Home » Articles » நிர்வாக மேலாண்மைக்கு சமயோசித அறிவு அவசியமா…?

 
நிர்வாக மேலாண்மைக்கு சமயோசித அறிவு அவசியமா…?


ராமசாமி R.K
Author:

நேர நிர்வாக மேலாண்மை என்பதும், மனிதவள நிர்வாக மேலாண்மை என்பதும் இன்றைய நிர்வாகவியலில் முக்கிய காரணிகளாக கருதப்படுகின்றன.

நேர நிர்வாக மேலாண்மை தனி மனிதனுடைய வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது.

மனிதவள நிர்வாக மேலாண்மை ஒரு நிறுவனத்தை கட்டிக்காப்பது மட்டுமல்லாமல் அந்த நிறுவனத்தினுடைய வளர்ச்சிக்கும், நிர்வாக சிறப்பிற்கும் அதனுடைய விரிவாக்கத்திற்கும் அடித்தளமாக அமைகிறது..

ஒரு மிகப்பெரிய கம்பெனியில் நிர்வாக மேலாண்மை துறைக்காக ஒரு அதிகாரியின் பதவிக்கு நேர்காணல் நடைபெற்றது. நேர்காணலுக்கு வந்திருந்த தகுதி பெற்ற இளைஞரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. நீங்கள் இரவு 9.00 மணிக்கு மேல் காரில் உங்கள் வீட்டிற்கு போய் கொண்டிருக்கிறீர்கள். இடி மின்னலுடன் கடுமையான மழை பெய்து கொண்டிருக்கிறது. பேய் காற்று வேகமாக வீசிக்கொண்டிருக்கிறது.

நீங்கள் பஸ் நிறுத்தத்தை கடக்கும் தருணத்தில் அந்த பஸ் நிறுத்தத்தில் மூன்று பேர் காத்திருப்பதை பார்க்கிறீர்கள், முதலாம் நபர் வயதான பெண்மணி.

அவர் மிகுந்த காய்ச்சலுடன் உயிருக்கு போராடும் நிலையில் உள்ளார். 2-வது நபர் உங்களுடைய உயிரை ஒருமுறைகாப்பாற்றிய பழைய நண்பர், 3- வது நபர் நீங்கள் எதிர்கால மனைவி என்று எண்ணிக்கொண்டிருக்கின்ற உங்களுக்கு அறிமுகமான ஒரு இளம்பெண்.

உங்கள் காரில் ஒருவருக்குத்தான் இடம் உண்டு.

இந்த நிலையில் நீங்கள் யாரை உடன் கூட்டிச் செல்ல தேர்வு செய்வீர்கள்…?

மனிதாபிமான அடிப்படையில் அந்த வயதான, நோய்வாய்ப்பட்டு, சாகும் தருவாயில் உள்ள பெண்ணைத்தான் கூட்டிச் செல்ல வேண்டும். ஏனென்றால் அது அவளது உயிரை காப்பாற்றும் அல்லது உங்களை ஒருமுறை ஆபத்திலிருந்து காப்பாற்றிய உங்கள் நண்பனுக்கு இந்த நேரத்தில் உதவி செய்தால், அவர் செய்த உதவிக்கு நன்றி காட்ட ஒரு வாய்ப்புக் கிடைக்கும் அல்லது நீங்கள் கனவு காண்கின்ற எதிர்கால மனைவி என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற அந்தப் பெண்ணுக்கு உதவி செய்யாவிட்டால் நீங்கள் மறுமுறை அவளை சந்திக்கும் வாய்ப்பை இழந்து விடுவீர்கள். இந்த இக்கட்டான நிலையில் நீங்கள் யாருக்கு உதவி செய்வீர்கள்…?

அவர் சிறிதும் யோசிக்காமல் பட்டென பதில் சொன்னார். நண்பனை அழைத்து என் கார் சாவியை அவரிடம் தந்து இந்த நோய் வாய்ப்பட்ட வயது முதிர்ந்த பெண்ணை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல் என்று சொல்வேன். பின்னர் நான் எந்தப்பெண்ணை விரும்புகிறேனோ அந்த பெண்ணுக்கு பாதுகாப்பாகவும், துணையாகவும் நின்று அவளைக் கூட்டிச் செல்ல பஸ் வரும்வரை காத்திருப்பேன் என்று சொன்னார்.

இந்த பதில் மிகச்சரியான பதிலாக அமைந்ததால் அவர் அந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். சில தவிர்க்க முடியாத அவசர தருணங்களில் எடுக்கப்படுகிற சமயோசித அறிவு பூர்வமாக எடுக்கப்படும் முடிவுகளைக் கொண்டுதான் ஒரு மனிதனுடைய திறமை பரிசோதிக்கப்படுகிறது.

மனிதவள நிர்வாக மேலாண்மைக்கு இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்…

இந்தப்பணி செய்து முடிக்க இவர் மிகச்சரியானவர் என்று ஒருவரை தேர்வு செய்தல், அவருக்குள்ள சாதக, பாதகங்களை ஆராய்ந்து அதற்கேற்ப இலக்குகளை நிர்ணயித்தல் ( இலக்கு என்பதை கட்டளைகள் அல்ல. அவை இருதரப்பும் எடுத்துக் கொள்ளும் உறுதிகள் என்கிறார்.. பீட்டர் டிரக்கர்.)

அவருக்கு அந்தப்பணி பற்றிய விஷயங்களை தெளிவாக விவரித்தல் அந்தப்பணியை முடிக்க காலக்கெடுவு நிர்ணயித்தல். அடிக்கொரு முறைஅவரை சந்தித்து இந்த இந்த முறையில் இதைச் செய்தால் எளிதாக செய்யலாம் என்ற அனுபவ அறிவுரைகள் தருதல்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2016

வழிகாட்டி…
என் பள்ளி
முழுமையின் முக்கியத்துவம்
நிர்வாக மேலாண்மைக்கு சமயோசித அறிவு அவசியமா…?
உண்மையாய் செயல்படு நன்மையாய் வாழ்ந்திடு
சிகரமே சிம்மாசனம்…
வெற்றி உங்கள் கையில்
பாடம் சொல்லும் பறவைகள்
எப்படி ஜெயித்தார்கள்?
தன்னம்பிக்கை
குவாண்டம் கம்ப்யூட்டர்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்