Home » Articles » வழிகாட்டி…

 
வழிகாட்டி…


அனந்தகுமார் இரா
Author:

மாலை மயங்கிக்கொண்டிருக்கிறது. கதிரேசன் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள் “பூவாணி” என்னும் ஸ்தலத்தில் இருக்கின்ற தோட்டக்கலைப் பண்ணை. அருகே இருக்கின்றார். ‘மா’, மர நாற்றுக்கள் நூற்றுக்கணக்கில் செழிப்பாக வளர்ந்து கொண்டு இருந்தன.

மாங்கனி வகைகளின் அரசன் என்று அழைக்கப்படும் ஹிமாயுதீன் வகை மாங்கனி குறித்து தெரிந்து கொண்டார். அவை மிகப்பெரிய உருவத்தில் இருப்பதாலும், இனிப்பு தன்மை அதிகமாக இருப்பதாலும், இந்த அரசர் பட்டம் பெற்று உள்ளதாம். தவிரவும் பஞ்சவர்ணம் என்று மற்றொரு உள்ளூர் மாங்கனி வகை உண்டாம். ஒவ்வொரு மாமர இலையும் ஒவ்வொரு வகையான அடையாளம் கண்டறியக்கூடிய தன்மைகளுடன் இருந்தும் குறித்தும் அங்கிருந்த தோட்டக்கலை நிபுணர் விளக்கிக் கொண்டு இருந்தார். அந்த வழிகாட்டி சென்ற இடங்களில் எல்லாம் தொடர, தொடர Scion சையான் Root Stock ரூட் ஸ்டாக் என்று அறிவியல் பதங்கள் விளக்கங்களோடு பரிமாறப்பட்டன. தொழில்நுட்ப வழிகாட்டிகள் நுணுக்கமான விஷயங்களை எளிமையாக்கி கற்றுத்தருகின்றனர்.

பழந்தோட்டம் பசுமையை கண்களுக்கு விருந்தாக்க, பறவையினங்கள் ‘குப்’ என எழுந்து பறக்கத் தொடங்கின. நீலவானில் பின்புலம் தொடுவானம் அருகே நிறம் மாறி ஆரஞ்சு வண்ணம் பூசிக் கொண்டு இருந்தது. தொலைதூரம் செல்லும் பறவைகளும் பெருங்கூட்டமாக செல்வது தெரிந்தது. அவை மைக்ரேடரி பறவைகளாக இருக்கக்கூடும். இருபதினாயிரம் கிலோமீட்டர் தூரம் கூட வருட வருடம் காலந்தவறாமல் சரியாக வேடந்தாங்கள், இரங்கன் திட்டு போன்ற இடங்களுக்கு பறந்து வந்து சேரும் என்று அறிவியலில் படித்தது நினைவில் வந்தது.  அதுபோன்ற மூன்றாவது கண்ணை மூளைக்குள்ளேயே புதைத்து கடவுள் அல்லது இயற்கை படைத்து இருப்பதாக அறிவியல் கூறுகின்றது. அதை பைனியல் சுரப்பி என்றும் கூறுகின்றனர். பறவைகள் தமது பயணத்தை தொடங்குகையில் முழு வழியும் அறிந்திருக்குமா…? என்ற கேள்விக்கு கேள்விகுறுல் தான் பதிலாக அமைந்துள்ளது. இன்றுவரை, ஆச்சரியங்கள் நிரம்பிய பயணம் இது. வழிகாட்டி யார்…? என்று கேட்டால்…? அவனாகத்தான் இருக்கும் என்று தோன்றும்…அவன்…? எவன்…? எல்லாம் அவன் செயல் என்கின்றோமே…!

பழங்காலத்தில் கைôட்டிப் பலகைகள், சுமைதாங்கிக்கற்கள் எல்லாம் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. வழிப்போக்கர்கள் திசை தெரிந்து கொள்வதற்காக கைகாட்டிப்பலகைகள் பயணிகளோடு சேர்ந்து பயணிக்க வருவதில்லை. ஆனால், அவை இல்லாமல் பயணம் நடைபெறாது. எண்ணற்ற திருப்பங்கள், நான்கைந்து வழிகள் குறுக்கிடும் சந்திப்புகள் எல்லா இடங்களிலும் வழிகாட்டும் அடையாளங்கள் அவசரப் பயணங்களுக்கு உயிர்காக்கும் மருந்துகள் என்றால் மிகையாகாது. பயணப்பாதைகள் குறித்த விபரங்களும் வர்ணனைகளும், அடுத்து அதே இலக்கை நோக்கி பயணிபப்வர்களுக்கு தடயங்கள் ஆகிவிடுகின்றன. ஆசிரியர்கள் அப்படிப்பட்ட வழிகாட்டிகள் மற்றும் சுமைதாங்கிகள். பல்வேறு மாணவர்களை அவர்கள் வருடந்தோறும் சந்தித்தாலும் யாரோடும் தமது இடத்தை விட்டு, உடன் சென்று விடுவதில்லை. ஒவ்வொருவருடைய குணாதிசயங்களையும் தம்முள் கிரகித்துக் கொண்டு மாணவர்கள் வெற்றியடைந்தார்களா…? அல்லது எந்த இலக்கை அடைந்தார்கள் என்பதையும் மனதில் கொண்டு அடுத்த தலைமுறைக்கான புதிய பாடங்களோடு வழிகாட்டிகள் தம்மை செம்மைப்படுத்திக் கொள்கின்றனர்.

திருக்குறள் உலகப்பொதுமறை என்று அனைவருக்கும் விருப்பமான பாடமானாலும் சில குறள்களுக்கு நண்பர்கள் பொருள் கேட்டுக் கொண்டேதான் இருக்கின்றார்கள். வழிகாட்டியவர்களுக்கு, குருதட்சணை கொடுப்பது என்று ஒரு வழக்கு உண்டு. ஏலைவன் அளித்த கட்டைவிரல் தட்சணை கண்களில் உடனே நீர் வரவழைக்கின்றது. துரோணாச்சாரியரின் கோணத்தில் கட்டைவிரல்தான் சரியான தட்சணையாக தோன்றி இருக்கின்றது. இன்றைய ஆசிரியர்கள் ஊதியம் பெறுகின்றவர்கள். தமது கடமையை சரிவர ஆற்றுவதற்காக ஊதியம் பெறுகின்றனர். தட்சணையாக பெருமையாக கருதலாம். தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாயும், தன் மாணவனை, மாண்பு மிக்க சாதனையாளன் என்று கேள்விப்படும் ஆசிரிய வழிகாட்டியும் மகிழ்ச்சி மட்டற்றதாகும். திருக்குறளில் செய்நன்றி அறிதல் என்னும் அதிகாரம் அறத்துப்பாலின் பதினோராவது அதிகாரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் வரும் குறள்களுக்கு குறள் வானம் என்னும் தமது புத்தகத்தில் திரு. சுப. வீரபாண்டியனார் இருபது உரைகளுக்கும் மேல் அலசி பொருள் நுட்பத்தை விளக்கி உள்ளார். நன்றி அறிதல், நன்றி பாராட்டுதல் என்னும் இவ்விரண்டு சொற்களுகுக்கிடையே ஆன வேறுபாடு அற்புதமானது. ஒருவர் தமக்குச் செய்த உதவியினை நினைவில் வைத்து இருப்பதும் அவருக்கு சந்தர்பத்தில் திரும்ப உதவுதலும் நன்றி அறிதல். நம்மை படிக்க வைத்த ஆசிரியரை, நாம் திரும்ப படிக்க வைத்திட முடீயாது. அதை அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. உண்மையில், எதையுமே, எதிர்ப்பார்ப்பதில்லை. ஒரு பெரிய தொழீல் அதிபர் பள்ளி ஒன்று நடத்தி  மாணவர்களை படிக்கச் செய்தால்… அது நன்றி பாராட்டுதல் ஆகும். அவரது ஆசிரியர் அவருக்கு, செய்த உதவியைப் போல தாமுமு; பலருக்கு கற்ளுக் கொள் உதவி செய்தால் அது நன்றி பாராட்டுதலில் சேரும். இத்தகைய பண்பு உலகம் தழைத்தோங்க உதவும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஜெயராஜ் என்னும் விவசாயியின் தோட்டத்தில் தேன்கூடு ஒன்றை மிக அருகில் சென்ற பார்க்க நேர்ந்தது. பரபரப்பாக தேனீக்கள் பறந்து கொண்டிருக்க அவற்றின் கூட்டைத் தொட்டு உயர்த்திப் பிடித்தபோதும் கூட ஒன்றுமே செய்யவில்லை. நகர்ப்புறத்தில் பூங்காவில் விளையாடிய குழந்தைகளை துரத்தித் துரத்திக் கொட்டி கோப தேனீக்கள் நினைவில் வந்தன. ஒவ்வொரு தேனீக்களும் ஒவ்வொரு வகை போலும். மனிதர்களிலும் அப்படித்தான் என்று தோன்றியது. கொட்டாத தேனீக்கள் இருக்கக்கூடும். நம்பிக்கையோடு நாம் கையாள வேண்டும். மரப்பெட்டிக்குளு; உள் சட்டங்களில் தமது இராணித்தேனியின் வழிகாட்டுதலில் தேன்மெழுகால் கூடுகட்டிக் கொண்டிருந்தன. இந்த வகை தேனீக்கள், அதிக கோபமில்லாதவை என்ற படிக்க நேர்ந்தது. அவற்றை பூக்கள் அதிகமில்லாத காலங்களில் சர்க்கரைப் பாகினை கூட்டுக்குள் வைத்து அருந்தச் சய்து பாதுகாப்பார்களாம். தேனீக்களுக்கே சர்க்கரை கொடுக்கக்கூடிய வழிகாட்டிகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டோம். எல்லாம் காலத்தை பொறுத்தது என்ற தோன்றியது. யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வழிகாட்டலாம். சிலந்தி, ஸ்காட்லாந்து அரசன் இராபர்ட் தி ப்ண்ஸ்ண்க் வழிகாட்டியது தனி கதை.

சமீபத்தில் 2015 ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகள் வெளியாகின. தமக்கு வழிகாட்டிய நிறுவனங்கள், பயிற்சி மையங்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் குறித்து வெற்றியாளர்கள் நாளிதழ், வார இதழ் போட்டிகளில் குறிப்பிட்டு நன்றி அறிவித்துக் கொள்வது இயல்பு. அவர்கள் எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு நன்றி பாராட்டுவார்கள் என்பதிலும் ஐயமில்லை. கர்ணன் கதாபாத்திரம் மஹாபாரதத்தில் உன்னதமானது. எவ்வளவோ தானங்கள் செய்தும், அன்னதானம் செய்யாததால் அவருக்கு சொர்க்கத்தில் பசி தீரவில்லையாம். கண்ணன் வழிகாட்டி அறிவுரை கூற, அதன்படி கர்ணன் தனது வலது கை சுட்டுவிரலை வாயில் வைக்க பசி தீர்ந்ததாம். ஏனெனில், அதோ அங்கே – என்று யாருக்கோ, முன் காலத்தில் உணவு கிடைக்கும் இடத்தை கர்ணன் சுட்டிக்காட்டியதால் அந்த சுட்டு விரலுக்கு அவ்வளவு புண்ணியமாம் என்று கதை செல்கின்றது. வழிகாட்டிகளுக்கு எவ்வளவு புண்ணியம் பாருங்கள்.

பாரதி…

“அன்னச் சத்திரம் ஆயிரம் நாட்டல்

ஆலயம் பதினாயிரம் சாட்டல்

 அன்ன யாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைகளுக்கு எழுத்தறி வித்தல்”.

என்று பாடியுள்ளார்…

கர்ணன் கதைக்கும் சம்பந்தம் உள்ளது. ஒரு ஏழை என்றால் பொருளில் ஏழை என்று பொருள் கொள்ளாமல் கல்வியல் தேவை உள்ளவர் என்றே பொருள் கொள்ளுதல் பொருந்தும். அல்லது, தான் கற்கும் கல்விக்கட்டணம் கட்ட வழி காணாதவராகவும் பொருள் கொள்ளலாம். டாக்டர் சங்கர சரவணன் தன்னிடம் தமிழ் கற்க விழைந்த மாணவன் ஒருவன் கட்டணப் பொருள் இல்லையே என தயங்க… அதைப்பற்றி அப்புறம் யோசிக்கலாம் என்று கற்றுக்கொடுத்து அவன் தேர்வில் வெற்றிப் பெற்றதை உள்ளார்ந்த திருப்தியோடு பகிர்ந்து கொண்டார். ஆத்ம திருப்தி வழிகாட்டிகளுக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. டாக்டர் சங்கர சரவணன் ஒரு முனைவர் படிப்பு மாணவராக கால்நடை மருத்துவக்கல்லூரியில் தற்போதும், படிப்பதும், ஆண்டுதோறும் விகடன் பிரசுரம் வெளியிடும் போட்டித் தேர்வு புத்தகங்களுக்கு பங்களிப்பதும் குறிபிடத் தகுந்தது. வழிகாட்டிகள், கற்றது கையளவு என்னும் ஒளவையின் வாக்கிற்கிணங்க தம்மை தொடர்ந்து செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டியது கண்கூடு. அவ்வப்போது மாறிவரும் பாடத்திட்டங்களுக்கும், அதற்கேற்ப மாற்றிக் கொள் வேண்டிய தயாரிப்புத் திட்டங்களுக்கும் வழிகாட்டிகள் தேவைப்படுகின்றார்கள்.

சென்ற வருட வெற்றியாளர்கள் கடந்து சென்ற பாதைகளின் பேசும் சாட்சிகளாகத் திகழ்பவர்கள் வழிகாட்டிகள். கதிரேசனின் நண்பர் ஒருவரின் மகள் மிகவும் பிரைட் மாணவி. ஐ.ஏ.எஸ். படிக்க விரும்பினார். சென்னையில் ஒரு பயிற்சி நிலையத்திலும் சேர்ந்தார். வீடு வாடகை மட்டுமே இருபதினாயிரம். மாணவியின் அம்மா, மகளே பாபநாசம் திரைப்படம் பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுகின்றாளே என்று ஆச்சரியப்பட்டார். இயல்பாகவே திரைப்படம் பார்க்காமல் படிப்போம் என்று தானாக மனமுவந்து நினைத்தால் அது நன்று. ஆனால், மற்றவர்கள், கட்டுப்பாட்டால், பாபநாசம் செல்லாமல் கட்டுப்படுத்தினால் அது பாடநாசம். நினைவுகள் திரையரங்கத்தில் இருந்தால், அதைப் பார்த்துவிட்டு இவ்வளவு படிப்போம் என்று குறிக்கோள் வைக்கலாம் அல்லது இவ்வளவு படித்தபிறகே பார்க்கலாம் என்றும் சொல்லாம். படம்கூட பாடமாக வேண்டும். மூன்று மணிநேர திரைப்பட நேரத்தில் மூளையின் மற்ற பகுதிகள் தூண்டிவிடப்பட்டு ஒரு உணர்வு ரீதியான புத்துணர்ச்சியை போட்டியாளர்கள் பெறக்கூடும்.

ஒரே மாதிரியான படிப்பு முறையை பின்பற்றுவதால் படிப்பிலிருந்து சற்றே பாதை மாறி ஒரு புத்துணர்ச்சியை திரைப்படம் மூலம் தேடலாம் என்று தோன்றியிருக்கலாம். அதனால், மியூஸியம், நூலகம் முதலிய இடங்களுக்கு செல்லுமாறு ஊக்குவிக்கலாம் என்று ஒரு புதிய உத்தியை தெரிவித்தோம். பாபநாசம் திரைப்படம் கூட திரைப்படங்கள் மூலம் வாழக் கற்றுக்கொண்ட திரைக் கதாநாயகன் குறித்துதான். திரைப்படங்கள் கூட வழிகாட்டியாகி விடக்கூடும். டாக்குமென்டரி திரைப்படங்கள், வரலாற்ற திரைப்படங்கள் என பெரிய பட்டியலே பிறகு தயாரிக்க வேண்டியிருக்கும். வழிகாட்டிகள் பல திரைகளை காட்டினாலும் பயணிப்பவர்களின் மனப்பாங்கிற்கேற்ப இலக்குக்கான வேகமும் தூரமும் பயண முறையும் மாற்றிக் கொள்ளப்படுகின்றது.

இரமண மஹரிஷி அவர்களது வழிகாட்டும் வாக்கியங்கள் அடங்கிய வசனாமிர்தம் புத்தகம் திருவண்ணாமலை, இரமணாஸ்ரமத்தில் கிடைக்கின்றது. அதில் ‘குரு’ என்பவர், ‘ஆத்மா’ தான் என்று கூறியிருப்பார். ‘ஆத்மா’, தான் யார் என்று அறிந்து கொள்ள முடியற்சிக்க வேண்டும் என்று கூறியிருப்பார்.

புறத்தே குருக்களையும் வழிகாட்டுதலையும் தேடினாலும், அவை அமைவது ஆத்மாவின் ஈடுபாட்டினால் தான் நிறைவேறுகின்றது என்று கூறியிருப்பார். எட்கார்ட் டல்லி எழுதிய, ‘தி பவர் ஆஃப் நப்’ (The Power of Now) என்னும் ஆங்கில புத்தகம். அந்த தருணத்தில் வாழ:வது என்பதன் முக்கியத்துவம் குறித்து பேசியிருப்பார். கடிகார நேரம் மற்றும் உளவியல் நேரம் என்கின்ற கருத்துக்கள் படிக்கத் தகுந்தன. அதாவது கடிகாரம் காட்டும் நேரம் அப்போதைய நேரம். மனிதர்கள் அதை மட்டும் காண்பது இல்லை. கடந்த காலத்தில் என்ன நடந்தது, எதிர்பாலத்தில் என்ன நடக்க உள்ளது என்கின்ற கவலைகளும், எதிர்பார்ப்பும் சேர்ந்து கடிகார நேரத்தை முள்ளாக குத்திக் கிழிக்கின்றன. எனவே நேரம் நினைவுகளால் மாசுபட்டு வருகின்றது. அப்படி இல்லாமல் மனதின் பாதிப்பிலிருந்து விடுபட்ட தூய்மையான கடிகார நேரத்தை நம்மால் பிரித்துணர முடியும் என்றால், பரிபூரண மகிழ்ச்சி கிடைக்கின்றது. இந்த கருத்தைத்தான் ஜென் தத்துவத்தில் – ‘அந்த நேரத்தில் வாழ்’ என்று கூறி இருப்பார்கள். ‘பவர் ஆஃப் நவ்’ புத்தகம் இதனை ஆங்கிலத்தில் மனதை களைதல் என்கின்ற கருத்து மூலம் விளக்கி உள்ளது. வழிகாட்டுதலில் ஆன்மீக வழிகாட்டிகளின் பங்கு கணிசமானது. மனித வாழ்வின் அடிநாதமாக, பின்புலமாக ஒரு ஆன்மீக திருப்தி இருக்க வேண்டும் என்ற ஸ்டீவன் கோவே தனது (Seven Habits of Effective People) என்கின்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார்.

இரண்டு நெருங்கிய நண்பர்கள், கதிரேசனிடத்தில், “தயவு செய்து, சுய முன்னேற்ற புத்தகங்களை குறித்து பேசாதீர்கள்” என்று சொல்லி இருந்தார்கள். இந்தக்கருத்தும் மிகவும் கவனிக்கத் தக்கது. “ஏறத்தாழ எட்டு மணிக்கு”, என்ற சொற்றொடர் போல “சுயம்” என்பதும் “முன்னேற்றம்” என்பதும் முரணான வார்த்தைகள் தான். சுயத்தை வெளியிலிருந்து முன்னேற்ற வேண்டும் என்கின்ற கருத்துக்களை திணித்தோமேயானால் சுயமான பாதையும் பயணமும் – ஒரு (Stage Managed) விஷயமாக மாறிவிடுகின்றது என்னும் அவர்களது கருத்தும் சரிதான். பின்பற்றுவதற்காக என்று அல்லாமல், சுயத்தை பாதிப்பதற்காக என்றும் கொள்லாமல், என்ன…? என்று  தெரிந்து கொள்வதற்காக என்று தத்துவங்கலந்த சுயமுன்னேற்ற புத்தகங்களை படித்துப் பார்த்துவிட்டு பிறகு முடிவு செய்யலாமே… என்று கூறிப்பார்த்தேன். அப்படிப் பார்த்தால் திருக்குறள் கூட ஒரு சுயமுன்னேற்ற புத்தகமே என்றும் தோன்றியது. சமூகத்தை அனுசரித்துப் போவதற்காக மனித இயல்புகள் குறித்து அறிவதற்காக இலக்கியங்கள் மறைமுகமாகச் செய்வதை சுயமுன்னேற்ற புத்தகங்கள் நேரடியாக செய்கின்றன. சில நண்பர்கள் பாடத்தைத் தவிர எந்த புற இலக்கியத்தையுமே படிக்கவில்லை. சிலர் படிக்கவேயில்லை. ஆனால், அவர்கள் எல்லோருக்குமே ஏதாவதொரு அல்லது யாராவதொரு… முன்மாதிரிகள் அல்லது வழிகாட்டிகள் இருப்பார்கள் என்பது வரை நிச்சயம்.

சமீபத்தில் அவுட்லுக் பத்திரிக்கை அட்டையில் இராஜிங்க்யா இஸ்லாமிய மக்களின் சிரமம் குறித்த கட்டுரை இடம் பெற்று இருந்தது. மியான்மார் நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் போதிய அடிப்படை வசதிகள் இன்றி இருக்கின்றனராம். மலாக்கா ஸ்ட்ரெய்ட் என்னும் அந்தமான் மற்றும்  தாய்லாந்து பகுதிகளû சுற்றியுள்ள கடல்பகுதியில் சுமார் எட்டாயிரம் மக்கள் அந்த நாட்டினாலும் விருப்பப்படாமல் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டே உணர்வுக்கும் நீருக்கும் போராடி வாழ்வதும், வீழ்வதுமாக இருக்கிறார்கள் என்கின்ற செய்தி நெஞ்சை நெருடியது. வழிகாட்டிகள் யாருமின்றி புலம் பெயர்ந்த மக்களின் துயரம் ஆற்றப்படுவதற்கான அமைதித் தீர்வினை நோக்கி உலக நாடுகள் நகர்வதற்கு உகந்த சூழல் விரைவில் பிரார்த்திக் கொண்டார் கதிரேசன்.

உலகத்தின் நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியாய் வழிகாட்டிய, ரோம, கிரேக்க சாம்ராஜ்யங்களை கட்டியாண்ட மன்னர்கள் பலர். உலகை ஓர் குடையின் கீழ் ஆளுவேன் என்று கிளம்பிய கிரேக்க மாவீரன் அலெக்ஸாண்டரின் கதை நாடறியும். அவர் குதிரையின் பெயரை (பெகாசஸா, பூசெபாலஸா என்று இமெய்ல் செய்யுங்கள்) L.K.G. குழந்தைகளின் அப்பாக்கள் அறிவார்கள்… அத்தகைய கிரேக்க நாடு இன்று கடனில் தத்தளிக்கின்றதாம். அங்கு வாழும் மக்கள் அனைவரும் ஐம்பத்தேழு வயதானாலும் ஓய்வூதியம் உண்டாம். ஐரோப்பிய யூனியன் அவர்களுக்கு கடன் கொடுக்க அதுவும் காலியாகி விட்டது. வழிகாட்டியவர்களுக்கு வழிகாட்ட பலமுறை கூட்டங்கள் நடந்துள்ளன. ஜெர்மனி கிட்டத்தட்ட கைவிரித்துவிட்ட நிலை என்று செய்தித்தாள்கள் பரபரப்பாக செய்தி சொல்லிக் கொண்டிருக்கின்றன. வழிகாட்டுதல் சமயத்தில் திரும்பி விடுகின்றது. முன்பு இரண்டாம் உலகப்போர் முடிந்த நிலையில் ஜெர்மனிக்கு கிரீஸ் கடன் உதவி செய்ததாக சமூக வலைதளங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு தலைமுறை பெயரும் புகழும் பெற்று வாழ்வதும் அதனை தொடர்ந்து வரும் தலைமுறைகள் சிரமப்படுவதும் பின்னர் மீண்டும் சிறிது காலம் கழிந்து சீரும் சிறப்பும் திரும்ப வருவதுமாகத்தான் வரலாறு அமைகின்றது. வழிகாட்டிகள் நிரந்தரமானவர்கள் இல்லை போலும்…

முக்கனிகளில் பழங்களின் அரசன் மாங்கனிதான், அவற்றின் பல வகைகளில் கலப்பினங்களை உருவாக்குவது குறித்து பூவாணி தோட்டக்கலைப் பண்ணையில் ஆராய்ச்சியாளர் விளக்கினார். ஒரே மரத்தில் ஐந்து வகை மரங்களை ஒட்டவைத்து ஐந்து வகை கனிகளை உருவாக்கியிருந்தனர். செம்பருத்தியிலும் இதுபோலவே ஒரே அடிமரத்தில் பலநிற மலர்கள் பூத்துக் குலுங்க வைத்திருந்தனர். இவை எல்லாம் நல்ல குணங்களை வழிகாட்டிகள் தேடிப்பிடித்து நம்முள் பதியம் செய்து வளர்த்து விடுவார்கள் என்கின்ற நம்பிக்கையை விதைக்கின்றனர்… விரைவில் பலன் பழம் கனியாகட்டும்… சுவை பரவட்டும்…

பழ(ல) வழிப்பயணம்… தொடரும்…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2016

வழிகாட்டி…
என் பள்ளி
முழுமையின் முக்கியத்துவம்
நிர்வாக மேலாண்மைக்கு சமயோசித அறிவு அவசியமா…?
உண்மையாய் செயல்படு நன்மையாய் வாழ்ந்திடு
சிகரமே சிம்மாசனம்…
வெற்றி உங்கள் கையில்
பாடம் சொல்லும் பறவைகள்
எப்படி ஜெயித்தார்கள்?
தன்னம்பிக்கை
குவாண்டம் கம்ப்யூட்டர்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்