June, 2019 | தன்னம்பிக்கை - Part 2

Home » 2019 » June (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 9

  அதிகாரத்தை அடைய 48 விதிகள்

  (The 48 Laws of Powers)

  இந்த நூலின் ஆசிரியர் இராபர்ட் கிரீன் (Robert Greene) ஆவார். (இந்த நூலை முனைவர் எம்.எஸ்.குமார் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். விவா புக்ஸ் வெளியிட்டுள்ளது) இந்த நூல் மூவாயிரம் ஆண்டுகளுக்கான அதிகாரச் சரித்திரத்தின் சாரம் ஆகும். உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்களான மேக்கியவில்லி, சன்சூ, கார்ல்வான்க்ளாஸ்விட்ச் ஆகியோரின் ஞானத்தை இந்நூல் வடித்துக் கொடுத்திருக்கிறது. மேலும் காலங்காலமாக இருந்து வந்த ராஜதந்திரிகள், போர் வீரர்கள், வஞ்சியர், ஏமாற்றுப் பேர்வழிகள் போன்றோர் விட்டுச் சென்ற வழிமுறைகளும் சொல்லப்பட்டுள்ளன. சிலர் அதிகாரத்தோடு விளையாடி மோசமான தவறு இழைப்பதால் அதனை இழக்கின்றனர். சிலர் மனித ஆற்றலையும் மிஞ்சி லாவகத்துடன் மிகச் சரியாக அனைத்துக் காய்களையும் நகர்த்தி அதிகாரத்தை தங்களை நோக்கி ஈர்க்கின்றனர். அதிகாரம் எப்படியானவர்களின் கைகளில் இருக்கிறது. இந்த அதிகாரத்தை இவர்கள் எப்படிக் கைப்பற்றினார்கள். அதிகாரம் எப்படியான வலிமையுடையது. ஏன் மனித சமூகம் அதிகாரத்தை அடைய மாபெரும் விருப்பம் கொண்டு ஓயாமல் போராடி வருகின்றது. இந்த அதிகாரத்தை எப்படியானவர்களால் அடைய முடியும். எப்படியானவர்களால் அதைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதை உலக வரலாற்றில் பல சான்றுகளுடன்; பல்வேறு கதைகளையும், பல்வேறு உலக வரலாற்று உண்மைகளையும் ஒரு வேத நூல் போல இந்நூல் சொல்கின்றது. இந்த நூலை மிகச் சாதாரணமாக ஒருவர் வாசித்துவிட்டு; வைத்துவிடமுடியாது. வாசிப்பவரை மீண்டும் மீண்டும் வாசிக்கச் சொல்லும் தகவல்களும், கருத்துக்களும் அடங்கிய ஒரு வாழ்வியல் களஞ்சியமாய் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலைப் படிப்பதன்மூலம் நாம் வாழ்க்கையில் பெரிய வெற்றியைப் பெறமுடியாவிட்டாலும் பெரிய தோல்வியிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்நூலில் சொல்லப்பட்டுள்ள 48 விதிகள் ஒவ்வொன்றும் அதிகாரத்தை அடைய விரும்புபவர்கள் கைக்கொள்ள வேண்டிய பண்புநலன்களை மிக விரிவாக பேசுகின்றன.

  48 விதிகளில் சில வருமாறு.

  • தலைவரைவிட எப்பொழுதும் அதிகமாக ஓளி வீசாதீர்கள்.
  • நண்பர்களிடம் அதிக நம்பிக்கை வைக்காதீர்கள்.
  • உங்கள் நோக்கங்களை மறைத்துக்கொள்ளுங்கள்.
  • தேவைக்குக் குறைவாக எப்பொழுதும் பேசுங்கள்.
  • வாக்குக் கொடுத்தால் உயிரைக் கொடுத்தேனும் காப்பாற்றுங்கள்.
  • என்ன விலை கொடுத்தேனும், பிறர் கவனத்தைக்                  கவர்ந்திடுங்கள்.
  • மற்றவர்களை உங்களுக்காக வேலை செய்ய வையுங்கள்.
  • பிறர் உங்களிடம் வருமாறு செய்யுங்கள்.
  • உங்கள் செயல்கள் மூலம் வெற்றி பெறுங்கள். எப்பொழுதும் விவாதத்தின் மூலமாக வெற்றி  பெறாதீர்கள்.
  • அதிர்ஷ்டம் இல்லாதவர்களுடன் சேராதீர்கள்.
  • நண்பனாக நடியுங்கள், ஒற்றனாக வேலை செய்யுங்கள்.
  • உங்கள் எதிரியை முழுமையாக நசுக்குங்கள்.
  • உங்கள் செயல்களைக் கணிக்க முடியாதபடி பாவனையை வளர்த்துக்       கொள்ளுங்கள்.
  • எவரிடமும் உங்களை ஒப்படைத்து விடாதீர்கள்.
  • உங்கள் ஆற்றல்களைக் குவியுங்கள்.
  • முழுமையான அரசவை உறுப்பினராக நடியுங்கள்.
  • துணிவுடன் செயலில் இறங்குங்கள்.
  • முடிவு வரை வழியெல்லாம் திட்டமிடுங்கள்.
  • கிட்டாதாயின் வெட்டென வெறுத்திடுங்கள்.
  • மீனைப் பிடிக்க நீரைக் கலக்குங்கள்.
  • முழு நிறைவானவர்களாக எப்பொழுதும் தோன்றாதீர்கள்.

  என்றவாறு வெற்றிவிதிகள் ஒரு சூத்திரம் போல் சொல்லப்பட்டு; ஒவ்வொரு விதியும் காரணகாரியங்களுடன் மிக விரிவாக ஆராய்ந்து விளக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றிரண்டை நான் இங்கே விளக்க முற்படுகின்றேன்.

  இந்த இதழை மேலும்

  நம்பிக்கை நாயகர்கள்

  புயலில், மரத்தைத் தாங்கி நிற்கும் ஆணிவேர் போல, வாழ்க்கைப் புயலில் நம்மைச் சாய்த்து விடாமல் காப்பது தான் தன்னம்பிக்கை.  உலகமே எதிர்த்து நின்றாலும், நமக்குப் பின்னின்று ஏசினாலும், நமக்கு முன்னே தூற்றினாலும், நம்மைத் தளர விடாமல் தாங்கிப் பிடிக்கும் முதல் கை தன்னம்பிக்கை. இதுவே, நம் சுயத்தின் பலம் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை.

  தன்னம்பிக்கை ஊன்றுகோல் போன்றது. கால் தடுக்கும்போது, கீழே விழுந்து விடாமல் ஊன்று கோல் தாங்கிப் பிடிப்பது போல, நாம் தோல்வியைச் சந்திக்கும் போதும், நம்முடைய முயற்சி, நாம் எதிர்பார்க்கும் பலனைத் தராத போதும்,  நம்மைச் சுற்றியுள்ள உலகம்,  நம் தகுதிக்கும்,  திறமைக்கும் உரிய அங்கீகாரம் தராத போதும்,  நம்மை மனம் தளர விடாமல் தாங்கிப் பிடிப்பது தான் தன்னம்பிக்கை.

  தன்னம்பிக்கை வாழ்கையை தங்கமாக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் இந்த கதை.

  ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த சிறுவன்,  கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாகச் சொல்லி கொடுத்தான். அந்தக் கடிதத்தை அந்தத் தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும்படி படித்தாள்.“உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை. அதனால் தயவு செய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது” என்று.

  பல ஆண்டுகளுக்கு பிறகு சிறுவனின் தாயாரும் காலமாகி விட்டார். அவரும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராகவும் கண்டுபிடிப்பாளராகவும் ஆனார். இப்படி இருக்கையில் ஒருநாள் தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பொரு முறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சையாக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்.  அதில் இப்படி எழுதியிருந்தது.

  “மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்ப வேண்டாம்” என்று.  இதைப் படித்த அவர் கதறி அழுதார். அவர் தான் பின்நாளில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய தாமஸ் ஆல்வா எடிசன். பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார்.

  “மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது தாயாலேயே மாபெரும் கண்டுபிடிப்பாளனானான்” என்று. நம் பிள்ளைகள் மீதான நேர்மறையான எண்ணங்கள் அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும். குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்!

  தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் நூலிழை  தான் வித்தியாசம் என நினைக்க கூடாது. தன்னம்பிக்கை தலை நிமர வைக்கும்.  கர்வம் தலைகுனிய வைக்கும்.  இதை உணர்த்தும் கதை இதோ,

  அசாதாரணமான அறிவும்,  தன்னம்பிக்கையும் கொண்ட  ஹிட்லர் நாட்டின் நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளும் முன் ஜெர்மனியில் வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக இருந்தது. நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமாக இருந்தது. ஆனால் தன்னால் நாட்டை நல்ல நிலைமைக்குக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை திடமாக அவரிடம் இருந்தது. 1933 ல் ஹிட்லர் தன் நாட்டு மக்களிடம் கூறினார். “எனக்கு நான்கே நான்கு வருடங்களைக் கொடுங்கள்.”  என்றார். சொன்னபடி நாட்டின் தலைவிதியை மாற்றிக் காட்டினார்.  எழுபது லட்சம் பேர் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்த நாட்டில் தொழிற்சாலைகளையும், வாணிபஅபிவிருத்தியையும் ஏற்படுத்தி வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கினார்.  நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மிக நல்ல நிலைக்கு உயர்த்தினார். எல்லாம் அவரது தன்னம்பிக்கை செய்து காட்டியது.

  ஆனால் அதே தன்னம்பிக்கை கர்வமாக மாற ஆரம்பித்தவுடன் அழிவும் ஆரம்பித்தது. தன்னை மிஞ்ச ஆளில்லை என்ற எண்ணம் வலுப்பட ஆரம்பித்தவுடன் அவர் எடுத்த முடிவுகள் அவரின் நாட்டை மட்டுமல்லாமல் உலகத்திலேயே பேரழிவுகளை ஏற்படுத்தின.

  அடாத மழையிலும் விடாது முளைக்கும் காளான்போல, எரிந்து போனாலும் சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையைப் போலத் தோல்வியிலிருந்து துள்ளி எழுவதல்லவா வாழ்க்கை! யாருக்குதான் துயரமில்லை. துயரமின்றி உயரமில்லை. துன்பமின்றி இன்பமில்லை. அடிகளால் அனுபவங்கள் கிடைக்கின்றன, அனுபவங்கள் நமக்கு ஆசானாகின்றன. தண்ணீரில் மிதக்கும் கப்பலை சிறுதுளை வழியே உள்நுழையும் தண்ணீரே கவிழ்க்கிறது. நாம் நம் மனதிற்குள் அனுமதிக்கிற கவலைகள்தான் நம்மைக் கவிழ்க்கின்றன.

  டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் என்றதும் “கனவு காணுங்கள்”என்ற வெற்றிச் சூத்திரம் நம் மனதை வருடுகிறதே! தமிழகத்தின் ராமேஸ்வரம் எனும் சின்னஞ் சிறுதீவில் பிறந்து தன் விடாமுயற்சியால் மாபெரும் விஞ்ஞானியாய், ஆய்வறிஞராய், இந்தியக் குடியரசுத்தலைவராய் உயர்ந்த அந்த மாமனிதர் வாழ்வில் சந்திக்காத தோல்விகளா? ‘கனவுகாணுங்கள்’ என்று கூறி எங்களைத் தூங்கச் சொல்கிறீர்களா? என்றொரு மாணவி அவரிடம் கேட்டார், அதற்குக் கலாம் அவர்கள், ”தூங்கும்போது வருவதல்ல கனவு, எது உன்னைத் தூங்கவிடாமல் செய்கிறதோ அதுவே கனவு” என்ற அவரது பொன்மொழி நினைவுக்கு வருகிறதே! நம்மில் எத்தனைப் பேரிடம் கனவுகாணும் அற்புதக்கண்கள் உள்ளன? இரண்டு சூரியன்களை நம் இமைக்குள்ளே இருத்துக்கொண்டு இருளில் இருப்பதாய் இனியும் சொல்லத்தான் வேண்டுமா?

  இந்த இதழை மேலும்

  சிறுநீரகத் தொற்றைத் தவிர்க்க

  நீண்ட தூரப்  பயணங்களில் இடையிடையே நாம் சிறு நீர் கழிக்க வேண்டியிருக்கும். பொதுக் கழிப்பிடமாக இருந்தாலும் அல்லது வெளிக் கழிப்பிடமாக இருந்தாலும் அவை பெரும்பாலும் அசுத்தமாகவும், அனைத்து நோய்க் கிருமிகளையும் கொண்ட இடமாகவே இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட இடங்களில் சிறுநீர் கழிப்பதைவிட  அடக்கி வைத்துக்கொள்வது பரவாயில்லை என்ற முடிவிற்கு நாம் அனேக முறை வருகிறோம்.  ஆணாக இருப்பின் அசுத்தமான இடத்திலும் எப்படியோ நின்று கொண்டேவாவது சிறுநீர் கழித்துவிடுகிறோம். அதுவே, பெண்ணாக இருப்பின் அசுத்தமான இடத்தில் உட்கார்ந்தல்லவா கழிக்க வேண்டியிருக்கிறது. ஆக, இதற்கு பயந்து அடக்கி வைத்துக் கொள்வதைத்தான் தேர்வு செய்கிறார்கள். என்ன கொடுமையடா நம் நாட்டில். கழிப்பிட சுதந்திரம் கூட நமக்கு (குறிப்பாக பெண்களுக்கு) இல்லை என்பது நிதர்சனமான உண்மையாகும்.

  அசுத்தமான இடங்களில் சிறு நீர் கழிக்க பயந்து அடக்குவதால் உண்டாவதுதான் சிறுநீரகக் கல் பிரச்சனைகள். இது நல்லதுக்கல்ல.

  அப்புறம் சிறுநீரக கற்களை அகற்ற இரசாயன மருந்துகளை எடுப்பதாலும் நம் சிறுநீரகப்பாதையில் அழற்சி ஏற்பட்டு சிறுநீரகத் தொற்று ஏற்படுகிறது. ஆக, இப்படியும் நமக்கு சிறுநீரகத் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சரி போகட்டும் என்று அசுத்தமான இடத்தில் சிறு நீர்கழிப்பதால் ஏற்படும் நோய்த் தொற்றை நீக்க ஆங்கில மருத்துவம் இரசாயன கிருமி நாசினிகளைத்தான்  (Antibiotics) கொடுக்கிறது. இங்கேயும் கிருமி நாசினிகளின் அமிலத்தன்மையை ஈடுசெய்ய நம் எலும்பின் சுண்ணாம்புக் காரம் கரைக்கப்படுகிறது. பிறகு இரசாயன மருந்தின் அமிலமும் எலும்பின் காரமும் ஒன்று சேர்ந்து உப்பாகிறது. இந்த உப்பு நம் சிறுநீரகத்தில் கற்களாகப் படிமானமாகிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் பிரச்சனை சிறுநீரகங்களைச் சுற்றியே நிகழ்கிறது. இதற்குத் தீர்வுதான் என்ன?

  இந்த இதழை மேலும்

  ஏற்றுக்கொள்ளுதல்

  நமது வாழ்வில் ஏதோ ஒரு எதிர்பாராத சங்கடமான விஷயம் நடந்து விட்டது. அதை மனம் சகித்துக் கொள்ளாத போது, ஏற்க மறுக்கும் போது கோபம் ஏற்படுகிறது. ஏதோ ஒன்றை உங்களால் அடைய முடியவில்லை. மற்றவர் அடைந்து விட்டார். அவரை அங்கீகரிக்க மறுத்தால் அது பொறாமையாகி விடுகிறது. அவரது  வெற்றியை நீங்கள் ஏற்றுக் கொள்ளும்போது உங்களுக்கு ஓரு உத்வேகம் பிறக்கிறது. அவரை முன்மாதிரியாக நினைத்து மறுபடியும் நீங்கள் முயற்சிக்கும் போது ஓரு நாள் நீங்கள் அந்த இலக்கை நிச்சயம் அடைவீர்கள். உங்களை ஒருவர் காயப்படுத்துகிறார். அதை நீங்கள் ஏற்க மறுக்கும் போது வெறுப்புணர்வு ஏற்படுகிறது. எதிர்மறைஉணர்வுகள் ஏற்படுகிறது. அதை சகித்துக் கொள்ளும்போது நேர்மறை உணர்வுகள் ஏற்படுகிறது.

  நாம் விரும்பாத ஒன்று நடந்து விட்டது. அல்லது நடக்கப் போகிறது. அதை சகித்துக் கொள்ள, ஏற்க மறுக்கும் போது அங்கு கோபமும் கலகமும் ஏற்படுகிறது. நிலைமை மேலும், மோசமாகிறது.

  சிலர் பனிச்சாரலில் மலைச்சிகரத்தில் ஏறுகிறார்கள். நிச்சயமற்றதன்மை நிறையவே உள்ளது. அதை “சாகசம்” என்கிறோம். இதுவே தயங்கினால் “பயம்” என்கிறோம். கஷ்டமான சூழ்நிலையை சகித்துக் கொண்டு கடப்பது மனஉறுதி. வலியும், எதிர்ப்பும் பெருகும் போது மிகுந்த துன்பம் அடைகிறோம். வலியை ஏற்றுக் கொள்ளும்போது, அதற்கு எதிராக போராடாத போது குறைந்த துன்பமே அடைகிறோம். மனம் விரும்பி ஏற்றுக்கொள்வது அல்ல. மாற்ற முடியாததை எதிர்த்து போராடுவதை விட அதை ஏற்றுக் கொள்ளுதல் சிறந்தது.

  டி.வி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறார். அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கதறி அழும் காட்சிகளை காண்கிறோம். ரசிக்கிறோம்.

  உங்களுக்கு என்ன நிகழ்ந்தாலும் நீங்கள் அதை உங்கள் இருப்பின் ஒரு பாகமாக ஏற்றுக் கொள்ளுங்கள். ஏற்றுக் கொள்ள பழகுங்கள் எல்லாமே இனிமையாய் மாறிவிடும். எதையும் புறந்தள்ளாதீர்கள்.

  பெரிய விஷயம் சிறிய பொருளில் ஒத்துப் போகாததால் கெட்டுப் போவதுண்டு. சில நபர்களுக்கு பொதுவாக ஒரு வேலையை கெடுப்பதில் ஏக சந்தோஷம்.

  வாழ்க்கை நம்மை சோதனை செய்யத் தவறுவதில்லை. பெற்றத் தாயை தெய்வமாக ஏற்றுக் கொள்ளுதல் நம்மை நிறைவாழ்வு பெறச் செய்கிறது. ஒருவன் தன் சகோதரர் சகோதரிகளின் தவறை மனமாற மன்னித்து ஏற்றுக் கொள்ளுதல் பிரிவைத் தடுக்கிறது.

  மனிதன் வந்த சூழ்நிலையைப் பொறுத்து அவர்களுடைய எண்ணங்களும் வாழ்க்கை கண்ணோட்டமும் செயல்களும் அமைந்திருக்கின்றன. எனவே, மற்றவர்களை குற்றம் சாட்டும் கண்களுடன் பாராமல் அவர்களை புரிந்து கொள்ளுங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள். இவை உறவுகளுக்குள் பிளவு ஏற்படாமல் தடுக்கும்.

  ஏற்றுக்கொள்ளுதல் என்பது அவர்களை சகித்து போதல் அல்ல. அவர்களை புரிந்துக் கொண்டு ஓதுங்கிப்போதல், மன்னித்துப் போதல் என்பதாகும். அவர்கள் மீது வெறுப்போ, பகைமையோ மனதில் கொள்ளாமல் இவர்கள் இப்படித்தான் என விட்டுப் பிடிப்பதாகும்.

  நீங்கள் மாறவும் வளரவும் விரும்பினால், உங்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உள்ளது உள்ளபடியே உங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் துளிர்க்க முடியும். நீங்கள் வளர முடியும்;.

  சமநிலையில் இல்லாதவர்களிடம்; தனக்கு ஏற்படும் தோல்வியை ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைக்கல்லாகும். ஏற்றுக்கொள்வது என்பது அதிக கடினமாகத் தோன்றுகிறது. சில சமயங்களில் சில நிமிடங்கள் காது கொடுத்து கேட்பதே போதுமானது. மற்றவரது பார்வைக் கோணத்திலிருந்து பார்க்க முயன்றாலே போதும். நீண்ட கால அடிப்படையில் இதுவே குறைந்த எதிர்ப்புகள் உள்ள பாதை. இதுவே ஆன்மீக ரீதியாக சரியானதும் கூட. பழிபோடுபவர்களிடம் எரிச்சலையும், சகிப்பற்றதன்மையையும் காட்டுவது குறுகிய கால அடிப்படையில் எளிதாக இருக்கலாம்.

  இந்த இதழை மேலும்

  மாமரத்தில் கொய்யாப்பழம் – 5

  இனிய வாசகர்களே! வாழ்க வளமுடன்

  வாழ்க்கை என்பது என்ன என்ற கேள்விக்கு பதில்- அனுபவங்களின் தொகுப்பு.

  அனுபவங்கள் நிறைந்த, அக்கரையும் பாசமும் கொண்ட பெற்றோர் வழிகாட்டுதலின்றி, தவறான முடிவால் துன்பமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து கஷ்டப்படும் பலர் உள்ளனர்.

  இங்கு தேவைப்படுவது தான் நல்ல நட்பு. நட்பிற்கான உரைகல் இது தான் என திருக்குறள் தெளிவாகச் சொல்லுகிறது.

  நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

  பண்புடை யாளர் தொடர்பு-குறள்- 783

  நல்ல பண்புடையவர்களை நண்பர்களாய் பெறுவது என்றுமே இன்பம் தரும். எதுபோல் என்றால் நல்ல புத்தகங்களைப் படிக்கப் படிக்க அடையும் இன்பம் போல.

  உன் நண்பனைப் பற்றிச் சொல்;

  உன்னைப் பற்றிச் சொல்கிறேன்

  என்ற தொடர்மொழி உள்ளது.

  சிறு குழந்தை முதலே, பெற்று, பாலூட்டி, தாலாட்டி வளர்த்த தாயால் முடியாததைக் கூட நண்பனால் செய்ய முடியும். எனவே தான் நல்ல பண்புள்ள நண்பர்கள் வேண்டும் என்பது.

  எனக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள் என்று பெருமைப் படுவதை விட, நல்ல நண்பர்கள் சிலரே போதும் என்ற எண்ணம் சிறந்தது.

  பள்ளிப் பருவ நட்பு மனதில் ஆழப் பதிந்துவிடும். பெற்றோர் கண்காணிப்பில் வளர்வதால் பெரும்பாலும் தவறான பாதைக்குச் செல்ல வாய்ப்பில்லை. ஆனால், சிறு சதவீதம் பெற்றோர்களால், குடும்ப சூழ்நிலையின் காரணமாக குழந்தைகளின் நடவடிக்கைகளைக்அ கவனிக்க இயலாத போது நற்பண்பு என்ற பாதையில் இருந்து மாறி விடுபவர்கள், பின்னர் சமூக விரேதிகளாக மாறி விடுகின்றனர்.

  இதற்குப் பெற்றோரும் பொறுப்பு என்பதை அவர்கள் உணர வேண்டும்.

  கல்லூரிப் பருவத்தில் அமைத்துக் கொள்கின்ற அல்லது அமைகின்ற நட்பு மிக முக்கியமானது. நன்கு படிக்கும் மாணவர்கள், சுமாராகப் படிப்பவர்கள்,சராசரியாகப் படிப்பவர்கள் என மூன்று ரகமாகப் பிரிக்கலாம்.

  சுமாராகப் படிப்பவர்கள் பெரும்பாலும் தவறு செய்ய மாட்டார்கள். நன்றாகப் படிப்பவர்களின் நட்பைப் பெற முயல்வார்கள். அவர்களின் பெற்றோர்களும் நடவடிக்கைகளைக் கவனித்து வருவார்கள்.

  சராசரியாகப் படிக்கும் மாணவர்கள் எளிதில் தீய குணங்களுக்கு ஆளாகி விடுவார்கள். நன்கு படிக்கும் மாணவர்களைக் கண்டால் பிரம்மிப்பு; நெருங்கிப் பேச தயக்கம், தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பர்.

  இந்தப் பிரிவு மாணவர்கள் சிலரிடம் சில தீய பழக்கங்கள்(புகை, மது போன்றவை) இருக்கலாம். காரணம் பெற்றோர் அல்லது அவர்களது வசிப்பிட சூழ்நிலையாக இருக்கலாம். இவர்கள் தீய பழக்கங்களை விடுவதற்கு நல்ல வழிக்காட்டுதல்கள் தேவை.

  ஒருவேளை நன்கு படிக்கும் மாணவர்களுள் ஓரிருவர் செல்வச்செழிப்பால், இத்தீய பழக்கங்களைக் கொண்டிருந்து, அவர்களுக்கு சராசரி ரக மாணவர்கள் நட்பு இணையும் போது தீய பண்புகள் மேலும் கூட வாய்ப்புள்ளது.

  இன்று கல்வி நிலையங்களில் ஆசிரியர்களின் நிலை மோசமாகத்தான் உள்ளது. படிப்பு என்ற பகுதியைத் தவிர மற்றவைகளைத் தொட்டு, சிக்கலில் மாட்டிக் கொண்டு கஷ்டப்பட விரும்பாத பலர் உள்ளனர்.

  வெகு சிலரே, சமுதாய அக்கரையோடு மாணவர்களுக்கு நல்வழிகாட்டும் புனிதப்  பணியில் ஈடுபடுகின்றனர்.

  தலைக்குமேல் வளர்ந்த குழந்தை எனக் கண்டுகொள்ளாமல் இருப்பதை விட்டு, பெற்றோர்கள் வாரத்தில் சில நாட்களாவது அவர்களுடன் நேரம் செலவழித்து, தங்களின் அன்பை, அக்கரையை வெளிப்படுத்த வேண்டும்.

  இந்த வாய்ப்பு இல்லாத மாணாக்கர் மாமரத்தில் கொய்யாப்பழத்தை எதிர்பார்க்கும் விதண்டாவாத மன நிலையை வளர்த்துக்கொள்ள நேரிடும்.

  வாதம் என்பது விவாதம் ஆகும். தான் கொண்ட கருத்தை வலியுறுத்திப் பேசுவதாகும். விதண்டா என்றால், இயற்கை நியதியைப் புரிந்து கொள்ளாமல் தனது நிலைக்குச் சாதகமாக உலக நிகழ்வுகளைத் தேடிப் பிடித்து சாமார்த்தியமாகப் பேசுவதாகும்.

  இந்தப் பருவம் டீன்-ஏஜ் பருவம் என்பதால், பெற்றோர் கூடுதல் முயற்சி எடுத்தால் நல்ல பழக்கங்களை மேற்கொள்ளச் செய்யமுடியும்.

  இந்த வாய்ப்பு விடுதிகளில் தங்கி படிப்போர்க்கு சிரமமே.

  அடுத்து பணி என்று வரும்போது அமையும் அல்லது அமைத்துக் கொள்ளும் நட்புதான் குடும்ப நட்பாக விரிந்து வாழக்கையை வளப்படுத்துகிறது அல்லது நாசமாக்குகிறது.

  மாணவப் பருவத்தில் பணத்துக்கு பெற்றோரை அல்லது மற்றவர்களை எதிர்ப்பார்த்தநிலை, ஆனால் இங்கு சுய சம்பாத்தியம்.

  பணிக்கு சேர்ந்த நாள் முதல் திருமணம் வரையிலான காலங்களில்தான் மாமரத்தில் கொய்யாப்பழங்கள் காய்க்கின்றன என்று ஆய்வுகள் மூலம் அறிய முடிகின்றது.

  குழந்தை மற்றும் பள்ளிப் பருவத்தில் பெற்றோரது வளர்ப்பு எப்படி இருக்கிறதோ அதற்கேற்பவே இவர்கள் தங்கள் வாழக்கையை அமைத்துக் கொள்கின்றனர்.

  இந்த இதழை மேலும்

  வெற்றி உங்கள் கையில் – 66

  வெற்றியின் தொடக்கம்…

  வாழ்க்கையை ரசிக்கவும், ருசிக்கவும் பழகிக்கொண்டால், எந்தச்சூழலிலும் வெற்றி நம்மைத்தேடி வரும்.

  பொதுவாக – “தோல்விதான் வெற்றிக்கான முதல்படி” என்பதை நன்கு உணர்ந்தவர்கள் வித்தியாசமாக செயல்படுவார்கள். அவர்கள் வாழ்க்கையில் தோல்வியடைந்தால் அவர்கள் துவண்டு போவதில்லை. “எப்படியாவது வெற்றி பெறவேண்டும்?” என்றஎண்ணத்தில் பல செயல்களில் ஈடுபடுவார்கள். ஒரு சிறிய வெற்றி கிடைத்தாலும், அதனைப் பெரிதாக அவர்கள் கொண்டாடுவதில்லை. “இந்த வெற்றி நிரந்தரமல்ல. இதுவும் கடந்துபோகும்” என்ற எச்சரிக்கையோடு வாழ்க்கையை எதிர் நோக்குவார்கள்.

  இவர்கள் ஒரு சிறிய வெற்றியைப் பெற்ற பின்னர், அடுத்த வெற்றியைப் பெறுவது எப்படி? என்ற சிந்தனையோடு எப்போதும் காணப்படுவார்கள். தோல்விகளை சந்தித்தாலும் தன்னம்பிக்கையோடு உழைத்து வாழ கற்றுக்கொள்வார்கள்.

  “முன்னேற்றப்பாதை எது?” எனத் தெரியாமல் திக்குமுக்காடி தவிக்கும் நேரத்தில், சிறந்த வழிகாட்டல்கள் நமக்கு பக்கபலமாக அமைகின்றன. அவை வெற்றிப் பாதையை கண்டறிவதற்கும், அந்தப் பாதையில் பீடுநடை போடுவதற்கும் துணையாக அமையும்.

  இந்த வழிகாட்டல்களை – பெற்றோர்கள், பெரியோர்கள், அறிவில் சிறந்தவர்கள், சிறந்த நூல்கள், தொலைக்காட்சித் தொகுப்புகள் போன்றவற்றின் மூலம் முன்கூட்டியே பெற்றுக்கொண்டால், சிக்கல்கள் இல்லாமல் மகிழ்வோடு எல்லா சூழல்களிலும் வெற்றியாளராக வலம் வரலாம்.

  தாய்ப்புறா ஒன்று தனியாக இருந்தது. அப்போது, மகள் புறா அருகில் வந்தது.

  “அம்மா… எனக்கு எப்போதும் கவலையாகவே இருக்கிறது. மற்ற புறாக்களோடு பேசவே பிடிக்கவில்லை” என வருத்தப்பட்டது.

  தாய் புறாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

  “இவ்வளவு நாள் என்னோடு இருந்தும் தைரியமாக உனக்கு வாழத் தெரியவில்லையே….” என எண்ணிய தாய்ப்புறா பேசத் தொடங்கியது.

  “நீ எதற்கும் கவலைப்படாதே. நாம் பிறரோடு பேசிப் பழகினால்தான் நம்மிடம் இருக்கும் தயக்கம் மறையும். வெட்கப்பட்டும், பயப்பட்டும் நீ வாழ்ந்தால் உனக்கு அதிகமான பிரச்சினைகள் ஏற்படும். எனவே, நீ மற்றவர்களோடு பழகு. எதை வேண்டுமானாலும் மற்றவர்களிடம் மனம் திறந்து பேசு. தேவையானவற்றை கேட்டுப் பெற்றுக்கொள்” – என்றது.

  “நான் உதவி கேட்கும்போது அவர்கள் மறுத்துவிட்டால் என்ன செய்வது?” – தயங்கிக் கேட்டது மகள் புறா.

  “நீ கவலைப்படாதே. யாரும், நாம் கேட்காமல் நமக்குக் கொடுக்கமாட்டார்கள். எந்த உதவியையும் தேவையென்றால் கேட்டுப் பெறலாம். சிலர் கொடுக்கலாம். பலர் மறுக்கலாம். கேட்பது நமது உரிமை. கொடுப்பதும், கொடுக்காததும் அவர்கள் உரிமை” – என்று அறிவுரை சொன்னது, தாய்ப்புறா. பின்னர், தனது மகள் புறாவை அழைத்து “நீ என்னைப் பின் தொடர்ந்து வா” என்று சொல்லி பறக்க ஆரம்பித்தது. முதலில் – ஒரு ஏரியின் அருகே அவர்கள் வந்தார்கள். பின்பு, ஏரிக் கரையோரம் பறந்த தாய்புறா ஏரி நீரில் எச்சமிட்டது. ஏரியின் அலைகள் அந்த எச்சத்தை அடித்துச் சென்றது. எச்சம் நீரில் கரைந்தது. தாய்ப்புறா ஏரியைப் பார்த்து, “எனது எச்சத்தை என் அனுமதி இல்லாமல் கரைத்துவிட்டாய். எனவே, அந்த எச்சத்தை திருப்பிக்கொடு” – எனச் சொன்னது.

  “என்னால் உன் எச்சத்தை திருப்பித் தர முடியாது. அதற்குப் பதிலாக நான் ஒரு மீன் தருகிறேன்” – என்றது ஏரி.

  மீனைப் பெற்றுக்கொண்ட தாய்ப்புறா ஊருக்குள் வந்தது. ஒரு வீட்டின் முன்வாசலில் அந்த மீனை வைத்துவிட்டு மறைந்து நின்று பார்த்தது. கதவைத் திறந்த வீட்டுக்கார அம்மா “ஆகா… இது நல்ல மீன். இன்றைக்கு குழம்பு வைத்தால் நன்றாக இருக்கும்” என முடிவு செய்தாள். மீன் குழம்பாகி உணவானது. காத்திருந்த தாய்ப்புறா வேகமாக வீட்டுக்கார அம்மாவிடம் வந்தது.

  “நீங்கள் எனது மீனை எடுத்துக்கொண்டுபோய் குழம்புவைத்து சாப்பிட்டுவிட்டீர்கள். எனக்கு அந்த மீனைத் தாருங்கள்” என்றது.

  “சாப்பிட்ட மீனை எப்படி திருப்பித்தர முடியும்? அதற்குப்பதிலாக என்னிடம் ஒரு கயிறு இருக்கிறது. அதைத் தருகிறேன்” – என வீட்டுக்கார அம்மா சொன்னாள். வீட்டுக்கார அம்மா கொடுத்த கயிற்றை வாங்கிக்கொண்டு தனது மகளோடு தாய்ப்புறா பறந்தது. வழியில் கவலையோடு ஒருவர் ஊர்க்கிணற்றின் அருகே நிற்பதைப் பார்த்து விபரம் கேட்டது.

  “எனது கயிறு அறுந்து போய்விடும் நிலையில் உள்ளது. இனி தண்ணீர் இரைக்க இதனை பயன்படுத்த முடியாது. இந்த நல்ல தண்ணீரைக் கொண்டு சென்று தான் வீட்டில் சமையல் செய்ய வேண்டும்” – என வருத்தப்பட்டுச் சொன்னார்.

  இந்த இதழை மேலும்

  இன்பமயமான வாழ்வு

  நாம் நாள்தோறும் கால்மணி நேரம் கருத்தூன்றி கடுமையாக கற்றால் எந்தக் கலையைக் கற்கறோமோ அந்த கலையில் பத்து ஆண்டுகளில் அறிஞராக திகழ முடியும்.

  இதன் மூலம் நம்முஐடய ஆற்றலை உணர்ந்து இருக்கும் பொழுது சாதாரண கவலையை விட்டு ஒழிக்க முடியாதா…? கவலையை சுழற்றி எறிய முடியாதா என்ன…?

  கட்டாயம் நம்மால் முடியும்…!

  குப்பையிலே கிடக்கிற நம் வாழ்வு கோபுரக்கலசமாவது எப்போது என்ற ஏக்கம் இனிமேலும், வேண்டாம். நம்மால் எந்தக்காரியத்தையும் சாதிக்க முடியும்.

  நம்முடைய மூளை பெரிய வயல். அதில்  இயற்கை எண்ணங்களை விதைக்காளாகத் தூவுகிறது.

  பயிர் வளரும் அழகு, சூழ்நிலையாகிய  மண்ணையும், சிந்தனையாகிய எருவையும் பொருத்தது விதைக்க வேண்டும்.  விதைக்காவிட்டால் அறுவடை செய்ய முடியாது.

  நல்ல விதையை விதைத்தால் நல்ல பயிர் வளர்ந்து பயன் கொடுக்கும்.

  ஒன்றும் செய்யாமல் சோம்பி உட்கார்ந்து கொண்டு கீதை, குரான், பைபிள் இவற்றைப் படித்துக் கொண்டிருப்பதினால் மட்டும் எந்தவித முன்னேற்றமும் அடைய முடியாது.

  காலையில் எழுந்ததும் இன்று நாம் மகிழ்ச்சியுடன் இருக்கப் போகிறோம் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.

  இதனை மனத்திற்குள் பல தடவை சொல்ல வேண்டும். அப்பொழுது முக மலர்ச்சி ஏற்படும். சோர்வு ஏற்படாது.

  மகிழ்ச்சியுடன் பணியாற்றினால்  கவலை கொண்டிருக்கும் பொழுது, கடவுள் இல்லை என்ற கட்டுரையை ஆணித்தரமாக எழுதினார்.

  இதனை அறிந்த கல்லூரி நிர்வாகிகள் அவரை கல்லூரியை விட்டு வெளியேற்றினார்கள். கல்லூரிப்படிப்பை பாதியில் இழந்தற்கு துளியும் கவலைப்படவில்லை…

  தன்னுடைய லட்சிய வாழ்வுக்க குறுக்கே நின்ற தடைகளை எல்லாம் தகர்த்து எறிவதில் சற்றும் அவர் பின்வாங்கவில்லை.

  தனக்கு விருப்பமான கவிதைகளை தொடர்ந்து இயற்சி சாகாவரம் பெற்றார். அவர் செய்யும் பணியில் ஆர்வம் காட்டுவதை நிறுத்தவில்லை.

  ஷெல்லி, இறக்கும் வரையிலும் இன்புற கவிதைகளை இயற்றினார். எதையும் மகிழ்ச்சியுடன் கற்றுக்கொண்டால் கவலை எப்படி உள்ளே வரமுடியும்…?

  இந்த உலகை பார்க்க முடியாதவர்களும், நடக்க இயலாதவர்களும், பேச முடியாதவர்களும் இருக்கும் போது நாம், உலகைப் பார்க்கவும்,  விரைவாக நடக்கவும், அன்பாகப் பேசவும் வரம் அருளப்பட்டு இருக்கிறது.

  இந்த வரத்தை நாம் பயன்படத்திக் கொண்டால் கவலைக்கு இடம் ஏது…? இந்த வரம் அருமையாக இருக்கும் பொழுது எதற்காகக் கவலைப்பட வேண்டும்…?

  இந்த இதழை மேலும்

  தன்னம்பிக்கை மேடை

  நேயர் கேள்வி …?

  இயற்கை விவசாயம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு துணைபுரியும் என்று நினைக்கிறீர்கள்?

  – காதர் மொய்தீன், சென்னை.

  விவசாயம் இல்லாத நாடுகள் வளர்ச்சியடைய முடியாது. அப்படி விவசாயம் செய்யாத நாடுகள் மற்ற நாடுகளைச் சார்ந்து வாழ வேண்டியது இருக்கும்.

  ஆனால் ஒரு நாடு வளர்ச்சியடைய மக்கள் தொகையில் ஒரு சிலரே விவசாயம் செய்ய வேண்டும். அமெரிக்காவில் விவசாயம் செய்பவர்கள் 1 சதம், கனடாவில் 2 சதம், இஸ்ரேலில் 1 சதம், ஜெர்மனியில் 1 சதம், ஜப்பானில் 3 சதம், நார்வேயில் 3 சதம், ஸ்வீடனில் 2 சதம், ஆஸ்திரேலியாவில் 3 சதம். மற்றவர்கள் சேவை துறையிலும், தொழில் நுட்ப துறையிலும் பணியாற்று கிறார்கள். விவசாயம், நமது நாட்டின் முதுகெலும்பு இங்கு நூற்றுக்கு 44 சதம் மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

  ஒரு பிளாஸ்பேக்:

  ஒரு காலத்தில் எண்பது சதம் மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர், இருப்பினும் அப்போதெல்லாம் எல்லோருக்கும் முழு வயிறு உணவு கிடைக்கவில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே நிலம் இருந்தது, பலர் அதில் வேலை செய்வார்கள். விளைச்சலில் ஒரு பகுதி கூலியாகத் தரப்படும். நிலச்சுவான்தாரர்கள் தாராளமாக உண்டு வயிறு பெருத்து அவதிப்பட்டார்கள். நிலத்தில் வேலை செய்த கூலியாட்கள் ஒட்டிய வயிறுடன், அரைகுறை ஆடைகளுடன், கூரை வீடுகளில் எலும்பும் தோலுமாக உயிர் வாழ்ந்து அவதிபட்டார்கள்.

  ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நிலங்கள் அளக்கப்பட்டன. சட்டம், நீதிமன்றம், நிர்வாகம், கலெக்டர் என்று அரசு கட்டமைப்பு உருவானது. சாலைகள், இரயில் போக்குவரத்து ஏற்பட்டது. இந்தியா என்ற ஒரு பெரிய வர்த்தக விவசாய நாடு உருவானது. ஆங்கிலேய ஆட்சியில் எற்பட்ட மாற்றத்தில் முதன்மையானது நுகர்தல் விவசாயம் வர்த்தக விவசாயமாக மாறியதுதான். ஆனாலும் கூட பசி, பட்டிணி. உணவு பற்றாக்குறை பிரச்சனைகளுக்கு அவர்களால் முழு தீர்வு காண முடியவில்லை. வங்காளதேசம் பஞ்சத்தில் (The Great Bengal Famine) 30 லட்சம் பேர் இறந்தார்கள். இது நடந்தது 1943 ஆம் ஆண்டு; இதுபோல பல இடங்களில் நடந்தது, பல ஆண்டுகளாகவே நடந்தது.

  ஐந்தாண்டுத் திட்டம்:

  சுதந்திர இந்தியாவின் ஐந்தாண்டு திட்டத்தில் விவசாயம் முன்னுரிமை பெற்றது. பவானி சாகர், சாத்தனூர், மணிமுத்தாறு, ஆண்டிபட்டி, ஆழியாறு போன்ற இடங்களில் அணைகள் கட்டப்பட்டன. நீர்பாசன திட்டங்கள் விவசாயம் செழிக்க உதவின. அணைகள் தான் நவீன இந்தியாவின் கோவில்கள் என்றார் பண்டித ஜவகர்லால் நேரு.

  நிலச்சீர்திருத்தம், உழவனுக்கு நிலம் போன்ற நிலை வந்ததால் உணவு உற்பத்தி பெருகியது. சுதந்திர இந்தியாவில் தொழிற்சாலை, போக்குவரத்து, கல்வி, வேலை வாய்ப்பு என்று வாழ்க்கைத்தரம் உயர உயர மக்களின்  வாங்கும் திறனும் உயர்ந்து பாமர மக்கள் மூன்று வேளை சாப்பிடும் நிலை ஏற்பட்டது. இலவச அரிசி திட்டத்தால் பட்டினி அறவே இல்லாத நிலை ஏற்பட்டது. மதிய உணவுத் திட்டம் ஏழைப் பிள்ளைகளின் பசியை போக்கியதோடு கல்வி பெறவும் வழி வகுத்தது.

  இன்று நமக்கு தேவையான தானியங்களை நாமே தயார் செய்கிறோம், ஏற்றுமதி கூட செய்கிறோம். நமக்கு தேவையான பாலும் நாமே உற்பத்தி செய்கிறோம். ஆனால் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி போதுமானதாக இல்லை, அவற்றை இறக்குமதி செய்கிறோம். அவற்றை சாகுபடி செய்ய நிலம் நம்மிடம் இல்லை.

  பசுமைப்புரட்சி:

  மக்கள் வயிறு நிறைய உண்பதற்கு காரணமாக இருந்தது பசுமைப் புரட்சியும், வெண்மைப் புரட்சியும் தான். அந்தப் பசுமைப் புரட்சி ஏற்பட காரணமானவர்கள் நமது வேளாண்மை விஞ்ஞானிகளும், விவசாய பல்கலைக்கழகங்களும், வேளாண்மை அதிகாரிகளும், விவசாயிகளும் என்றால் அது உண்மை.

  இந்த இதழை மேலும்

  உள்ளத்தோடு உள்ளம்

  கிரேக்க மன்னர் பிலிப் மாசிடோனியாவிலிருந்து அரிஸ்டாட்டிலுக்கு எழுதிய கடிதத்தில் குருவே திருமணம் ஆகி பதினொரு ஆண்டுகளுக்குப்பிறகு எனக்கு ஆண் குழந்தைப் பிறந்துள்ளது. அந்தக்குழந்தை மகாமேதையான உங்களிடம் தான் கல்வி கற்கும் என்கின்ற நம்பிக்கையில் நான் ரொம்பும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார் மன்னர்.

  கடிதத்தில் குறிப்பிட்டபடி தன் மகன் அலெக்ஸாண்டரை பத்து வருடம் கழித்து அரிஸ்டாட்டிலிடம் ஒப்படைத்தான் மன்னன். அரிஸ்டாட்டில் அலெக்ஸாண்டரைத் தன்னுடன் நான்கு ஆண்டுகள் வைத்திருந்தார். ஒரு முறை மலையடிவாரத்திற்கு கீழே வந்து கொண்டிருக்கும் வெள்ளத்தைக் கடந்து செல்ல வேண்டும். அரிஸ்டாட்டிலுக்குப் பின்னால் அலெக்ஸாண்டர் வந்து கொண்டிருந்தார்.

  அலெக்ஸாண்டர் அரிஸ்டாட்டிலைப் பார்த்து குருவே வெள்ளம் அதிகமாக வருகிறது. நான் முன்னே செல்கிறேன். நீங்கள் பின்னால் வாருங்கள் என்றான். எங்கே மேடு பள்ளம் என்பது தெரியாத அளவிற்கு வெள்ளம் வருவது அதிமாகிவிட்டது. வெள்ளம் உன்னை இழுத்துக் கொண்டு போய்விடும். நீ முன்னால் போக வேண்டாம் என்றார் அரிஸ்டாட்டில்.

  இதற்கு ஐயா நீங்கள் நினைத்தால் ஆயிரம் அலெக்ஸாண்டர்களை உருவாக்க முடியும். ஆனால் ஆயிரம் ஆயிரம் அலெக்ஸாண்டர்கள் சேர்ந்தாலும் ஒரே அரிஸ்டாட்டில் மாமேதையை உருவாக்க முடியாது. எனவே நான் முதலில் செல்கிறேன் என்றார் அலெக்ஸாண்டர்.

  தம்மை விடவும் அறிவு முதலியவற்றில் பெரியவர்களைத் தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல் வல்லாமை எல்லாவற்றிலும் சிறந்த வல்லமையாகும்.