிகள் என்கிறார்.. பீட்டர் டிரக்கர்.)

  அவருக்கு அந்தப்பணி பற்றிய விஷயங்களை தெளிவாக விவரித்தல் அந்தப்பணியை முடிக்க காலக்கெடுவு நிர்ணயித்தல். அடிக்கொரு முறைஅவரை சந்தித்து இந்த இந்த முறையில் இதைச் செய்தால் எளிதாக செய்யலாம் என்ற அனுபவ அறிவுரைகள் தருதல்.

  உண்மையாய் செயல்படு நன்மையாய் வாழ்ந்திடு

  டாக்டர். சுதாகர்

  மேலாண்மை இயக்குநர்

  சுதா மருத்துவமனை, ஈரோடு.

  நம்பிக்கையும், உறுதியும் வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு செயலாற்றி வருபவர் இவர். மகத்தான பணிகளைச் செய்யவே நாம் பிறந்திருக்கிறோம் என்று எண்ணி ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம் எனக் கூறி சமூக நற் பணிகளை நிரம்ப செய்து வருபவர்.

  நம் எண்ணங்கள் எப்படியோ, அப்படி தான் வாழ்க்கை அமையும் எனவே எல்லா சூழ்நிலைகளிலும் சிறந்தவையே எண்ண முயற்சிப்போம் என்று சிறப்பான செயல்பாடுகளுடனேயே செயல்பட்டு வருபவர்.

  “”உணவே உயிர்” என்ற அமைப்பைத் தொடங்கி தினமும் அன்றாடத் தேவைகளை தங்களால் பூர்த்தி செய்து கொள்ள முடியாத 150 பேருக்கு மதிய உணவு மற்றும் தண்ணீர்  கொடுத்து உதவி வருகின்ற உயிர்ச் சேவையை திறம் பட செய்து வருபவர்.

  தண்ணீர், சுற்றுச் சூழல்  மாசுபாடு தவிர்க்க ஈரோடை சேவை அமைப்பை உருவாக்கி மக்களின் ஆரோக்கியம்  மேம்பட பாடுபட்டு வருபவர்.

  இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள டாக்டர் சுதாகர் அவர்களை நாம் நேர்முகம்  கண்டதிலிருந்து இனி…

  கே: நீங்கள் பிறந்து, வளர்ந்து, பயின்ற அனுபவம் குறித்து…?

  நான் ஈரோடு மாவட்டத்தில் திரு. கந்தசாமி, திருமதி. தனபாக்கியம் அவர்களின் மகனாக 1978ம் ஆண்டு பிறந்தேன்.  பெற்றோர் இருவருமே மருத்துவர்கள்.

  நான் படித்தது எல்லாமே ஊட்டியில் தான் . எல்.கே.ஜி. முதல் 4ம் வகுப்பு வரை க்ளுப் ஸ்கூலில்தான் பயின்றேன். குழந்தைக்கல்வியை மிக அழகாக போதிக்கும், அந்தப் பள்ளியில் 4ம் வகுப்பு வரைதான் படிக்க முடிந்தது.

  அதன் பின்னர் ஊட்டியில் உள்ள பிரபலமான  லாரன்ஸ் பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலும் பயின்றேன். இப்பள்ளியில் பயின்றதால் எதையும் சமாளிக்கக் கூடிய வலிமையும், அறிவையும் பெற்றேன்.

  பின்னர் எனது சொந்த ஊருக்கே வந்து பாரதி வித்யாபவன் பள்ளியில் மேல்நிலைப் படிப்பை முடித்தேன். படிக்கின்றபோதே டாக்டராக வரவேண்டும் என்று எப்பொழுதும் நினைத்துக்கொண்டே இருப்பேன். அதையே இலட்சியமாகவும் கொண்டேன்.

  மருத்துவம் தான் என்னுடைய குறிக்கோள். அதை அடைய வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும் என்று நினைத்துப் படித்தேன். என்னுடைய உழைப்புக்கு பலன் கிடைத்தது.

  சென்னையில் மிகவும் புகழ் பெற்ற இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் M.B.B.S., பட்டத்தைப் பெற்றேன். பின்னர் M. D., ஜென்ரல் மெடிசனை சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முடித்தேன். அதன் பிறகு சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் டி.என்.பி. கார்டியாலாஜி முடித்தேன். 12 வருடம் மருத்துவம் சார்ந்த படிப்பையே படித்தேன்.

  அந்த 12 வருடத்தில் கற்றுக்கொண்ட அனுபவம் மிகவும் அதிகம். மருத்துவம் சார்ந்த அனைத்து உத்திகளையும் துல்லியமாகக் கற்றுக்கொண்டேன்.

  கே: படிப்பை முடித்து எப்பொழுது மருத்துவப்பணியைத் தொடங்கினீர்கள்…?

  மருத்துவத்திலேயே மூன்றுக்கு மேற்பட்ட பட்டங்கள் பெற்றதால் என்னால் அனைத்து விதமான நோய்களுக்கும் செம்மையாக சிகிச்சை அளிக்க முடியும் என்ற உந்துதல் எனக்குள் தோன்றியது. அதன்பிறகு 2009ம் ஆண்டு ஈரோட்டிற்கு வந்தேன். என் பெற்றோர்களும் மருத்துவர்கள் என்பதால் அவர்களுடன் சேர்ந்து கார்டியாலாஜியாக பணியாற்றினேன்.

  கே: சுதா மருத்துவமனை எப்பொழுது தொடங்கப்பட்டது….?

  எனது தந்தையின் முயற்சியால் முதலில் ஒரு கிளினிக் மிகவும் சிறிய அளவில் தொடங்கப் பட்டது. பின்பு சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையுடன் நேரடியாக தொடர்பு வைத்து அப்போலோ இதயம் மருத்துவமனை என்று ஒரு மருத்துவமனையை தொடங்கினோம். ஆரம்பத்தில் நன்றாகப் பெயரெடுத்தோம். ஆனாலும் சில தவிர்க்க முடியாத காரணத்தால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விற்பனை செய்து விட்டோம். அப்போது நான் சென்னையில் மருத்துவப்படிப்பை முடித்திருந்தேன் நேரம். மீண்டும் இங்கு வந்து மருத்துவமனையை தொடங்க வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டேன்.

  அருகிலுள்ள சத்தியமூர்த்தி மருத்துவ மனையை வாடகைக்கு எடுத்து இரண்டு வருடம் நல்லதொரு சிகிச்சைப் பணியை மேற்கொண்டேன். அதன் பிறகு 2012ம் ஆண்டு ‘சுதா இன்ஸ்டியூட் மெடிக்கல் சயின்ஸ்’ என்றபெயரில் மருத்துவமனையை நிறுவினோம். 4 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி மக்களின் நன்மதிப்போடு செயல்பட்டு வருகிறது.

  கே: இம்மருத்துவமனையின் மூலம் நீங்கள் செய்து வரும் சேவைகள் குறித்து…?

  ‘வந்தபின் எதிர்கொள்வதை விட, வருமுன் காப்பதே சிறந்தது’ என்ற வைர வரியை மருத்துவர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை நெறியாகும். சேவை என்பதும் தொண்டு என்பதும் மற்றவர்களுக்கு எவ்வாறு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

  நான் ஒருமுறை செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த பொழுது ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புற்றுநோய் அதிகளவில் இருப்பதாக ஒரு புள்ளி விவரத்தைப்  படித்தேன். ஒரு மருத்துவராய் இந்த செய்தி என்னை மிகவும் கலங்கடித்தது.

  இதற்கான காரணத்தை அறிந்து கொள்ள தகவல்களை சேகரிக்கத் தொடங்கினேன். அப்பொழுதுதான் தண்ணீரால்தான் அதிகளவில் நோய் பரவியுள்ளது என்பதையும், அதற்கான காரணம் இங்கு அமைந்திருக்கும் நீரோடைகளின் பரிதாப நிலைதான் என்பதையும் அறிந்து கொண்டேன்.

  இதனால், ஈரோடை சேவை அமைப்பு ஒன்றைநிறுவி ஓடைகளை சுத்தம் செய்தோம். தொழிற்சாலைகள், சாயக்கழிவுகளிலிருந்து வெளியேறும் நீர் காவேரி ஆற்றில் கலக்கிறது. அதைத்தான் இப்பகுதிகளில் குடிநீருக்காகப் பயன்படுத்துகிறோம் என்றவிழிப்புணர்வுடன், இந்த குடிநீர் மாசுபாட்டை தவிர்க்க வெளிமாநிலங்களிலிருந்து பல சேவை அமைப்புகளை தொடர்பு கொண்டு இந்த மாசுப்பாட்டை தவிர்க்க வழிவகை செய்து வருவதோடு, விழிப்புணர்வையும் கொடுத்து வருகிறோம்.

  கே: நீங்கள் செய்த சேவையில் உங்களை நெகிழ வைத்த சேவை என்று நீங்கள் நினைப்பது…?

  ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படை தேவைகள் உணவு, உடை, இருப்பிடம் இவை தான். நம் ஊரில் எத்தனையோ பேர் தங்க இடமில்லாமல், உடுத்த ஆடையில்லாமல் இருப்பதை நாம் கண்கூடாக பார்க்க முடியும். இவைகள்  இல்லாமல்  கூட  உயிர் வாழ்ந்து விடலாம். ஆனால், உணவில்லாமல் யாராலும் உயிர் வாழ முடியாது. இதை கருத்தில்  கொண்டு “உணவே உயிர்” என்ற அமைப்பு ஒன்றைத் தொடங்கி தினமும், 150 பேருக்கு மதிய உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து வருகிறோம்.

  இவர்கள் அனைவரும் தங்களின் அன்றாடத் தேவைகளை தங்களால் பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் வாழ்பவர்கள். எந்தவொரு சேவை அமைப்பும் தொடங்கும்பொழுது மக்களின் கருத்துக்கு மாறுபட்டதாகத்தான் இருக்கும். பழகப்பழக அதன் பயன்களைத் தெரிந்து கொள்வார்கள். தேவையைப் புரிந்து கொள்வார்கள்.

  ‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தை அழித்திட வேண்டும்’ என்ற பாரதியின் கூற்றேஇந்த திட்டத்தை செயல்படுத்த வழிவகை செய்தது. தொடர்ந்து 5 மாதங்களாக நடைபெற்று வரும். இத்திட்டம் வெற்றிகரமாக மேலும் தொடரும்.

  சிகரமே சிம்மாசனம்…

  ஒரு தலைமுறையை தயார் செய்து விட்டோம்

  உலகையே உலுக்கத்துடிக்கும்; நாட்டையே பிடிக்கத்துடிக்கும்; வானத்தையே வளைக்கத்துடிக்கும்; இமயத்தையே எட்டத்துடிக்கும்  இனிய பருவம் தானே மாணவப்பருவம்…!

  தற்போது நடைபெற்று முடிந்த மாணவப்புரட்சியின் மகிமைகளை மாணவர் உலகத்திற்கு எடுத்துக்காட்டும் இனிய தருணம் இது. வாழ்க்கை அரிய பொக்கிஷங்களை உங்களுக்காக அதே கையிருப்பில் வைத்திருக்கிறது என்பார் ஓரிடத்தில் ராபின் ஷர்மா.

  ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்துக்கு ஒரு தகவலாக வருகிறது. அது தவமாக இருக்கிறது. குழந்தைகள் விதைகளாக வருகின்றனர். அவர்களை தானியமாக்குவதே நம் விருப்பம். பெற்றோர்கள் மண்ணாக இருந்தால் குழந்தைகள் முளைக்கிறார்கள்; தேனீயாக இருந்தால் மகரந்த சேர்க்கை நிகழ்த்துகிறார்கள் என்பார் வெ. இறையன்பு.

  உழைக்காமல் முயற்சிக்காமல் வெற்றி பெறும் எளிய வழி சொல்லித்தரப்படும் என்று முல்லா அறிவித்தார். ஊரே திரண்டது. முல்லா மெல்லா அங்கிருந்து நகரத் தொடங்கினார். வெற்றிபெறும் வழியைச் சொல்லாமல் எங்கே போகிறாய்…? என்று எல்லோரும் வழிமறித்தார்கள். இந்த ஊரில் எத்தனை முட்டாள்கள் இருக்கிறார்கள் என்று அரசர் கணக்கெடுக்குச் சொன்னார். அந்த வேலை முடிந்து விட்டது. புறப்படுகிறேன். என்றார் முல்லா. இக்கதையில் வரும் அர்த்தங்கள் அணிவகுப்பை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

  மனித வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் ஓர் அற்புதம். ஒரு மர்மம் என்ற உண்மையை கடிகாரமும், காலண்டரும் அவனிடமிருந்து மறைத்துவிட மனிதன் அனுமதிக்கக் கூடாது என்பார் பிரிட்டிஷ் நாவலாசிரியர் ஏ.எ. வெல்ஸ்.

  ‘பள்ளித்தலமனைத்தும் கோவில் செய்குவோம் என்று காற்று மாதிரி வந்து கடந்துவிட்டு போன பாரதி சொல்வான். அண்மையில் ‘2 தேர்வு ஒன்பது லட்சம் பேர் எழுதினார்கள். வாழ்க்கையின் வாசற்கதவை திறந்து வைக்கும் வரவேற்பே தேர்வு. மாணவர்கள் எதிர்காலத்திற்கு தேவையானவற்றை சேமிக்கும் களமும் தலமுமே இத்தேர்வு. இவர்கள் வைக்கும் ஒவ்வொரு அடியும். காலத்தின் கைகளில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வைத்திருக்கும் இடமிது. கல்லை சிலையாக வடிக்கும் சிற்பியாக இங்கே ஆசிரியப் பெருமக்கள்; பாதுகாப்பு கவசாக பெற்றோர்கள் சிலையாக மாணவர்கள் எதிர்காலத்திற்கு தேவையானவற்றை சேமிக்கும் களமும் தலமும் இத்தேர்வு.

  பள்ளிக்கூடம் கூடுகட்டி கொலுவிருக்கும் அறிவு திருக்கோவில். திக்கு தெரியாதவர்க்கோ திசைக்காட்டி; வாழ்க்கையை வசமாக்கி கொள்வோர்க்கோ வழிகாட்டி; பொங்கித்ததும்பும் ஆர்ட்டீசியன் மாற்று. அள்ளக்குறையாத அமுதசுரபி. உங்களிடமிருந்து உங்கள் தலைமுறைதுவக்குகிறது, அதன் மூலம் உங்கள் சமூகம் உருவாகிறது. நீங்கள் ஒரு நீண்ட வரலாறு என்பார் மஹாத்ரயாரா வாழும் வரலாறாக மாணவர்கள் இனி பயணப்பட வேண்டும். ஒரு புள்ளி வைத்தாயிற்று. கோலத்தை அழகாக்குவது இனி யார் பொறுப்பு..?

  கல்கத்தாவில் உசிதாபாத் என்ற ஊரில் ஒன்பது வயதுச்சிறுவன் அரசுப்பள்ளியில் படித்து வந்தான். வீட்டிற்குத் திரும்பும்போது பனிநதி ஒன்று இவனுக்குள் பயணப்பட்டது  அது குடிசையின் பின்புறம் வட்டப்பாறையில் தன் வயதொத்த படிப்பின் வாசமறியாத, வீட்டு வேலைக்கு சென்று வரும் ஏழைப்பிள்ளைகள் எட்டுபேரை உட்கார வைத்து, காலையிலிருந்து மாலைவரை அன்று தான் பள்ளியில் படித்ததை அப்படியே பாடமாக எடுத்தான். செய்தி ஊர் பரவ 10,20,30 இப்படியாய் மாணவர்கள் ஓராண்டில் ஆயிரம் பேர் சேர்ந்து விட்டார்கள். மாணவர்கள் கூடகூட உடனே தன் வயதையொத்த மாணவர்களிடம், தன்னைப்போல் சேவைச் செய்யத்துடிக்கும் 4 லிருந்து 5 பேரை தயார் செய்து பாடம் நடத்தினான். பள்ளிக்குழந்தைகளோடு ஒரு புள்ளியில் நின்று பாடம் எடுத்தான். வரலாற்று மாற்றத்திற்கு வகுப்பு எடுத்து கொடுத்தான்.

  வெற்றி உங்கள் கையில்

  நேர்மை தந்த தலைமை

  ஒரு வீட்டை வழிநடத்துவதற்கும். ஒரு நாட்டை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்வதற்கும் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். அந்தத் தலைவர்கள் சிறந்த பண்புள்ள நல்லவர்களாக அமைகின்றபொழுது வீடும், நாடும் வெற்றியைப் பெறுகிறது.

  மற்றவர்களை வழி நடத்துகின்ற பொறுப்பில் இருப்பவர்கள் ஒரு நல்ல தலைவருக்குள் தகுதிகளையும், திறமைகளையும் தன்னகத்தே கொண்டிருப்பது அவசியமாகும். “தலைவர்கள் பிறக்கிறார்கள்.

  ஆனால் உருவாக்கப்படுவதில்லை” (Leaders are Born, Not Made) என்பது ஒரு சிலரின் அசைக்க முயாத நம்பிக்கையாகும். ஆனால், “யார் வேண்டுமானாலும் தலைவர் ஆகலாம்…?” என்று அழுத்தமாக சொல்பவர்களும் உண்டு. இவர்கள் தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் (Leaders are Made) என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

  இளம்வயதிலேயே ஒரு தலைவருக்குரிய பண்புகளை வகுத்துக்கொண்டு திறமையாக செயல்படுபவர்கள் நாடு போற்றும் நல்ல தலைவர்களாக மாறிவிடுவார்கள்.

  தலைவராக ஒருவர் மாறவிரும்பினால், அவரிடம் சில நற்பண்புகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக நம்பகத்தன்மை. சிறந்த தகவல் தொடர்புத் திறன், திறந்த உள்ளம், தன்னம்பிக்கை, தொலை நோக்குப் பார்வை, தியாக உணர்வு, பணிபுரிவதில் அதிக ஆர்வம், சிறந்த முடிவெடுக்கும் திறன். வாக்குக்கொடுத்து விட்டால் அதனை நிறை வேற்றும் பண்பு ஆகியவை கண்டிப்பாகத் தேவை. இந்தக் குணங்களெல்லாம் ஒரு தலைவருக்குத் தேவையென்றாலும் அவற்றுள் சிறந்த குணமாக திகழ்வது “நேர்மை” ஆகும். நேர்மையுடன் நடந்துகொள்ளும் தலைவர்கள்தான் காலம் கடந்த பின்பும் மதிக்கப்படுகிறார்கள். வரலாற்றில் அவர்கள் பெயர்தான் நின்று நிலைக்கும்…

  சோதனைகள் பல வந்தாலும், அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு தனது நேர்மையான எண்ணங்களையும், செயல்பாடுகளையும் எந்தச்சூழலில் இழக்காத தலைவர்கள் மாபெரும் தலைவர்களாகவும், சிறந்த வெற்றியாளராகவும் கருதப்படுகிறார்கள்.

  இந்தியாவின் முன்னாள் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி மிகவும் எளிமையானவர். நேர்மையானவர். அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் எளிமையின் சின்னமாகவே விளங்கினார்.

  பாரதப்பிரதமரான நேரு மறைந்த பின்பு லால் பகதூர் சாஸ்திரி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருமுறைதமிழ்நாட்டின் தென்பகுதியான மதுரைக்கு அவர் வந்தபோது அங்கிருந்த பலருக்கு அவரை அடையாளம் தெரியவில்லை.

  நாளிதழ்களில் தனது பெயர் இடம் பெறுவதை விரும்பாதவர் லால் பகதூர் சாஸ்திரி. எனவே, அவரது தோற்றத்தைப் பற்றி பலருக்குத் தெரியவில்லை. அவரைப்பற்றிய தகவல்களும் தென்பகுதியில் பலருக்குத் தெரியாமல் இருந்தது. இந்தநிலையில், அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் உங்கள் பெயர் பத்திரிக்கையில் அடிக்கடி வருவதில்லையே. “உங்கள் படமும், பெயரும் பத்திரிக்கையில் வருவதை நீங்களும் விரும்பவில்லை அது ஏன்”…? என்று கேட்டார்…

  பாடம் சொல்லும் பறவைகள்

  மழை வரும்போது வானத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் நனைந்த சிறகுகளுடன் பறப்பது சிரமம் என்பதால் நனையாமலிருக்க அவசரமாக புகலிடம் தேடிச் செல்லும். ஆனால், பருந்து (கழுகு) மழை தரும் மேகத்துக்கு மேலே பறந்து சென்று நனையாமல் தன்னைக்காத்துக்கொள்ளும்

  உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. ஏன் இதைச் சொன்னார்கள்…? பல காரணங்கள் இருக்கலாம். நமக்குத் தெரிந்த அல்லது தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டை மட்டுமே பார்ப்போமே…

  சாவிகள் இல்லாத பூட்டுக்கள் இல்லை:

  பிரச்னைகள் இல்லாத வாழ்க்கையும் இல்லை. அர்ச்சனைகள் இல்லாத கோயிலுமில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் சக்திகேற்ப, அதாவது தாங்கும் சக்திக்கேற்ப பிரச்சனைகளை வைத்திருக்கிறோம்.

  தானாக வருவது; பிறரால் வருவது; நாமாக உருவாக்குவது;    இயற்கையாக வருவது; என பிரச்னைகள் வரும் பாதைகளை நான்கு எனச் சொல்லாம்.

  இப்படி, நாலாபக்கமிருந்தும் பிரச்னைகள் வந்தால் மனுஷன் எப்படி சார் வாழ்வது…?

  இது சாதாரண பொது ஜனக்கேள்வி. வாழ்ந்து தானே ஆக வேண்டும். வாழ்க்கையை விட்டு அல்லது இந்த பூமியை விட்டு எங்காவது ஓட முடியுமா…?

  FIGHT (or) FLIGHT என்று ஒரு வழி உள்ளது. அது இங்கு செல்லாது; செல்லாது. ஒன்றை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பிரச்னைகளைத் தாங்கும் வலிமையும், அவைகளைத் தீர்க்கும் திறமையும் இருப்பதால்தான், நமக்குப்பிரச்னைகள் வருகின்றன.

  வெகு சுலபமாகப் பிரித்து விடலாம். எப்படி பழக்கூடையிலுள்ள பழங்களுள், கெட்டுப்போனவைகளை அப்புறப்படுத்துகிறார்களோ, அப்படி நம்மால் தீர்க்கவே முடியாத பிரச்னைகளைத் தூக்கி எறிய வேண்டும். இதற்கு ஏற்றுக்கொள்ளும் மனம் அவசியம் தேவை.

  கூடையிலிருக்கும் நல்ல பழங்கள் கட்டாயம் விற்கப்படும். இதுபோல் மற்ற எல்லாப்பிரச்சனைகளும் தீர்ந்து விடும். எப்படி…? பிரச்னைகளிலிருந்து முதலில் வெளியே வரவேண்டும். சிறிது சிரமம்தான்…

  எப்படி வெளிவருவது என்பதைப் பருந்துகளிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். மழை வரும்போது வானத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் அவசரமாகப் புகலிடம் தேடி, நனையாமலிருக்கச் செல்லும். நனைந்த சிறகுகளுடன் பறப்பது சிரமம்.

  ஆனால், பருந்து (கழுகு) மழை தரும் மேகத்துக்கு மேலே பறந்து சென்று நனையாமல் தன்னைக்காத்துக்கொள்கிறது.

  நாம் பிரச்னைகளிலிருந்து வெளியே வந்து, அதைப்பார்த்தால்தான் தெரியும், எதனால் பிரச்சனை வந்தது…? அதற்கு நான் எந்த வகையில் காரணம்…? பாதிப்பு என்ன…? பிரச்னை தீர எப்படித்திட்டமிட்டுச் செயல்படுவது…? யாருடைய ஆலோசனை தேவை…? இதுபோன்றபலவும் நமக்குத் தோன்றும்.

  ஆறாவது அறிவு தயாராக உள்ளது. உள்ளே பிரச்னையை அனுப்பிவிட்டால், வெகு சுலபமாக அது தீர்ந்து விடும். எப்படி அனுப்புவது…? சுலபம்…

  அதிகாலை நேரம் கண்விழித்து, முகம் கழுவி, முகம் பார்க்கும் கண்ணாடி முன் அமர்ந்து, முகத்தை நன்றாகப்பார்க்கவும். புன்னகை செய்யவும். 5 முறைமெதுவாக சுவாசிக்கவும். கண்களை உற்றுநோக்கி கீழ்கண்டவற்றைச் சொல்ல வேண்டும்.

  எப்படி ஜெயித்தார்கள்?

  1991ம் வருடம்… இந்தியா புதிய பொருளதாரக் கதவுகளை திறந்து விட்ட ஆண்டு. அந்த ஆண்டு திரு. வரப்பிரசாத் ரெட்டி தன் தொழிலில் எற்பட்ட இழப்பை மறந்து சில மாதங்கள் அமெரிக்காவில் இருந்து விட்டு வரலாம் என்று சென்றார்.

  அமெரிக்காவில் வரப்பிரசாத்தின் உறவினர் ஒருவர் மருத்துவராக பணியாற்றிக்கொண்டிருந்தார். ஒரு சர்வதேச மருத்துவ மாநாட்டிற்கு ஜெனிவா சென்றவருடன் வரப்பிரசாத்தும் சென்றார்.

  அந்த மாநாட்டில் முதன்முறையாக ஹெபடைடிஸ் – பி பற்றி கேள்விப்பட்டார். இந்த நோய்க்கான தடுப்பு மருந்து இந்தியாவுக்கு மிக அத்தியாவசியமாக இருந்ததை உணர்ந்தார்.

  இந்திய மக்களுக்கு அதிகமாகத் தேவைப்படும் இந்த தடுப்பு மருந்தை வாங்கும் சக்தி இல்லை என்பதை கூறி இந்திய மருத்துவர்களை மிக கேவலமாக நடத்தினர். இந்த கிண்டல்களும், அவமதிப்புகளும் கிடைத்ததை பார்த்த வரப்பிரசாத்துக்கு கோபம் பொங்கியது. அந்த கோபத்தை ஒரு தீர்மானமாக மாற்றிக்கொண்டார். அதில் வெற்றியும் கண்டார்.

  கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மரபியல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் மருந்து தயாரிக்கும் தொழில் நுட்பத்தை விலைக்கு கேட்டார். இது நவீன தொழில்நுட்பம், இந்தியர்களால் இதைக் கற்றுக்கொள்ள முடியாது. மேலும், இதை விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு இந்தியர்களிடம் பணம் இல்லை என்று அவமானப்படுத்தி அனுப்பினார்கள்.

  அவமானத்தைத் தாங்கிக்கொண்டு அவர்களிடம் இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்த தடுப்பு மருந்தை நாங்களே தயாரித்துக்காட்டுகிறோம் என்று சவால் விட்டு வந்தார்.

  நியூ ஜெர்ஸிக்கு திரும்பியவர், அமெரிக்காவில் பயோடெக்னாலாஜி துறையில் இருக்கும் இந்தியர்களை ஒன்று திரட்டினார். அவரின் அழைப்பை ஏற்று வந்தவர்களிடம்… தனக்கும், இந்தியாவுக்கும் ஏற்பட்ட அவமதிப்பை எடுத்துக்கூறி இந்தியாவிலிருந்து ஹெப்டைடிஸ் – பி யை முற்றிலும் ஒழிக்க உங்களின் உதவி தேவை என்று வேண்டினார்.

  வரப்பிரசாத்தின் கனவுகளுக்கு உதவ அவர்கள் முன் வந்தனர். சுமார் 1 கோடி ரூபாய் நிதிதிரட்டி வரப்பிரசாத்திடம் கொடுத்து இந்தியா சென்று ஒரு அணியை உருவாக்குங்கள். அவர்களுக்கு நாங்கள் இங்கிருந்தே பயிற்சியளிக்கிறோம் என்று அனுப்பி வைத்தார்கள்.

  ஹைதராபாத் திரும்பியவர் பயோடெக்னாலஜி துறையைச் சார்ந்தவர்களைத் தேடி ஒரு அணியை உருவாக்க முற்பட்டு பல கல்வி நிறுவனங்களுக்கு சென்றார். அதில் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானிய பல்கலைக்கழகமும் ஒன்று.

  வரப்பிரசாத்தின் கனவு, அர்ப்பணிப்பு உணர்வைப் பார்த்த உஸ்மானிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மல்லாரெட்டி, பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி ஆராய்ச்சிக்கூடத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்தார்.

  தன்னம்பிக்கை

  கடவுளுக்கு எப்போது அதீதமான பணியைச் செய்ய வேண்டி உள்ளதோ, அப்போது அவர் பொதுவாக ஏதாவது ஒரு மனிதனைத் தேர்ந்தெடுத்து அவனிடம் அளவுக்கதிகமாக தன்னம்பிக்கையை வைத்துவிடுகிறார். ஆதலால், அவன் அந்தப் பணியைச் சமாளித்துவிடுவான் – பிஷப் ஆர்.சி. மிஷேல்

  தன்னால் முடியாது என்று நினைப்பவனால் முடியாது. தன்னால் முடியும் என்று நினைப்பவனால் மட்டுமே முடியும் என்பது உண்மை.

  உலகச் சரித்திரத்தில் பெரிய விஷயங்களைச் செய்தவர்கள் பொதுவாக மக்கள் அகந்தை என்று கருதுவதை உடையவர்கள்தான். அதாவது இவர்கள் தன் மீது அபாரமான நம்பிக்கை கொண்டிருந்தனர். இதை அகந்தை என்று சொல்வதற்குப் பதிலாக அவர்கள் எடுத்துக்கொண்ட பணியைச் செய்யக்கூடிய திறமையை உணர்ந்து கொண்டதால் உருவான அபரிமிதமான நம்பிக்கை என்றே நாம் கருதுவோம்.

  பெருமை வாய்ந்த மனிதர்களுக்குள் இருக்கும் அகந்தை என்று சொல்லப்படுவது அவர்களுக்குள் இருக்கும் தேக்கிவைக்கப்பட்ட விளக்கங்களையும், மற்றவர்கள் பார்க்காத அவர்களது மறைவான சக்திகளையும், திறமைகளையும் அவர்களுக்கு வெளிப்படுத்தும் சுயஅறிவால் அவர்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு தான். இதை மற்றவர்கள் பார்க்க முடியாததால் தன்னம்பிக்கை கொண்டவர்கள் அவர்களுக்கு அகந்தை கொண்டவராகத் தெரிகிறார்கள்.

  மாவீரன் நெப்போலியனுக்குத் தன் மீதான பிரம்மாண்டமான நம்பிக்கை தான் அவரது சக மனிதர்களிடையே அவரை அரசனாக்கியது. நெப்போலியன் தனது அதிர்ஷ்டத்தின் மீதும், தனது விதியின் மீதும் வைத்திருந்த நம்பிக்கை தான் அவரது வாழ்க்கைக்கு அளவிட முடியாத சக்தியை அளித்தது.

  மேலும் தனது நோக்கத்தை விட்டு அவரை விலக முடியாமலும் செய்தது. அவரது துணிச்சலின் இரகசியமே அவரது தணிக்க முடியாத தன்னம்பிக்கை தான். இதனால் தான் அவரை எதிர்க்கக்கூடிய கொல்லக்கூடிய துப்பாக்கிக் குண்டுகளும், கூர்முனையான வாள்களும் அடக்கி ஒடுக்கப்பட்டன.

  தன் மீதான இந்த அபார நம்பிக்கையும், விதிக்கப்பட்டவனாக தன்னை எண்ணிக்கொண்டு தன் சக்தியின் மீதே அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் இல்லாவிடில், வெறும் அறிவாற்றல் மட்டுமே அவரைத் தனது லட்சியத்தை அடையச் செய்திருக்க முடியாது.

  சாவைக் கண்டோ, தன்னைக் கொல்லக்கூடியவனை நினைத்தோ அல்லது தனது நோக்கத்தை ஏதாவது தடைசெய்யக் கூடுமோ என்று பயத்திலோ அவர் இருந்திருந்தால் அவருடைய சக்தி மற்றும் திறமை அவரிடம் இருந்து அபகரிக்கப்பட்டிருக்கும்.

  ஆனால் ‘நெப்போலியன்’ என்கிற தன் மீதான நம்பிக்கையில் அவர் என்றுமே திடமாக இருந்தார். தான் முயற்சித்த விஷயத்தைச் செய்வதற்காகவும், படைகளின் பெருந்தலைவராகவும், உலகளாவிய அரசாட்சி புரிவதற்காக மட்டுமே தான் பிறந்துள்ளோம் என்பதில் எப்போதும் சந்தேகம் கொண்டதே இல்லை. இந்த நம்பிக்கை தான் மற்றவர்களுக்கு சாத்தியமில்லாதவற்றை நெப்போலியனை செய்ய வைத்தது.

  தன்னையே நம்பும் ஒரு வலிமையான மனிதனை உங்களால் தோற்கடிக்க முடியாது. அவனைத் தாழ்வடைய செய்யவோ, கேலி செய்யவோ, கீழ் தரமாக அவனைப் பற்றி பேசவோ, எழுதவோ முடியாது. தனது செயலாற்றும் திறமை, தான் எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்த மனிதனை இந்த உலகின் எந்த சக்தியாலும் தோற்கடிக்க முடியாது.

  ஏழ்மை அவனை அதைரியப்படுத்தியோ, துரதிர்ஷ்டம் அவனைத் தடுத்து நிறுத்தியோ அல்லது சகிக்க முடியாத துன்பம் அவனை திசை திருப்பியோ அவனது செயல் முறைகளில் இருந்து மயிரிழையளவு கூட அகற்றிவிட முடியாது.