June, 2019 | தன்னம்பிக்கை

Home » 2019 » June

 
 • Categories


 • Archives


  Follow us on

  வாகை சூடும் வாழ்க்கை

  கவிச்சுடர் அழகுதாசன்

  கோவை

  வாழ்க்கை என்பது பெரும்வானம் – அதில்

  வளர்பிறை யாக வாழுங்கள்!

  வாழ்க்கை என்பது பெரும்பயணம் – அதில்

  வரையறை செய்து ஓடுங்கள்!

  வாழ்க்கை என்பது ஓர்நூலகம் – அதன்

  வாசலில் உலகம் பாருங்கள்!

  வாழ்க்கை என்பது நம்பிக்கை – அதை

  வயிர மாகத் தீட்டுங்கள்!

   

  வாழ்க்கை என்பது ஓர்இலக்கியம்

  வரிவி டாமல் படியுங்கள்!

  வாழ்க்கை என்பது ஓர்புதுமை – அதை

  வரவில் வைத்துப் பழகுங்கள்!

  வாழ்க்கை என்பது ஓர்வள்ளுவம் – அதை

  வாழ்வில் படித்து வணங்குங்கள்!

  வாழ்க்கை என்பது பெரும்தவம் – அதை

  வரமாய் ஏற்று உழையுங்கள்!

   

  வாழ்க்கை என்பது எதிர்நீச்சல் – அதை

  வென்று சிகரம் அடையுங்கள்!

  வாழ்க்கை என்பது பெரும்சோகம் – அதை

  வசந்தச் சிரிப்பால் விரட்டுங்கள்!

  வாழ்க்கை என்பது பெரும்புரட்சி – அதை

  வரலா றாகாப் பதியுங்கள்!

  வாழ்க்கை என்பது போர்க்களம் – அதில்

  வாகை சூடி மகிழுங்கள்!

  முடியும் வரை முயற்சி…! தினந்தோறும்  தரும்  மகிழ்ச்சி…!

  மு.மாரிராஜன்

  நிறுவனர், REMINGO – Reminder on the GO,

  MKSG Solutions PVT.LTD, நவி மும்பை.

  வாழ்க்கையில் தன்னம்பிக்கை இருந்தால்

  எல்லாம் வந்துவிடும்…என்னும் வார்த்தை தான் இவரின் வர்த்தக வரிகள்..

  ஒவ்வொரு நாளும் ஏதேனும் புதுமையை படைக்க வேண்டும், அந்தப் புதுமைகள் எல்லோருக்கும் ஒரு புத்துணர்வு கொடுக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நாளும் புதுமையைப் படைத்து வரும் மனிதர்.

  கணினித் துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் இவர் கணினித் துறையில் பல்வேறு மாற்றங்களையும், சமுதாயத்திற்குத் தேவûயான தொழில் நுட்பத்தையும் தனது அசாத்திய திறமையால் கொண்டு வந்தவர்.

  கணினித் துறையில் இந்திய மற்றும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களாகிய Motorola, Anderson Consulting, ONGC, Cibatul, Airfreight, DHL மற்றும் சிங்கப்பூர் தொலைத் தொடர்பு நிறுவன குழுமம் ஆகியவற்றில் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அரசு மற்றும் அரசு சாரா துறைகளில் பணிபுரிந்து அனுபவம் பெற்ற இவர் ரோபாட்டிக்ஸ் ஆட்டோமேஷன், டிஜிட்டலேசன் போன்ற துறைகள் ஆழ்ந்த  அனுபவம் மிக்கவர்.

  VHNSN கல்லூரியில் இளங்கலை இயற்பியல் துறையில் பட்டம் பெற்றவர், பின்னர் முதுகலை டிப்ளமோ படிப்பை முடித்த அவர் ஆஸ்திரேலியாவிலுள்ள கர்டின் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில் நுட்பத்துறையில் எம்பிஏ பட்டமும் பெற்றிருக்கிறார்.

  இவரின் முன்னோடியான கல்விக்கண் திறந்த காமராஜரின் வழி பல குழந்தைகளுக்கு கல்வி பயில உதவி செய்து கொண்டிருக்கிறார்.

  தான் பிறந்த சமுதாயத்தில் தன்னால் ஆன கடமைகளை தனக்கும் உகந்து தன் தாய் நாட்டிற்கும் உதவ வேண்டும் என்று கணினித் துறையில் பல மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

  உலக நாடுகள் பலவற்றிற்கு பயணம் செய்து, அங்கெல்லாம் தனது திறமையால் புகழ்கொடி நாட்டியவர் REMINGO – Reminder on the GO நிறுவனர் மு.மாரிராஜன் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு…

  கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

  நான் பிறந்தது ஸ்ரீவில்லிப்புத்தூர். தந்தை திரு. வீ. முத்துகிருஷ்ணன் விவசாய பின்னணி உடைய குடும்பம்.. அவர் சுயத்தொழில் செய்து விட்டு பின்னர் இந்திய தபால் தந்தித் துறையில் வேலை செய்து கொண்டிருந்தார்.  ஆனாலும் எங்கள் பள்ளி காலம் முழுவதும் விருதுநகரில் தான் இருந்தது. என் தாயார் திருமதி. கோவிந்தமாள் இல்லத்தரசி. என்னுடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன்,  ஒரு அக்காள், ஒரு தங்கை. என்னுடைய படிப்பு விருதுநகரிலுள்ள திருவள்ளுவர் வித்யா சாலை மற்றும் சத்திரிய வித்யா சாலை ஆகிய பள்ளிகளில் படித்தேன். பள்ளியில் படிக்கும் போது நன்றாகப் படிக்கும் மாணவன் தான் ஆனாலும் குறும்புக்கும் துறுதுறுக்கும் சற்றும் குறைவில்லாமல் இருந்தேன்.  கால்பந்து விளையாட்டின் மீது எனக்கு அளப்பரிய ஆசை நன்றாக விளையாடுவேன். அது மட்டுமின்றி என்சிசி யிலும் இருந்தேன்.   படிப்பின் மீது இருந்த  பற்றுதலால் என்னுடைய  பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்து VHNSN கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன்.  மூன்று ஆண்டுகள் சென்றதே தெரியவில்லை. ஒரு புறம் படிப்பு, விளையாட்டு, நண்பர்கள், மறுபுறம் சமூக சேவைகளான என்எஸ்எஸ் யிலும் இருந்தேன். இப்படி பல  மறக்க முடியாத தருணங்களுடன் என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரிப் பருவம் இனிதாகச் சென்றது.

  கே: கல்லூரிப்படிப்பை முடித்தவுடன் உங்களின் பயணம் எப்படியிருந்தது?

  கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் மேலும் படிப்பதற்கு முதுகலை இயற்பியல் துறையில்  இடம் கிடைக்கவில்லை. இதனால் மும்பை செல்ல அறிவுறுத்தப்பட்டேன். நெடு தூர இரயில் பயணம், முதன் முறையாக குடும்பத்தை விட்டு சென்றது மனதிற்கு மிகவும் வருத்தத்தையும் சலனத்தையும் கொடுத்தது. கல்லூரி வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களுடன் பயணப்பட்டேன்.  ஆனாலும் சாதிக்க வேண்டுமென்று புறப்பட்டு விட்டேன் இனி, சங்கடம் படுவதில் எவ்வித பயனும் இருந்துவிடாது என்று என் மனதை நானே தேர்த்திக் கொண்டேன். ஒரு வழியாக மும்பை சென்று விட்டேன் முற்றிலும் மாறுபட்ட  முகங்கள், ஒவ்வொருவரின் முகத்திலும் ஒரு தேடுதல் இருந்தது. இங்கு தான் இனி என்னுடைய வாழ்க்கை அமையப் போகிறது என்று அப்போது எனக்குத் தெரிவில்லை.

  பொது அறிவு மற்றும் வங்கித் தேர்விற்கான தயாரிப்புகளுடன் நேர்காணல் செல்ல முயன்றேன். Puma Carona, Bhabha Atomic Research Centre, Bajaj, Indian Airforce, Indian Rare Earths ஆகிய நிறுவனங்களில் முயற்சித்து தோல்வியுற்றேன். பின்னர் கணினித் துறையில் ஒரு வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன்.

  கே: படித்தது இயற்பியல் துறை பணியாற்றுவது கணினித் துறை இது எப்படிச் சாத்தியமானது?

  நான் படிக்கின்ற காலத்தில்  பொது அறிவு மற்றும் வங்கிப் பணிக்கான தேர்வுக்கு செய்த பயிற்சியின் உதவியால் கணினித்துறையில் பணி கிடைத்தது. அந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொண்டேன்.

  1986 ஆம் ஆண்டு ஐ.டி துறை வளர்ந்து வரும் காலமாகும். அப்போது இணையதள வசதி இல்லை என்றே கூறலாம். ஆனாலும் பெரிய வணிக நிறுவனங்கள் கணினியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆகையால்  கணினித் துறையில் அதிக வேலை வாய்ப்பு வந்து கொண்டிருந்தது.  அப்படியிருக்கும் போது அத்துறையில் நான் பணியாற்றியது புதுமையாக இருந்தது.

  எனக்கு ஏழு நாள் அவகாசத்தில் ஒரு புரோகிராம் செய்து தரும் படி வலியுறுத்தப்பட்டு ஒரு புத்தகம் கொடுக்கப்பட்டது, அந்த நிறுவனத்தில் இரு கணினிகள் இருந்தன. அப்போது தான் கணினியை முதன் முதலாகப் உபயோகப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றேன். கடின முயற்சி, உடன் பணிப்புரிபவர்களின் ஆலோசனையின் பேரில் கொடுக்கப்பட்ட காலத்திற்குள் புரோகிராம் செய்து கொடுத்து எனது பணியை தக்கவைத்துக்  கொண்டேன். இதன் பிறகு தான் எனக்கே என் மீது நம்பிக்கை வந்தது. இதனால் இந்நிறுவனத்திற்கு என் மீது மரியாதையும் நம்பிக்கையும்  வந்து மேலும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு புரோகிராம் செய்யப் பணிக்கப்பட்டேன்.  அப்போது கிடைக்கப் பெற்ற புதிய சிறப்பான அனுபவமும் உந்துதலும் இன்று வரை என்னுள் இணைந்திருக்கிறது.

  நான் பணிபுரியும் நிறுவனத்திற்கு மும்பை மற்றும் குஜராத்தில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.  அவர்களுக்கு வேலை செய்ய பணிக்கப்பட்டு  கணினித்துறையில் நிறைய கற்றுக் கொண்டேன்.

  கே: கம்யூட்டர் மேனேஜ்மென்ட் படித்த அனுபவத்தைச் சொல்லுங்கள்?

  குஜராத்தில் உள்ள வல்சாத் நகரில் வேலை செய்யும் பொழுது  கணினித்துறையில்  திறன்களை மேலும் வளர்ப்பதற்காக மும்பையில் டிப்ளமோ படிப்பில் சேர்ந்தேன். நான் பணியாற்றும் இடத்திலிருந்து மும்பையை அடைய 4 முதல் 5 மணி நேரம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது படிப்பைத் தொடர இது பெரும் சவாலாக இருந்தது, வார இறுதி நாட்களில் மட்மே என்னால் படிப்பதற்கு நேரத்தை செலவிட முடிந்தது. மேலும்  குஜராத் மற்றும் மும்பையில் வேலை பார்த்தால் பிற மொழி கற்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதனால் புதிய விசயங்கள் கற்றுக் கொள்ளவதில் ஆர்வமும் உந்துதலும் மேன்மேலும் அதிகரித்தது.

  கே: உங்கள் வாழ்வில் ஏற்பட்ட திருப்புமுனை சம்பவம் பற்றிச் சொல்லுங்கள்?

  மும்பையிலுள்ள எனது இரண்டாவது வேலைக்கான நேர்காணலுக்கு போயிருந்த போது தேர்வு எழுதப் பணித்தார்கள் தேர்வு முடிந்தவுடன் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டேன். அப்பொழுது அந்நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர் நீங்கள் தேர்வில் தோற்றுவிட்டீர்கள் ஆனால் உங்களுடைய அனுபவத்திற்கு சிறப்பாக செய்திருக்கலாம் என்று கூறினார்.

  சற்று யோசனைக்குப் பின் நான் தேர்வாகவில்லை  அது உண்மை தான். ஆனால், அடிப்படையில் உங்களின் வினாக்களில் பிழைகள் நிறைய இருக்கிறது என்று சொன்னேன். இதைக் கேட்டவுடன் அவர் அதிர்ந்து விட்டார். தவறை உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா என்று கூறினார். நிச்சயம் முடியும் என்று கூறி அதை அவருக்கு விளக்கிக் கூறினேன். அவரும் விசாரித்தப் பின்னர் என்னுடைய கருத்தை ஏற்றுக் கொண்டதோடு இல்லாமல் எனக்கு பணி ஆணையும் வழங்கினார். இந்த கம்பெனி ஒரு பெரிய கார்ப்ரேட் நிறுவனம். இவர்களுக்கு இந்தியா முழுவதும் 60 கிளைகள் இருந்தன.  இங்கு பணியாற்றும் போது நிறைய நுணுக்கங்களைக் கற்றுக்  கொண்டேன். இது என் வாழ்வில் திருப்பு முனை என்று சொல்லலாம்.     .

  கே: நீங்கள் எதிர்கொண்ட சவாலான நிகழ்வுகள் பற்றிச் சொல்லுங்கள்? 

  நேரம் கிடைக்கும் போது பொழுதுப் போக்காக UNIX மற்றும் scripting சுயமாகக் கற்றுக்கொண்டேன். அந்தக் காலக்கட்டத்தில் இணையதள வசதிகள் இல்லை. இதனால் புத்தகத்தைப் பார்த்து கணினியில் முயற்சி செய்து கற்றுக்கொண்டேன். பின்நாளில் இது உதவும் என்று எதிர்பார்க்கவில்லை.  எனக்கு PDP11, PSI Omni போன்ற கணினிகளில் சிறப்பான அனுபவம் உண்டு. பெரிய நிறுவனங்கள் இது போன்ற கணினிகளை தங்கள் சேவைக்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட ஒரு இடரைத் தீர்வுகாண்பதற்கு பொழுது போக்காக நான் கற்ற வழி முறையில் தீர்வு காண முயற்சி செய்தேன்.

  அதன் படி மேனேஜரிடம் நேரடியாகச் சென்று இதை நான் சரி செய்யலாமா என்று அவரிடம் கேட்டேன். நாளைக்குச் சொல்கிறேன் என்று அவர் கிளம்பி விட்டார். சில நாட்களுக்குப் பின் என்னிடம் இந்த வேலையைச் செய்யும் படி சொன்னார். உடனே ஆர்வத்தோடு மொத்தம் இருந்த  60 புரோகிராம் களை சோதனை செய்து நிவர்த்தி செய்து கொடுத்தேன். அனைத்தையும் சரிசெய்தது மூலம் மேலும் மேனேஜருக்கு என் மீது நம்பிக்கை அதிகரித்தது. பின்னாளில் தான் எனக்கு இந்த புரோகிராமங்களை சரி செய்வதற்காக தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கப் பெற்று அவர்களால் 50 சதவீதம் மட்டுமே சரி செய்ய முடிந்தது என்பதை அறிந்தேன். அதன் பிறகு நிறைய வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது.  இது என்னுடைய வாழ்வில் ஒரு சவாலான நிகழ்வாகக் கருதுகிறேன்.

  கே: கார்கோ நிறுவனத்திற்கு செய்த புரோகிராமிங் பற்றிச் சொல்லுங்கள்?

  நான் வேலை பார்த்த நிறுவனம், அனைத்து வகையான சரக்கு மற்றும் கூரியர் வியாபாரத்தில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாகும். இங்கு புதிதாக டோர் டு டோர் கார்கே டெலிவரி சேவைக்கு வியாபார பிரிவு தொடங்கப்பட்டது. அடிப்படையில்  இந்தப் பிரிவு Hub & Spoke மாதிரியை தழுவியது. இதில் கணினியின் மூலம் தகவல்களை தொலைபேசியின் வாயிலாகப் பரிமாறிக்கொள்ளும் திறனை முதன் முதலாக அறிமுகப்படுத்தினோம்.

  இப்போது இருப்பதைப் போல 80களில் இணையதள வசதிகள் இல்லை.  ஆகையால் இரவு பத்து மணிக்கு மேல் தொலைபேசி வாயிலாக  மிகவும் குறைவான கட்டணத்தில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுத் திறம்பட நிர்வாகம் செய்யப்பட்ட வியாபார பிரிவு இது. இந்தியாவின் முன் மாதிரி  கார்கோ டெலிவரி சேவையில் முழுமையாக ஈடுபட்ட அனுபவம் மேலும் என்னுடைய ஊக்கத்தையும் ஆர்வத்தையும் வளர்த்தது. இதில் எண்ணற்ற சவால்கள் இருந்தது. அதை எல்லாம் நாங்கள் சரியாக கையாண்டோம்.

  இந்த இதழை மேலும்

  சாதிப்பின் சங்கமம் சேரன் விளையாட்டுக் குழு

  த. ரவிச்சந்திரன்

  தலைவர், சேரன் விளையாட்டுக் குழு

  உடுமலைப்பேட்டை.

  நதிகள் சங்கமித்துக் கடலாவது போல அனைத்து விளையாட்டுகளும் சங்கமித்து ஒரு குழுவாக உருவானதுதான் சேரன் விளையாட்டுக் குழு. அந்தக் குழு தோன்றி வளர்ந்த வரலாற்றினைக் கூறுகிறார், அந்தக் குழுவின் தலைவர் ரவிச்சந்திரன் அவர்கள்.

  எங்கள் ஊர் இயற்கையின் ரம்மியம் சற்றும் குறையாத உடுமலைப்பேட்டையிலுள்ள எஸ்.வி.புரம். இருபுறமும் ஓடும் திருமூர்த்தி அணை மற்றும், அமராவதி அணைகள் கோடை காலத்திலும் வற்றாத அணைகள். விவசாயமும், மில் தொழிலும் இங்கு பெரும் பங்கு வகிக்கும் ஊர். எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் இவ்வூரில் தான் சேரன் விளையாட்டுக் கழகம் இருக்கிறது. இங்கு விளையாட நேரம் கிடைப்பது அதிசயம் தான். நான் என்னுடன்  என் நண்பர்கள் சிலர் சிறு வயதில் இருந்த காலத்தில் 1989-ல் இக்குழு ஆரம்பிக்கப்பட்டது. முதலில் ஆர்வத்துடன் வெகுவிரைவாக 20 பேர் 30 பேர் என்று துடிப்புடன் செயல்பட்டோம். பின்னர் எங்களின் ஆர்வத்தைப் பார்த்து வீட்டிலும் பெரியவர்களிடமும் ஆதரவு கிடைத்தது. ஒரு சிலர் குறை கூறினார்கள். சிலர் வேலை வாய்ப்பின் காரணமாக இங்கிருந்து சென்றுவிட்டனர். மீதி இருந்தவர்கள் சற்று சோர்வு அடைந்தனர். பின்னர் ஊர் பொதுமக்களின் உதவியும் எங்களின் கூட்டு முயற்சியும் இருந்ததால் தான் தற்பொழுதுவரை திறமையாக செயல்பட்டு வருகிறோம்.

  இக்குழுவின் சார்பாகக் கபடி, ஹாக்கி, போன்ற விளையாட்டுக்கள் விளையாடப் படுகிறது. இதற்கெனத் தனி அரங்கங்கள் அமைத்துத் தனித்தனிப் பயிற்சியாளர்களையும் அமைத்து விளையாட்டுக்களை நடத்துகிறோம். இதற்கெல்லாம் எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பும் ஊக்குவிப்பும் அளித்தவர்கள் எங்கள் ஊர்ப் பொதுமக்கள்தான். கிராமத்தில் இருந்து இப்படி ஒரு குழு முன்னேறி இருக்கிறது என்றால் அதற்கு முழுமையான காரணம் எங்கள் ஊர்ப் பொதுமக்கள் மட்டுமே எங்கள் குழுவில் நிறைய விளையாட்டுக்கள் இருந்தாலும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது கபடி தான்.

  குழுவின் சார்பாக விளையாடக்கூடிய அனைவருமே மிகத் திறமை வாய்ந்தவர்கள். பற்பல கஷ்டங்களைத் தாண்டித்தான் இத்தகைய வெற்றிகளை அவர்கள் தக்கவைத்துக் கொண்டார்கள். எங்கள் குழுவில் இருந்து முதலில் மாவட்ட அளவிற்குச் சென்றனர். பின்னர் அதிக உழைப்பு மற்றும் கடினப் பயிற்சியின் காரணமாக  மாநில அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டு வெற்றிவாகை சூடினோம். நாங்கள் அத்துடன் எங்கள் முயற்சியை நிறுத்திவிடவில்லை மேலும் முயன்று கபடியில் தேசிய அளவிலான கோப்பையையும் வென்றிருக்கிறோம்.

  நாங்கள் பெண்களுக்கும் தனியாகக் குழு தொடங்கியுள்ளோம். எங்கள் ஊர் கிராமம் என்பதால் ஆரம்பத்தில் பெண்களை விளையாட அனுமதிக்கவில்லை. இத்தகைய எதிர்ப்புகளையும் மீறிப் பெண்கள் குழுவினை ஆரம்பம் செய்தோம். ஆரம்ப காலத்தில் பெண் என்பதால் சரியாக பயிற்சிகளை மேற்கொள்ள முடியாத போதிலும் அதனையும் மீறிக் கடினப் பயிற்சிகளைச் செய்து பெண்கள் சாதனை படைத்தார்கள். பெண்கள் குழுவில் ஒரு அணியும் ஆண்கள் குழுவில்  ஜீனியர், சப்-ஜீனியர் அணியும் இருக்கிறது. பெண்கள் குழு 2013-ல் தொடங்கப்பட்டது. தற்பொழுது நன்றாகச் செயல்பட்டு வருகிறது. நாங்கள் போட்டிகளை நடத்துவது மட்டுமின்றி பயிற்சிகளையும் அளித்து வருகிறோம். தினமும் காலை மாலை இரண்டு நேரங்களிலும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் சென்று போட்டிகளில் விளையாடி வருகிறோம்.

  எங்களது குழுவின் சார்பாக அதிக இடங்களில் போட்டிகள் நடத்தியது என்று பார்த்தால் கபடிதான். குழு ஆரம்பித்தது முதலாக இன்றுவரை மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது கபடி மட்டுமே வருட வருடம் மே மாதம் எப்பொழுது வரும் என்று மக்களை எதிர்பார்க்க வைப்பது கபடி. கபடியில் பெண்கள் அணியின் சார்பில் இருவரும் ஆண்கள் அணியின் சார்பில் ஒருவரும் தேசிய அளவிலான கோப்பையைப் பெற்றிருக்கிறார்கள். சேரன் விளையாட்டுக் குழு என்ற பெயரில் கபடிக்கென்று போட்டிகளை வருட வருடம் மே மாதத்தில் நடத்துகிறோம். பொருளாதார அடிப்படையில் உதவியவர்கள் எங்களுக்கு அதிகம். ஊர்ப்பொதுமக்களின் உதவியும் மற்றும் போட்டிகளின்போது அரங்கங்கள் அமைப்பது மற்றும் உணவு, பொருள் உதவிகளை அரசியல்வாதிகள் சிலர் செய்து கொடுத்தனர்.

  குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் மே மாதத்தைத் தேர்ந்தெடுக்கிறோம். மேலும் மழையின் தாக்கம் குறைந்த மாதம் என்பதாலும் நாங்கள் இந்த மாதத்தைத் தேர்ந்தெடுத்தோம். இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் காரணமாக மட்டுமே ஜீன் மாதத்தில் விளையாட்டினை நடத்துகின்றோம்.

  ஹாக்கி விளையாட்டிற்குச் செலவு மிகவும் அதிகம். இந்தக் குழு ஆரம்பித்த பொழுது ஹாக்கி விளையாட்டானது பஞ்சுத் தொழிற்சாலைகளுக்காக விளையாடப்பட்டது. ஆனால் தற்பொழுது அதிக அளவு ஹாக்கி விளையாடப்படுவதில்லை.  உடுமலைப்பேட்டையில் தான் ஹாக்கி அதிகம் விளையாடப் பட்டது. பெண்கள் அணியில் கல்லூரி அணி மட்டுமே ஹாக்கியில் விளையாடிக் கொண்டிருக்கிறது.

  இந்த இதழை மேலும்

  புறப்பட ஆயத்தமாகுங்கள்

  Your problem is to bridge the gap between

  Where you are now and the goals you intend to reach.

  – Earl Nightingale

  நீங்கள் நாடு முழுவதும் ஒரு சுற்றுப்பயணம் போக முடிவு செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பயணப்பட்டியலை முன்கூட்டியே திட்டமிட்டு, பயணம் போகும் முறையும், பயணநேரமும், தங்கும்  இடமும்,தேவையான முன்பதிவுகளும்,வேண்டிய அனுமதிகளும் கொண்ட ஒரு முறையான பயணப்பட்டியல் தயாரித்தப்  பின்புதான் பயணம் தொடங்குவீர்கள்.

  இது போலத்தான் வாழ்க்கையையும், தொழிலையையும்    திட்டமிட்டு    அமைத்துக் கொண்டால்தான்  அது  வளர்ச்சியும், வளமும் உடையதாக அமையும்.

  உதாரணமாக, உங்கள் எடையை குறைக்க  விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், முதல் வேலை தற்போது தங்கள் எடை எவ்வளவு  என கணக்கிட்டுக் கொள்வதுதான், செய்ய வேண்டிய  உடற்பயிற்சி என்ன?  ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் செய்வது? பயிற்சிகளை எப்படி மேற்கொள்வது? என்று திட்டமிடுவீர்கள் அல்லவா? அது போல் தான் உங்கள் முன்னேற்றத்திற்கும் மாதவாரியாக திட்டமிடல் வேண்டும்,  காலக் கணக்குப் போட்டு வைத்து  கொண்டு அதைப் பின்பற்றவேண்டும்.

  ஒரு தொழிலை தொடங்க முடிவு செய்து விட்டீர்கள்,  எங்கு, எப்போது  ஆரம்பிப்பது  என்றும் முடிவு செய்து   விட்டீர்கள், முதலீடுகள் பற்றியும் முடிவு செய்து விட்டீர்கள்,  யார்  நிர்வகிக்கப் போகிறீர்கள் என்பது பற்றியும் முடிவு செய்து விட்டீர்கள்,   தொழில் தொடங்கினால் வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும், செலவு எவ்வளவு இருக்க வேண்டும்  என்ற எதிர்பார்ப்பு (Expected)  நிதிநிலை அறிக்கையும் கணக்கிட்டு விட்டீர்கள்,  பிறகு என்ன?  புறப்பட ஆயத்தமாகுங்கள்.

  தொழில் தொடங்கிய பின்பு, முதல் ஆண்டு வரவும் செலவும் சமமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் (Break Even Point), நஷ்டம்   இல்லாமல் நிர்வாகம் செய்ய  வேண்டும்,  தொழில் நிலையான பிறகு ஆண்டுக்கு இவ்வளவு வருமானம், இவ்வளவு நிகர லாபம்  என்பதைக் கணக்கிட்டு லாபகரமாக தொழிலை நடத்த வேண்டும்.

  ஆண்டு ஒன்று  கழிந்த பின்பு, மாதம்  ஒன்றுக்கு நிகர லாபம் எவ்வளவு  என்பதைக் கணக்கிட்டு    மாதம்  ஒரு முறைஒப்பிட்டுப் பார்த்து  கொள்ள வேண்டும்.

  ஆண்டு மொத்த நிகர லாபம் பார்த்ததைப் போல, மாதம் ஒரு முறை நிகர லாபம் கணக்கிட்டுப் பார்ப்பதைப் போல, ஒரு நாளைக்கு எவ்வளவு  வருமானம்  என்பதையும், நிகர லாபம் எவ்வளவு நிற்கும் என்பதையும், ஒவ்வொரு நாளும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  அது போல  ஒரு ஆண்டு வருமானம், ஒரு மாத வருமானம், ஒரு நாள் வருமானம்  பார்த்து தொழில் நடத்துவது போல்,  ஒரு மணிக்கு  எவ்வளவு   வருமானம்,  எவ்வளவு  நிகர லாபம்  என்பதை கணக்குப்  பார்க்க வேண்டும், “ஒரு மணி நேர வருமான” ஒப்பீடுதான், நீங்கள் எந்த உயரத்தில் இருக்கிறீர்கள் என்பதை அது  காட்டும். இன்னும் எந்த அளவு உயர வேண்டும் என்றஎதிர்பார்ப்பைக் கூட்டும்,  அதற்கு இன்னும் என்ன என்ன தேவைகள் வேண்டும் என்பதையும் ,எதில் எதில், என்ன என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதையும் அது சுட்டிக் காட்டும்.

  மேலை நாடுகளில் மிகப்பெரிய நிறுவனங்களில்  தற்போது  “ ஒரு மணி நேர வருமானம்” கணக்கீடு முறைதான் பின்பற்றப்படுகிறது, காலக் கணக்குத்தான் மிக முக்கியமானது.

  இந்த ஒரு மணி நேர நிகர லாபம் கணக்கு ஒப்பீடு தான், ஆரோக்கிய வளர்ச்சிக்கு வித்தாகும், இதை உயர்த்துவதற்கேற்ப முயற்சியும், உழைப்பும் அதிகமாக தேவைப்படும், தொழில்நுட்ப அறிவும், நுணுக்கங்களும், அனுபவ சாலிகளின் ஆலோசனையும் இப்போது உங்களுக்கு அதிகம் தேவைப்படும்,

  5 ஆண்டுகள் கழித்து நிறுவன விரிவாக்கத்திற்கு  முயற்சித்தல்  ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.           உங்களுடையதற்போதை சொத்தின் மதிப்பையும் கணக்கிடுங்கள், அடுத்து வரும் ஆண்டுகளில்  உங்களுடைய   சொத்து மதிப்பு  எவ்வளவு உயர  வேண்டும் என்பதையும்  கணக்கிடுங்கள். அதை  அடைவதற்குரிய  முயற்சியை  ஆரம்பியுங்கள்.

  முன்னை விட தற்போது உள்ள, உங்களது  திறமைகளின் வளர்ச்சி பற்றியும், தொழில்  நுணுக்க  மேம்பாடு  பற்றியும் ஆராயுங்கள்,  எந்தத் துறையில் பலமுள்ளவராக இருக்கிறீர்கள் ? எந்த  துறையில் பலவீனமாக இருக்கிறீர்கள்?குறைகள் என்ன? அதை  நிவர்த்திக்க வேண்டிய  வழிகள் என்ன? பலவீனத்தை பலமாக மாற்றிக் கொள்ள வேண்டிய வழிகள் என்ன?  என்பதை ஆராய்ந்து  அதற்குரிய   நிவாரண முறைகளை பின்பற்றுங்கள்.

  இந்த இதழை மேலும்

  பெண்ணிய உரிமைகள்

  ஒரு பெண் இரவில் தனியாக பாதுகாப்பாக எப்பொழுது செல்ல முடியுமோ அப்போது தான் நாம் சுதந்திரம் பெற்றதற்கான அடையாளம் என்றார் மகாத்மா காந்தியடிகள்.

  நாம் சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆனாலும் நாம் உண்மையான சுதந்திரம், குறிப்பாக பெண்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பது அன்றாட செய்திகளை காண்பவர்களுக்குத் தெரியும்.

  இந்தியாவில் பல்வேறு இடங்களில் பெண்கள் கடத்தப்பட்டு, அல்லது தனியாகச் சென்றால் மானபங்கப்படுத்தி கொலை செய்வது எதைக் காட்டுகிறது.

  நேதாஜி படையில் பெண்கள் படைக்குத் தலைமை தாங்கிய தமிழ்ப் பெண் லட்சுமி முதல் பன்னாட்டு நிறுவனமான பெப்ஸியின் நிர்வாகத் தலைவர் நூயி, விண்வெளி வீராங்கனை சாவ்லா, புரட்சி வீராங்கனை சல்மா மற்றும் விளையாட்டுத்துறையில் உலகப் புகழ் பெற்ற வீராங்கனைகள் நாட்டிற்கு புகழ் சேர்த்தாலும் அவர்களுக்கு என்ன கைமாறு செய்கிறோம்.

  பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தான் அதிகம். பணிக்குச் செல்லும் இடங்களில் பாலியில் தொந்தரவு, வரட்சனைக் கொடுமை. ஈவ்டீசிங், பிரசவ காலங்களில் அரசு மருத்துவமனைகளில் போதிய கவனிப்பு இல்லாமை, வீட்டில் தனியாக உள்ள பெண்களிடம் நகைக் கொள்ளை ஆகியவை முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியவை.

  இந்தியாவில் குடியரசு தின விழாவில்  பங்கேற்று உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய பெண்களைப்பற்றி உயர்வாக ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

  எனது இந்திய பயணத்தில் எனக்குப் பிடித்த விஷயம் ராணுவத்தில் பெண்களைப் பார்த்தது தான். ஜனாதிபதி மாளிகையில் எனக்கு அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதைக்கு தலைமை தாங்கியவரும் ஒரு பெண் தான்.

  இந்தியாவில் ஆட்சி நடத்துவது உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தங்களால் சாதிக்க முடியும் என்று பெண்கள் காண்பித்துள்ளனர். தலைவர்களில் பலர் பெண்கள் தான்.

  இந்தியாவின் முன்னேற்றத்தில் இளம் பெண்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள்.

  பெண்கள் முன்னேறினால் தான் அந்த நாடும் முன்னேறும், என்பதை நாம் அனுபவ பூர்வமாக உணர்ந்து இருக்கிறோம். ஒரு நாடு முன்னேற விரும்பினால், பெண்களின் திறமைகளை புறக்கணிக்கக் கூடாது.

  பெண்களுக்கு சுதந்திரமும், உரிமையும் கிடைப்பதில் ஆண்களுக்கு பங்கு உண்டு என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

  நமது மகன்களுக்கு கிடைக்கும் அதே வாய்ப்புகள் மகள்களுக்கும் கிடைக்க வேண்டும், பெண்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்.

  இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்வதால் குழந்தைகள், கணவன் ஆகியோருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்து விட்டு, அவசரமாகப் பணிக்கும் செல்ல வேண்டும்.

  குடும்பம், அலுவலகம் ஆகிய இருவேறு சூழ்நிலைகளால் மகளிர் தாய்மை என்பதில் முழுமை அடையவில்லை. ஏனென்றால் குழந்தைகளை வளர்க்கப் புட்டிப்பால், குழந்தைகள் காப்பகங்கள் ஆகியவற்றை நாட வேண்டும்.

  இயல்பாகவே குழந்தை வளர்ப்பு பெண்களைச் சார்ந்துள்ளது. மொத்ததில் பெண்கள் குடும்பத்தில் சம்பளத்துடன் கூடிய உயர்தர வேலைக்காரியாகவும், அலுவலகத்தில் வேளைப்பளு நிறைந்த அலுவலராகவும் உள்ளனர்.

  ஒன்றைப் பெறவேண்டுமாயின் ஒன்றை இழந்தாக வேண்டும் என்ற நிலையினை பெண்கள் உடைத்தெறிய வேண்டும்.

  இந்த இதழை மேலும்

  தடுப்பணை

  சிம்ரனுக்கு இன்றைக்கு கார் புக் பண்ணி கொடுத்தேன் என்றேன்.  சாப்பிட்டுக் கொண்டிருந்த தீபிகா… ஒரு நிமிடம் தட்டை விட்டு… கண்ணை நிமிர்த்தி என்னைப் பார்த்தாள்… ஏதோ யோசனையோடு, வித்யா… தோசைத் கல்லில்… தோசை அதிகமாக சூடாகி கருகவிடுவது போல தோன்றியது… கையில் தோசை திருப்பியோடு என்னை திரும்பி பார்த்தார்.

  கோபிகா தான் அதிக ஆச்சரியத்தை என் மீது காட்டியவள்… என்னப்பா சொன்னீங்க…

  சிம்ரனா!

  என்று கேட்டாள்…

  எங்கள் வீட்டு சாப்பாட்டு வேளை கலந்துரையாடல்கள் ஸ்டீவன் ஹாக்கிங் முதல் ஸ்ரீதேவி வரை ஷேக்ஸ்பியரில் இருந்து ஷேமநலநிதி வரை பல சப்ஜெக்ட்டுகள் அலசப்படும்… ‘310 பர் YUMA’ என்ற திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்ட ‘Grace’ என்று சொல்லக்கூடிய துதி சொற்களை குழந்தைகள் சொன்ன பிறகு சாப்பிட தொடங்குவது வழக்கம்.  03.10 மணிக்கு வருகின்ற இரயிலில் கதாநாயகனை ஏற்றி அனுப்புவது தான் படமே.  அது ரஸ்ஸல் க்ரோவ் நடித்த படம்.  அருமையாக இருக்கும். திரைப்படங்களை குறித்தும் பேச்சு போய் வருவது வழக்கம்.  தமிழ் ஆங்கிலம் என்று மொழி பேதமின்றி பல திரைப்பட கதைகளை பேசி அலசுவோம்.   வழக்கமாக காணப்படும் உற்சாகம் இல்லையே தீபிகா… என்ன யோசனை? என்று கேட்டேன்… ஆமாம்பா கொஞ்சம் அழுதேன் என்றாள்.

  அடடா… ஏன் என்றேன்…

  கணக்கு வரவே மாடேன் என்கிறது அப்பா?  என்றாள்.

  வாஸ்த்தவமான பேச்சு.

  கணக்கு வரவில்லை என்றால் அழவேண்டியதுதான்!

  சரிதானே!  அழுதால் கணக்கு வந்துவிடுமா?

  உனது பலம் நம்பிடு கண்ணே

  கனவை நனவாக்கிடு பெண்ணே!

  யாரென்ன சொன்னால் என்ன

  ஏளனம் செய்தால் என்ன

  தூற்றுவோர் தூற்றட்டும் அங்கே

  மாற்றம் ஓர் நாள் வரும் இங்கே

  உனக்கென காலம் வந்தாலே

  தீராத கடனை தீர்த்திடுவாயே!…

  உழைப்பும் வேர்வையும் உயர்வை தருமே

  வென்றால் விதியும் தலைவணங்கிடுமே!

  கருவரை முதலாய் கல்லறை வரையில் போராட்டமே அதை வென்றிடுவோமே!  யுத்தம்!  யுத்தம்!

  யுத்தம்!  யுத்தம்!

  வாகை சூடுவோம்!  ஏ…  வானம் தாண்டுவோம்!  என்று நான் பாடும்பொழுது, கூட பாட தொடங்கினாள் தீபிகா…

  இந்தப் பாடல் நவீன திரை இசைப் பாடல்தான்.   இந்தக் கட்டுரையை… சென்னை… மதுரை இடையிலான…  விமான பயணத்தின் பொழுதுதான், எழுதிக்கொண்டிருக்கிறேன்… விமான பைலட்டின் பெயர்

  சிம்ரன் பார்மர்… என்று விமான பணிப்பெண் தகவல் தெரிவித்தார்.

  அதற்கு முன்பு அறிவிப்பில் பேசும் பொழுது… பைலட் ஆண்குரலில் பேசியதாக ஞாபகம்… சிம்ரன் என்கிற பெயரில் ஆண்களும் உண்டு போல.

  தீபிகா… பாடிய பாடல்…

  அவளுடைய அப்பா தொடங்கி அவளும் சேர்ந்து பாடிய பாடல்… சமீபத்தில் வெளியாகி…. சீனாவில் கூட வெற்றிப்படமாக ஓடி சாதனை படைத்த ‘தங்கல்’ படத்தினுடைய தமிழ் தழுவலில் வந்த பாடல் ஆகும்.  தீபிகா… உன்னால் கணக்கு போட முடியும் என்று நம்ப வைப்பதற்காக இந்தப்பாடல் உதவிக்கு வந்தது.  உண்மையில் தங்கல் படத்தில் மல்யுத்தம் போடுவதற்காகத்தான் பெண்களை அப்பா ஊக்கப்படுத்தி பயிற்சி கொடுத்து தயார் செய்து போட்டியில் வெற்றி பெற செய்வார்.  தமிழில் உணர்வு மங்காமல், உருவம் வழுவாமல்…  திரு. இராஜேஷ் மலர்வண்ணன் – மொழி மாற்றம் செய்துள்ளார்.  அவரது பேட்டி ஒன்றை யு ட்யூபில் பார்த்தேன்.  சினிமா மொழி பெயர்ப்பில் எவ்வளவு நுணுக்கங்கள் உள்ளன என்று தெளிவாக கூறியிருக்கிறார். உதட்டசைவுக்கு ஏற்ற வார்த்தைகளை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும் அவருக்கு.

  அன்றைக்கென்று பார்த்து தொலைக்காட்சியில் காமன்வெல்த் போட்டிகள் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தன.  இது 21 ஆவது காமன்வெல்த் போட்டிகள்.  மல்யுத்தத்தில் வெல்ல வேண்டி, கீதா, பபிதா என்கின்ற தன் பெண்களுக்கு பயிற்சியளித்த மஹாவீர் பொஹாட் என்னும் பெரியவர் உடைய வேடத்தில் அமீர்கான் நடத்த படம் தான் தங்கல்.  அதில் தன்னுடைய உடல் வலிமையை, பொலிவை தோற்றத்தை ஏற்றியும் இறக்கியும் காட்டிய அமீர்கான் அவர்களது சாதனை குறித்தும், பட வசூல் சாதனை குறித்தும் ஏராளமாக கட்டுரைகள் வந்துள்ளன.  நானும் வேறு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.  ஆனால்… இந்தக்  கட்டுரை அந்த நோக்கத்தில் படைக்கப்பட்டதல்ல… பெற்றோர்களின் வழிகாட்டுதல்… பள்ளிகளின் வழிகாட்டுதல் மாணவ மாணவியர் மற்றும் குழந்தைகளுக்கு எவ்வளவு தூரம் கூட வர வேண்டும்… எவ்வளவு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்பது பற்றி கொஞ்சம் அலசலாம் என்று உத்தேசம்.

  வழக்கம்போல எந்த முடிவுக்கும் வந்துவிடப் போவதில்லை… சிந்திக்க வைப்போம் என்பதை தவிர.

  ஒரு கல்யாண வீட்டில் நடனமாடிக் கொண்டு இருக்கிற பெண் குழந்தைகளை மஹாவீர் பொஹாட்… சட்டென, பட்டென அறைவது போல ஒரு காட்சி அமைத்திருப்பார்கள்.  எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர், அவருடைய அப்பா, படிக்கிற காலத்தில் ஒழுங்காக படிக்கவில்லை என்பதற்காக… அவ்வப்போது தேவையான போது… அடித்து… படிக்க வைத்த கதைகளைச் சொல்லுவார்.

  அடியாத புள்ளை படியாது என்று பழமொழி வேறு! உதாரணமாக சில கதைகளைச் சொல்வதற்கு நிறையப் பேர் வீட்டில்… சொந்தக் கதைகள் சோகக் கதைகள் இருக்கலாம்.  அப்படி அடி வாங்கிப் படித்த, படிக்காத இரண்டு நண்பர்கள் IAS  ஆகி இருந்தார்கள் அவர்கள் கதையை எனக்கு கூறினார்கள்.  சுவாரஸ்யமாக இருந்தது.  அதற்காக இந்தக் கட்டுரையை படிக்கின்ற அப்பாக்கள் எல்லாரும் தத்தம் பிள்ளைகளை வெளுத்து வாங்கிவிட கிளம்பி விட முடியாது.  அதற்கு பல காரணங்கள்.  முக்கியமான காரணம்… காலம் மாறிவிட்டது… அமெரிக்காவில்… அடித்தால்… அப்பாவே ஆனாலும், போலீஸ் அள்ளிக்கொண்டு… போய்… முட்டிக்கு முட்டி தட்டுவார்களாம்… இந்தியாவில் அதே நிலைமை, வெளியில் தெரியாமல் நிலவுகின்றது.  பள்ளி ஆசிரியர்கள் படும் பாடு கேட்க வேண்டியதில்லை.  பக்குவமாக… சொல்லித்தரும் பக்குவத்தை அடைந்து கொண்டு இருக்கிறார்கள்.  ஆசிரியர் மீது மாணவர் வன்முறையும் மாணவர் மீது ஆசிரியர் பலப்பிரயோகமும் அடிக்கடி செய்தித் தாள்களில் வந்து ஆச்சரியமும் அதிர்ச்சியும் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன. அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் எனக்கு நண்பர்கள், உறவினர்கள்.

  இந்த இதழை மேலும்

  உயிருக்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு

  உயிர் குடியிருக்கும் கருவிதான் நமது உடம்பு. இந்த உடம்பெனும் கருவி அவரவர் இலக்குக்குப் போராடவும்  பாடுபடவும்  அடையவும்  செயலாற்றவும்  ஒர முக்கிய கருவியாக அமைந்துள்ளது. இந்த உடம்பைவிட்டு உயிர் பிரியும் (உடம்புக்கும் உயிருக்கும்) இடைப்பட்ட காலத்தில்தான் ஒவ்வொரு மனிதனின் ஆட்டமும், பாட்டமும், ஓட்டமும், சாதனைப் பட்டமும் அடங்கியிருக்கின்றது. இந்த இடைப்பட்ட காலத்தில் உண்மையாகவும், நுண்மையாகவும் போராடியவர்கள் உயர்ச்சியடைந்து விடுகிறார்கள். அப்படிப் போராடாதவர்கள் தாடிச்சியடைந்து விடுகிறார்கள். பின்பு வீழ்ச்சியுற்றவனை உலகம் இகழ்கிறது; எழுச்சியுற்றவனை உலகம் புகழ்கிறது! உயர்ச்சியடைந்தவனுக்கு புகழ்ச்சியுமாக; தாழ்ச்சியடைந்தவனுக்கு இகழ்ச்சியுமான வரலாறுகள் சொந்தமாகிவிடுகிறது.

  நம் உடம்பைவிட்டு உயிர் பிரியும்போது உடம்புதான் இறந்துவிடுகிறது; உயிர் இறப்பதில்லை.

  சூரியன் அதிகாலையில் தோன்றி அந்திமாலையில் மறைவதைப்போல உயிர் உடலைவிட்டுப் பிரிந்து மறைந்துவிடுகிறது. உயிர் பிரிந்தவுடன் உடல் இறக்கிறது. இவ்விருவகையான நிகழ்வுகளைத்தான் ஒருவன் இறந்து விட்டான் என்று நாம் சொல்கிறோம். இவ்விரு நிகழ்வுகளும் இயற்கை நிகழ்வுகளாகும். அந்த நிகழ்வை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. யாராலும்  எதுவாலும் தடுத்து நிறுத்த முடியாத இந்நிகழ்வை வேண்டுமானால் மருத்துவ ரீதியாக கொஞ்சம் தள்ளிக்போடலாம்.

  அன்று செயற்கை விபத்துக்களால் மனிதனுக்கு பெரிதாக ஏற்படும் விபத்துக்களைத் தடுத்து நிறுத்தி உயிரினைக் காப்பாற்றமுடியாது. ஏனென்றால் அக்கால மருத்துவத்தின் வளர்ச்சி அவ்வளவுதான். அக்கால மருத்துவத்தின் மூலம் அன்று அவ்வளவுதான் செய்யமுடிந்தது. தோல் பிய்ந்து விடுதல், ரத்தக் காயங்கள், தலைவலி. காய்ச்சல் போன்றமிகவும் சாதாரண மேலோட்டமானவியாதிகளுக்கும் – விபத்துகளுக்கும்தான் சிகிச்சைதர முடிந்தது. ஆழமான மிகவும் பெரிய வியாதிகளுக்கும் விபத்துக்களுக்கும் சிகிச்சை அளிக்க அன்று முடியவில்லை. ஏனென்றால் அன்றைய விஞ்ஞானம்  அதுவும் மருத்துவ விஞ்ஞானம் அவ்வளவுதான். அந்த மருத்துவத்திற்கு அவ்வளவு சக்திதான் இருந்தது. ஆனால் இன்றோ அப்படியல்ல. கை, கால் ஓடிதல், எலும்பு முறிதல், துண்டு துண்டாக கால்  கை வெட்டப்படுதல் போன்றசெயற்கை விபத்துக்கள் எதுவாக இருப்பினும் அதைச் சரி செய்துவிடும் அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறியுள்ளது. இதன் மூலம் உயிர்போகும் இயற்கை நிகழ்வை இக்கால மருத்துவ ரீதியாக தள்ளிப்போடலாம்  போடமுடியும்.

  உடல் உள் உறுப்பு நோய்கள் எதுவானாலும் அன்று செய்ய முடியாததை இதனடிப்படையில் இன்று செய்ய இயலும். இன்றைய மருத்துவ விஞ்ஞானமும் இமய மலைபோல் முடிவில்லாமல் முன்னேறிக் கொண்டே சென்று நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

  அன்றிருந்தவனிடம் ஒரு திறமை இருந்தது. இன்றுள்ளவர்களிடம் ஒரு திறமை உள்ளது. நாளை வருபவர்களிடமும் ஒரு திறமை இருக்கும்.

  ஐயாயிரம் ஆண்டுகளில் நீள்சிதான் மனிதன் என்பவன் என்று ஒரு ஏட்டுக் குறிப்புசாட்சியுடன் சொல்கிறது. இன்று இப்படி வளர்ந்துள்ள இந்த உலகம் திடீர் என்று வளர்ந்ததல்ல. மனித நீள்சியால் வளர்ந்ததுதான்.

  இந்த இதழை மேலும்

  தடம் பதித்துச் சென்ற மாமனிதர்கள்- 4

  சர்தார் வல்லபாய் படேல்( 1875-1950)

  இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றபெருந்தலைவர்கள் வரிசையில் காந்தியடிகள், நேரு முதல் இரண்டு இடங்களில் இருந்தனர் என்றால் மூன்றாம் இடத்தில் வைத்து மக்களால் மதிக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் படேல் ஆவார்.

  ஆக்கம் அதர்வனாய்ச் செல்லும் அசைவிலா

  ஊக்கம் உடையா னுனடி( குறள் 594)

  சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிகேட்டுக் கொண்டு போய்ச் சேரும் என்ற கருத்துடைய வள்ளுவரின் குறளிற்கு ஏற்றபடி வாழ்ந்த வெற்றி கண்டவர் படேல் ஆவார். இவரது வெற்றியை பறைசாற்றும் வகையில் இவரது உருவச்சிலை, 182 அடி உயரம் கொண்டு குஜராத்தில் நர்மதை நதிக்கரையில் உலகிலேயே மிக உயரமான சிலை என்றபெரும் பேரைப் பெற்று எல்லோருடைய கவனத்தைக் கவர்ந்து கொண்டு உள்ளது. இவரது வாழ்க்கை வரலாறு பற்றியும் அவரது சாதனைகள் பற்றியும் தெரிந்து கொள்வது ஒரு ஆவலூட்டம் விஷயமாகக் கருதி அவற்றை இக்கட்டுரை விவரிக்கின்றது.

  வல்லபாய் படேல், குஜராத்தில் கரம் சாத் என்ற இடத்தில் பிறந்தார். சோமாபாய், நாசிபாய், விதால் பாய் என்றமூன்று மூத்த சகோதரர்களும், காசிபாய் என்ற இளைய சகோதரரும் தைபா என்ற இளைய சகோதரியும் இவர் உடன் பிறந்தவர்கள் ஆவர். இவரது தந்தை சுவாமி நாராயனின் சம்ப்ரதாயின் பக்தர். தந்தையோடு தினமும்  20 கி.மீ தூரம் வரை கால்நடையாகவே ஆக்கோவி|யிற்கு செல்வதன் மூலம் அவர் உடல் உறுதியானது. இரும்பு மனிதர் என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருந்தும். இவர் தன்னுடைய மெட்ரிகுலேசன் படிப்பை முடித்ததும், தான் ஒரு வக்கீல் ஆக வேண்டும் என்று விரும்பினார். வக்கீல் படிப்பற்கான புத்தகங்களை மற்றவர்களிடமிருந்து வாங்கிப்படித்து அந்தத் தேர்வுகளை குறைந்த மாதங்களிலேயே எழுதி பாரிஸ்டர் பெற்றார் என்பது அவரது சிறப்பாகும். பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின்பு தன்னைச் சுற்றியுள்ளவர்களின் பிரச்சனைகளை அறிந்து, அவர்கள் தன் பிரச்சனைகளிலிருந்து விடுவித்தார்.

  1917 ல் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குஜராத்தில், கேடா என்ற இடத்தில் பஞ்சம் ஏற்பட்டு விவசாயிகளால்  ஆங்கிலேயருக்கு வரிகட்ட இயலாமல் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர். அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆங்கிலேயருக்கு வரிகட்டமால் வெற்றி பெற்றது அவரது சிறப்பு இதே போல் பார்டோலி என்ற இடத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக விவசாயிகள் நடத்திய வரிகொடாமை போராட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இவரது தலைமை சர்தார் என்ற பட்டத்தைப் பெற்று இவர் சர்தார் படேல் என்று அழைக்கப்பட்டார். இவர் காந்திஜியை சந்தித்தப்பின், தன்னுடைய வக்கீல் தொழிலை புறக்கணித்துவிட்டு சுதேசி இயக்கத்தில் சேர்ந்து, உப்பு சத்தியா கிரகப் போராட்டம், வெள்ளையனே வெளியேறு என்று பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு பலமுறை சிறைசென்றார். ஆங்கிலேய அரசு இவரது திறமை கண்டு அவருக்கு பல்வேறு பதவிகளைத்தர முன் வந்தும் அவர் அவற்றை புறக்கணித்தார் அயல் நாட்டு பொருட்களை உபயோகிப்பது பாவம் என்று அவருடைய அந்நிய ஆடைகளை மற்றும் பொருட்களை நெருப்பில் இட்டுக் கொளுத்தினார். விவசாயிகளிடம் இவர் கொண்டிருந்த  அன்பை நினைவில் கொண்டு, இந்த ஒற்றுமைக்கான சிலையே உருவாக்கும் பல்வேறு கட்டத்தில் லட்சக்கணக்கான இந்திய விவசாயிகளிடமிருந்து அவர்கள் உபயோகித்த இரும்பினால் ஆன கருவிகள் வரவழைக்கப்பட்டு, அவற்றைஉருக்கி அவரது சிலையின் சில பாகங்கள் செய்ய பயன்படுத்தப்படப்பட்டது என்பது ஒரு சிறப்பு அம்சமாகும். இவர், ப்ளேக் என்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன்னுடைய நண்பர்களுக்கு உதவியபோது அதனால் இவர் ஒரு கோவிலில் தனியாகத் தங்கி, தன்னுடைய முயற்சியால் தன்னை விடுவித்துக் கொண்டார் என்ற செய்தி அவரது மனஉறுதியை வெளிப்படுத்துகின்றது.

  இந்த இதழை மேலும்

  குழந்தை வளர்ச்சி

  குழந்தை தன்னுடைய ஒவ்வொரு வயதிலும் அடையும் வளர்ச்சி நிலைகள் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியைச் சுட்டிக் காட்டும்.

  முதல் வருடத்தில் குழந்தையின் வளர்ச்சி

  முதல் வாரத்தில்

  • கை, கால்களைக் குறுக்கி படுத்திருக்கும்
  • தலையைப் பக்கவாட்டில் ஆட்டும்
  • தலை ஆட்டும்போது கண்களும் அதன் திசையிலே ஆடும்.

  முதல் மாதத்தில்

  • கால்களை நீட்டும்
  • தலையைத் தூக்க முயற்சிக்கும்
  • பிறர் முகத்தினை உற்று நோக்கும்
  • நகரும் பொருட்களைப் பார்க்கத் தொடங்கும்,  சிரிக்கத் தொடங்கும்

  இரண்டாவது மாதத்தில்

  • கழுத்து நிற்கத் தொடங்கும்
  • ஒரு பொருள் இருந்த இடத்தில் இருந்து நகர்ந்த பின்பும் அவ்வெற்றிடத்தையே உற்று நோக்கும்.
  • கூ… போன்ற சத்தங்களை எழுப்பும்.
  • சத்தங்களைக் கேட்டு சிரிக்கும்.

  மூன்றாவது மாதத்தில்

  • தலையையும் கழுத்தையும் தூக்கும்
  • நிற்க வைக்கும் பொழுது தலை தளராமல் நிற்கும்.
  • பொம்மைகளைப் பார்த்து கையை ஆட்டும்
  • ‘ஆ’, ‘ங’ போன்ற ஒளிகளை எழுப்பும்
  • கைகள் இரண்டையும் ஒன்றாகக் கொண்டு வர முயற்சி செய்யும்
  • கிலுகிலுப்பை போன்றபொருட்களைக் கையால் பிடிக்கும்.

  நான்காவது மாதத்தில்

  • பொருட்களை எடுத்து வாய்க்குக் கொண்டு செல்லும்
  • நிமிர்த்தி நிற்க வைக்கும் பொழுது கால்களை உந்தும்.
  • சத்தமாகச் சிரிக்கும்           உணவைப்  பார்த்து மகிழ்ச்சியடையும்
  • தெரிந்தவர்கள் குழந்தையிடமிருந்து விலகும் பொழுது அழும்.
  • தன் கையை உற்று நோக்கும்.

  ஐந்தாவது மாதத்தில்

  • ஒரு கையில் இருந்து மற்றொரு கைக்கு பொருட்களை மாற்றும்.

  ஏழாவது மாதத்தில்

  • குப்புறவிழும்
  • தவழத் தொடங்கும்
  • சிறிது நேரம் கையை ஊன்றி உட்கார முயற்சிக்கும்
  • பொருட்களை நோக்கி கையை நீட்டி அவற்றை எடுக்க முயற்சிக்கும்
  • சிறிய உருண்டையான பொருட்களைக் கையில் எடுக்கும்.
  • ஒற்றைச் சொற்களைப் பேச ஆரம்பிக்கும்.
  • கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்துச் சிரிக்கும்
  • அம்மாவுடன் இருப்பதையே விரும்பும்

  பத்தாவது மாதத்தில்

  • எந்த பிடிமானமும் இல்லாமல் உட்காரும்
  • உட்கார்ந்த நிலையில் இருந்து எழ முயற்சிக்கும்
  • ஏதாவது ஒரு பொருளின் உதவியுடன் நிற்கும், தவழும்
  • கீழே விழும் பொருட்களை எடுக்கும்
  • பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல் உதவியுடன் பொருட்களை எடுக்கும்
  • பொருட்களைச் சுட்டிக் காட்டும்
  • மாமா, தாத்தா போன்ற சொற்களைக் கூறும்
  • மற்றவர்களை நோக்கி கைகளை அசைக்கும்.

  இந்த இதழை மேலும்

  நான் ஏன் வாயே திறப்பதில்லை?

  வானிலை அறிக்கை கேட்டீங்களா அண்ணே?

  கேட்டேன். புயல் உருவாகி இருக்காம். 24 மணி நேரத்தில மழை இருக்கும்னு சொல்றாங்க. பலத்தக் கடல் காற்று வீசுமாம். மீன் பிடிக்கக் கடலுக்குப்  போக வேண்டாம்னு எச்சரிக்கை விடுத்திருக்காங்க. அதுக்கென்ன?

  ஒண்ணும் இல்லே… சூறாவளின்னு சொல்றாங்க… சரி! அப்புறம் எதிர்ச் சூறாவளின்னு சொல்றாங்களே… அப்டீன்னா என்னண்ணே?

  காற்றின் அழுத்தம் குறைஞ்சா சூறாவளி. காற்றின் அழுத்தம் அதிகமானா எதிர் சூறாவளி… அவ்வளவுதான்!

  புரியலியே… ஏதாச்சும் உதாரணத்தோடு சொல்லுண்ணே…

  அது சரி… வீட்டில உனக்கும் உம் பொஞ்சாதிக்கும் சண்டைன்னு வச்சுக்கோ…

  அய்யய்யோ… என்னண்ணே நீங்க? நான் வாயே தொறக்கமாட்டேன்… அவ காதுல கீதுல வுழுந்து தொலைக்கப் போறது…

  அட நான் ஒரு பேச்சுக்குச் சொன்னேன்டா! அதுவும் வேணாமா? சரி மெதுவா சொல்றேன்…

  வீட்ல உனக்கும் அவளுக்கும் சண்டை வருது. நீ அவளை கன்னாபின்னான்னு திட்றே… அவ வாயே தொறக்கல… பிற்பாடு அவள திட்றதோட இல்லாம இப்ப அவளுடைய அப்பன், ஆத்தா, அண்ணண், தம்பி எல்லாரையும் சேர்த்துத் திட்றே… அவ இப்ப என்ன பண்ணுவா?

  இதப்பாருங்க… என்னை என்ன வேணும்னாலும் திட்டுங்க… ஆன அவங்களப்பத்தி இனி ஒரு வார்த்தை சொன்னாலும் நான் மனுஷியா இருக்க மாட்டேன்னு எதிர்த்து பேசுறா… மொதல்ல நீ பேசினதை எல்லாம் அமைதியா சகிச்சுக்கிட்டா. நீ கத்தினே. அது சூறாவளி. பிற்பாடு அவ குடும்பத்தையே இழுத்தா, அவ எதிர்த்து நின்னா. இது எதிர் சூறாவளி. வேணும்னா வீட்டுல போய் டெஸ்ட் பண்ணேன்….

  ஏதேது குடும்பத்திலக் குழப்பத்த ஏற்படுத்தாம ஓயமாட்டீங்க போலிருக்கே… அண்ணே அண்ணே அங்கப் பாரேன்.. என்னவோ தீப்பிடிச்சி மளமளன்னு எரியுது.. இருவரும் அவ்விடம் நோக்கி ஓடி என்னாச்சி என்று கேட்டனர். பெட்ரோல் தீப்பிடித்துக் கொண்டது. தண்ணீர் ஊத்தி அணைக்கிறோம் என்றனர் கும்பலாக இருந்தவர்கள்.

  இந்த இதழை மேலும்