Home » Articles » சிந்திக்க வைக்கும் சீனா….

 
சிந்திக்க வைக்கும் சீனா….


பன்னீர் செல்வம் Jc.S.M
Speaker:

சுற்றுலா என்றாலே  மகிழ்ச்சி தான். அதிலும் வெளிநாடுச் சுற்றுலா, குறைந்த கட்டணத்தில், நம்மூர் உணவுகளுடன் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி தான்.

என் ஈரோட்டு நண்பர் பாலாஜி தன் மகளுடன் பல ஆண்டுகளுக்கு முன்பே வியாபாரத்துக்கு சில பொருட்கள் வாங்குவதற்காக சீனா சென்று வந்த பின், தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். மொழி, உணவு இரண்டும் சிரமம் எனத் தெரிந்து கொண்டேன்.

சீனா, பாகிஸ்தான் என்ற இரண்டு அண்டை நாடுகள் மீதும் உள்ளத்தில் பிடிப்பு இல்லை எனக்கு. காரணம் அவர்களது பகை உணர்வும், பன்முகத்தாக்குதலுமாயிருக்கலாம். எனவே, சீனா சுற்றுலா செல்வதில்லை என்றிருந்தேன்.

சனவரி 2018 ல் என் பள்ளித் தோழன் சி. எல். தான் சீனா செல்வதாயும் சலுகைக் கட்டணமாக ரூ 90000- 8 நாட்கள் 3 நகரங்கள் என்று தகவல் தெரிவித்தார்.

வழக்கமாக வாழ்க்கைத் துணையுடன் தான் செல்வேன். இம்முறை அவர் முதுகுத்தண்டு வலியால் வரவில்லை. எனவே நான் மட்டும் செல்ல முடிவு செய்தேன்.

சுற்றுலா ஏற்பாடு செய்த ஸ்ரீ டிராவல்ஸ் சென்னை நிறுவனம் இங்கிருந்தே சமையல் ஆட்களை, சீனாவுக்கு நம் மளிகைக் சாமான்களுடன் அழைத்துச் சென்று, நம்மூர் உணவு தயாரித்து வழங்குவது சிறப்பு அம்சம்.

உடனே முன்பணம் செலுத்தி பதிவு செய்தேன். ஏப்ரல் 2018 ல் 8 நாட்கள் பயணத்திட்டம் அனுப்பினர். சென்னையிலிருந்து கொழும்பு வழியாக பீஜிங் சென்று, ஷாங்காயிலிருந்து கொழும்பு வழியாகச் சென்னை திரும்புதல் தான் பயணத்திட்டம்.

நாட்கள் நெருங்கின. விசா பிரச்னை என்பதால் கொழும்புக்குப் பதில்  மலேசியா கோலாலம்பூர் வழியாக முதலில் ஷாங்காய் சென்று, ஷியான் வழி பீஜிங் சென்று அங்கிருந்து கோலாலம்பூர் வழியாக சென்னை திரும்புதல் என மாற்றியமைத்தனர்.

சீனா என்றவுடனே நினைவுக்கு வருவது உலக அதிசயங்களுள் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் தான். அடுத்து மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலும், மணிக்கு 430 கி.மீ வேகத்தில் செல்லும் மேக்னெட் ரயிலும்.

அவர்களது உணவு நமக்கு ஒத்து வராது ; எங்கும் சீன மொழி தான். ஆங்கிலப் பெயர் பலகைகள் அரிதாகவே கண்ணில் பட்டன. கோவை அவிநாசி ரோட்டில் ஒருநாள் இரவு 8 மணிக்கு பஸ்ஸில் சென்றேன். ஹோப்ஸ் பகுதியிலிருந்து பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி வரை ரோட்டின் இருபுறமும் ஒளிர்ந்த ஆங்கிலப் பெயர்ப் பலகைகள், விளம்பரங்கள் அமெரிக்காவின் நியூயார்க் போலத் தோன்றியன.

உலகில் பரப்பளவில் 3 வது பெரிய நாடு; ஆசியாவில் 2 வது பெரிய நாடு சீனா. மக்கள் தொகையில் உலகிலேயே மிக அதிகமான மக்கள் வசிக்கும் நாடு சீனா தான். இன்று (2018ல்) மக்கள் தொகை சுமார் 142 கோடிப் பேர்.

இந்தியா 2 ம் இடத்தில் உள்ளது விரைவில், அதாவது 30 ஆண்டுகளுக்குள்  சீனாவின் மக்கள் தொகை 136 கோடிக்கு குறைந்து விடும் என்று கூறுகின்றனர்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment