Home » Articles » பெண்ணிய உரிமைகள்

 
பெண்ணிய உரிமைகள்


மணிமேகலை ப
Author:

ஒரு பெண் இரவில் தனியாக பாதுகாப்பாக எப்பொழுது செல்ல முடியுமோ அப்போது தான் நாம் சுதந்திரம் பெற்றதற்கான அடையாளம் என்றார் மகாத்மா காந்தியடிகள்.

நாம் சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆனாலும் நாம் உண்மையான சுதந்திரம், குறிப்பாக பெண்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பது அன்றாட செய்திகளை காண்பவர்களுக்குத் தெரியும்.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் பெண்கள் கடத்தப்பட்டு, அல்லது தனியாகச் சென்றால் மானபங்கப்படுத்தி கொலை செய்வது எதைக் காட்டுகிறது.

நேதாஜி படையில் பெண்கள் படைக்குத் தலைமை தாங்கிய தமிழ்ப் பெண் லட்சுமி முதல் பன்னாட்டு நிறுவனமான பெப்ஸியின் நிர்வாகத் தலைவர் நூயி, விண்வெளி வீராங்கனை சாவ்லா, புரட்சி வீராங்கனை சல்மா மற்றும் விளையாட்டுத்துறையில் உலகப் புகழ் பெற்ற வீராங்கனைகள் நாட்டிற்கு புகழ் சேர்த்தாலும் அவர்களுக்கு என்ன கைமாறு செய்கிறோம்.

பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தான் அதிகம். பணிக்குச் செல்லும் இடங்களில் பாலியில் தொந்தரவு, வரட்சனைக் கொடுமை. ஈவ்டீசிங், பிரசவ காலங்களில் அரசு மருத்துவமனைகளில் போதிய கவனிப்பு இல்லாமை, வீட்டில் தனியாக உள்ள பெண்களிடம் நகைக் கொள்ளை ஆகியவை முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியவை.

இந்தியாவில் குடியரசு தின விழாவில்  பங்கேற்று உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய பெண்களைப்பற்றி உயர்வாக ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

எனது இந்திய பயணத்தில் எனக்குப் பிடித்த விஷயம் ராணுவத்தில் பெண்களைப் பார்த்தது தான். ஜனாதிபதி மாளிகையில் எனக்கு அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதைக்கு தலைமை தாங்கியவரும் ஒரு பெண் தான்.

இந்தியாவில் ஆட்சி நடத்துவது உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தங்களால் சாதிக்க முடியும் என்று பெண்கள் காண்பித்துள்ளனர். தலைவர்களில் பலர் பெண்கள் தான்.

இந்தியாவின் முன்னேற்றத்தில் இளம் பெண்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள்.

பெண்கள் முன்னேறினால் தான் அந்த நாடும் முன்னேறும், என்பதை நாம் அனுபவ பூர்வமாக உணர்ந்து இருக்கிறோம். ஒரு நாடு முன்னேற விரும்பினால், பெண்களின் திறமைகளை புறக்கணிக்கக் கூடாது.

பெண்களுக்கு சுதந்திரமும், உரிமையும் கிடைப்பதில் ஆண்களுக்கு பங்கு உண்டு என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நமது மகன்களுக்கு கிடைக்கும் அதே வாய்ப்புகள் மகள்களுக்கும் கிடைக்க வேண்டும், பெண்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்வதால் குழந்தைகள், கணவன் ஆகியோருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்து விட்டு, அவசரமாகப் பணிக்கும் செல்ல வேண்டும்.

குடும்பம், அலுவலகம் ஆகிய இருவேறு சூழ்நிலைகளால் மகளிர் தாய்மை என்பதில் முழுமை அடையவில்லை. ஏனென்றால் குழந்தைகளை வளர்க்கப் புட்டிப்பால், குழந்தைகள் காப்பகங்கள் ஆகியவற்றை நாட வேண்டும்.

இயல்பாகவே குழந்தை வளர்ப்பு பெண்களைச் சார்ந்துள்ளது. மொத்ததில் பெண்கள் குடும்பத்தில் சம்பளத்துடன் கூடிய உயர்தர வேலைக்காரியாகவும், அலுவலகத்தில் வேளைப்பளு நிறைந்த அலுவலராகவும் உள்ளனர்.

ஒன்றைப் பெறவேண்டுமாயின் ஒன்றை இழந்தாக வேண்டும் என்ற நிலையினை பெண்கள் உடைத்தெறிய வேண்டும்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2019

முடியும் வரை முயற்சி…! தினந்தோறும்  தரும்  மகிழ்ச்சி…!
சாதிப்பின் சங்கமம் சேரன் விளையாட்டுக் குழு
புறப்பட ஆயத்தமாகுங்கள்
பெண்ணிய உரிமைகள்
தடுப்பணை
உயிருக்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு
தடம் பதித்துச் சென்ற மாமனிதர்கள்- 4
குழந்தை வளர்ச்சி
நான் ஏன் வாயே திறப்பதில்லை?
நில்! கவனி !! புறப்படு !!!  4
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 9
நம்பிக்கை நாயகர்கள்
சிறுநீரகத் தொற்றைத் தவிர்க்க
ஏற்றுக்கொள்ளுதல்
மாமரத்தில் கொய்யாப்பழம் – 5
வெற்றி உங்கள் கையில் – 66
இன்பமயமான வாழ்வு
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்