Home » Articles » தடுப்பணை

 
தடுப்பணை


அனந்தகுமார் இரா
Author:

சிம்ரனுக்கு இன்றைக்கு கார் புக் பண்ணி கொடுத்தேன் என்றேன்.  சாப்பிட்டுக் கொண்டிருந்த தீபிகா… ஒரு நிமிடம் தட்டை விட்டு… கண்ணை நிமிர்த்தி என்னைப் பார்த்தாள்… ஏதோ யோசனையோடு, வித்யா… தோசைத் கல்லில்… தோசை அதிகமாக சூடாகி கருகவிடுவது போல தோன்றியது… கையில் தோசை திருப்பியோடு என்னை திரும்பி பார்த்தார்.

கோபிகா தான் அதிக ஆச்சரியத்தை என் மீது காட்டியவள்… என்னப்பா சொன்னீங்க…

சிம்ரனா!

என்று கேட்டாள்…

எங்கள் வீட்டு சாப்பாட்டு வேளை கலந்துரையாடல்கள் ஸ்டீவன் ஹாக்கிங் முதல் ஸ்ரீதேவி வரை ஷேக்ஸ்பியரில் இருந்து ஷேமநலநிதி வரை பல சப்ஜெக்ட்டுகள் அலசப்படும்… ‘310 பர் YUMA’ என்ற திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்ட ‘Grace’ என்று சொல்லக்கூடிய துதி சொற்களை குழந்தைகள் சொன்ன பிறகு சாப்பிட தொடங்குவது வழக்கம்.  03.10 மணிக்கு வருகின்ற இரயிலில் கதாநாயகனை ஏற்றி அனுப்புவது தான் படமே.  அது ரஸ்ஸல் க்ரோவ் நடித்த படம்.  அருமையாக இருக்கும். திரைப்படங்களை குறித்தும் பேச்சு போய் வருவது வழக்கம்.  தமிழ் ஆங்கிலம் என்று மொழி பேதமின்றி பல திரைப்பட கதைகளை பேசி அலசுவோம்.   வழக்கமாக காணப்படும் உற்சாகம் இல்லையே தீபிகா… என்ன யோசனை? என்று கேட்டேன்… ஆமாம்பா கொஞ்சம் அழுதேன் என்றாள்.

அடடா… ஏன் என்றேன்…

கணக்கு வரவே மாடேன் என்கிறது அப்பா?  என்றாள்.

வாஸ்த்தவமான பேச்சு.

கணக்கு வரவில்லை என்றால் அழவேண்டியதுதான்!

சரிதானே!  அழுதால் கணக்கு வந்துவிடுமா?

உனது பலம் நம்பிடு கண்ணே

கனவை நனவாக்கிடு பெண்ணே!

யாரென்ன சொன்னால் என்ன

ஏளனம் செய்தால் என்ன

தூற்றுவோர் தூற்றட்டும் அங்கே

மாற்றம் ஓர் நாள் வரும் இங்கே

உனக்கென காலம் வந்தாலே

தீராத கடனை தீர்த்திடுவாயே!…

உழைப்பும் வேர்வையும் உயர்வை தருமே

வென்றால் விதியும் தலைவணங்கிடுமே!

கருவரை முதலாய் கல்லறை வரையில் போராட்டமே அதை வென்றிடுவோமே!  யுத்தம்!  யுத்தம்!

யுத்தம்!  யுத்தம்!

வாகை சூடுவோம்!  ஏ…  வானம் தாண்டுவோம்!  என்று நான் பாடும்பொழுது, கூட பாட தொடங்கினாள் தீபிகா…

இந்தப் பாடல் நவீன திரை இசைப் பாடல்தான்.   இந்தக் கட்டுரையை… சென்னை… மதுரை இடையிலான…  விமான பயணத்தின் பொழுதுதான், எழுதிக்கொண்டிருக்கிறேன்… விமான பைலட்டின் பெயர்

சிம்ரன் பார்மர்… என்று விமான பணிப்பெண் தகவல் தெரிவித்தார்.

அதற்கு முன்பு அறிவிப்பில் பேசும் பொழுது… பைலட் ஆண்குரலில் பேசியதாக ஞாபகம்… சிம்ரன் என்கிற பெயரில் ஆண்களும் உண்டு போல.

தீபிகா… பாடிய பாடல்…

அவளுடைய அப்பா தொடங்கி அவளும் சேர்ந்து பாடிய பாடல்… சமீபத்தில் வெளியாகி…. சீனாவில் கூட வெற்றிப்படமாக ஓடி சாதனை படைத்த ‘தங்கல்’ படத்தினுடைய தமிழ் தழுவலில் வந்த பாடல் ஆகும்.  தீபிகா… உன்னால் கணக்கு போட முடியும் என்று நம்ப வைப்பதற்காக இந்தப்பாடல் உதவிக்கு வந்தது.  உண்மையில் தங்கல் படத்தில் மல்யுத்தம் போடுவதற்காகத்தான் பெண்களை அப்பா ஊக்கப்படுத்தி பயிற்சி கொடுத்து தயார் செய்து போட்டியில் வெற்றி பெற செய்வார்.  தமிழில் உணர்வு மங்காமல், உருவம் வழுவாமல்…  திரு. இராஜேஷ் மலர்வண்ணன் – மொழி மாற்றம் செய்துள்ளார்.  அவரது பேட்டி ஒன்றை யு ட்யூபில் பார்த்தேன்.  சினிமா மொழி பெயர்ப்பில் எவ்வளவு நுணுக்கங்கள் உள்ளன என்று தெளிவாக கூறியிருக்கிறார். உதட்டசைவுக்கு ஏற்ற வார்த்தைகளை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும் அவருக்கு.

அன்றைக்கென்று பார்த்து தொலைக்காட்சியில் காமன்வெல்த் போட்டிகள் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தன.  இது 21 ஆவது காமன்வெல்த் போட்டிகள்.  மல்யுத்தத்தில் வெல்ல வேண்டி, கீதா, பபிதா என்கின்ற தன் பெண்களுக்கு பயிற்சியளித்த மஹாவீர் பொஹாட் என்னும் பெரியவர் உடைய வேடத்தில் அமீர்கான் நடத்த படம் தான் தங்கல்.  அதில் தன்னுடைய உடல் வலிமையை, பொலிவை தோற்றத்தை ஏற்றியும் இறக்கியும் காட்டிய அமீர்கான் அவர்களது சாதனை குறித்தும், பட வசூல் சாதனை குறித்தும் ஏராளமாக கட்டுரைகள் வந்துள்ளன.  நானும் வேறு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.  ஆனால்… இந்தக்  கட்டுரை அந்த நோக்கத்தில் படைக்கப்பட்டதல்ல… பெற்றோர்களின் வழிகாட்டுதல்… பள்ளிகளின் வழிகாட்டுதல் மாணவ மாணவியர் மற்றும் குழந்தைகளுக்கு எவ்வளவு தூரம் கூட வர வேண்டும்… எவ்வளவு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்பது பற்றி கொஞ்சம் அலசலாம் என்று உத்தேசம்.

வழக்கம்போல எந்த முடிவுக்கும் வந்துவிடப் போவதில்லை… சிந்திக்க வைப்போம் என்பதை தவிர.

ஒரு கல்யாண வீட்டில் நடனமாடிக் கொண்டு இருக்கிற பெண் குழந்தைகளை மஹாவீர் பொஹாட்… சட்டென, பட்டென அறைவது போல ஒரு காட்சி அமைத்திருப்பார்கள்.  எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர், அவருடைய அப்பா, படிக்கிற காலத்தில் ஒழுங்காக படிக்கவில்லை என்பதற்காக… அவ்வப்போது தேவையான போது… அடித்து… படிக்க வைத்த கதைகளைச் சொல்லுவார்.

அடியாத புள்ளை படியாது என்று பழமொழி வேறு! உதாரணமாக சில கதைகளைச் சொல்வதற்கு நிறையப் பேர் வீட்டில்… சொந்தக் கதைகள் சோகக் கதைகள் இருக்கலாம்.  அப்படி அடி வாங்கிப் படித்த, படிக்காத இரண்டு நண்பர்கள் IAS  ஆகி இருந்தார்கள் அவர்கள் கதையை எனக்கு கூறினார்கள்.  சுவாரஸ்யமாக இருந்தது.  அதற்காக இந்தக் கட்டுரையை படிக்கின்ற அப்பாக்கள் எல்லாரும் தத்தம் பிள்ளைகளை வெளுத்து வாங்கிவிட கிளம்பி விட முடியாது.  அதற்கு பல காரணங்கள்.  முக்கியமான காரணம்… காலம் மாறிவிட்டது… அமெரிக்காவில்… அடித்தால்… அப்பாவே ஆனாலும், போலீஸ் அள்ளிக்கொண்டு… போய்… முட்டிக்கு முட்டி தட்டுவார்களாம்… இந்தியாவில் அதே நிலைமை, வெளியில் தெரியாமல் நிலவுகின்றது.  பள்ளி ஆசிரியர்கள் படும் பாடு கேட்க வேண்டியதில்லை.  பக்குவமாக… சொல்லித்தரும் பக்குவத்தை அடைந்து கொண்டு இருக்கிறார்கள்.  ஆசிரியர் மீது மாணவர் வன்முறையும் மாணவர் மீது ஆசிரியர் பலப்பிரயோகமும் அடிக்கடி செய்தித் தாள்களில் வந்து ஆச்சரியமும் அதிர்ச்சியும் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன. அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் எனக்கு நண்பர்கள், உறவினர்கள்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2019

முடியும் வரை முயற்சி…! தினந்தோறும்  தரும்  மகிழ்ச்சி…!
சாதிப்பின் சங்கமம் சேரன் விளையாட்டுக் குழு
புறப்பட ஆயத்தமாகுங்கள்
பெண்ணிய உரிமைகள்
தடுப்பணை
உயிருக்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு
தடம் பதித்துச் சென்ற மாமனிதர்கள்- 4
குழந்தை வளர்ச்சி
நான் ஏன் வாயே திறப்பதில்லை?
நில்! கவனி !! புறப்படு !!!  4
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 9
நம்பிக்கை நாயகர்கள்
சிறுநீரகத் தொற்றைத் தவிர்க்க
ஏற்றுக்கொள்ளுதல்
மாமரத்தில் கொய்யாப்பழம் – 5
வெற்றி உங்கள் கையில் – 66
இன்பமயமான வாழ்வு
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்