– 2011 – September | தன்னம்பிக்கை

Home » 2011 » September

 
 • Categories


 • Archives


  Follow us on

  வெற்றி பெறும் வித்தை இதோ!

  அறியாமை என்னும் எதிர்மறைக்கு ஆட்படுவது:
  பெரும்பாலும் ஒன்றில் வெற்றிபெறாமைக்கு என்ன காரணம் என்றால், அதைப்பற்றிய தெளிவான அறிவு இல்லாமையே. தெளிவு இல்லாததால், அதுபற்றிய பயம் நம்மை தொற்றிக்கொண்டு, முயற்சிக்கும் முன்னமே, தோற்று விடுவோமோ என்கின்றஎதிர்மறைக்கு ஆட்பட்டு விடுவோம்.
  எடுத்துக்காட்டாக, ஓர் இளம் பெண் உலக அழகி போட்டியில் கலந்து கொண்டாள். அவள் கொஞ்சம் நிறம் குறைவாக இருந்ததால், தேர்வு செய்யப்படவில்லை, அதனால் அவள் சொன்னால் நான் மட்டும் கொஞ்சம் சிவப்பாக பிறந்திருந்தேன்னென்றால் அன்றைக்கே உலக அழகியாகி பேரும் புகழுடன் இருந்திருப்பேன். என்போதாத காலம் இப்படி கஷ்டப்படுகின்றேன் என்றும் அதுபோல் ஒரு அங்குலம் உயரம் குறைவாக இருந்தால் ஒருவன் போலீஸ் வேலைக்கு தேர்வு செய்யாது போனதால், நான் மட்டும் ஓர் அங்குலம் உயரமாக பிறந்து இருந்தேன் என்றால் அன்றைக்கே காவல்துறைஅதிகாரியாகி, பெரியபெரிய பதவியை அடைந்து பேரும் புகழும் பெற்று பெரியவனாகி இருப்பேன். பாலாய்ப் போன இறைவன் என்னை இப்படி குறையாக படைத்து, இந்த இழி நிலைக்குத் தள்ளிவிட்டானே என்றான். இவர்கள் எல்லாம் தன்னிடம் இருப்பதைக் கண்டு கொள்ளாமல், இல்லாததை எண்ணி எண்ணி துன்புறுபவர்கள்.
  இவர்களே கொஞ்சம் மாற்றி யோசித்திருந்தால், நான் கொஞ்சம் அழகு குறைவாக இருந்தால் என்ன? அழகைப்பற்றிய அறிவு நிறைய என்னிடம் உள்ளதே அதைவைத்து, உலக அழகியை தேர்ந்தெடுக்கும், உயர்மட்டக்குழுவின் தலைவியாகி, அதே பேரும், பெறலாமே என செயல்பட்டிருக்கலாம் அல்லவா! நான் உயரம் குறைவாக இருந்தால் எனக்கு போலீஸ் வேலை கிடைக்காவிட்டால் என்ன, அந்தப் போலீஸ் காரர்களை வேலை வாங்கும், அறிவும், ஆற்றலும் என்னிடம் உள்ளதே அதை வைத்து ஒரு மாவட்டத்தின் ஆட்சியாளராகி பேரும் புகழும் பெறலாமே என முயற்சி செய்திருக்கலாம் அல்லவா!
  இதனால் தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தனது பாடலிலே அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்,
  “அறிவுக் கண்ணைச் சரியாத்திறந்தால்
  பிறவிக் குருடனும் கண்பெருமான் என்று”!
  ஆகையினால் நம் அறிவை மேம்படுத்த மேம்படுத்த நமது வெற்றி எளிதாகும் என்பதில் ஐய்யப்பாட்டிற்கு இடமில்லை.
  மாறுதலுக்கு உடன்படாதது
  பெரும்பான்மையோர் வாழ்வில் பின்தங்கிப் போவதற்கு இதுவே முக்கிய காரணமாகும். பாரம்பரியமாக, செய்து வந்த தொழிலை நவீனமயமாக்கலுடன் இணைந்து செயல்படாததால் தோல்வியை தழுவிவிடுகின்றனர். எடுத்துக்காட்டுக்காக, எனது பள்ளிப் பருவத் தோழனின் தந்தை பிரபல ஓவியர், அவர் தூரிகையை எடுத்து எழுதினாலும் சரி படம் வரைந்தாலும் சரி அச்சு அசலாகவே கண்ணைக் கவரும் வண்ணம் பிரமாதமாக இருக்கும். அன்றைக்கு விளம்பர போர்டு செய்வதில் நண்பனின் தந்தைதான் மிகவும் பிரபலமானவராக இருந்தார். அவருக்கு வெளிமாநிலங்களில் இருந்துகூட விளம்பர போர்டு செய்ய தேடி வருவார்கள். அவர் 1990ம் ஆண்டிலேயே அதிகபட்சமாக ஒரு விளம்பர போர்டுக்கு ஒரு லட்சம் வரை வாங்கி உள்ளார் என்றால் பாருங்களேன். என் நண்பன் படிப்பு முடிந்ததும், அப்பாவுடன் சேர்ந்து அதே வேலையைச் செய்யத் தொடங்கினான், ஆனால் அவன் தொழிலுக்கு வந்த காலம் நவீன டிஜிட்டல் ஃப்ளக்ஸ் போர்ட்டுகளின் ஆதிக்கம் மிகுதியாக இருந்ததால், அவன் தொழில் நசியத் தொடங்கியது. உடனே அவன் நவீன தொழில் நுட்பத்தைச் சென்னை சென்று கற்று வந்து தனது தொழிலை அந்த நிலைக்குத் தக்க, டிஜிட்டல், ஃப்ளக்ஸ் போர்டுகளை செய்யத் தொடங்கினான். இப்போது அவன் தயாரிக்கும் விளம்பர போர்டுகள், நாடுமுழுவதும் விற்பனையாகிறது. அவனும், அவன் தந்தையைப்போல் இன்று மிகப்பிரபலமான விளம்பரப் போர்டு தயாரிப்பாளராக வளர்ந்துள்ளான். இன்று அவன் தூரிகையை (க்ஷழ்ன்ள்ட்) கையிலெடுப்பதில்லை, இருந்த போதும் இன்று மும்பை விமான நிலையத்தின் அருகில் இருக்கும் பிரமாண்டமான விளம்பர போர்டு அவனுடைய நிறுவனம் தயாரித்ததாக உள்ளது. ஆனால் அவனைவிட திறமையான ஓவியர்கள், நாங்கள் தூரிகையைத்தான் பயன்டுத்தி எழுதுவோம் என்றபிடிவாதத்தால், சிலர் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டு, சுவர்விளம்பரங்களை எழுதி வயிற்றுப்பிழைப்பை நடத்தி வருகின்றனர். இவர்களைப் பார்த்து சமூகம் என்ன சொல்கிறது என்றால் இவனெல்லாம் திருந்தவே மாட்டான் பெரிய பருப்பு என்று நினைப்பு என்கிறது.
  கால ஓட்டத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு மாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு, இயங்குகின்றவர்களே, முன்னேறிக் கொண்டே இருக்கின்றார்கள் என்றால் அது மிகையாகாது.

  நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்…..

   

  எலும்பும், தோலுமாய் உள்ள  “Skeletal people”
  அல்லது “S” எனும் முதல் வகையினரது
  உடற்கூறுகள் பழக்கவழக்கங்கள்
  அவர்களுக்கு இப்போதுள்ள நோய்களுக்குறிய
  பட்டியலின் சென்ற இதழ் தொடர்ச்சி…

  • சாக்லேட்டுகள், சாக்லேட் சேர்க்கப்பட்ட பானங்கள், ஐஸ்கிரீம், பிஸ்கட்டுகள், கேக் முதலியவை உங்களுக்குப் பிடிக்கும். நடுத்தரமான அளவில் இவற்றை உட்கொள்ளுவீர்கள்.

  Continue Reading »

  நம்பிக்கையின் சக்தி

  “கடைசி இலை’ என்பது ஓர் ஆங்கில கதையின் தலைப்பு. இதன் கதாநாயகன் ஒரு நோயாளி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேருகிறான். அவன் மனதில் அணுவளவுகூட தாம் குணமடைவோம் என்ற நம்பிக்கையில்லை. இதனால் மனமும் பாதிக்கப்பட்டுவிட உட்கொள்ளும் மருந்தினால் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. ஆனால் அவனைப் பேணும் செவிலிப்பெண் மட்டும் நம்பிக்கையுடன் அவனை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறாள்.
  அவனது அடையின் வெளியில் ஒருமரம் தனது இலைகளைத் தினமும் உதிர்த்துக் கொண்டே வருகிறது. அந்தக் காட்சி அவனை மிகவும் பாதித்தது. அதைச் சுட்டிக்காட்டி அதைப்போல தானும் செத்துக் கொண்டிருப்பதாக புலம்ப ஆரம்பிக்கிறான்.
  மரத்தின் ஓர் இலையைத் தவிர அனைத்து இலைகளும் உதிர்ந்து போகின்றன. அந்தக் கடைசி இலை விழும்போது தானும் இறந்துவிடுவோம் என அஞ்சுகிறான். சோகத்தின் பிள்ளையாய் மாறிக்கொண்டே வருகிறான்.
  செவிலி எவ்வளவு தைரியம் சொல்லியும் அவன் நம்பவில்லை. நாளைக் காலை கடைசி இலை உதிரும்போது தானும் உதிர்வோம் என்றே நம்பினான். பொழுது விடிந்தது. என்ன ஆச்சரியம்! அந்த ஒற்றை இலை உதிரவில்லை.! இதைக்கண்டதும் அவனுக்கு மகிழ்ச்சி பிறந்து விட்டது. நம்பிக்கை விதை முளைவிட்டது. அந்த ஒற்றை இலைபோல் தானும் வாழலாம் என எண்ண ஆரம்பித்துவிட்டான். மருத்துவரோடும், மருந்துகளோடும் நன்கு ஒத்துழைத்தான். விரைவில் குணமடைந்தான்.
  அவன் வீட்டுக்குச் செல்லும் நாள் வந்தது. செவிலி வந்து அவனை மரத்தருகில் அழைத்துச் சென்றாள். அந்த ஒற்றை இலையைப் பறித்து அவனிடம் தந்தாள். அது வெறும் துணியில் வரையப்பட்ட செயற்கை இலை என்பது தெரிகிறது. அதை அந்தச் செவிலி, மரத்தின் கடைசி இலை உதிர்வதற்குமுன் ஓர் ஓவியனைக்கொண்டு வரைந்த இலையை மரத்தில் பொருத்தியிருந்தாள். அது அவனது நம்பிக்கையை வளர்க்கும் கருவியாகி வெற்றி பெற்றது.
  பார்த்தீர்களா! நம்பிக்கை என்னென்ன செய்கிறதென்று! திடமான உள்ளமும், தன்னம்பிக்கையும் இருந்தால், உடலென்ன, உலகையே வென்றுகாட்டலாம்.
  இதை உண்மையென்று நம்புங்கள். உடலும், உள்ளமும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை. அங்கே சிறு நம்பிக்கைத் தூறல் பட்டாலேபோதும். செடிகளும், பூக்களும் பூத்துக்குலுங்க ஆரம்பித்துவிடும்.

  அறிவோம் அறிவியல்

  தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன?
  நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியானது மாறிமாறி வெப்பமும் குளிர்ச்சியும் வருகின்ற பருவ நிலைகளைக் கொண்டது.
  கோடைக்காலங்களில் குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக தாகம் எடுக்கின்றது. அதன் காரணமாக அதிகமான தண்ணீரைப் பருகுவோம். பொதுவாகவே நம் உடலானது பருவநிலைச் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாது உடல் வெப்பநிலையை உடல் உள்உறுப்புகள் சீராகவே வைத்திருக்கின்றன. கோடைக்காலத்தில் அதிகப்படியான வெப்பம் நம் தோலின் மீது விழுகின்றபோது அதன் மூலமாக அதிகப்படியான நீர் வியர்வை மூலமாக வெளியேற்றப்படுகின்றன. அவ்வாறு அதிகமான நீர் வெளியேறுகின்றபோது உடலின் நீரின் அளவு குறைகின்றது. அவ்வாறு குறைவு ஏற்படுகின்றபோது உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருப்பதற்காக மூளை நரம்பு செல்களுக்குக் கொடுக்கும் உணர்வு (தகவல்) தான் ‘தாகம்’ ஆகும்.
  மூளையின் ஒரு பகுதி ஹைபோதாலமஸ் (Hypothalamus) மிகமிகச் சிறிய அளவிலான நியூரான்கள் அடங்கியிருக்கின்றன. இந்த நியூரான்களின் முக்கியப் பணி உடல் வெப்பநிலை, பசி மற்றும் தாகம் இவைகளைக் கவனிப்பதுதான். ஹைபோதாலமஸ் உள்ள நியூரான்கள் பிட்யூட்டரி சுரப்பி வழியாக நரம்புகளோடு இணைந்து இருக்கின்றன. உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும்போது இந்த நியூரான்கள் மிக வேகமாக செயல்பட்டு நரம்பு உணர்வுகளைத் தெரிவிக்கின்றன. அந்த உணர்வைத்தான் ‘தாகம்’ என்கிறோம்.
  தாகம் எடுக்கின்றபோது குளிர்ந்த நீர், குளிர்ந்த பானங்களைப் பருகக் கூடாது. காரணம், குளிர்ந்த பானங்களில் வேதிப்பொருட்கள் கலந்து இருப்பதால் உடலுக்கு நல்லதல்ல. அறை வெப்பநிலையில் (Room Temperature) நீரின் மூலக்கூறுகள் இயல்பான நிலையில் இருக்கும். ஆனால் இயல்பான நிலையில் இருக்கும் நீரை குளிர்விக்கின்றபோது நீரின் மூலக்கூறுகள் மிக நெருக்கம் அடைந்து தன்னுடைய ஆற்றலை வெளியேற்றிவிடுகின்றன. இப்படி ஆற்றல் குறைந்த குளிர்ச்சியான நீரை பருகுகின்றபோது உடல் உள்உறுப்புகள் தன் அதிகப்படியான ஆற்றலை செலவழித்து அந்தக் குளிர்ந்த நீரை இயல்பான நிலைக்குக் கொண்டுவர உடல் உள்ளுறுப்புகள் முயல்கின்றன. அவ்வாறு இயங்குகின்றபோது தாகம் எடுப்பது குறைந்துவிடும். இதனால் மனிதனின் உடல் வெப்பநிலை சீராக இல்லாமல் உடல் உபாதைகள் (சளி, ஜுரம்) ஆகியவை ஏற்படுகின்றன.
  எனவே தாகம் எடுப்பது மனித உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. எப்பொழுதெல்லாம் தாகம் எடுக்கிறதோ தண்ணீரைப் பருகுங்கள். ஆரோக்கியமாக வாழ்வோம்.

  வறுமை ஓர் உந்துசக்தி

  அன்றாட அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்ய வசதியில்லாதவர் வறுமையில் உள்ளவர் எனலாம். வளரும் நாடாகிய நம் நாட்டில் மிகப்பலர் ஏழைகள்தான். வறுமை நிலையில் வாழும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெற்றோர் அல்லது ஒரு மாணவர் இந்நூலை படிக்க நேரிடலாம். அவர்களைப் பார்த்து ஒன்றைத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்.
  உங்களிடம் பணம் இல்லாததால் உங்களை ஏழை என்று எண்ணி விடாதீர்கள். மேலும் வறுமை என்பது ஒரு தற்காலிக நிலைதான். அதை எதிர்கொண்டு முயன்று செல்வந்தர்களானோர் பட்டியலை என்னால் தர இயலும்.
  நம் மாநிலத்தில் ஆண்டு தோறும் பள்ளி இறுதிவகுப்பை முடிக்கும் ஆறு லட்சம் மாணவர்களில் நான்கரை லட்சம் பேர் வறுமை காரணமாக மேற்படிப்பைத் தொடரமுடியாமல் இருக்கின்றார்கள்.
  வறுமையை எண்ணி வருந்தாதே. அமெரிக்காவின் மிகப்பெரிய பணக்காரர் ராக் பெல்லர் இளம்வயதில் பரம ஏழையாகவே இருந்தார். அவரிடம் அடுத்த வேளை உணவுக்கான காசு இல்லை. ஆனால் அடுத்த பத்து ஆண்டுகளில் பணக்காரனாக வேண்டும் என்னும் வெறி இருந்தது, அதனால் வெற்றி கண்டார்.
  உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்று இந்தியாவின் அம்பானி குடும்பம். அந்த திரிபாய் அம்பானி தன் 16ம் வயதில் எழுத்தராகச் சேர்ந்து ஈட்டியது மாதம் ரூபாய் முந்நூறு தான்.
  இன்று உலகில் எந்த பெரிய நகருக்குச் சென்றாலும் ஓங்கி நின்று ஒளிர்கிறதே ஓபராய் ஹோட்டல்ஸ் என்னும் பெயர், அந்த ஓபராய் ஒரு காலத்தில் ஏழை எழுத்தர் தான்.
  டெல்லி, சென்னை, ஐதராபாத், மும்பை, கொல்கத்தா இந்நகரங்களில் வாழும் நூறு பணக்காரர்களை வரிசையாக நிறுத்தினால், அவர்களுள் ஐம்பது பேர்கள் வறுமையில் தொடங்கி வானைத் தொட்டவர்களாக இருப்பார்கள்.
  இவர்களெல்லாம் வறுமையை விரட்டிய போது, ஏன் உன்னால் முடியாது?
  உள்ளோரிடம் இல்லார் குறுகி நிற்பது இல்லாமையால்தானே?
  உன்னிடம் சொத்து இல்லாமல் இருக்கலாம். உடல் என்னும் உன்னத சொத்து உன்னிடம் உள்ளதல்லவா?
  “வெறுங்கை என்பது மூடத்தனம்
  விரல்கள் பத்தும் மூலதனம்”
  என்று கவிஞர் தாரா பாரதி சொல்வது உன் செவிகளில் விழவில்லையா?
  உன்னிடத்தில் இலக்கு உள்ளது, கடின உழைப்பு உள்ளது, உள்ளத்தில் உறுதி உள்ளது, இரக்க உணர்வும் பணிவும் இயற்கையாவே உள்ளது. இவையெல்லாம் உன்னிடத்தில் உள்ள சொத்துகள் அல்லவா? இனி உன்னை ஏழை என்று பிரகடனப் படுத்தாதே.
  ஒரு மாணவர் சொல்கிறார். “நான் மிகவும் ஏழை. என்னால் ஐஅந படிக்க இயலாது.”
  அவரைப் பார்த்துக் கேட்டேன். “ஒருவர் நூறு கோடி ரூபாய் தரத் தயாராக உள்ளார். உன் இரு கண்களையும் விற்கச் சம்மதமா?”
  “முடியாது” என உரைத்தார்; உணர்ந்தார். எனவே பணம் மட்டுமே சொத்து என்று நினைக்காதே. கண்களுக்கு மட்டும் நூறு கோடி. இன்னும் அதை விட மேலான சொத்துகள் உன்னிடத்தே உள்ளன.
  உடல் என்றும் ஒப்பற்றசொத்து. அதை பேணுவது உன் முதற்கடமை. அளவான உணவு, அன்றாடப் பயிற்சி என வழக்கப்படுத்திக் கொள். உண்மையான மகிழ்ச்சியைத் தருவது நலம் மிக்க உடம்புதான்.
  தாஜ்மகாலும், பைசா நகரத்துக் கோபுரமும் அதிசயங்களில் உன் உடம்புதான் – உன் பெற்றோர் கொடையாகத் தந்த உன் உடம்புதான் பேரதிசயம்.
  இப்படியே நீ ஏழையாக இருந்து விடப்போவதில்லை. உன்னிடத்தில் இலக்கு என்னும் மிகப்பெரிய சொத்து இருக்கிறது. காலம் கனியும். நீயும் ஒரு பொறியாளராகவோ, மருத்துவராகவோ, ஓர் ஐஅந அதிகாரியாகவோ அல்லது நீ விரும்பும் துறையில் வல்லுநராகவோ ஆவது உறுதி.
  ஒரு சிற்றுண்டிச் சாலையில் வேலை பார்த்த வீரபாண்டியன் – மதுரைக்காரர் – பன்னிரெண்டாம் வகுப்பில் புவியியல் பாடத்தில் மாநில அளவில் முதல் தகுதி பெற்றார். ஐஅந படிக்க ஆசை கொண்டார். நானும் பயிற்சி தந்தேன். 10 ஆண்டுகள் ஊண் உறக்கம் தவிர்த்தார். இன்று அவர் ஓர் ஐஅந அதிகாரி.
  இந்த வீரபாண்டியனிடத்தில் என்ன சொத்து இருந்தது? ஐஅந கனவு என்னும் சொத்தைத் தவிர. இப்போது சொல் – நீ ஏழையா? உன்னிடத்தில் கனவு இருக்கிறது. எனவே உன்னிடத்தில் ஒரு பணக்காரன் இருக்கிறான்.
  “காலம் போன காலத்தில் என்ன செய்ய முடியும்?” என்று புலம்புவதற்கு நீ என்ன கிழவனா? (கிழவர்கள் கூட சாதிக்கிறார்கள் என்பது வேறுகதை).
  நீ இளைஞன். காலம் என்னும் சொத்து உன்னிடத்தில் நிறையவே உள்ளது.
  உன் கனவு மெய்ப்பட வேண்டுமா? காலத்தைக் கவனமாகப் பயன்படுத்து. வாய் உள்ள பிள்ளைதான் பிழைக்கும் – இது நம்மூர் பழமொழி.
  ஆம். உன்னிடத்தில் உள்ள வாய் மிகப்பெரிய செல்வம். இந்த வாய்த் திறமையுள்ள மேலாளர்களுக்குக் கம்பெனிகள் பல இலட்சங்களைச் சம்பளமாக கொட்டிக் கொடுக்கின்றன.
  பேசக்கற்றுக் கொள். ஆங்கிலத்தில் பேசக் கற்றுக் கொள். அம்மொழி வீட்டின் ஜன்னல் போன்றது. ஜன்னல் இல்லாத வீட்டில் வசிக்க முடியுமா?
  பேசி, அசத்தி மற்றவர்களிடம் வேலை வாங்குவது தனித் திறமைதான். அதை வளர்த்துக் கொள்ள சில வழிமுறைகள் உள்ளன.
  1. கண்ணாடி முன் நின்று உனக்கு நீயே ஆங்கிலத்தில் பேசு.
  2. கஓஎ முதல் 12 ம் வகுப்பு வரையிலான ஆங்கிலப் பாடநூல்களைப் பாதுகாத்துப் படி
  3. தொலைக்காட்சியில் வாசிக்கப்படும் ஆங்கிலச் செய்தியை ஊன்றிக் கவனி.
  4. ஜெஃபரி ஆர்ச்சர், சிட்னி ஷெல்டன், ஆர்தர் ஹெய்லி போன்றோர் எழுதிய ஆங்கில நாவல்களைப் படி.
  5. பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.
  6. உன் பேச்சைப் பதிவு செய்து, மீண்டும் கேட்டு, தவறுகளைத் திருத்து.
  7. நிறுத்தி நிதானமாகப் பேசிப் பழகு.
  8. எழுதி அனுப்பும் முன், எழுதியதைப் படி, திருத்து. உன் விண்ணப்பத்தில் உள்ள ஓர் எழுத்துப்பிழை கூட உன் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும். (அன்புள்ள ஐயா, என்பதை அன்புள்ள ஜயா என்று எழுதினால் யார் வேலை கொடுப்பார்).
  உணர்வாட்சித் திறன் ஓர் ஒப்பற்றசொத்து (Emotional Intelligence is a valuable property)
  கோபம், பயம், வெறுப்பு, பொறாமை, காமம் இவற்றை அடக்கி ஆளும் திறன் மிக முக்கியம். இத்திறன் இல்லாதவர்களிடம் பணம் இருந்தாலும் மகிழ்ச்சி இருக்காது, நிம்மதி இருக்காது. சோகத்தை விதைத்து அறுவடை செய்யும் இவர்கள் பணக்கார ஏழைகள்.
  ‘மனம் வாடி துன்ப மிக உழன்று – பிறர்
  வாட பல செயல்கள் செய்து’
  வாழ்வோர் என இவர்களை அறிமுகம் செய்கிறார் பாரதியார். இத்தகைய மனோபாவத்தால் இவர்கள் நாளடைவில் நண்பர்களையும் செல்வத்தையும் இழக்கக் கூடும்.
  சிலருக்கு வருந்துவதே வாழ்க்கை. கோடையில் வெயில் அதிகம் என்பார். வாடையில் மழை அதிகம் என்பார். காரணம் கண்டு பிடிப்பதே இவர்களுடைய வழக்கம்.
  சில்லரை காரணங்களுக்காக சினம் கொள்வதும் மனம் வருந்துவதும் சிலருக்கு அன்றாட வாழ்க்கை. நீ அப்படியாயின், உன் நடத்தையை மறு ஆய்வு செய்து, சீரமைத்தல் வேண்டும். இல்லையேல் மன நோயாளியாக மாறிவிடுவாய்.
  வாழ்க்கையில் நாம் எப்போதும் வெற்றிபெறமுடியாது. நாம் கட்டுப்படுத்த இயலாத சில புறக் காரணங்களால் தோல்விகள், துன்பங்கள் ஏற்படும்.
  தேர்வுக்கு முதல்நாள் தவறி விழுந்து கட்டுப் போட நேர்வது, தேர்வு விடைத்தாள் சிலசமயம் கவனக் குறைவாக திருத்தப்படுவது – இவை போன்றன புறக் காரணங்களால் நிகழ்வன.
  12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவு வெளியாகி, ஒரு மாதம் கழித்து, மறுகூட்டலில் 1184 மதிப்பெண் பெற்றார் ஒரு மாணவர். அது முன்னர் அறிவிக்கப்பட்ட மாநில முதல் மதிப்பெண்ணை விட அதிகம். கிடைத்திருக்க வேண்டிய பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்காமல் போயிற்று. இதில் அவருடைய தவறு எதுவுமில்லை.
  மர்ஃபி விதி இது: “ஏதாவது ஏடாகூடமாக நடக்க வாய்ப்பிருந்தால், அது நடந்தே தீரும்” அதற்காக வருந்துவதை விடுத்து, அடுத்த வாய்ப்புக்குத் தயாராக வேண்டும்.
  எனவே, இன்பத்திலும் துன்பத்திலும் நிலை தடுமாறாமல் உன்னால் இருக்க முடியுமானால், நீ ஏழை அல்லன்.

  ஏழை என்னும் மனோபாவம்
  ஏழை என நினைத்தால் நீ ஏழை; இல்லை என்றால் இல்லை.
  சிலர் பதவி உயர்வு பெற்றாலும், வணிகத்தில் சிறப்படைந்தாலும் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். அதற்குப் போதும் என்றபொன்மனம் – நிறை மனம் வேண்டும்.
  குறை காண்பார் எதிலும் குறை காண்பார். எனக்குத் தெரிந்த விவசாயி ஒருவர் நன்றாக விளைந்தால் விலை இல்லை என்பார். விலை நன்கு கிடைத்தால் விளைச்சல் இல்லை என்பார். அவரைப் போன்றவர்கள் எவ்வளவு செல்வம் இருந்தாலும் ஏழைகள்தாம்.
  ஒருவர் அண்ணனைப் போல் தான் வசதியாய் இல்லையே என வருந்துவார். இன்னொருவர் தன் நண்பன் வீட்டைவிட தன்வீடு சிறியதாய் உள்ளதே என்று வருந்துவார். மற்றுமொருவர் தன் பக்கத்து வீட்டுக்காரரின் காரைப் போன்று தனக்கில்லையே என்று வருந்துவார். தம்முடைய மகனும் மகளும் திறமை மிக்கவராய் இருப்பதை எண்ணி இவர்கள் மகிழார். இவர்கள் தாம் ஏழையினும் ஏழைகள்.
  உன் பெற்றோர்கள் ஏழையர் என்று எண்ணாதே. உனக்கு இலக்கும், கனவும் இருந்தால் உன் பெற்றோர் ஒருபோதும் ஏழையரல்லர்.
  இப்போது சொல் நீ ஏழையா. ‘இல்லை’ என உறுதியாகச் சொல்வது என் காதில் விழுகிறது.
  வறுமை ஒரு வாய்ப்பு
  பணக்காரர் ஆவதற்கு வறுமை ஒரு தூண்டுகோலாகவும் அமையும். வறுமை சோம்பியிருக்க அனுமதிக்காது. பணக்காரன் ஆகும் கனவு ஏழைக்குதான் வரும்.
  மார்ச் 2009ல் நடந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் ஜோஸ் ரிஜான் மாநிலத்தில் முதலிடம் பெற்றான். மதிப்பெண் 496/500. வறுமையில் வாழ்ந்த மீனவப் பெற்றோரின் மகன் அவன். வலையில் மீன் விழுந்தால் மட்டுமே அவனுடைய வீட்டு உலையில் சோறு வேகும். அந்த வறுமைதான் அவனை ஒரு வெறியோடு படிக்கச் செய்தது. அவனுடைய பெற்றோர் தொடர்ந்து கடலோடு மல்லுக்கட்டக் கூடாது என்பது தான் அவனது ஆசை.
  பசியால் வாடும் இளைஞன் தன் குடும்பத்தின் வறுமை நிலையை மாற்றமுனைப்புக் காட்டுவான். எந்த ஒரு மோசமான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் சக்தி அவர்களுக்கு உருவாகும்.
  “ஒரு பையனோ பெண்ணோ ஏழையாய் பிறப்பது குற்றமில்லை; ஆனால் ஏழையாய் மடிவதுதான் குற்றம்.” என்று சொல்கிறார் உலகத்துப் பணக்காரர் பில்கேட்ஸ். எவ்வளவு பொருள் பொதிந்த கூற்று இது. அவரே அவ்வளவு வசதியற்றகுடும்பத்தைச் சேர்ந்தவர்தான். வெற்றி பெறவேண்டும் என்றவெறி இருந்ததால் தன் குடும்பநிலையை மாற்றிக் காட்டினார்.

  டாக்டர். அ.ப.ஜெ. அப்துல் கலாம்
  பாரத பூமியின் தவப்புதல்வர்களுள் தலைசிறந்த ஒருவர் அவுல் பக்கிர் ஜெயினுலாபுதீன் அப்துல்கலாம். திரு.ஜெயினுலாபுதீன் திருமதி. ஆசியம்மாள் ஆகிய பெற்றோருக்கு இராமேஸ்வரம் தனுஷ்கோடியில் 15.10.1931 அன்று பிறந்தார்.
  மீனவர்களுக்கு மீன்பிடி படகுகளை வாடகைக்கு விட்டு, அதில் கிடைத்த வருவாயில் கலாமைப் படிக்க வைத்தார் அவர் தந்தையார். கலாமும் பள்ளியில் படிக்கும் போது வீடுதோறும் பேப்பர் வினியோகம் செய்தல் போன்றசிறுசிறு வேலைகளைச் செய்து பொருள் ஈட்டி உதவினார்.
  உயர்நிலைப் படிப்பை இராமநாதபுரம் ஸ்குவார்ட்ஸ் கிறித்துவ பள்ளியிலும், பட்டப் படிப்பை திருச்சி புனித ஜோசப் கல்லூரியிலும், விமானவியல் பொறியியல் படிப்பை சென்னை MIT கல்லூரியிலும் முடித்தார். பள்ளிப் படிப்பை முடிக்காத தன் சகோதரர்கள் பாராட்டும் வகையில் குடும்பத்தின் முதல் பட்டதாரியானார் கலாம்.
  1958-ல் DRDO (Defence Research and Decvelopment Organisation) நிறுவனத்தில் முதுநிலை அறிவியல் உதவியாளராக சேர்ந்தார். 1962-ல் ISRO (Indian Space Research Organisation) நிறுவனத்தில் சேர்ந்தார். குறுகிய காலத்தில் ரோகினி – I என்னும் விண்கலத்தை ஏவி வெற்றி கண்டார். பின்னர் இராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் 13.05.2001 நடந்த அணு ஆயுத சோதனையின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
  பல்வேறு நிலைகளில் 19 ஆண்டுகள் ISRO வில் பணியாற்றியப் பின், மீண்டும் DRDO நிறுவனத்தில் ஏவுகணைத் துறையின் தலைவரானார். அக்னி மற்றும் பிருத்வி ஏவுகணைகளை விண்ணில் பாய்ச்சி வெற்றி கண்டார்.
  இந்தியாவின் ஏவுகணை மனிதர் (Missile Man of India) என்னும் புகழைப் பெற்றார். நவம்பர் 2001 வரையில் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றினார். 2002 முதல் 2007 வரை உலகமே போற்றும் வண்ணம் 11வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார். அதற்குமுன் ஒரேமுறை 1964-ல் NASA வில் ஒரு பயிற்சிக்காக அமெரிக்கா சென்றார்.
  ஏவுகணை விஞ்ஞானி ஒரு சிறந்த மனிதநேயப் பண்பாளராகத் திகழ்கிறார். முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நடக்க உதவும் கருவிகளே பெருஞ்சுமையாய் இருந்ததைக் கண்டு மனம் இரங்கினார். வெறும் 300 கிராம் எடையுள்ள கார்பனால்; செய்யப்பட்ட நடைக் கருவியை உருவாக்கி உதவினார்.
  1981-ல் பத்மபூஷன் விருதும், 1990-ல் பத்ம விபூஷன் விருதும் பெற்றார். 1998-ல் நாடு அவருக்கு பாரதரத்னா விருதை வழங்கி மகிழ்ந்தது. 2020 ல் இந்தியா வளர்ந்த நாடாக, வளமை மிகுந்த நாடாக வேண்டும் என்பது அவரது கனவு.
  தொலை நோக்குப் பார்வையும், தெளிவான நோக்கமும் கொண்ட கலாம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஊக்க சக்தியாக, உந்து சக்தியாக விளங்குகிறார்.
  வறுமை என்பது அவரை இளமையிலேயே புடம்போட்ட தங்கமாக மாற்றியது.
  இந்திய வரலாற்றின் மாமனிதர்களுள் ஒருவராக அவர் உருவாவதற்கு வறுமை ஒருபோதும் ஒரு தடைக்கல்லாக இருந்ததில்லை; மாறாக படிக்கல்லாகவே பயன்பட்டது.

  வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!!

  மனிதனின் அறியாமை இருளைப் போக்கி, அறிவுக் கண்களைத் திறந்து வைக்கும் ஆசிரியப் பணியின் சிறப்பை உணர்ந்து பழமையும் பெருமையும் வாய்ந்த அவினாசிலிங்கம் மகளிருக்கான மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர்.

  • பூ.ச.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல் பெண் முதல்வர் என்கிற பெரிமைக்குரியவர்
  • Education Panel of C11-உறுப்பினர்

  Continue Reading »

  உள்ளத்தோடு உள்ளம்

  மனிதனை மனிதனாக உருவாக்கும் சிற்பிகள்;
  மாணவர்களின் காலக்கண்ணாடி;
  நேர்த்தியான ஆற்றல்மிக்க
  மாணவ சமூகத்தை உருவாக்கும் முதல்வர்கள்;

  Continue Reading »

  நெடுஞ்சாலை நந்தவனங்கள்

  நான்கு வழிச்சாலைகள் வேகம் கூட்டுவதைப் போல சிந்தனையைக் கூட்டுகின்றனவா? முன்காலங்களில் “ஊருக்குப் போறேன்” என்று பக்கத்து வீட்டுப் பசங்களிடம் சொல்லும்போதே மனசு படபடக்க ஆரம்பித்திருக்கின்றது. இன்றைக்குள்ள குழந்தைகளுக்கு வேறு விசயங்கள் உண்டு. திருச்செங்கோடு, ஈரோடு, திருப்பூர், அவினாசி என ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம் இருந்தது. அந்தந்த ஊருக்கு குழந்தை மனசில் ஒரு “முக” அடையாளம் இருந்தது.
  ‘ரோட்டோர’ என்கின்றபழைய அடையாளங்கள் மாறிப்போய் விட்டது.
  ரோட்டோர குழந்தைகள் விளையாட்டு, வழியிலுள்ள ஊருக்குள் நுழைந்து வெளியேறும்போது கிடைத்த காட்சிகள், திருவிழாக்களின் அடையாளங்கள், சிலசமயம் பலபேரால் இராசியான விஷயம் என்று சொல்லப்படுகின்றஇறுதி ஊர்வலத்தில் செல்கின்றவெள்ளை ஆடை போர்த்திய உருவங்கள் என எல்லாக் காட்சிகளும் கடந்த காலமாகி மனதிற்குள் படிந்திருக்கின்றன.
  பலூன் விற்பவர்கள், சமோசா, பொரி, மக்காச்சோளம், பனை கிழங்கு, வண்ண வண்ண பஞ்சுமிட்டாய்கள், வெளியூர் பயணிகளுக்காக வண்ண வண்ணமாய் கண்களைப் கவர்ந்திழுக்கும் பல்வகை குழந்தை விளையாட்டுப் பொருட்கள், கோயில் திருவிழாவில் சைக்கிளை வேகமாக ஓட்டி வித்தை காட்டும் விற்பன்னன், கலைக்கூத்தாடிகள், அவர்களின் குடும்பத்தினர், கல்யாண மாலையோடும் கண்களில் அயர்ச்சி கலந்த கனவுகளோடும் கூச்சப்பட்டு நடக்கும் மணமக்கள், அந்தக் கூட்டத்தில், ஊர்வலத்தில் பெரியவர்களின் அதட்டலுக்கும் மிரட்டல் பார்வைக்குமிடையே மணப்பெண்ணின் கையிலிருக்கிற பூச்செண்டை தொட்டுப் பார்த்துவிட்டு கைகளுக்கு கிடைக்காமல் சுற்றி ஓடுகின்றபொடுசுகள்… என புகைவண்டி மாதிரி… நினைவலைகளை நீளச்செய்கின்றநிகழ்ச்சிகள் நிறைய பழைய நெடுஞ்சாலைகளைச் சுற்றி பயணம் போகையில் நிகழும். தற்பொழுது வேகம் கூடியிருக்கின்றது. அழகான “மீடியன்” என்கின்றபூச்செடிகளை எண்ணற்றகிலோமீட்டர் தூரங்களுக்குப் பார்க்க முடிகின்றது. அழகான பூக்கள் பூத்திருக்கின்றன. அதன் மீது படியும் புகைகளையும் மொட்டுகளாக இருக்கையிலேயே புறத்தே தவிர்த்துவிட்டு உள்ளே இருக்கின்ற மென்மையான இளஞ்சிவப்பு நிறம், மஞ்சள் நிறத்தோடும் வாகனப் போக்கின் காற்றலைக்கேற்ப அலைந்தாடும் புத்தம்புது அரளிப்பூக்கள், சற்றே பனிப்பெய்தால் கிருஷ்ணகிரிப் பக்கம் பனித்துளியோடு வேறு காட்சிகள் நமக்குள் பதிவாகின்றது.
  அந்த நினைவுகளையெல்லாம் இந்த நந்தவனங்களில் இருக்கின்றமலர்கள் மீது படியச்செய்து படிக்க முடிகின்றது.
  “நிதானம் ஞானத்தின் துணைவன்” என்று தேசிய சட்டப்பள்ளி, பெங்களூரின் பரிட்சை ஹாலுக்குள் நுழையும் சுவற்றின் முன் எழுதிப் போட்டிருந்தார்கள், “இன்றைய சிந்தனை என்று”.
  தோற்றேன், என நீ உரைத்திடும் போதிலே வென்றாய்! என்று மகாகவி பாரதியார் சொன்னது நெடுஞ்சாலைப் பூக்களுக்குத் தெரியுமா என தெரியவில்லை. மழலைகள் இந்தப்பக்கம் அந்தப்பக்கம் பார்க்க விஷயங்கள் இல்லை என்கின்றகுறை தென்படாமல் நெடுஞ்சாலையில் போகையில் உற்சாகமாய்த்தான் காணப்படுகின்றன.
  நமக்குத்தான்… எதை நாம் கைகளில் வைத்திருந்தோம் என்று தெரிந்தால் எதை இழந்துவிட்டோம் என்பதும் தெரிவதாக நினைத்துக் கொள்கின்றோம்.
  அரளி நன்றாக வளரக்கூடியது. தேசிய நெடுஞ்சாலை நண்பகலில் துறைப் பணியாளர் ஒருவர் அதிகமாக வளர்ந்து இருந்ததைக் கத்தரித்துக்கொண்டு இருந்தார். சரியான உயரத்தில் இருந்தால் தான்; அது எதிரில் வரும் வாகனங்கள் இரவில் கண் கூசுமளவும் ஓளிவெள்ளத்தை வாறியிறைக்காமல் இருக்கும் என்றார்.
  கலசப்பாடி என்பது ஊர்ப்பெயர், அங்கு போக அழகான சாலை மண்சாலை தான். அடர்வினை பகுதிகளில் வன விலங்குகளின் நன்மை கருதி அமைந்துள்ள இத்தகைய செங்குத்தான பாதைகளில் முன்பொரு சமயம் பயணம் செய்த அனுபவம் உண்டு.
  கலசப்பாடியில் இருந்து பார்த்தால் மூன்று புறங்களிலும் மலையன்னையின் பச்சை பரப்பு தான் தெரிந்தது. இந்த மலைகளின் மற்றொரு புறத்தில் தான் சித்தேரி மலை இருப்பதாக ஊரில் பெட்டிக்கடையில் பேசிக்கொண்டார்கள். பெட்டிக்கடை எல்லா ஊரிலும் தகவல் களஞ்சியமாக இருக்கின்றது.
  கலசப்பாடியில் ஊர் ஆரம்பிக்கும் பொழுதே ஒரு அழகான புல்வெளியும் அதன் மையமாக ஒரு கோவிலும் அமைந்து இருந்தது. கோவிலுக்கு வெளியே பந்தக் காலாக கற்களால் ஆன தூண்களும் வேய்வதற்கான மூங்கில்களும் சற்றே முன்பு நடந்து முடிந்திருந்த திருவிழாவிற்கு சாட்சிகளாக நின்று கொண்டு இருந்தன.
  அங்கேயிருந்து பைனாகுலரில் பார்த்தால் அடர்ந்த காடுகள் நிறையத் தெரிந்தது. மதியம் சுமார் மூன்று மணி இருக்கலாம். கல்வராயன் மலைத்தொடரின் ஒரு பகுதி இந்த கலசப்பாடி. பிற்பாடு, எர்ர்ஞ்ப்ங் ஙஹல்ள் பார்த்தேன். இனிமேல் தான் எர்ர்ஞ்ப்ங் உஹழ்ற்ட் மூலமாகப் பார்க்க வேண்டும். நேரில் பார்க்கையில், மலையன்னையின் மடியிலிருக்கின்றநந்தவனங்களின் விஸ்தீரணம் விசித்திரமாகத்தான் இருக்கின்றது.
  கலசப்பாடியிலிருந்து சித்தேரி செல்லும் மூன்று பாதைகளில் மிகச் சிரமமானது எந்தப்பாதை என்று கேட்டு அதைத் தேர்ந்தெடுத்தோம். உடன் நண்பர் கணேஷ். தனது பள்ளி நாட்களில் மாநில அளவிலான கிரிக்கெட் வீரர் ஆக இருந்த ஞாபகத்தில் மலைமீது வேகமாக ஏறத்தொடங்கினார். ஊரிலிருந்து அரசநத்தம் வழியாக என்றால் வரத்தயாரான கூட்டம் செங்குத்தான நடைபாதை என்றவுடன் ஒன்றே ஒன்று அதுவும் நண்பர் சரவணன் என்று சுருங்கிப் போய்விட்டது.
  இரண்டு மூன்று மணிநேரம் ஆகும் என்றகணக்கீட்டோடு ஏறத்தொடங்கினோம். மலை சற்றே அடர்த்தி குறைவானதாகத்தான் இருந்தது. பறவைகளும், மற்றஉயிரினங்களும் அதிகம் காண இயலவில்லை. வாகனம் அரூர் திருப்பம் சென்றுதான் வர வேண்டும் என்பதால் நான்கே பேர் மட்டுமே இந்த மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தோம். மிக வயனாதவர்கள் வாகனத்தில் திரும்ப அனுப்பப்பட்டு இருந்தனர்.
  பாதிமலை முடிகையில் ஒரு நீர் வழிப்பாதை வருகின்றது. அதன் வழியாக நீர் வழிந்தோடினால் அருவி மாதிரி பார்க்க மிக அழகாக இருந்திருக்கும். இங்கிருந்து எதிரேயிருக்கின்ற ஒரு மலையுச்சியைப் பார்த்தால் உச்சியில் இரண்டு பேர் எதற்கு என்றே தெரியாமல்… அனேகமாக மலைத்தேன் எடுக்க வேண்டியிருக்கலாம், முகட்டின் செங்குத்தான சரிவில் அபாயகரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
  நண்பர் கணேஷின் மூளை பரபரப்பாக வேலை செய்தது. பல திசைகளில் செல்லத் திரும்பிய அவரை சரவணனுடன் பின் தொடர ஏதுவாக்கினோம்.
  ஒரு மலையேற்றம் முடிந்து சற்றே சமதளம் வந்து கொஞ்சம் இறங்கத் தொடங்கினால் நீர் வழிந்தோடும் சிறு ஓடை தெரிகின்றது.
  அதற்குச் சற்றே மூன்று ஒற்றையடிப் பாதையில் நிறையக் கற்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அதன் மீது ஒரு சில இலைகளைத் தூக்கிப் போட்டுவிட்டு “காட்டாளி” பொறந்த இடம் என்றான் நண்பன்.
  விசாரித்த பொழுது, காட்டாளி என்பவர் அம்மாவிற்கு பிரசவம் பார்க்க அவளது உறவினர்கள் இரு மூங்கில் இடையே சேலையைத் தொட்டில் மாதிரி கட்டி தூக்கி பல்லக்கு போல கொண்டு வந்தார்களாம்.
  இந்த இடத்திற்கு வந்து சேர்ந்தபொழுது வலி அதிகமாகிவிட, குழந்தை பிறந்துவிட்டதாம். அதனால்தான் அவனுக்கு “காட்டாளி” என்றபெயரும், அந்த இடத்தே ஒரு நினைவு குவியலும் இருக்கின்றதாம்.
  துரிசு, ஊஞ்ச, பொருசு, சந்தனம், புங்கன் என்று மரங்களின் அணிவகுப்பும் பெயர்களும் வரிசையாகப் போய்க்கொண்டே இருந்தன. ஒரு மரத்தில் மலர்கள் ரோஸ் வடிவத்தில், சின்ன நத்தையின் கொம்புகள் நூறு இருநூறு ஒன்றாக பட்டுக்குஞ்சம் போல் முளைத்தால் எப்படியிருக்குமோ, அப்படியிருக்க அதைப் பலநாட்கள் புத்தகங்களிலும் நெட்டிலும் தேடி பெயர் கண்டுபிடித்தது ஒரு அழகான அனுபவம்.
  இலண்டானா காமரா என்கின்ற புதர்ச்செடி பாதையின் இருபுறமும் முப்பதடிக்கு முளைத்து மூடியிருக்க இடையேயிருந்த சின்ன பாதை வழி நடந்த அனுபவம் அலாதியானது.
  இரு வருடங்கள் தோரோ தனியாக ஒரு ஏரியின் அருகிலே மரவீடு அமைத்து வாழ்ந்த அந்த தனிமையை இயற்கையை நேசித்த கதையை “வால்டென்’ எனும் புத்தகத்தில் எழுதியிருப்பார். அதை, இராபின் சர்மாவும் தனது புத்தகத்தில் சொல்ல நானும் சேர்த்து சொல்லிக்கொள்கின்றேன். இயற்கை மனிதனை பண்படுத்துகின்றது.