Home » Articles » தன்னம்பிக்கை

 
தன்னம்பிக்கை


செந்தில்குமார் V
Author:

கடவுளுக்கு எப்போது அதீதமான பணியைச் செய்ய வேண்டி உள்ளதோ, அப்போது அவர் பொதுவாக ஏதாவது ஒரு மனிதனைத் தேர்ந்தெடுத்து அவனிடம் அளவுக்கதிகமாக தன்னம்பிக்கையை வைத்துவிடுகிறார். ஆதலால், அவன் அந்தப் பணியைச் சமாளித்துவிடுவான் – பிஷப் ஆர்.சி. மிஷேல்

தன்னால் முடியாது என்று நினைப்பவனால் முடியாது. தன்னால் முடியும் என்று நினைப்பவனால் மட்டுமே முடியும் என்பது உண்மை.

உலகச் சரித்திரத்தில் பெரிய விஷயங்களைச் செய்தவர்கள் பொதுவாக மக்கள் அகந்தை என்று கருதுவதை உடையவர்கள்தான். அதாவது இவர்கள் தன் மீது அபாரமான நம்பிக்கை கொண்டிருந்தனர். இதை அகந்தை என்று சொல்வதற்குப் பதிலாக அவர்கள் எடுத்துக்கொண்ட பணியைச் செய்யக்கூடிய திறமையை உணர்ந்து கொண்டதால் உருவான அபரிமிதமான நம்பிக்கை என்றே நாம் கருதுவோம்.

பெருமை வாய்ந்த மனிதர்களுக்குள் இருக்கும் அகந்தை என்று சொல்லப்படுவது அவர்களுக்குள் இருக்கும் தேக்கிவைக்கப்பட்ட விளக்கங்களையும், மற்றவர்கள் பார்க்காத அவர்களது மறைவான சக்திகளையும், திறமைகளையும் அவர்களுக்கு வெளிப்படுத்தும் சுயஅறிவால் அவர்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு தான். இதை மற்றவர்கள் பார்க்க முடியாததால் தன்னம்பிக்கை கொண்டவர்கள் அவர்களுக்கு அகந்தை கொண்டவராகத் தெரிகிறார்கள்.

மாவீரன் நெப்போலியனுக்குத் தன் மீதான பிரம்மாண்டமான நம்பிக்கை தான் அவரது சக மனிதர்களிடையே அவரை அரசனாக்கியது. நெப்போலியன் தனது அதிர்ஷ்டத்தின் மீதும், தனது விதியின் மீதும் வைத்திருந்த நம்பிக்கை தான் அவரது வாழ்க்கைக்கு அளவிட முடியாத சக்தியை அளித்தது.

மேலும் தனது நோக்கத்தை விட்டு அவரை விலக முடியாமலும் செய்தது. அவரது துணிச்சலின் இரகசியமே அவரது தணிக்க முடியாத தன்னம்பிக்கை தான். இதனால் தான் அவரை எதிர்க்கக்கூடிய கொல்லக்கூடிய துப்பாக்கிக் குண்டுகளும், கூர்முனையான வாள்களும் அடக்கி ஒடுக்கப்பட்டன.

தன் மீதான இந்த அபார நம்பிக்கையும், விதிக்கப்பட்டவனாக தன்னை எண்ணிக்கொண்டு தன் சக்தியின் மீதே அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் இல்லாவிடில், வெறும் அறிவாற்றல் மட்டுமே அவரைத் தனது லட்சியத்தை அடையச் செய்திருக்க முடியாது.

சாவைக் கண்டோ, தன்னைக் கொல்லக்கூடியவனை நினைத்தோ அல்லது தனது நோக்கத்தை ஏதாவது தடைசெய்யக் கூடுமோ என்று பயத்திலோ அவர் இருந்திருந்தால் அவருடைய சக்தி மற்றும் திறமை அவரிடம் இருந்து அபகரிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் ‘நெப்போலியன்’ என்கிற தன் மீதான நம்பிக்கையில் அவர் என்றுமே திடமாக இருந்தார். தான் முயற்சித்த விஷயத்தைச் செய்வதற்காகவும், படைகளின் பெருந்தலைவராகவும், உலகளாவிய அரசாட்சி புரிவதற்காக மட்டுமே தான் பிறந்துள்ளோம் என்பதில் எப்போதும் சந்தேகம் கொண்டதே இல்லை. இந்த நம்பிக்கை தான் மற்றவர்களுக்கு சாத்தியமில்லாதவற்றை நெப்போலியனை செய்ய வைத்தது.

தன்னையே நம்பும் ஒரு வலிமையான மனிதனை உங்களால் தோற்கடிக்க முடியாது. அவனைத் தாழ்வடைய செய்யவோ, கேலி செய்யவோ, கீழ் தரமாக அவனைப் பற்றி பேசவோ, எழுதவோ முடியாது. தனது செயலாற்றும் திறமை, தான் எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்த மனிதனை இந்த உலகின் எந்த சக்தியாலும் தோற்கடிக்க முடியாது.

ஏழ்மை அவனை அதைரியப்படுத்தியோ, துரதிர்ஷ்டம் அவனைத் தடுத்து நிறுத்தியோ அல்லது சகிக்க முடியாத துன்பம் அவனை திசை திருப்பியோ அவனது செயல் முறைகளில் இருந்து மயிரிழையளவு கூட அகற்றிவிட முடியாது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2016

வழிகாட்டி…
என் பள்ளி
முழுமையின் முக்கியத்துவம்
நிர்வாக மேலாண்மைக்கு சமயோசித அறிவு அவசியமா…?
உண்மையாய் செயல்படு நன்மையாய் வாழ்ந்திடு
சிகரமே சிம்மாசனம்…
வெற்றி உங்கள் கையில்
பாடம் சொல்லும் பறவைகள்
எப்படி ஜெயித்தார்கள்?
தன்னம்பிக்கை
குவாண்டம் கம்ப்யூட்டர்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்