![]() |
Author: விக்ரன் ஜெ
|
தடுமாறும் போதெல்லாம்
ஒரு போதும் தடமாறாதே…!
தடுக்கி விழுந்தாலும் துடித்து எழுந்திடு…
துணிவுடன் பயணம் தொடங்கிடு…
துன்பங்கள் உன்னைத் துரத்தினாலும்
துயரங்கள் உன்னைப் போட்டு வதைத்தாலும்
துவளாதே மனம் தளராதே…
உன் இலக்கு இமயத்தின் உச்சி
அங்கு செல்ல பாதையும் இல்லை
பயணத்தில் உன்னுடன் துணையுமில்லை…
எடுத்து வைக்கும் முதல் அடியே
உன் கால்கள் முற்புதரில் சிக்கிக் கொள்ளலாம்
பனிப்புயலிலும் மாட்டிக் கொள்ளலாம்
நிற்காதே நிதானமும் கொள்ளாதே…
இதற்கு என்று புதிய பாதையை உருவாக்கு;
அதை உனதாக்கு பயணத்திற்கு எளிதாக்கு;
பின் வருபவர்களுக்கு வழியாக்கு…
எட்டும் தொலைவை எட்ட
நாட்கள் பல ஆகலாம்
தூக்கங்களும் தொலையலாம்….
களைப்பில் கால்கள் இடறி விழுந்தாலும்
முன்நோக்கியே விழுங்கள்…
உங்கள் வெற்றியை கைத்தட்டி ரசிக்க
இங்கு ஆயிரம் கைகள் காத்திருக்கிறது..
உங்கள் பெயரைப் பதிக்க வரலாற்றுப்
பக்கத்தில் வெள்ளைத் தாள்
ஒன்று விடப்பட்டிருக்கிறது…
உனது பயணம் வெற்றுப் பயணம்
அல்ல வெற்றிப்பயணம்.

August 2018





















No comments
Be the first one to leave a comment.