Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


ஆசிரியர் குழு
Author:

மனிதனை மனிதனாக உருவாக்கும் சிற்பிகள்;
மாணவர்களின் காலக்கண்ணாடி;
நேர்த்தியான ஆற்றல்மிக்க
மாணவ சமூகத்தை உருவாக்கும் முதல்வர்கள்;

வாழ்வியல் ஆசான்கள் என்றெல்லாம்
அழைக்கப்படும் சிறப்புக்குரியவர்கள்
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள்.
ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி என்பது ஒவ்வொரு வகுப்பறையிலிருந்து தான் உருவாக்கப்படுகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது. அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தரலாம். ஆனால் ஒரு ஆசிரியர் உலகத்தையே குழந்தைகளுக்குத் தருகிறார் என்பது உண்மை.
வாழ்க்கை என்றால் என்ன? சமூகத்திற்கு மாணவ, மாணவிகளின் பங்களிப்பு எவ்விதத்தில் இருக்கவேண்டும் என்பது குறித்த தெளிவை கற்றுக் கொடுப்பவர்கள் ஆசிரியப் பெருமக்களே.
தங்களுடைய ஒழுக்கத்தில், கற்பித்தலில் தான் எதிர்கால மாணவ சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியே இருக்கிறது என்பதை இன்றைய ஆசிரியப் பெருமக்களில் சிலர் உணராமல் தடம்புரள்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டுகள் எழுவது ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சமூகத்திற்கே தலைகுனிவைத் தரக்கூடியது.
ஒரு வழக்கறிஞர் தவறு செய்தால் அவரை பூமியில் இருந்து ஆறடி உயரத்தில் தொங்கவிட்டு விடலாம். அதேபோல் ஒரு மருத்துவர் தவறு செய்கிறார் என்றால் அவரை பூமியில் இருந்து எட்டடி பள்ளத்தில் புதைத்துவிடலாம். ஆனால் ஒரு ஆசிரியர் தவறு செய்தால் எட்டின அளவிற்கு எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவார்கள் என்கிற கருத்தை உணர்ந்து ஆசிரியர்கள் செயல்படுவதே நாளைய காலம் நலமானதாக அமைய உதவும்.
காலம் எத்தனை கடந்தாலும் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் ஆசிரியர்கள் என்றும் வாழ்வியல் ஆசான்கள்தான். தவறுகளைத் திருத்தி வாழ்வியல் நெறிமுறைகளை சரிவர போதித்து எதிர்கால இந்தியாவை நல்லோர்களின் நாடாக்கிடும் பொறுப்பைச் சுமக்கும் வாழ்வியல் ஆசான்களுக்கு “தன்னம்பிக்கையின் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்”!

அன்புடன்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2011

வெற்றி பெறும் வித்தை இதோ!
நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்…..
நம்பிக்கையின் சக்தி
அறிவோம் அறிவியல்
வறுமை ஓர் உந்துசக்தி
வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!!
உள்ளத்தோடு உள்ளம்
நெடுஞ்சாலை நந்தவனங்கள்