Home » Articles » தடம் பதித்துச் சென்ற மாமனிதர்கள்- 4

 
தடம் பதித்துச் சென்ற மாமனிதர்கள்- 4


கிரிஜா இராசாராம்
Author:

சர்தார் வல்லபாய் படேல்( 1875-1950)

இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றபெருந்தலைவர்கள் வரிசையில் காந்தியடிகள், நேரு முதல் இரண்டு இடங்களில் இருந்தனர் என்றால் மூன்றாம் இடத்தில் வைத்து மக்களால் மதிக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் படேல் ஆவார்.

ஆக்கம் அதர்வனாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்கம் உடையா னுனடி( குறள் 594)

சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிகேட்டுக் கொண்டு போய்ச் சேரும் என்ற கருத்துடைய வள்ளுவரின் குறளிற்கு ஏற்றபடி வாழ்ந்த வெற்றி கண்டவர் படேல் ஆவார். இவரது வெற்றியை பறைசாற்றும் வகையில் இவரது உருவச்சிலை, 182 அடி உயரம் கொண்டு குஜராத்தில் நர்மதை நதிக்கரையில் உலகிலேயே மிக உயரமான சிலை என்றபெரும் பேரைப் பெற்று எல்லோருடைய கவனத்தைக் கவர்ந்து கொண்டு உள்ளது. இவரது வாழ்க்கை வரலாறு பற்றியும் அவரது சாதனைகள் பற்றியும் தெரிந்து கொள்வது ஒரு ஆவலூட்டம் விஷயமாகக் கருதி அவற்றை இக்கட்டுரை விவரிக்கின்றது.

வல்லபாய் படேல், குஜராத்தில் கரம் சாத் என்ற இடத்தில் பிறந்தார். சோமாபாய், நாசிபாய், விதால் பாய் என்றமூன்று மூத்த சகோதரர்களும், காசிபாய் என்ற இளைய சகோதரரும் தைபா என்ற இளைய சகோதரியும் இவர் உடன் பிறந்தவர்கள் ஆவர். இவரது தந்தை சுவாமி நாராயனின் சம்ப்ரதாயின் பக்தர். தந்தையோடு தினமும்  20 கி.மீ தூரம் வரை கால்நடையாகவே ஆக்கோவி|யிற்கு செல்வதன் மூலம் அவர் உடல் உறுதியானது. இரும்பு மனிதர் என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருந்தும். இவர் தன்னுடைய மெட்ரிகுலேசன் படிப்பை முடித்ததும், தான் ஒரு வக்கீல் ஆக வேண்டும் என்று விரும்பினார். வக்கீல் படிப்பற்கான புத்தகங்களை மற்றவர்களிடமிருந்து வாங்கிப்படித்து அந்தத் தேர்வுகளை குறைந்த மாதங்களிலேயே எழுதி பாரிஸ்டர் பெற்றார் என்பது அவரது சிறப்பாகும். பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின்பு தன்னைச் சுற்றியுள்ளவர்களின் பிரச்சனைகளை அறிந்து, அவர்கள் தன் பிரச்சனைகளிலிருந்து விடுவித்தார்.

1917 ல் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குஜராத்தில், கேடா என்ற இடத்தில் பஞ்சம் ஏற்பட்டு விவசாயிகளால்  ஆங்கிலேயருக்கு வரிகட்ட இயலாமல் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர். அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆங்கிலேயருக்கு வரிகட்டமால் வெற்றி பெற்றது அவரது சிறப்பு இதே போல் பார்டோலி என்ற இடத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக விவசாயிகள் நடத்திய வரிகொடாமை போராட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இவரது தலைமை சர்தார் என்ற பட்டத்தைப் பெற்று இவர் சர்தார் படேல் என்று அழைக்கப்பட்டார். இவர் காந்திஜியை சந்தித்தப்பின், தன்னுடைய வக்கீல் தொழிலை புறக்கணித்துவிட்டு சுதேசி இயக்கத்தில் சேர்ந்து, உப்பு சத்தியா கிரகப் போராட்டம், வெள்ளையனே வெளியேறு என்று பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு பலமுறை சிறைசென்றார். ஆங்கிலேய அரசு இவரது திறமை கண்டு அவருக்கு பல்வேறு பதவிகளைத்தர முன் வந்தும் அவர் அவற்றை புறக்கணித்தார் அயல் நாட்டு பொருட்களை உபயோகிப்பது பாவம் என்று அவருடைய அந்நிய ஆடைகளை மற்றும் பொருட்களை நெருப்பில் இட்டுக் கொளுத்தினார். விவசாயிகளிடம் இவர் கொண்டிருந்த  அன்பை நினைவில் கொண்டு, இந்த ஒற்றுமைக்கான சிலையே உருவாக்கும் பல்வேறு கட்டத்தில் லட்சக்கணக்கான இந்திய விவசாயிகளிடமிருந்து அவர்கள் உபயோகித்த இரும்பினால் ஆன கருவிகள் வரவழைக்கப்பட்டு, அவற்றைஉருக்கி அவரது சிலையின் சில பாகங்கள் செய்ய பயன்படுத்தப்படப்பட்டது என்பது ஒரு சிறப்பு அம்சமாகும். இவர், ப்ளேக் என்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன்னுடைய நண்பர்களுக்கு உதவியபோது அதனால் இவர் ஒரு கோவிலில் தனியாகத் தங்கி, தன்னுடைய முயற்சியால் தன்னை விடுவித்துக் கொண்டார் என்ற செய்தி அவரது மனஉறுதியை வெளிப்படுத்துகின்றது.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2019

முடியும் வரை முயற்சி…! தினந்தோறும்  தரும்  மகிழ்ச்சி…!
சாதிப்பின் சங்கமம் சேரன் விளையாட்டுக் குழு
புறப்பட ஆயத்தமாகுங்கள்
பெண்ணிய உரிமைகள்
தடுப்பணை
உயிருக்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு
தடம் பதித்துச் சென்ற மாமனிதர்கள்- 4
குழந்தை வளர்ச்சி
நான் ஏன் வாயே திறப்பதில்லை?
நில்! கவனி !! புறப்படு !!!  4
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 9
நம்பிக்கை நாயகர்கள்
சிறுநீரகத் தொற்றைத் தவிர்க்க
ஏற்றுக்கொள்ளுதல்
மாமரத்தில் கொய்யாப்பழம் – 5
வெற்றி உங்கள் கையில் – 66
இன்பமயமான வாழ்வு
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்