Home » Articles » சிகரமே சிம்மாசனம்…

 
சிகரமே சிம்மாசனம்…


சொக்கலிங்கம் சிவ
Author:

ஒரு தலைமுறையை தயார் செய்து விட்டோம்

உலகையே உலுக்கத்துடிக்கும்; நாட்டையே பிடிக்கத்துடிக்கும்; வானத்தையே வளைக்கத்துடிக்கும்; இமயத்தையே எட்டத்துடிக்கும்  இனிய பருவம் தானே மாணவப்பருவம்…!

தற்போது நடைபெற்று முடிந்த மாணவப்புரட்சியின் மகிமைகளை மாணவர் உலகத்திற்கு எடுத்துக்காட்டும் இனிய தருணம் இது. வாழ்க்கை அரிய பொக்கிஷங்களை உங்களுக்காக அதே கையிருப்பில் வைத்திருக்கிறது என்பார் ஓரிடத்தில் ராபின் ஷர்மா.

ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்துக்கு ஒரு தகவலாக வருகிறது. அது தவமாக இருக்கிறது. குழந்தைகள் விதைகளாக வருகின்றனர். அவர்களை தானியமாக்குவதே நம் விருப்பம். பெற்றோர்கள் மண்ணாக இருந்தால் குழந்தைகள் முளைக்கிறார்கள்; தேனீயாக இருந்தால் மகரந்த சேர்க்கை நிகழ்த்துகிறார்கள் என்பார் வெ. இறையன்பு.

உழைக்காமல் முயற்சிக்காமல் வெற்றி பெறும் எளிய வழி சொல்லித்தரப்படும் என்று முல்லா அறிவித்தார். ஊரே திரண்டது. முல்லா மெல்லா அங்கிருந்து நகரத் தொடங்கினார். வெற்றிபெறும் வழியைச் சொல்லாமல் எங்கே போகிறாய்…? என்று எல்லோரும் வழிமறித்தார்கள். இந்த ஊரில் எத்தனை முட்டாள்கள் இருக்கிறார்கள் என்று அரசர் கணக்கெடுக்குச் சொன்னார். அந்த வேலை முடிந்து விட்டது. புறப்படுகிறேன். என்றார் முல்லா. இக்கதையில் வரும் அர்த்தங்கள் அணிவகுப்பை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

மனித வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் ஓர் அற்புதம். ஒரு மர்மம் என்ற உண்மையை கடிகாரமும், காலண்டரும் அவனிடமிருந்து மறைத்துவிட மனிதன் அனுமதிக்கக் கூடாது என்பார் பிரிட்டிஷ் நாவலாசிரியர் ஏ.எ. வெல்ஸ்.

‘பள்ளித்தலமனைத்தும் கோவில் செய்குவோம் என்று காற்று மாதிரி வந்து கடந்துவிட்டு போன பாரதி சொல்வான். அண்மையில் ‘2 தேர்வு ஒன்பது லட்சம் பேர் எழுதினார்கள். வாழ்க்கையின் வாசற்கதவை திறந்து வைக்கும் வரவேற்பே தேர்வு. மாணவர்கள் எதிர்காலத்திற்கு தேவையானவற்றை சேமிக்கும் களமும் தலமுமே இத்தேர்வு. இவர்கள் வைக்கும் ஒவ்வொரு அடியும். காலத்தின் கைகளில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வைத்திருக்கும் இடமிது. கல்லை சிலையாக வடிக்கும் சிற்பியாக இங்கே ஆசிரியப் பெருமக்கள்; பாதுகாப்பு கவசாக பெற்றோர்கள் சிலையாக மாணவர்கள் எதிர்காலத்திற்கு தேவையானவற்றை சேமிக்கும் களமும் தலமும் இத்தேர்வு.

பள்ளிக்கூடம் கூடுகட்டி கொலுவிருக்கும் அறிவு திருக்கோவில். திக்கு தெரியாதவர்க்கோ திசைக்காட்டி; வாழ்க்கையை வசமாக்கி கொள்வோர்க்கோ வழிகாட்டி; பொங்கித்ததும்பும் ஆர்ட்டீசியன் மாற்று. அள்ளக்குறையாத அமுதசுரபி. உங்களிடமிருந்து உங்கள் தலைமுறைதுவக்குகிறது, அதன் மூலம் உங்கள் சமூகம் உருவாகிறது. நீங்கள் ஒரு நீண்ட வரலாறு என்பார் மஹாத்ரயாரா வாழும் வரலாறாக மாணவர்கள் இனி பயணப்பட வேண்டும். ஒரு புள்ளி வைத்தாயிற்று. கோலத்தை அழகாக்குவது இனி யார் பொறுப்பு..?

கல்கத்தாவில் உசிதாபாத் என்ற ஊரில் ஒன்பது வயதுச்சிறுவன் அரசுப்பள்ளியில் படித்து வந்தான். வீட்டிற்குத் திரும்பும்போது பனிநதி ஒன்று இவனுக்குள் பயணப்பட்டது  அது குடிசையின் பின்புறம் வட்டப்பாறையில் தன் வயதொத்த படிப்பின் வாசமறியாத, வீட்டு வேலைக்கு சென்று வரும் ஏழைப்பிள்ளைகள் எட்டுபேரை உட்கார வைத்து, காலையிலிருந்து மாலைவரை அன்று தான் பள்ளியில் படித்ததை அப்படியே பாடமாக எடுத்தான். செய்தி ஊர் பரவ 10,20,30 இப்படியாய் மாணவர்கள் ஓராண்டில் ஆயிரம் பேர் சேர்ந்து விட்டார்கள். மாணவர்கள் கூடகூட உடனே தன் வயதையொத்த மாணவர்களிடம், தன்னைப்போல் சேவைச் செய்யத்துடிக்கும் 4 லிருந்து 5 பேரை தயார் செய்து பாடம் நடத்தினான். பள்ளிக்குழந்தைகளோடு ஒரு புள்ளியில் நின்று பாடம் எடுத்தான். வரலாற்று மாற்றத்திற்கு வகுப்பு எடுத்து கொடுத்தான்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2016

வழிகாட்டி…
என் பள்ளி
முழுமையின் முக்கியத்துவம்
நிர்வாக மேலாண்மைக்கு சமயோசித அறிவு அவசியமா…?
உண்மையாய் செயல்படு நன்மையாய் வாழ்ந்திடு
சிகரமே சிம்மாசனம்…
வெற்றி உங்கள் கையில்
பாடம் சொல்லும் பறவைகள்
எப்படி ஜெயித்தார்கள்?
தன்னம்பிக்கை
குவாண்டம் கம்ப்யூட்டர்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்