![]() |
Author: பன்னீர் செல்வம் Jc.S.M
|
மழை வரும்போது வானத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் நனைந்த சிறகுகளுடன் பறப்பது சிரமம் என்பதால் நனையாமலிருக்க அவசரமாக புகலிடம் தேடிச் செல்லும். ஆனால், பருந்து (கழுகு) மழை தரும் மேகத்துக்கு மேலே பறந்து சென்று நனையாமல் தன்னைக்காத்துக்கொள்ளும்
உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. ஏன் இதைச் சொன்னார்கள்…? பல காரணங்கள் இருக்கலாம். நமக்குத் தெரிந்த அல்லது தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டை மட்டுமே பார்ப்போமே…
சாவிகள் இல்லாத பூட்டுக்கள் இல்லை:
பிரச்னைகள் இல்லாத வாழ்க்கையும் இல்லை. அர்ச்சனைகள் இல்லாத கோயிலுமில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் சக்திகேற்ப, அதாவது தாங்கும் சக்திக்கேற்ப பிரச்சனைகளை வைத்திருக்கிறோம்.
தானாக வருவது; பிறரால் வருவது; நாமாக உருவாக்குவது; இயற்கையாக வருவது; என பிரச்னைகள் வரும் பாதைகளை நான்கு எனச் சொல்லாம்.
இப்படி, நாலாபக்கமிருந்தும் பிரச்னைகள் வந்தால் மனுஷன் எப்படி சார் வாழ்வது…?
இது சாதாரண பொது ஜனக்கேள்வி. வாழ்ந்து தானே ஆக வேண்டும். வாழ்க்கையை விட்டு அல்லது இந்த பூமியை விட்டு எங்காவது ஓட முடியுமா…?
FIGHT (or) FLIGHT என்று ஒரு வழி உள்ளது. அது இங்கு செல்லாது; செல்லாது. ஒன்றை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பிரச்னைகளைத் தாங்கும் வலிமையும், அவைகளைத் தீர்க்கும் திறமையும் இருப்பதால்தான், நமக்குப்பிரச்னைகள் வருகின்றன.
வெகு சுலபமாகப் பிரித்து விடலாம். எப்படி பழக்கூடையிலுள்ள பழங்களுள், கெட்டுப்போனவைகளை அப்புறப்படுத்துகிறார்களோ, அப்படி நம்மால் தீர்க்கவே முடியாத பிரச்னைகளைத் தூக்கி எறிய வேண்டும். இதற்கு ஏற்றுக்கொள்ளும் மனம் அவசியம் தேவை.
கூடையிலிருக்கும் நல்ல பழங்கள் கட்டாயம் விற்கப்படும். இதுபோல் மற்ற எல்லாப்பிரச்சனைகளும் தீர்ந்து விடும். எப்படி…? பிரச்னைகளிலிருந்து முதலில் வெளியே வரவேண்டும். சிறிது சிரமம்தான்…
எப்படி வெளிவருவது என்பதைப் பருந்துகளிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். மழை வரும்போது வானத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் அவசரமாகப் புகலிடம் தேடி, நனையாமலிருக்கச் செல்லும். நனைந்த சிறகுகளுடன் பறப்பது சிரமம்.
ஆனால், பருந்து (கழுகு) மழை தரும் மேகத்துக்கு மேலே பறந்து சென்று நனையாமல் தன்னைக்காத்துக்கொள்கிறது.
நாம் பிரச்னைகளிலிருந்து வெளியே வந்து, அதைப்பார்த்தால்தான் தெரியும், எதனால் பிரச்சனை வந்தது…? அதற்கு நான் எந்த வகையில் காரணம்…? பாதிப்பு என்ன…? பிரச்னை தீர எப்படித்திட்டமிட்டுச் செயல்படுவது…? யாருடைய ஆலோசனை தேவை…? இதுபோன்றபலவும் நமக்குத் தோன்றும்.
ஆறாவது அறிவு தயாராக உள்ளது. உள்ளே பிரச்னையை அனுப்பிவிட்டால், வெகு சுலபமாக அது தீர்ந்து விடும். எப்படி அனுப்புவது…? சுலபம்…
அதிகாலை நேரம் கண்விழித்து, முகம் கழுவி, முகம் பார்க்கும் கண்ணாடி முன் அமர்ந்து, முகத்தை நன்றாகப்பார்க்கவும். புன்னகை செய்யவும். 5 முறைமெதுவாக சுவாசிக்கவும். கண்களை உற்றுநோக்கி கீழ்கண்டவற்றைச் சொல்ல வேண்டும்.

July 2016













No comments
Be the first one to leave a comment.