August, 2018 | தன்னம்பிக்கை

Home » 2018 » August

 
 • Categories


 • Archives


  Follow us on

  இலக்கை எட்டு… இமயம் தொட்டு.!

  தடுமாறும் போதெல்லாம்

  ஒரு போதும் தடமாறாதே…!

  தடுக்கி விழுந்தாலும் துடித்து எழுந்திடு…

  துணிவுடன் பயணம் தொடங்கிடு…

  துன்பங்கள் உன்னைத் துரத்தினாலும்

  துயரங்கள் உன்னைப் போட்டு வதைத்தாலும்

  துவளாதே மனம் தளராதே…

  உன் இலக்கு இமயத்தின் உச்சி

  அங்கு செல்ல பாதையும் இல்லை

  பயணத்தில் உன்னுடன் துணையுமில்லை…

  எடுத்து வைக்கும் முதல் அடியே

  உன் கால்கள் முற்புதரில் சிக்கிக் கொள்ளலாம்

  பனிப்புயலிலும் மாட்டிக் கொள்ளலாம்

  நிற்காதே நிதானமும்  கொள்ளாதே…

  இதற்கு என்று புதிய பாதையை உருவாக்கு;

  அதை உனதாக்கு பயணத்திற்கு எளிதாக்கு;

  பின் வருபவர்களுக்கு வழியாக்கு…

  எட்டும் தொலைவை எட்ட

  நாட்கள் பல ஆகலாம்

  தூக்கங்களும் தொலையலாம்….

  களைப்பில் கால்கள் இடறி விழுந்தாலும்

  முன்நோக்கியே விழுங்கள்…

  உங்கள் வெற்றியை கைத்தட்டி ரசிக்க

  இங்கு ஆயிரம் கைகள் காத்திருக்கிறது..

  உங்கள் பெயரைப் பதிக்க வரலாற்றுப்

  பக்கத்தில் வெள்ளைத் தாள்

  ஒன்று விடப்பட்டிருக்கிறது…

  உனது பயணம் வெற்றுப் பயணம்

  அல்ல வெற்றிப்பயணம்.

  ஈர்ப்பும்.. ஈடுபாடும்

  இது தான் பிரபஞ்சம் நமக்கு செய்யும் உதவி எனலாம். வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதோ ஈர்க்கப்படும் எண்ண அலைகளே காரணம் என்பதை உணர வேண்டும்.

  ஒரு சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் சம்பளப் பிரச்சனையோ வேலை பளுவோ இருந்தாலும் பழகிய அந்த இடத்தை விட்டு வர மறுப்பார்கள். அப்படியே விலகி செல்ல நேர்ந்தாலும் இனிமேல் புதிய இடத்தில் போய் பழகி சகஜமாவது என்பது கஷ்டம் என்ற சப்பும், தயக்கமும், பயமும் வந்துவிடும்.

  முடிவில் நல்லதோ,கெட்டதோ இங்கேயே இருக்கலாம் என்றஎதிர்மறையாக தீர்மானித்து விடுவதால் நேர் மறையாக சிந்திக்க முடியாமல். நல்ல வாய்ப்புகளையும், வாழ்க்கை திருப்பு முனைகளையும் இழக்கிறோம். அதனால் பிரபஞ்சம் நம்மிடம் எதை கொடுக்க விரும்புகிறதோ, அது தான் நமக்குள்ளும் விருப்பமாக வருகிறது. ஈர்ப்பு ஏற்படுகிறது.

  அதை கொடுக்க விரும்பும் பிரபஞ்சத்திற்கு எதிராக எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுத்தால்.இந்த உலகம் நமக்கு எதிரியாகத்தான் தெரியும். கம்பியூட்டரோ, செல்போனோ அடிக்கடி நின்று விடுகிறதென்றால் சொல்லப்படும் முதல் காரணம் தேவையில்லாத பதிவுகள் அதிகமாக இருப்பதால் தான் என்று சொல்கிறோம். அதையெல்லாம் குப்பையாய் அழித்துவிட்டால் தடைபடும் நிகழ்வுகளை விரைவாக,எளிதாக பார்க்க முடிகிறது அல்லவா?

  அதுபோல் தான் நமக்குள் காமம், கவலை, சந்தோஷம் என்று எதுவானாலும் அதையெல் லாம் தூக்கி எறிந்துவிட்டால் கம்பியூட்டரைப் போல மனக்குப்பைகள் நீங்கி தெளிவாகி விடும். அதனால் தேவையற்ற விஷயங்களை தூக்கி எறியே வேண்டும். எப்படி தூக்கி எறிவது? நம்மால் கோபித்துக் கொள்ள முடியாதவர்கள் மீது எதிர்பாராதவிதமாக கோபம் வந்தால் நாம் என்ன செய்கிறோம்? வந்த அந்த கோபத்தை துச்சமாக தூக்கி எறிந்து விடுகிறோமல்லவா?அது போல அகங்கார குப்பைகள் குறைய குறைய தேவையானவை மட்டும் மனதில் இருக்கும். பிறகு நமக்குள் ஈர்ப்பு எண்ணம் வந்தால் தேவையான வற்றிருந்து மட்டும் நேர்மறை எண்ணங்கள் செயல்களாக மாறும். அதன்; பின் நாம் என்னவாக விரும்புகிறோமோ அந்த “எண்ணப்படி வாழ்வு” எதிரில் கை நீட்டி வரவேற்கும். நினைத்தாலும் கெட்டது நினைத்தாலும், அதை நிச்சியம் அனுபவித்தாக வேண்டும், என்பது நியதி.

  அப்படியிருக்க.. வருகின்ற எண்ணத்திற் கெல்லாம் வமை சேர்த்தால் வாழ்க்கை வமை இழந்து விடும். இதுவரை எதை பதிய வைத்திருக்கிறீர்களோ.. அதுவே இன்றைய நம் வாழ்க்கை அனுபவமாகிவிடும். அதனால் எண்ண அணுக்கள் பதிவதை மனதில் கொண்டு நல்லதை மட்டுமே நினைக்க வேண்டும். கவனமாக விழிப்புணர்ச்சியுடன் எண்ணங்களை நினைக்க வேண்டும்.

  ‘லைப்’ எப்படி போய்கிட்டிருக்கு.?”-என்று கேட்டதும் நாம் சொல்லும் உடன் பதில்,

  “கஷ்டந்தான் என்னை மாதிரி கஷ்டப்படரவங்க உலகத்திலே..யாருமில்லே”

  “எனக்கு வந்த வாழ்க்கை மாதிரி, யாருக்கும் அமையக்கூடாது.”

  “என் நிலைமை எதிராளிக்கும் வரவே கூடாது, ரொம்ப கொடுமையாக இருக்கு”

  ..என்றுதான், மற்றவர்களுக்கு நம் வாழ்க்கையை அறிமுகப்படுத்தி வருகிறோம்.

  நம் ஆழ்மனத்தின் தகவல்களால் நம் வாழ்க்கை எப்படி போற்றப்படுகிறதோ? அல்லது தூற்றப்படுகிறதோ? அப்படியே வாழ்க்கை சம்பவங்கள் அமையும்.

  நம் உடல் உள்ள செல்கள் சிதைந்து, வளர்ந்து புதுப்பிக்கப்படுவது இயற்கை. ஆனால், ஒரே நோயில் கட்டுண்டு உடல் இருக்க காரணமே, நம் ஆழ் மனதில் அந்த நோய் பற்றிய எண்ணம், பயம், கண்ணோட்டம் மாறாமல், ஆழ்மனதில் பதிவானதுதான். இந்த மன கண்ணோட்டம் மாறும் வரை, அந்த நோய் தொடரும்.

  அதே போல், ஏழைகள் ஏழைகளாகவே பிறப்பதில்லை.இருக்கவேண்டிய அவசியமுமில்லை. “நான் ஒரு ஏழை” என்றபதிவும், “நான் பணக்காரன”; என்ற எண்ணப்பதிவு தான், அவர்களை அதே இடத்தில் வைத்திருக்கின்றது.

  இந்த இதழை மேலும்

  சக்தியும் நீள் ஆயுளும்

  நாம் வாழும் சுற்றுச்சூழலும், நாம் உண்ணும் உணவும் முன்பைவிட மிக அதிகமாக மாசுபட்டு இருக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்றிலும் உணவிலும் இருக்கும் எதிர் வேதிவினைகள் (Free radicles) நம் உடல் செல்லணுக்களைச் சேதப்படுத்தி நம் ஆயுளைக் குறைக்கவே செய்யும். இவ்வித எதிர் வேதி வினை புரியும் மூலக்கூறுகளை நம் திணிவு பெற்ற உயிர்ச் சக்தியின் ஆற்றல் மூலம் தணிக்கச் செய்ய முடியும். ஆக, நமக்குத் திணிவான உயிர்ச் சக்தியிருந்தால்தான் மாசுகளிருந்து நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவும், நம்மைக் கெடுக்கும் மாசுகளை செயலாற்றி நீக்கவும் முடியும். இன்றைக்கு இருக்கும் மாசு சூழலை அப்படியே ஏற்றுக்கொண்டு வீழ்வதைவிட வாழ்வது எப்படி என்று பார்ப்பது சிறந்தது தானே? ஆகவே, நம் உயிர்ச் சக்தியை அதிகரிக்கும் நுட்பங்களை இனிப் பார்ப்போம்.

  முடியும். இன்றைக்கு இருக்கும் மாசு சூழலை அப்படியே ஏற்றுக்கொண்டு வீழ்வதைவிட வாழ்வது எப்படி என்று பார்ப்பது சிறந்தது தானே? ஆகவே, நம் உயிர்ச் சக்தியை அதிகரிக்கும் நுட்பங்களை இனிப் பார்ப்போம்.

  1. இயற்கை உணவுகள்: நஞ்சு கலக்காத இயற்கை வேளாண்மை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுகளை கொஞ்சம் விலையதிகமானாலும் வாங்கிச் சாப்பிடுவதன் மூலம் பின்னாளில் நோய்க்காக மிக அதிகப் பணத்தை இழக்க வேண்டாம். பழச்சாறுகள், மூகைச் சாறுகள் பஸ்பங்கள் முதயன நம் உயிர்ச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். நுனா பழங்களி-ருந்து தயாரிக்கப்படும் நோனி பானம் நம் உயிர்ச் சக்தியை அதிகரிக்கிறது. இயற்கையாக தயாரிக்கப்படும் சக்தி பானங்களும் நம் உயிர்ச் சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
  2. கற்றாழைக் கழுவல்: சோற்றுக் கற்றாழைச் சாற்றைக் கொண்டு நாம் சமைக்கும் காய்கறி மற்றும் உணவுப் பொருட்களைக் கழுவிய பின்னர் சமைப்பதன் மூலம் நாம் இரசாயனங்களை ஓரளவிற்கு நீக்க முடியும். இதனாலும் நம் உயிர்ச் சக்தி விரையமாவதைத் தடுக்க முடியும்.
  3. ஹோமியோபதி மருத்துவம் : ஹோமியோபதியில் ஜின்சங் (Ginseng) என்றமருந்து உடல் மற்றும் விந்து நாதத்தை வளமாக்கும். அதேபோல், சைனராரியா மரிட்டிமா (Cineraria maritima) கண்களையும், முலன் ஆயில் (Mulen oil) காதுகளையும் வளமாக்கும் ஹோமியோ மருந்துகளாகும். அதே போல் புண்கள் விரைவாக ஆறகாலண்டுலா (Calendula) ஹோமியோ மருந்து உதவும். நம் உடன் விஷக் கழிவுகள் நீங்கி ஆயுள் நீள ரஸ் டாக்ஸ் (Rus tox), நக்ஸ் வோமிக்கா (Nux vomica), நேட்ரம் முர் (Natrum mur), காந்தாரிஸ் (Cantharis) மற்றும் ஏபிஸ் மெல் (Apis mel) ஆகியன பயனுள்ளவையாக இருக்கும்.

   இந்த இதழை மேலும்

  இங்கு… இவர்… இப்படி… தன்னம்பிக்கைத் தமிழர்

  முனைவர் இரா. விஸ்வநாதன்,

  தமிழ்ப் பேராசிரியர், சிக்கய்ய நாயக்கர் கல்லூரி,

  ஈரோடு.

  வானம் இருண்டுவிடுகிறபோது

  நட்சத்திரங்கள் வெளிவருகின்றன

  என்பதற்கிணங்க, ஏழ்மைச் சூழல்

  ஏற்படுகிறபோது வாழ்க்கைச்  சூழலை

  உயர்த்திக் கொள்ள மனம் தேடலை

  தேடுகிறது. இயற்கைப் பேராற்றல்

  மிக எளிமையான வடிவில் மனிதர்களைப்

  படைத்தும், அவர்களிடம் மறைந்திருக்கும்

  திறனை வெளிக்கொண்டு வர

  அவர்களுக்குத் தேடலைத் தருகிறது.

  இவ்வகையில் கன்னித்தமிழ் கற்பதை எண்ணித் துணிந்து தேர்ந்து, தமிழால் தான் வளர்ந்து, தன் வழி தமிழும் வளரும் வண்ணம் ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுத்து தன்னம்பிக்கையாலும், தளராத உழைப்பாலும் எண்ணியது எண்ணியாங்கு எய்திய திண்ணியராய் திகழும் முனைவர் இரா. விஸ்வாநாதன் அவர்கள் மாணவ, மாணவியர் சமுதாயத்திற்குத் தவமின்றிக் கிடைத்த வரம்.

  செந்தாமரை சில நேரம் சேற்றிலும் முளைப்பதுண்டு. ஆம்! நம்முடைய தன்னம்பிக்கைத் தமிழரான திரு. விஸ்வநாதன் தோன்றியது, மிதிவண்டி செல்ல முடியாத, முள்வேலிகளும், புதர் மண்டிய காடுகளும் நிறைந்த கோபிசெட்டிபாளையம் வட்டம், K. மேட்டுப்பாளையம் அருகில் உள்ள சந்திராபுரம் என்ற குக்கிராமத்தில் பொருளாதாரப் பின்புலமோ, கல்வி எனும் வெளிச்சமோ இல்லா ஒரு பனைத் தொழில் புரியும் ஏழைக் குடும்பத்தின் குடிசை வீட்டில்.

  14.02.1978 அன்று திரு. பொன்.இராமசாமி, திருமதி. பூவாயாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தார் விஸ்வநாதன். உடன் பிறந்தவர் இரா. ஆனந்தகுமார் என்ற தம்பி. விஸ்வநாதன் தன் மூன்றாம் வயதில் ஒரு திண்ணைப்பள்ளியிலும் , ஐந்தாம் வயதில் சந்திராபுரத்தில் உள்ள தொடக்கப்பள்ளியிலும் தம் அறிவொளிப் பயணத்தைத் தொடங்கினார். இச்சமயத்தில் அண்ணல் அம்பேத்கருக்கு வாய்த்தது போன்று இவருக்கு சுப்பிரமணியம் எனும் அன்பும் பண்பும் நிறைந்த தலைமையாசிரியர் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து உற்சாகப்படுத்தி வந்துள்ளார்.

  உயர்நிலைக் கல்வியை பாண்டியம்பாளையம் கிராமத்தில் இவர் கற்றபோது பல மைல்கள் நடந்தே  செல்ல  வேண்டுமென்ற நிலைமையிலும் காடுகள், வரப்புகள் வழியாகக் கடினமான பாதையில் நடந்தே சென்று பயின்றார். இடையில் மூன்று ஓடைகளைக் கடந்து செல்ல வேண்டிய நிர்பந்தம். மழை பெய்து ஓடையில் வெள்ளம் ஏற்பட்டால்  குடியிருப்புகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய  அவலநிலை. பள்ளி நேரம் போக  குடும்பத் தொழிலான பனைத் தொழிலில் பெற்றோருக்கு உதவியாகவும், மேலும் ஆடு மேய்த்தும் வந்துள்ளார் இவர்.

  இவ்வளவு இடையூறுகளையும் இவரை வெல்ல  செய்தது, கற்கண்டு கல்வியைத் தமிழ்ச் சொற்கொண்டு பயின்று தம் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற தேடல்தான். தேடலினால் கிடைத்த பயனை தம்மைப் போன்று வேதனையில் உழல்பவர்களும் அனுபவிக்க வேண்டும் என்று நித்தமும் அவர்களுக்கு வழிகாட்டி உதவி வருபவர் இவர்.

  தமிழ்தாயால் அரவணைக்கப்பட்ட இவர் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்று பிறகு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில்  முதுகலைத் தமிழ் இலக்கியம் கற்றவர். பின் கோவை அரசு கலைக்கல்லூரியில் M.Phil பட்டம் பெற்றார். தன்  அறிவுத் தேடலின் தொடர் ஓட்டத்தில் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கோபி வட்டார நாட்டார் தெய்வ வரலாறும் வழிபாடும்” என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

  கற்றதும் பெற்றதும் மற்றவர்களுக்கு உற்றதோர் பணி செய்திடத்தானே என்பதற்கேற்ப அறப்பணியாம் ஆசிரியப் பணியை  இன்பப் பணியாய் ஏற்றார் இவர். 1999 ஆம் ஆண்டு தம் ஆசிரியப் பணியைத் தொடங்கிய இவர் மூன்று மாதங்கள் ஈரோடு மாவட்டம் திங்களூர் அரசு மேனிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக நியமன ஆசிரியராகப் பணியாற்றினார்.

  இந்த இதழை மேலும்

  மனநிலை மாறிய மனிதர்களால் மக்கிப்போன விவசாயம்

  இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் தான் என்கிறார் கந்தியடிகள். ஆனால் இன்றோ மனிதர்களின் மனநிலை மாறியதால் விவசாயம் மக்கிப் போனது.

  ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதன் பசிக்காக விவசாயத்தைக் கண்டுபிடித்தான். ஆனால் இக்காலத்தில் உள்ள மனிதனோ அதனை பணத்திற்காக அழித்து வருகிறான். பன்னாட்டு தொழிற்சாலைகளின் வரவு மற்றும் ரியல்  எஸ்டேட் போன்ற வணிக வளர்ச்சியின் போக்கால் வளமான விவசாய நிலங்கள் வியபார நிலங்களாக மாறி வருகிறது.

  கிராமங்களில் ஒரு சில ஏக்கர் விலைநிலத்தை மட்டும் வைத்திருப்பவர்கள் கூட கல்லூரி, தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட்  உரிமையாளர்களிடம் தங்கள் நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் 15 லட்சம் ஏக்கர் விலை நிலங்கள் தற்போழுது கான்கிரீட் கட்டடங்களாக உருமாறியுள்ளன.

  பெருங்குடி விவசாயிகள் கூட தற்போது, உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் முதலீடு செய்கின்றனர். அது கொண்டு தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள முற்படுகின்றனர்.

  தற்போது தமிழ்நாட்டின் கலாச்சாரம் பண்பாடு நாகரீகம் போன்றவை மாறத் தொடங்கிவிட்டது.ஒவ்வொருவரும் வசதியான சொகுசான வாழ்க்கையை வாழவே ஆசைப்படுகிறார்கள். பணம் சம்பாதிப்பது, பெரிய வீடு கட்டுவது, வாகனங்கள் வாங்குவது என ஆடம்பரமான வாழ்க்கை பற்றிய கனவு மக்களிடையே வளர்ந்துவிட்டது.  பிள்ளைகளையும் தங்களின் கனவு வழியே வளர்க்கிறார்கள்.  அவனும் படித்து முடித்ததும் தொழிற்துறைகளைத் தேடி ஓடி தன்னை வளப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

  உலகமயமாக்கல்  அமுல் படுத்தப்பட்டதற்கு பிந்தைய காலங்களில் தான்  விவசாயிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்தது. இந்த 22 வருட காலக்கட்டத்தில் நாளொன்றிக்கு சுமார் 2,035 விவசாயிகள் காணாமல் போயிள்ளனர் என்பது தான் அரசின் அறிக்கையாக உள்ளது. இன்றைய நிலையில், நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு மணி நேரத்திலும் சுமார் 85 இந்தியர்கள் விவசாயத்திருந்து விலகிச் சென்றவண்ணம் உள்ளனர்.

  வெறும் வியாபாரம் ஆகிப்போன கல்வியால் பட்டம் பெறும் இளைஞர்கள் பொருளாதார வாழ்வோடு போட்டியிடுகையில் சமூகம் பற்றின அக்கரை கொள்ள அவர்களுக்கு அவசியம் இல்லை. நல்வாழ்க்கை என்பது புரியாமலேயே ஓடிக்கொண்டிருக்கின்றனர். அண்மைகாலங்களில் படித்த இளைஞர்கள் விவசாயம் செய்வது  என்பது கௌரவ குறைச்சல், படிப்பில் இயலாமை என்பன போன்ற மாயத்  தோற்றங்களை சமூகம் உருவாக்கியுள்ளது.  அனைவருக்கும் கல்வி என  அரசாங்கம் சொல்கிறது.  கல்வியறிவு கொண்டவன் விவசாயம் செய்தால் இழிவு உன சமூகம் உரைக்கிறது.  கல்வியறிவற்ற இளைஞர்கள் இல்லாத விவசாயம் எப்படி வளர்ச்சியடைய முடியும்.

  இந்த இதழை மேலும்

  சிந்திக்க வைக்கும் சீனா….

  சுற்றுலா என்றாலே  மகிழ்ச்சி தான். அதிலும் வெளிநாடுச் சுற்றுலா, குறைந்த கட்டணத்தில், நம்மூர் உணவுகளுடன் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி தான்.

  என் ஈரோட்டு நண்பர் பாலாஜி தன் மகளுடன் பல ஆண்டுகளுக்கு முன்பே வியாபாரத்துக்கு சில பொருட்கள் வாங்குவதற்காக சீனா சென்று வந்த பின், தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். மொழி, உணவு இரண்டும் சிரமம் எனத் தெரிந்து கொண்டேன்.

  சீனா, பாகிஸ்தான் என்ற இரண்டு அண்டை நாடுகள் மீதும் உள்ளத்தில் பிடிப்பு இல்லை எனக்கு. காரணம் அவர்களது பகை உணர்வும், பன்முகத்தாக்குதலுமாயிருக்கலாம். எனவே, சீனா சுற்றுலா செல்வதில்லை என்றிருந்தேன்.

  சனவரி 2018 ல் என் பள்ளித் தோழன் சி. எல். தான் சீனா செல்வதாயும் சலுகைக் கட்டணமாக ரூ 90000- 8 நாட்கள் 3 நகரங்கள் என்று தகவல் தெரிவித்தார்.

  வழக்கமாக வாழ்க்கைத் துணையுடன் தான் செல்வேன். இம்முறை அவர் முதுகுத்தண்டு வலியால் வரவில்லை. எனவே நான் மட்டும் செல்ல முடிவு செய்தேன்.

  சுற்றுலா ஏற்பாடு செய்த ஸ்ரீ டிராவல்ஸ் சென்னை நிறுவனம் இங்கிருந்தே சமையல் ஆட்களை, சீனாவுக்கு நம் மளிகைக் சாமான்களுடன் அழைத்துச் சென்று, நம்மூர் உணவு தயாரித்து வழங்குவது சிறப்பு அம்சம்.

  உடனே முன்பணம் செலுத்தி பதிவு செய்தேன். ஏப்ரல் 2018 ல் 8 நாட்கள் பயணத்திட்டம் அனுப்பினர். சென்னையிலிருந்து கொழும்பு வழியாக பீஜிங் சென்று, ஷாங்காயிலிருந்து கொழும்பு வழியாகச் சென்னை திரும்புதல் தான் பயணத்திட்டம்.

  நாட்கள் நெருங்கின. விசா பிரச்னை என்பதால் கொழும்புக்குப் பதில்  மலேசியா கோலாலம்பூர் வழியாக முதலில் ஷாங்காய் சென்று, ஷியான் வழி பீஜிங் சென்று அங்கிருந்து கோலாலம்பூர் வழியாக சென்னை திரும்புதல் என மாற்றியமைத்தனர்.

  சீனா என்றவுடனே நினைவுக்கு வருவது உலக அதிசயங்களுள் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் தான். அடுத்து மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலும், மணிக்கு 430 கி.மீ வேகத்தில் செல்லும் மேக்னெட் ரயிலும்.

  அவர்களது உணவு நமக்கு ஒத்து வராது ; எங்கும் சீன மொழி தான். ஆங்கிலப் பெயர் பலகைகள் அரிதாகவே கண்ணில் பட்டன. கோவை அவிநாசி ரோட்டில் ஒருநாள் இரவு 8 மணிக்கு பஸ்ஸில் சென்றேன். ஹோப்ஸ் பகுதியிலிருந்து பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி வரை ரோட்டின் இருபுறமும் ஒளிர்ந்த ஆங்கிலப் பெயர்ப் பலகைகள், விளம்பரங்கள் அமெரிக்காவின் நியூயார்க் போலத் தோன்றியன.

  உலகில் பரப்பளவில் 3 வது பெரிய நாடு; ஆசியாவில் 2 வது பெரிய நாடு சீனா. மக்கள் தொகையில் உலகிலேயே மிக அதிகமான மக்கள் வசிக்கும் நாடு சீனா தான். இன்று (2018ல்) மக்கள் தொகை சுமார் 142 கோடிப் பேர்.

  இந்தியா 2 ம் இடத்தில் உள்ளது விரைவில், அதாவது 30 ஆண்டுகளுக்குள்  சீனாவின் மக்கள் தொகை 136 கோடிக்கு குறைந்து விடும் என்று கூறுகின்றனர்.

  இந்த இதழை மேலும்

  இளம்பருவத்தினரை வளர்க்கும் முறை (Parenting of Adolescents)

  நடுத்தர வயதினருக்குக் குழந்தை வளர்ப்பு மிக முக்கியமான மற்றும் சவாலான பணியாகும். இந்திய வரலாற்றில் குழந்தை வளர்ப்பு முறைநீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்திய வரலாற்றின் பொற்காலத்தில் இருந்து புராணங்கள் மற்றும் தத்துவ ஞானிகள் சிறந்த தனிப்பட்ட மற்றும் சமூக விளைவை உண்டாக்கு வதற்கான குழந்தை வளர்ப்பு மற்றும் கையாளும் வழிமுறைகளைக் கொடுத்துள்ளனர். பழம்பெரும் காவியங்களான, இராமாயணம் மற்றும் மகாபாரதத்திலும் குடும்ப பிரச்சனைகள், பெற்றோரின் புறக்கணிப்பு, அதிக கீழ்ப்படிதல், இளம் பருவ கலகங்கள் போன்றஉதாரணங்கள் இடம்பெற்றுள்ளன.

  ஒரு குழந்தை இளைஞனாக மாறும் போது பெற்றோரின் மனப்பாங்கில் ஏற்படும் மாற்றங்கள் ஆரோக்கியமான சூழ்நிலைகள் மற்றும் பேரழிவின் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கௌடல்யாவின் ‘சாணக்கியா நீதி’யின் மேற்கோள்களில் கூறப்பட்டுள்ளன.

  சாணக்கியா கூறுவதாவது, ஒரு உண்மையான மகன் தனது தந்தைக்குக் கீழ்ப்படிதல் வேண்டும். ஒரு உண்மையான தந்தை தனது மகனைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அதேபோல் உண்மையான நண்பன் நம்பகமாக இருக்க வேண்டும் மற்றும் உண்மையான மனைவி கணவனை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். அனைத்துப் புராண மற்றும் வரலாற்றுக் கோட்பாடுகள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தாத போதிலும், குடும்பத்தினர் இயக்கவியன் அடிப்படைத் தாக்கத்தை ஏற்படுத்தும் பல்வேறு அக மற்றும் புறக்காரணிகள் குழந்தை வளர்ப்பில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

  குழந்தை வளர்ப்பு முறை என்றால் என்ன ?

  குழந்தை வளர்ப்பிற்கு எந்த சூத்திரமும், முறையும் இல்லை. நாம் அன்பின் மூலம் அன்பாக இருக்கக் கற்றுக்கொள்கிறோம்.

  குழந்தை வளர்ப்பு முறையின் வரையரையானது குழந்தையை வளர்க்கும் கலையாகும். இது இருவழி முறையாகும். இதில் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் தங்களின் தவறுகளின் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். இந்த கலையானது கற்றுக்கொள்வதினாலேயே வரும். பெற்றோரின் நடத்தைகள் எவ்வாறு இந்த செயல்முறையைப் பிரதிபக்கிறதோ அதுவே குழந்தை வளர்ப்புப் பாணி எனப்படும்.

  நம் பெற்றோர்களே இதில் பல முறைகளை நமக்குக் கற்றுத்தந்துள்ளனர். பாரம்பரிய முறையானது குழந்தைகளை ஒழுக்கப்படுத்தும் வழிமுறைகளில் வெளிப்படுகிறது. ஆகையால் நாம் சில குடும்பங்களில் திட்டுதல் மற்றும் அடித்தல் ஆகியவற்றைப் பார்க்கிறோம். மற்றவர்கள் வார்த்தை மற்றும் வார்த்தை அல்லாத பல முறைகளைச் சிறந்த முடிவிற்காக உபயோகிக்கின்றனர். புறக்காரணிகளான பெற்றோரின் கல்வித்தகுதி சமூக கலாச்சார காரணங்கள், பொருளாதாரக் காரணிகள். குடும்பத்திற்கு வரும் விருந்தினர்கள், குடும்பத்தின் அளவு,  தாயின் வேலை (சம்பாதிக்கிறவர், குடும்பத் தலைவி) குடும்பத்தில் தாயின் நிலை குடும்பத்தில் மகிழ்ச்சி அனுபவிக்கும் முறை, தாத்தா பாட்டியின் குறுக்கீடுகள் முதலானவைகள் குழந்தை வளர்ப்பிற்கு முக்கிய பங்குவகிக்கின்றன.

  குழந்தை வளர்ப்பில் மேற்கொண்டு இயற்கைக் குள்ளாக செல்லாமல் இயற்கையான உள்ளுணர்வுகள், விருப்பங்கள் குழந்தை வளர்ப்பின் முறைகள் அறிவியல் ரீதியாக மேம்படுத்தப்படுவதன் மூலம் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் முழுநிறைவான பயனடைகிறார்கள் என்று சொல்லலாம்.

  இந்த இதழை மேலும்

  செல்போன் வரமா? சாபமா?

  இது இன்டர்நெட் யுகம்,  அறிவியல் கண்டுபிடிப்புகளினால், புதுமையான கருவிகளினால் உலகம் சுருக்கப்பட்டு விட்டது.  ஒரு புறம் விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி, மறுபுறம் அதற்கேற்ப அதனால் உண்டாகும் தீமைகளின் பெருக்கம் இணையாக வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

  சிலர் புதுமையை விரும்புகிறார்கள், அதனால் உண்டாகும் பலன்களை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள், மாற்றம் ஒன்றுதான் மாறாதது. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் காலம் என்னும் காற்றில் காணாமல் போய்விடுவார்கள் என்பது அவர்கள் வாதம்.

  சிலர் பழமையை விட விரும்புவதில்லை, பழமையைப் பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயம் என்றாலும், பழமையின் பலன்கள் நலத்தைத் தந்தன, நன்மையைப் பெருக்கின, உறவை வளர்த்தன, வாழ்வை நீட்டின, ஆதலின் உயிர்கள் தழைத்தன என்று வாதிடுகிறார்கள்.

  இன்னொரு வாதத்தையும் அவர்கள் முன்மொழிகிறார்கள், புதுமையின் போர்வையில் பூதங்கள் உயிர்த்தன, நிலம்  பாழாகியது, நீர் விஷமாகியது, காற்று மாசுபட்டது, நெருப்பு நச்சுப்புகையானது. இதனால் ஆகாயப் போர்வை (ஓசோன்) ஓட்டையாகிறது. உலகு வெப்பமயமானது, உண்ணும் உணவும் நஞ்சாகியது, உயிரும் நஞ்சாகியது.   விதையும் நஞ்சாகியது, இனிப்பும் நஞ்சாகியது, புதிய வார்ப்புக்கள் சமுதாயத்தை நஞ்சாக்கியது. எங்கும் எதிலும் எல்லாமும் நஞ்சாகி தாய்ப்பாலும் நஞ்சாகும், உயிரியல் கொடுமை புதுமையின் அதிசயமாகிறது. அழிவின் ரகசியமும் அதாகவே ஆகியது. ஆதலின் பழமையை பின்பற்றுவோம், பாதுகாப்போம்  என்பது இவர்களின் வாதம், இன்றைய கண்டுபிடிப்புகளினால் பல நன்மைகள் நடந்தேறின, தீமைகளும் கலந்து வந்தன.

  செல்போன் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அதனால் பல நன்மைகள் உண்டு. தீமைகளும் உண்டு, செல்போனினுடைய நன்மைகள் 1. தொலைத்தொடர்பு வசதிகளை அதிகப்படுத்தியது. 2. இன்டாநேட், இமெயில், டாக்குமெண்ட் எடிட்டிங், கால்குலேட்டார் போன்ற பல வசதியான இணைப்புகள் அதில் உள்ளன. 3. கையடக்கமானது. 4. ஆடம்பரமானது, 5. கம்ப்யூட்டர் விளையாட்டுகள் அடங்கியது. 6. நமது அன்றாட புரோக்கிராம்களை பட்டியலிடப் பயன்படுகிறது, 7. உடனடியாக மற்றவர்களோடு தொடர்பு கொள்ள ஏதுவாகிறது. 8. ஆபத்திற்கு உதவுகிறது, 9. செய்திகளை அதிகமாகத் தருகிறது, 10. போட்டோ எடுக்க உதவுகிறது, 11. டார்ச் லைட்டாகப் பயன்படுகிறது, 12. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை அறிய முடிகிறது, 13. பேச்சுக்களைப் பதிவு செய்யப் பயன்படுகிறது, 14. வீடியோ எடுக்கப்பயன்படுகிறது, 15. நியூஸ் பேப்பர், புத்தகங்கள், சினிமா, வானிலை அறிக்கை, நாட்களின் பஞ்சாங்கக்குறிப்பு, மேப், வாட்ஸ்அப், யூடியூப், கூகுள் போன்ற எண்ணற்ற நன்மைகளும், நினைத்துப் பார்க்க முடியாத வசதிகளும் கொட்டிக் கிடக்கின்றன.

  செல்போனினுடைய தீமைகள் 1. தனிமை களவாடப்படுகிறது, 2. விலை உயர்வானது, 3. நம்பகத்தன்மை அற்றது, 4. அடிக்கடி கவனச்சிதைவை உண்டாக்குகிறது, 5. நேர்முகத் தொடர்பை பாழாக்குகிறது, 6. உடல் நோய்களை உண்டாக்குகிறது, 7. கண்பார்வை குறைவுபடுகின்னறது, 8. காது பிரச்சனைகளை உண்டாக்குகிறது. 9. ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு அடித்தளம் அமைக்கிறது, 10. பார்க்கக் கூடாத ஆபாசக் காட்சிகளையும், அந்தரங்கங்களையும் வெளிப்படுத்துகிறது 11. சிறுவர்கள் மைதானத்தில் விளையாடும் பழக்கத்தை அடியோடு ஒழிக்கிறது, 12. ஒரு வித போதையை தருகிறது, 13. குடும்பச் சீரழிவிற்குக் காரணமாகிறது, 14. முகநூல் நட்பிற்கு அடித்தளமிட்டு ஆபத்தை விளைவிக்கிறது, 15. உயிரிழப்புகளுக்கு காரணமாகிறது, 16. சட்டைப் பாக்கெட்டில் வைத்தால் இதயம் பாதிக்கிறது, 17. பேண்ட் பாக்கெட்டில் வைத்தால் சிறுநீரகப் பாதிப்பையும், மலட்டுத் தன்மையையும் உருவாக்குகிறது, 18. செல்போன் இல்லாமல் போனால் ஏமாற்றம் அதிகமாகிறது, 19, ஒவ்வொருவருக்கும் மன அழுத்தத்தை உருவாக்கி தனிமைப்படுத்துகிறது, 20, பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. 21. இளையோர்களை கெடுத்து சமுதாய சீரழிவிற்குக் காரணமாகிறது, 22. இரவு நேரங்களில் தூக்கத்தைக் கெடுக்கிறது, 23. கைவிரல்களில் பாதிப்பை உண்டாக்குகிறது, 24. வாசிப்புப் பழக்கத்தை குறைவுபடுத்துகிறது, 25.புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது, 26. சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்துகிறது, 27. வண்டி ஓட்டுநர்களுக்கு கவனச்சிதறல்கள் உண்டாகிறது, 28. பள்ளிகளிலே கல்வி போதனையைப் பாதிக்கிறது, 29. மின்னலின் போது செல்போனை உபயோகித்தால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

  இந்த இதழை மேலும்

  தமிழா உனக்காக எல்லாம் உனக்காக

  அவனுக்கு அவனது சிந்தனையில் நம்பிக்கை இருக்கும்.

  எந்த சிந்தனையானாலும் அது முதலில் உன்னால் நம்பப்பட வேண்டும்.

  அப்பொழுது தான் அது சாதனையாகும் வெற்றியாக மாறும் .

  என் உயிர்த்தமிழா தமிழ் என்றால் என்ன?

  தமிழன் என்றால் யார்?

  தமிழ் மொழியால் முடியாதது எதுவும் உலகில் இல்லை.

  தமிழனால் முடியாததும் இந்த யுகத்தினிலெதுவுமில்லை.

  மனிதன் என்பதைவிட தமிழன் என்பதை நினைத்துப் பெருமை கொள்.

  உலகப் புகழ் பெற்றவன் தமிழன்.

  தமிழ் என்பது உலகப் புகழ் பெற்றது.

  தலை சிறந்த மொழி நம் தமிழ்மொழி.

  மிகவும் இனிமையான, சுவையான, சுத்தமான, பழமையான என்றும் இளமையான, நாகரீகமான, கொச்சைச் சொல்லற்ற உயர்வகை மொழி நம் தமிழ்மொழி.

  இப்பூமியில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தகப்பன் தமிழ்மொழியன்.

  எண்ணற்ற மொழிகளில் முதலில் பிறந்தது நம் மொழி.

  உலகெங்கும் உயர்ந்த மொழி இது. தமிழ்மொழியைப் பேசுபவனும், தமிழ்நாட்டில் பிறந்தவனும் மட்டுமே தமிழனல்ல, தமிழன்  என்றால் தன்மானம் மிக்கவன், வீரம் மிகுந்தவன்; ரோசம் உள்ளவன், உலக சரித்திரம் வாய்ந்தவன், உலக வரலாற்றில் இடம் பெற்றவன், உண்மையானவன்; மென்மையானவன்; மேன்மையானவன்; நட்புக்கு இலக்கணம் வகுத்துத் திகழ்பவன், நேர்மையான வழியில் நடப்பவன்; நாகரீகத்திலும் நாணயத்திலும் சிறந்து விளங்குகிறவன், கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும், கற்பிலும், தனி மனித ஒழுக்கத்திலும் இவையனைத்திற்கும் எடுத்துக்காட்டாக இருப்பவன் உலகில் தமிழன் மட்டுமே.

  கருணை உள்ளம் கொண்டவனும், மன்னிக்கும் பெருந்தன்மையுள்ளவனும் தான் தமிழன்.

  பரம்பரைத் தமிழனாகத் தமிழ் பேசு. அவன் தான் முழுவதுமான முழுமையான தமிழனாவான்.

   நம் அண்ணைத் தமிழில் உயர்ந்தது நம் கொங்கு நாட்டுத் தமிழ்.

  உலகம் தோன்றிய பொழுது தோன்றிய  மொழி, உலகம் முழுவதும்மாக அழியும் வரை உலகில் இருக்கும் என்பதற்குச் சான்றாக இருக்கும் ஒரே மொழி.

  இன்னும் ஐநூறு வருடங்களைக் கடந்த பின் தமிழ் மொழி முற்றிலும் அழிந்துவிடும் என்கிற முற்றிலும் பொய்யான கருத்துக்களையும், பேச்சுக்களையும் ஒரு போதும் நீ நம்பிவிடாதே.

  இந்த இதழை மேலும்

  அப்படியென்ன குறைந்து போகும்…

  என்னங்க…இது உங்களுக்கே நல்ல இருக்க சொல்லுங்க?

  என்ன பத்மா எது நல்லாலேங்கிற?

  பாவம் அந்த மனுஷன் உங்களைப் பார்த்தும் பேசணும்னு ஓடோடி வந்தாரு… நீங்க என்னடான்னா அவரைப் பார்த்ததும் பார்க்காத மாதிரி முகத்தைத் திருப்பிக்கிட்டீங்களே.. அதைச் சொல்றேன்… என்ன இருந்தாலும் நீங்க இப்படிச் செய்திருக்க கூடாது.

  ஓஹோ? இதைத்தான் நல்லாருக்கானு கேக்கிறயா?

  உங்களுக்கு எப்பவும் விளையாட்டு தான்…

  நான் அப்படி வந்துட்டாலே அவருக்கெதுவும் குறைஞ்சிடலையே?

  உக்கும் உங்களுக்கு மட்டும் பேசியிருந்தா ஏதாச்சும் குறைஞ்சிருக்கமா என்ன?

  ஆமா…அவரு எங்கிட்ட நாலுமணி நேரம் பேச வேணாம்… ஒரு நாலு வார்த்தை பேசினாக் கூட எனக்குக் குறைஞ்சு தான் போகும்…

  வேடிக்கையா இருக்கு உங்களைப் பார்க்க…மனுஷனுக்கு மனுஷன் பேசிக்கிறதில அப்படி என்னங்க குறைஞ்கூடும்? இப்படி நீங்க அவரை கண்டும் காணாம வந்தது அவருக்கு உங்க மேல ஒரு கெட்ட அபிப்பிராயம் இல்லே வந்துடும்?

  அவர் என்ன எந்த மாதிரி நெனச்சாலும் எனக்குக் கவலை இல்லே.. அதைப் புரிஞ்சிக்கோ..அங்கே பாரு அவரு நம்ம சுந்தரலிங்கம் தானே பார்க்காமப் போறாரு … அடக் கடவுளே..

  சார் சுந்திரம் சார் என்ன சார் இது.. இவ்வளவு தூரம் வந்துட்டு நம்ம வீட்டுக்கு வராமப் போனா  எப்படி? வாங்க சார் ப்ளீஸ் வீடு பக்கந்தான்.

  அடடே ராமலிங்கமா சாரிப்பா நான் கவனிக்கலே.. எப்படி இருக்கே? நீ எப்படிம்மா இருக்கே? சௌக்கியமெல்லாம் எப்படி?

  நீங்க எப்படி இருக்கீங்க சார்?

  இந்த இதழை மேலும்