Home » Articles » செல்போன் வரமா? சாபமா?

 
செல்போன் வரமா? சாபமா?


ராமசாமி R.K
Author:

இது இன்டர்நெட் யுகம்,  அறிவியல் கண்டுபிடிப்புகளினால், புதுமையான கருவிகளினால் உலகம் சுருக்கப்பட்டு விட்டது.  ஒரு புறம் விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி, மறுபுறம் அதற்கேற்ப அதனால் உண்டாகும் தீமைகளின் பெருக்கம் இணையாக வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

சிலர் புதுமையை விரும்புகிறார்கள், அதனால் உண்டாகும் பலன்களை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள், மாற்றம் ஒன்றுதான் மாறாதது. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் காலம் என்னும் காற்றில் காணாமல் போய்விடுவார்கள் என்பது அவர்கள் வாதம்.

சிலர் பழமையை விட விரும்புவதில்லை, பழமையைப் பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயம் என்றாலும், பழமையின் பலன்கள் நலத்தைத் தந்தன, நன்மையைப் பெருக்கின, உறவை வளர்த்தன, வாழ்வை நீட்டின, ஆதலின் உயிர்கள் தழைத்தன என்று வாதிடுகிறார்கள்.

இன்னொரு வாதத்தையும் அவர்கள் முன்மொழிகிறார்கள், புதுமையின் போர்வையில் பூதங்கள் உயிர்த்தன, நிலம்  பாழாகியது, நீர் விஷமாகியது, காற்று மாசுபட்டது, நெருப்பு நச்சுப்புகையானது. இதனால் ஆகாயப் போர்வை (ஓசோன்) ஓட்டையாகிறது. உலகு வெப்பமயமானது, உண்ணும் உணவும் நஞ்சாகியது, உயிரும் நஞ்சாகியது.   விதையும் நஞ்சாகியது, இனிப்பும் நஞ்சாகியது, புதிய வார்ப்புக்கள் சமுதாயத்தை நஞ்சாக்கியது. எங்கும் எதிலும் எல்லாமும் நஞ்சாகி தாய்ப்பாலும் நஞ்சாகும், உயிரியல் கொடுமை புதுமையின் அதிசயமாகிறது. அழிவின் ரகசியமும் அதாகவே ஆகியது. ஆதலின் பழமையை பின்பற்றுவோம், பாதுகாப்போம்  என்பது இவர்களின் வாதம், இன்றைய கண்டுபிடிப்புகளினால் பல நன்மைகள் நடந்தேறின, தீமைகளும் கலந்து வந்தன.

செல்போன் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அதனால் பல நன்மைகள் உண்டு. தீமைகளும் உண்டு, செல்போனினுடைய நன்மைகள் 1. தொலைத்தொடர்பு வசதிகளை அதிகப்படுத்தியது. 2. இன்டாநேட், இமெயில், டாக்குமெண்ட் எடிட்டிங், கால்குலேட்டார் போன்ற பல வசதியான இணைப்புகள் அதில் உள்ளன. 3. கையடக்கமானது. 4. ஆடம்பரமானது, 5. கம்ப்யூட்டர் விளையாட்டுகள் அடங்கியது. 6. நமது அன்றாட புரோக்கிராம்களை பட்டியலிடப் பயன்படுகிறது, 7. உடனடியாக மற்றவர்களோடு தொடர்பு கொள்ள ஏதுவாகிறது. 8. ஆபத்திற்கு உதவுகிறது, 9. செய்திகளை அதிகமாகத் தருகிறது, 10. போட்டோ எடுக்க உதவுகிறது, 11. டார்ச் லைட்டாகப் பயன்படுகிறது, 12. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை அறிய முடிகிறது, 13. பேச்சுக்களைப் பதிவு செய்யப் பயன்படுகிறது, 14. வீடியோ எடுக்கப்பயன்படுகிறது, 15. நியூஸ் பேப்பர், புத்தகங்கள், சினிமா, வானிலை அறிக்கை, நாட்களின் பஞ்சாங்கக்குறிப்பு, மேப், வாட்ஸ்அப், யூடியூப், கூகுள் போன்ற எண்ணற்ற நன்மைகளும், நினைத்துப் பார்க்க முடியாத வசதிகளும் கொட்டிக் கிடக்கின்றன.

செல்போனினுடைய தீமைகள் 1. தனிமை களவாடப்படுகிறது, 2. விலை உயர்வானது, 3. நம்பகத்தன்மை அற்றது, 4. அடிக்கடி கவனச்சிதைவை உண்டாக்குகிறது, 5. நேர்முகத் தொடர்பை பாழாக்குகிறது, 6. உடல் நோய்களை உண்டாக்குகிறது, 7. கண்பார்வை குறைவுபடுகின்னறது, 8. காது பிரச்சனைகளை உண்டாக்குகிறது. 9. ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு அடித்தளம் அமைக்கிறது, 10. பார்க்கக் கூடாத ஆபாசக் காட்சிகளையும், அந்தரங்கங்களையும் வெளிப்படுத்துகிறது 11. சிறுவர்கள் மைதானத்தில் விளையாடும் பழக்கத்தை அடியோடு ஒழிக்கிறது, 12. ஒரு வித போதையை தருகிறது, 13. குடும்பச் சீரழிவிற்குக் காரணமாகிறது, 14. முகநூல் நட்பிற்கு அடித்தளமிட்டு ஆபத்தை விளைவிக்கிறது, 15. உயிரிழப்புகளுக்கு காரணமாகிறது, 16. சட்டைப் பாக்கெட்டில் வைத்தால் இதயம் பாதிக்கிறது, 17. பேண்ட் பாக்கெட்டில் வைத்தால் சிறுநீரகப் பாதிப்பையும், மலட்டுத் தன்மையையும் உருவாக்குகிறது, 18. செல்போன் இல்லாமல் போனால் ஏமாற்றம் அதிகமாகிறது, 19, ஒவ்வொருவருக்கும் மன அழுத்தத்தை உருவாக்கி தனிமைப்படுத்துகிறது, 20, பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. 21. இளையோர்களை கெடுத்து சமுதாய சீரழிவிற்குக் காரணமாகிறது, 22. இரவு நேரங்களில் தூக்கத்தைக் கெடுக்கிறது, 23. கைவிரல்களில் பாதிப்பை உண்டாக்குகிறது, 24. வாசிப்புப் பழக்கத்தை குறைவுபடுத்துகிறது, 25.புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது, 26. சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்துகிறது, 27. வண்டி ஓட்டுநர்களுக்கு கவனச்சிதறல்கள் உண்டாகிறது, 28. பள்ளிகளிலே கல்வி போதனையைப் பாதிக்கிறது, 29. மின்னலின் போது செல்போனை உபயோகித்தால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment