Home » Articles » நெடுஞ்சாலை நந்தவனங்கள்

 
நெடுஞ்சாலை நந்தவனங்கள்


அனந்தகுமார் இரா
Author:

நான்கு வழிச்சாலைகள் வேகம் கூட்டுவதைப் போல சிந்தனையைக் கூட்டுகின்றனவா? முன்காலங்களில் “ஊருக்குப் போறேன்” என்று பக்கத்து வீட்டுப் பசங்களிடம் சொல்லும்போதே மனசு படபடக்க ஆரம்பித்திருக்கின்றது. இன்றைக்குள்ள குழந்தைகளுக்கு வேறு விசயங்கள் உண்டு. திருச்செங்கோடு, ஈரோடு, திருப்பூர், அவினாசி என ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம் இருந்தது. அந்தந்த ஊருக்கு குழந்தை மனசில் ஒரு “முக” அடையாளம் இருந்தது.
‘ரோட்டோர’ என்கின்றபழைய அடையாளங்கள் மாறிப்போய் விட்டது.
ரோட்டோர குழந்தைகள் விளையாட்டு, வழியிலுள்ள ஊருக்குள் நுழைந்து வெளியேறும்போது கிடைத்த காட்சிகள், திருவிழாக்களின் அடையாளங்கள், சிலசமயம் பலபேரால் இராசியான விஷயம் என்று சொல்லப்படுகின்றஇறுதி ஊர்வலத்தில் செல்கின்றவெள்ளை ஆடை போர்த்திய உருவங்கள் என எல்லாக் காட்சிகளும் கடந்த காலமாகி மனதிற்குள் படிந்திருக்கின்றன.
பலூன் விற்பவர்கள், சமோசா, பொரி, மக்காச்சோளம், பனை கிழங்கு, வண்ண வண்ண பஞ்சுமிட்டாய்கள், வெளியூர் பயணிகளுக்காக வண்ண வண்ணமாய் கண்களைப் கவர்ந்திழுக்கும் பல்வகை குழந்தை விளையாட்டுப் பொருட்கள், கோயில் திருவிழாவில் சைக்கிளை வேகமாக ஓட்டி வித்தை காட்டும் விற்பன்னன், கலைக்கூத்தாடிகள், அவர்களின் குடும்பத்தினர், கல்யாண மாலையோடும் கண்களில் அயர்ச்சி கலந்த கனவுகளோடும் கூச்சப்பட்டு நடக்கும் மணமக்கள், அந்தக் கூட்டத்தில், ஊர்வலத்தில் பெரியவர்களின் அதட்டலுக்கும் மிரட்டல் பார்வைக்குமிடையே மணப்பெண்ணின் கையிலிருக்கிற பூச்செண்டை தொட்டுப் பார்த்துவிட்டு கைகளுக்கு கிடைக்காமல் சுற்றி ஓடுகின்றபொடுசுகள்… என புகைவண்டி மாதிரி… நினைவலைகளை நீளச்செய்கின்றநிகழ்ச்சிகள் நிறைய பழைய நெடுஞ்சாலைகளைச் சுற்றி பயணம் போகையில் நிகழும். தற்பொழுது வேகம் கூடியிருக்கின்றது. அழகான “மீடியன்” என்கின்றபூச்செடிகளை எண்ணற்றகிலோமீட்டர் தூரங்களுக்குப் பார்க்க முடிகின்றது. அழகான பூக்கள் பூத்திருக்கின்றன. அதன் மீது படியும் புகைகளையும் மொட்டுகளாக இருக்கையிலேயே புறத்தே தவிர்த்துவிட்டு உள்ளே இருக்கின்ற மென்மையான இளஞ்சிவப்பு நிறம், மஞ்சள் நிறத்தோடும் வாகனப் போக்கின் காற்றலைக்கேற்ப அலைந்தாடும் புத்தம்புது அரளிப்பூக்கள், சற்றே பனிப்பெய்தால் கிருஷ்ணகிரிப் பக்கம் பனித்துளியோடு வேறு காட்சிகள் நமக்குள் பதிவாகின்றது.
அந்த நினைவுகளையெல்லாம் இந்த நந்தவனங்களில் இருக்கின்றமலர்கள் மீது படியச்செய்து படிக்க முடிகின்றது.
“நிதானம் ஞானத்தின் துணைவன்” என்று தேசிய சட்டப்பள்ளி, பெங்களூரின் பரிட்சை ஹாலுக்குள் நுழையும் சுவற்றின் முன் எழுதிப் போட்டிருந்தார்கள், “இன்றைய சிந்தனை என்று”.
தோற்றேன், என நீ உரைத்திடும் போதிலே வென்றாய்! என்று மகாகவி பாரதியார் சொன்னது நெடுஞ்சாலைப் பூக்களுக்குத் தெரியுமா என தெரியவில்லை. மழலைகள் இந்தப்பக்கம் அந்தப்பக்கம் பார்க்க விஷயங்கள் இல்லை என்கின்றகுறை தென்படாமல் நெடுஞ்சாலையில் போகையில் உற்சாகமாய்த்தான் காணப்படுகின்றன.
நமக்குத்தான்… எதை நாம் கைகளில் வைத்திருந்தோம் என்று தெரிந்தால் எதை இழந்துவிட்டோம் என்பதும் தெரிவதாக நினைத்துக் கொள்கின்றோம்.
அரளி நன்றாக வளரக்கூடியது. தேசிய நெடுஞ்சாலை நண்பகலில் துறைப் பணியாளர் ஒருவர் அதிகமாக வளர்ந்து இருந்ததைக் கத்தரித்துக்கொண்டு இருந்தார். சரியான உயரத்தில் இருந்தால் தான்; அது எதிரில் வரும் வாகனங்கள் இரவில் கண் கூசுமளவும் ஓளிவெள்ளத்தை வாறியிறைக்காமல் இருக்கும் என்றார்.
கலசப்பாடி என்பது ஊர்ப்பெயர், அங்கு போக அழகான சாலை மண்சாலை தான். அடர்வினை பகுதிகளில் வன விலங்குகளின் நன்மை கருதி அமைந்துள்ள இத்தகைய செங்குத்தான பாதைகளில் முன்பொரு சமயம் பயணம் செய்த அனுபவம் உண்டு.
கலசப்பாடியில் இருந்து பார்த்தால் மூன்று புறங்களிலும் மலையன்னையின் பச்சை பரப்பு தான் தெரிந்தது. இந்த மலைகளின் மற்றொரு புறத்தில் தான் சித்தேரி மலை இருப்பதாக ஊரில் பெட்டிக்கடையில் பேசிக்கொண்டார்கள். பெட்டிக்கடை எல்லா ஊரிலும் தகவல் களஞ்சியமாக இருக்கின்றது.
கலசப்பாடியில் ஊர் ஆரம்பிக்கும் பொழுதே ஒரு அழகான புல்வெளியும் அதன் மையமாக ஒரு கோவிலும் அமைந்து இருந்தது. கோவிலுக்கு வெளியே பந்தக் காலாக கற்களால் ஆன தூண்களும் வேய்வதற்கான மூங்கில்களும் சற்றே முன்பு நடந்து முடிந்திருந்த திருவிழாவிற்கு சாட்சிகளாக நின்று கொண்டு இருந்தன.
அங்கேயிருந்து பைனாகுலரில் பார்த்தால் அடர்ந்த காடுகள் நிறையத் தெரிந்தது. மதியம் சுமார் மூன்று மணி இருக்கலாம். கல்வராயன் மலைத்தொடரின் ஒரு பகுதி இந்த கலசப்பாடி. பிற்பாடு, எர்ர்ஞ்ப்ங் ஙஹல்ள் பார்த்தேன். இனிமேல் தான் எர்ர்ஞ்ப்ங் உஹழ்ற்ட் மூலமாகப் பார்க்க வேண்டும். நேரில் பார்க்கையில், மலையன்னையின் மடியிலிருக்கின்றநந்தவனங்களின் விஸ்தீரணம் விசித்திரமாகத்தான் இருக்கின்றது.
கலசப்பாடியிலிருந்து சித்தேரி செல்லும் மூன்று பாதைகளில் மிகச் சிரமமானது எந்தப்பாதை என்று கேட்டு அதைத் தேர்ந்தெடுத்தோம். உடன் நண்பர் கணேஷ். தனது பள்ளி நாட்களில் மாநில அளவிலான கிரிக்கெட் வீரர் ஆக இருந்த ஞாபகத்தில் மலைமீது வேகமாக ஏறத்தொடங்கினார். ஊரிலிருந்து அரசநத்தம் வழியாக என்றால் வரத்தயாரான கூட்டம் செங்குத்தான நடைபாதை என்றவுடன் ஒன்றே ஒன்று அதுவும் நண்பர் சரவணன் என்று சுருங்கிப் போய்விட்டது.
இரண்டு மூன்று மணிநேரம் ஆகும் என்றகணக்கீட்டோடு ஏறத்தொடங்கினோம். மலை சற்றே அடர்த்தி குறைவானதாகத்தான் இருந்தது. பறவைகளும், மற்றஉயிரினங்களும் அதிகம் காண இயலவில்லை. வாகனம் அரூர் திருப்பம் சென்றுதான் வர வேண்டும் என்பதால் நான்கே பேர் மட்டுமே இந்த மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தோம். மிக வயனாதவர்கள் வாகனத்தில் திரும்ப அனுப்பப்பட்டு இருந்தனர்.
பாதிமலை முடிகையில் ஒரு நீர் வழிப்பாதை வருகின்றது. அதன் வழியாக நீர் வழிந்தோடினால் அருவி மாதிரி பார்க்க மிக அழகாக இருந்திருக்கும். இங்கிருந்து எதிரேயிருக்கின்ற ஒரு மலையுச்சியைப் பார்த்தால் உச்சியில் இரண்டு பேர் எதற்கு என்றே தெரியாமல்… அனேகமாக மலைத்தேன் எடுக்க வேண்டியிருக்கலாம், முகட்டின் செங்குத்தான சரிவில் அபாயகரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
நண்பர் கணேஷின் மூளை பரபரப்பாக வேலை செய்தது. பல திசைகளில் செல்லத் திரும்பிய அவரை சரவணனுடன் பின் தொடர ஏதுவாக்கினோம்.
ஒரு மலையேற்றம் முடிந்து சற்றே சமதளம் வந்து கொஞ்சம் இறங்கத் தொடங்கினால் நீர் வழிந்தோடும் சிறு ஓடை தெரிகின்றது.
அதற்குச் சற்றே மூன்று ஒற்றையடிப் பாதையில் நிறையக் கற்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அதன் மீது ஒரு சில இலைகளைத் தூக்கிப் போட்டுவிட்டு “காட்டாளி” பொறந்த இடம் என்றான் நண்பன்.
விசாரித்த பொழுது, காட்டாளி என்பவர் அம்மாவிற்கு பிரசவம் பார்க்க அவளது உறவினர்கள் இரு மூங்கில் இடையே சேலையைத் தொட்டில் மாதிரி கட்டி தூக்கி பல்லக்கு போல கொண்டு வந்தார்களாம்.
இந்த இடத்திற்கு வந்து சேர்ந்தபொழுது வலி அதிகமாகிவிட, குழந்தை பிறந்துவிட்டதாம். அதனால்தான் அவனுக்கு “காட்டாளி” என்றபெயரும், அந்த இடத்தே ஒரு நினைவு குவியலும் இருக்கின்றதாம்.
துரிசு, ஊஞ்ச, பொருசு, சந்தனம், புங்கன் என்று மரங்களின் அணிவகுப்பும் பெயர்களும் வரிசையாகப் போய்க்கொண்டே இருந்தன. ஒரு மரத்தில் மலர்கள் ரோஸ் வடிவத்தில், சின்ன நத்தையின் கொம்புகள் நூறு இருநூறு ஒன்றாக பட்டுக்குஞ்சம் போல் முளைத்தால் எப்படியிருக்குமோ, அப்படியிருக்க அதைப் பலநாட்கள் புத்தகங்களிலும் நெட்டிலும் தேடி பெயர் கண்டுபிடித்தது ஒரு அழகான அனுபவம்.
இலண்டானா காமரா என்கின்ற புதர்ச்செடி பாதையின் இருபுறமும் முப்பதடிக்கு முளைத்து மூடியிருக்க இடையேயிருந்த சின்ன பாதை வழி நடந்த அனுபவம் அலாதியானது.
இரு வருடங்கள் தோரோ தனியாக ஒரு ஏரியின் அருகிலே மரவீடு அமைத்து வாழ்ந்த அந்த தனிமையை இயற்கையை நேசித்த கதையை “வால்டென்’ எனும் புத்தகத்தில் எழுதியிருப்பார். அதை, இராபின் சர்மாவும் தனது புத்தகத்தில் சொல்ல நானும் சேர்த்து சொல்லிக்கொள்கின்றேன். இயற்கை மனிதனை பண்படுத்துகின்றது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2011

வெற்றி பெறும் வித்தை இதோ!
நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்…..
நம்பிக்கையின் சக்தி
அறிவோம் அறிவியல்
வறுமை ஓர் உந்துசக்தி
வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!!
உள்ளத்தோடு உள்ளம்
நெடுஞ்சாலை நந்தவனங்கள்