July, 2016 | தன்னம்பிக்கை - Part 2

Home » 2016 » July (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    குவாண்டம் கம்ப்யூட்டர்

    கேயாஸ்தியரி, கண்டக்டிவிட்டி, சூப்பர் கண்டக்டிவிட்டி வரிசையில் அதிவேகமான தொழில்நுட்பம்

    இந்த உலகம் நாம் நினைப்பதைவிட விசித்திரமானது மட்டுமல்ல, நம்மால் நினைக்க முடியாததைவிட விசித்திரமானது என்று குவாண்டம் இயக்கவியல் (Quantum Machanics) பற்றி ஜே.பி.எஸ். ஹால்டேன் என்ற உயிரியலாளர் கூறியுள்ளார்.

    குவாண்டம் இயக்கவியல் என்பது அணுக்களுக்கு உள்ளே என்ன நிகழ்கிறது என்பதைப் பற்றி செய்யப்படும் இயற்பியல் ஆய்வு.

    குவாண்டம் கணினியைப் பற்றி பார்ப்பதற்கு முன் தற்போதுள்ள வழக்கமான கணினிகள் எப்படி இயங்குகின்றன என்பதைப் பார்ப்போம்…

    இன்றைய வழக்கமான கணினிகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அடிப்படைக் கட்டுமானமான ‘பிட்’ (Bit) எனப்படும் பைனரி டிஜிட் (Binary Digit, அதாவது Bit) மூலம்தான் இயங்குகிறது.

    இரு எண்ணியல் முறையில் ‘பிட்’ என்பது 0,1 ஆகிய இரண்டு எண் மதிப்புகளில் ஒன்றையே கொண்டிருக்கும். இந்த பிட்டுகளால்தான் கம்ப்பூட்டர் இயங்குகிறது.

    குவாண்டம் கம்ப்யூட்டரில் இந்த இரண்டு பிட்டுடன் மூன்றாவதாக ஒரு பிட் இருக்கும். அந்த மூன்றாவது பிட்டுதான் பல அதிசயங்களை செய்யப்போகிறது.

    குவாண்டம் உலகில், அதாவது அணுக்களுக்கு உள்ளே துகள்கள் ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் இருக்க முடியும். இதற்கு இருநிலை இருப்பு ( super position) என்று பெயர்.

    இந்த இருநிலை இருப்பு என்றபண்பின்படி குவாண்டம் பிட் ஒரே சமயத்தில் பல மதிப்புகளைக் கொண்டிருக்கும். இந்த குவாண்டம் பிட் சுருக்கமாக க்யூபிட் (Qubit) என்று அழைக்கப்படுகிறது.

    ஆக, இந்த க்யூபிட்டை உபயோகித்து புரோகிராம் எழுதினால் அந்த கம்ப்யூட்டர் ஒரே நேரத்தில் போடும் கணக்குகள் ஏராளம். அதாவது, ஒரு 20 க்யூபிட் உபயோகித்து ஒரு 10 லட்சம் கணக்குகளை ஒரே நேரத்தில் போடலாம். தற்போதுள்ள வழக்கமான கணினிகள் இந்த கணக்குகளைப் போட பல மாதங்கள் கூட ஆகலாம்.

    தன்னம்பிக்கை மேடை

    வேலைப்பளுவால்  மனச்சோர்வு அதிகளவில் ஏற்படுகிறது. இதை எவ்வாறு  எதிர்கொள்ள  வேண்டும்?

    உங்கள்  கேள்விக்கு பதில்  அளிக்கும் முன்  ஒரு  விளக்கம் அளிக்க வேண்டும். மன உளைச்சல் என்பதை Mental Stress என்றும்,  மனச்சோர்வு என்பதை Mental Fatique என்றும், மன அழுத்தம் என்பதை Mental Depression என்றும்  மனநோய்  என்பதை Mental Disorder என்றும்  எடுத்துக் கொள்வோம்.

    மனிதர்களுக்கு மனச்சோர்வு ஏற்படுவது இயல்பு. ஆனால் மனச்சோர்வு அதிக அளவு  ஏற்பட்டுவிட்டது என்றாலும், அது அடிக்கடி ஏற்படுகிறது என்றாலும் அது நல்லதில்லை. மனச்சோர்வு அல்லது மனஅழுத்தம் ஒருவரை மனநல பாதிப்பிற்கு அழைத்துச் செல்லக்கூடும். எனவே நாம்  அனைவரும் மனச்சோர்வு  வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மீறி வந்து விட்டால்  எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்.

    காரணங்கள்

    மனச்சோர்வு  வர பல காரணங்கள் உண்டு . நீங்கள்  வேலைப்பளு காரணமாக மனச்சோர்வு அதிக அளவில்  வருகிறது என்று முடிவு  செய்து வீட்டீர்கள். ஆனால்  இந்தக்  கருத்திலிருந்து நான் மாறுபடுகின்றேன். மனச்சோர்வு வருவதற்கு பாரம்பரியம் ஒரு  முக்கிய காரணம்  என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

    சில  மனிதனின் மரபணுக்கள் கூட  அது இருக்கிறது. வெளியில்  நடக்கும் விரும்பத்தகாத நிகழ்வுகளும்  மனச்சோர்வை ஏற்படுத்தலாம்.  வேலைப்பளு என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். வேலைப்பளு அல்லாத பல விஷயங்கள் கூட அதிக மன அழுத்தம் ஏற்படுத்தும் தன்மை உள்ளவை என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக வேலை கிடைக்காத பட்டதாரிக்கு இன்னும் அதிகமான மனச்சோர்வு இருக்க வாய்ப்புண்டு .

    கீழ்கண்ட சூழ்நிலைகள் இன்னும் அதிகமான மனச்சோர்வை ஏற்படுத்திவிடும்.

    உடல்  நலக்கேடு, இருதய நோய், சக்கரை வியாதி, மூட்டு வலி.கடும் கோபம், குற்ற உணர்வு,சுயமதிப்பின்மை போன்ற உணர்வுகள்.

    கணவன் – மனைவி உறவு விரிசல், தந்தை மகன்  உறவு விரிசல் .

    நாம் நேசித்த நபரின் திடீர் மரணம், புத்திர சோகம்.

    ஒழுக்கம்  கெட்ட பிள்ளைகள்.

    வேலை இழப்பு, வருவாய் இழப்பு,தொழில் நட்டம் போன்றவை.

    ஒருவாகன விபத்து, அதில் படுகாய மடைந்து அவதிப்படுவது.

    எனவே,  மனச்சோர்வு என்ற மோசமான நிலைமைக்கு நம்மை எடுத்துச்செல்லும்  பல  சூழ்நிலைகளும்  இருக்கின்றன என்பது உண்மை. அது போன்ற சூழ்நிலை ஏற்படாமல்  பார்த்துக் கொண்டாலே மனச்சோர்வு ஏற்படாமல்  தப்பித்து விடலாம். ஒரளவுக்கு நிம்மதியாகவும் வாழ்ந்து விட்டு  போகலாம். எடுத்துக்காட்டாக அளவான உணவு உண்டு, ஒரு மணி நேரம்  ஓட்டப்பயிற்சி மேற்கொண்டால்  குறைந்தபட்சம் 70 வயது வரை நோய்கள் அண்ட விடாமல் பார்த்துக் கொள்ளலாம் .

    நோய்களால் ஏற்படும்  மனச்சோர்விலிருந்தும் நம்மைக் காப்பாற்றி கொள்ளலாம். வாகனத்தை கவனமாக ஓட்டினால் விபத்தினால்  ஏற்படும் வேதனையையும்,அதனால் ஏற்படும்  மனசோர்வையும்  தவிர்த்து விடலாம்.

    உள்ளத்தோடு உள்ளம்

    வேட்டையாடப்போன மன்னர் ஒருவர் தனது பரிவாரங்களுடன் திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் ஒரு சிறிய ஊர். மன்னர் மெய்க்காப்பாளரை அழைத்தார்.

    இந்த ஊருக்குள் போவோம், நம்மை யாராவது அடையாளம் கண்டு கொள்கிறார்களா…? என்று பார்ப்போம்” என்றார்.

    மெய்க்காப்பாளர் முன்னே சென்றார். மன்னன் பின்னே சென்றார். எதிரே வந்த மக்கள் யாரும் மன்னனை கண்டு கொள்ளவே இல்லை. ஆனால், மெய்க்காப்பாளரைப் பார்த்து எல்லோரும் புன்னகைத்தார்கள்.

    மன்னருக்கு கோபம். “இங்கு யாருக்குமே என்னைத் தெரியவில்லை. அனால், உன்னை எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது”  என்றார்.

    உடனே மெய்க்காப்பாளர் “மன்னா என்னையும், அவர்களுக்குத் தெரியாது” என்றார்.

    தெரியாது என்றால் உன்னைப் பார்த்து ஊர் மக்கள் ஏன் புன்னகைக்க வேண்டும் என்று மன்னர் கேட்டார்.

    மெய்க்காப்பாளர் சொன்னார், “ஏனென்றால் நான் அவர்களைப் பார்த்து புன்னகைத்தேன்” என்று…

    நாம் நம்மை எப்படி வெளிப்படுத்துகிறோமோ, அப்படியே இந்த சமுதாயம் பிரதிபலிக்கிறது என்பதை உணர்ந்தாலே மகிழ்ச்சியுடன் சாதித்து வாழ முடியும்.

    நல்லவைகளை மட்டும் வெளிப்படுத்தி பள்ளிகள் திறக்கும் இம்மாதத்தில், வாழ்வாங்கு வாழ வைக்கும் ‘கல்வி’ வேண்டும்…!

    தரம் உயர்ந்த, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடாது தடுக்கும் கல்வி வேண்டும்…

    மதிப்பெண்ணுக்காக கல்வி என்றில்லாமல் ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் போற்றும் ‘மதிப்பு’ கல்வி வேண்டும்…

    இப்படி வேண்டும் கல்வியே வேண்டும்…! வேண்டுவோம்…!!

    உனக்குள்ளே ஒரு மருத்துவர்

    திருப்பூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம், திருப்பூர் அரிமா சங்கம் மற்றும் செல்வக்குமார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்,திருப்பூர் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 10.07.2016; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: காலை 10-30 மணி

    இடம்: அரிமா சங்க அரங்கம் குமரன் சாலை

    திருப்பூர்

    தலைப்பு: உனக்குள்ளே ஒரு  மருத்துவர்

    சிறப்புப் பயிற்சியாளர்: கு.நா. மோகன்ராஜ்,

    தன்னம்பிக்கை பேச்சாளர், திருப்பூர்

    செல். 8682991111

    தொடர்புக்கு:

    திரு. A. மகாதேவன்  94420 04254

    திரு.கிருஷ்ணமூர்த்தி- 99761 10974

    திரு. மாரப்பன்  95242 73667

    சென்னை தன்னம்பிக்கை வாசகர்வட்டம்

    சென்னை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் பதஞ்சலி யோகா சமிதி, சென்னை இணைந்து வழங்கும் 43 வது  சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 10.072016; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: மாலை 06-00 மணி முதல் 08-30 மணி வரை

    இடம்: ஸ்ரீ காமகோடி தியான மண்டபம்

    காமகோடி நகர், வளசரவாக்கம்,

    சென்னை-87 (ஆஞ்சநேயர்கோவில் பின்புறம்)

    தலைப்பு மற்றும் பயிற்சியாளர்

    தொடர்புக்கு தலைவர்: R. பாலன் – 94442 37917

    செயலாளர்: மித்திரன் ஸ்ரீராம் A.N. – 94440 69302

    PRO: யமுனா கிருஷ்ணன் – 94440 29827

    வானமே இல்லை

    ஈரோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 24.07.2016; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: மாலை 5.30 மணி முதல் 8.00 மணி வரை,

    இடம்: மாயாபஜார் A/C ஹால்,

    Opp. E.B. அலுவலகம் எதிரில், E.V.N. ரோடு, ஈரோடு.

    தலைப்பு: “வானமே இல்லை”

    சிறப்புப் பயிற்சியாளர்: அருள்நிதி Jc. S. M. பன்னீர் செல்வம்

    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்,  கோவை-41

    போன்: 9566665327.

    தொடர்புக்கு: தலைவர்: Jc.A.M. தனகோடி  – 98429 62345

    செயலாளர்: Prof. P. பூபதி – 99446 99196

    பிரம்மாஸ்திரா

    திருச்செங்கோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் JCI திருச்செங்கோடு டெம்பிள்
    இணைந்து வழங்கும் 52 – வது சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 17.07.2016; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : மாலை 6.30 மணி

    இடம் : ஹோட்டல் சித்தார்த்தா கான்பிரன்ஸ் ஹால், ஜோதி தியேட்டர் அருகில், திருச்செங்கோடு

    தலைப்பு : “பிரம்மாஸ்திரா”

    சிறப்புப் பயிற்சியாளர்: டாக்டர். லஷ்மி பெருமாள் நினைவாற்றல் மற்றும் மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் கோவை.

    செல் 9787334419

    தொடர்புக்கு: தலைவர்: JCI. Sen. G. கோவிந்தசாமி – 98427 96868

    செயலாளர்: Jc. A. திருநாவுக்கரசு – 99429 66554

    PRO Jc. HGF. K. பூபதி – 98651 94904

    உன்னை அறிந்தால்

    கோவை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் பி.என். புதூர் அறிவுத்திருக்கோயில் &  கோவை. சாவித்திரி போட்டோ ஹவுஸ் இணைந்து வழங்கும் 331 – வது சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 17.07.2016; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி

    இடம் : அறிவுத்திருக்கோயில், ஆனந்தா நகர், முல்லை நகர் பஸ் ஸ்டாப், மருதமலை ரோடு, பி.என். புதூர், கோவை  641 041.

    தலைப்பு : “உன்னை அறிந்தால்“

    சிறப்புப் பயிற்சியாளர் :Jc. மணிவண்ணன்,

    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்

    கோவை. செல் 8012025555

    தொடர்புக்கு: தலைவர் திரு. A.G. மாரிமுத்துராஜ் 98422 59335

    செயலாளர்  திரு. E. விஜயகுமார்  94426 10230

    பொருளாளர் திரு. AD. A.  ஆனந்தன்  74026 10108

    PRO விக்டரி விஸ்வநாதன்  97877 44533