Home » Articles » இங்கு… இவர்… இப்படி… தன்னம்பிக்கைத் தமிழர்

 
இங்கு… இவர்… இப்படி… தன்னம்பிக்கைத் தமிழர்


ஆசிரியர் குழு
Author:

முனைவர் இரா. விஸ்வநாதன்,

தமிழ்ப் பேராசிரியர், சிக்கய்ய நாயக்கர் கல்லூரி,

ஈரோடு.

வானம் இருண்டுவிடுகிறபோது

நட்சத்திரங்கள் வெளிவருகின்றன

என்பதற்கிணங்க, ஏழ்மைச் சூழல்

ஏற்படுகிறபோது வாழ்க்கைச்  சூழலை

உயர்த்திக் கொள்ள மனம் தேடலை

தேடுகிறது. இயற்கைப் பேராற்றல்

மிக எளிமையான வடிவில் மனிதர்களைப்

படைத்தும், அவர்களிடம் மறைந்திருக்கும்

திறனை வெளிக்கொண்டு வர

அவர்களுக்குத் தேடலைத் தருகிறது.

இவ்வகையில் கன்னித்தமிழ் கற்பதை எண்ணித் துணிந்து தேர்ந்து, தமிழால் தான் வளர்ந்து, தன் வழி தமிழும் வளரும் வண்ணம் ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுத்து தன்னம்பிக்கையாலும், தளராத உழைப்பாலும் எண்ணியது எண்ணியாங்கு எய்திய திண்ணியராய் திகழும் முனைவர் இரா. விஸ்வாநாதன் அவர்கள் மாணவ, மாணவியர் சமுதாயத்திற்குத் தவமின்றிக் கிடைத்த வரம்.

செந்தாமரை சில நேரம் சேற்றிலும் முளைப்பதுண்டு. ஆம்! நம்முடைய தன்னம்பிக்கைத் தமிழரான திரு. விஸ்வநாதன் தோன்றியது, மிதிவண்டி செல்ல முடியாத, முள்வேலிகளும், புதர் மண்டிய காடுகளும் நிறைந்த கோபிசெட்டிபாளையம் வட்டம், K. மேட்டுப்பாளையம் அருகில் உள்ள சந்திராபுரம் என்ற குக்கிராமத்தில் பொருளாதாரப் பின்புலமோ, கல்வி எனும் வெளிச்சமோ இல்லா ஒரு பனைத் தொழில் புரியும் ஏழைக் குடும்பத்தின் குடிசை வீட்டில்.

14.02.1978 அன்று திரு. பொன்.இராமசாமி, திருமதி. பூவாயாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தார் விஸ்வநாதன். உடன் பிறந்தவர் இரா. ஆனந்தகுமார் என்ற தம்பி. விஸ்வநாதன் தன் மூன்றாம் வயதில் ஒரு திண்ணைப்பள்ளியிலும் , ஐந்தாம் வயதில் சந்திராபுரத்தில் உள்ள தொடக்கப்பள்ளியிலும் தம் அறிவொளிப் பயணத்தைத் தொடங்கினார். இச்சமயத்தில் அண்ணல் அம்பேத்கருக்கு வாய்த்தது போன்று இவருக்கு சுப்பிரமணியம் எனும் அன்பும் பண்பும் நிறைந்த தலைமையாசிரியர் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து உற்சாகப்படுத்தி வந்துள்ளார்.

உயர்நிலைக் கல்வியை பாண்டியம்பாளையம் கிராமத்தில் இவர் கற்றபோது பல மைல்கள் நடந்தே  செல்ல  வேண்டுமென்ற நிலைமையிலும் காடுகள், வரப்புகள் வழியாகக் கடினமான பாதையில் நடந்தே சென்று பயின்றார். இடையில் மூன்று ஓடைகளைக் கடந்து செல்ல வேண்டிய நிர்பந்தம். மழை பெய்து ஓடையில் வெள்ளம் ஏற்பட்டால்  குடியிருப்புகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய  அவலநிலை. பள்ளி நேரம் போக  குடும்பத் தொழிலான பனைத் தொழிலில் பெற்றோருக்கு உதவியாகவும், மேலும் ஆடு மேய்த்தும் வந்துள்ளார் இவர்.

இவ்வளவு இடையூறுகளையும் இவரை வெல்ல  செய்தது, கற்கண்டு கல்வியைத் தமிழ்ச் சொற்கொண்டு பயின்று தம் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற தேடல்தான். தேடலினால் கிடைத்த பயனை தம்மைப் போன்று வேதனையில் உழல்பவர்களும் அனுபவிக்க வேண்டும் என்று நித்தமும் அவர்களுக்கு வழிகாட்டி உதவி வருபவர் இவர்.

தமிழ்தாயால் அரவணைக்கப்பட்ட இவர் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்று பிறகு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில்  முதுகலைத் தமிழ் இலக்கியம் கற்றவர். பின் கோவை அரசு கலைக்கல்லூரியில் M.Phil பட்டம் பெற்றார். தன்  அறிவுத் தேடலின் தொடர் ஓட்டத்தில் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கோபி வட்டார நாட்டார் தெய்வ வரலாறும் வழிபாடும்” என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

கற்றதும் பெற்றதும் மற்றவர்களுக்கு உற்றதோர் பணி செய்திடத்தானே என்பதற்கேற்ப அறப்பணியாம் ஆசிரியப் பணியை  இன்பப் பணியாய் ஏற்றார் இவர். 1999 ஆம் ஆண்டு தம் ஆசிரியப் பணியைத் தொடங்கிய இவர் மூன்று மாதங்கள் ஈரோடு மாவட்டம் திங்களூர் அரசு மேனிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக நியமன ஆசிரியராகப் பணியாற்றினார்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment