Home » Articles » நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்…..

 
நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்…..


பழனியப்பன் வி.மு
Author:

 

எலும்பும், தோலுமாய் உள்ள  “Skeletal people”
அல்லது “S” எனும் முதல் வகையினரது
உடற்கூறுகள் பழக்கவழக்கங்கள்
அவர்களுக்கு இப்போதுள்ள நோய்களுக்குறிய
பட்டியலின் சென்ற இதழ் தொடர்ச்சி…

 • சாக்லேட்டுகள், சாக்லேட் சேர்க்கப்பட்ட பானங்கள், ஐஸ்கிரீம், பிஸ்கட்டுகள், கேக் முதலியவை உங்களுக்குப் பிடிக்கும். நடுத்தரமான அளவில் இவற்றை உட்கொள்ளுவீர்கள்.

 •   பழங்கள் கிடைத்தால், எல்லாவகைப் பழங்களையும் நீங்கள் விரும்பி நிறையவே உண்ணுவீர்கள்.
 • நீங்கள் சிறுவயது இளைஞனாக இருந்தால், உங்களுக்கு மிக அதிகமான விந்து உற்பத்தியும், அதிகமான காம உணர்வும் இருக்கும்.
 •   நீங்கள் சிறுவயதுப் பெண்ணானால், நீங்கள் இளம் வயதிலேயே – பத்து அல்லது பத்தரைக்குள் பூப்பெய்திவிடுவீர்கள்.
 •   உங்களின் கால்களிலும் கைகளிலும் உரோமம் (முடி) முளைக்கக்கூடிய வாய்ப்பு அதிகமுண்டு.
 •   மார்பு போதிய அளவிற்குப் பெருக்காது. அது, உங்களுக்கு ஒரு பெரும் மனக்குறையாகவே இருக்கும்.
 •   சிறுவயது மங்கையானால், மாதவிலக்கு அடிக்கடி வந்துவிடக்கூடிய வாய்ப்புண்டு. அதோடு, மாதவிலக்கின்போது, தாங்கமுடியாத அளவிற்கு இடுப்புவலி (டழ்ங்-ஙங்ய்ள்ற்ழ்ன்ஹப் பங்ய்ள்ண்ர்ய் ‘ டஙப) உண்டாகிப் பெரும் துன்பப்படுவீரகள்.
 • க்ஷி உங்களுக்குத் திருமணமானால், உடனடியாக – ஓரிரு சேர்க்கைகளிலேயே கர்ப்பந் தரித்துவிடுவீர்கள். குழந்தை எளிதாகப் பிறக்கும். ஆனால், மெலிவாகத்தான் இருக்கும்.
 • குழந்தை பெற்றபிறகு, உங்களுக்குத் தாய்ப்பால் மிக, மிகக் குறைவாகத்தான் சுரக்கும்.
 •   உங்களுக்கு இளநரை (டழ்ங்-ம்ஹற்ன்ழ்ங் எழ்ங்ஹ்ண்ய்ஞ்) ஏற்படும்.
 •   இந்தவகைப் பையன்கள் (சில பெண்களுங்கூட) விரைவில் கண்ணாடி அணியும்படிவரும்.
 •   இருபாலாருக்கும் அடிக்கடி கடுங்கோபம் வரும். அது, விரைவில் அடங்கியும் விடும்.
 •   நீங்கள் அடிக்கடி மிகுதியாக உணர்ச்சி வசப்படுவீர்கள். இரக்க குணம் அதிகமுண்டு. அன்பையும் அதிகமாக வெளிப்படுத்துவீர்கள். தொலைக்காட்சியிலே சோகக் காட்சியைக் காண நேர்ந்தால் கேவிக்கேவி அழுது விடுவீர்கள்.
 •   கலை, அழகு, பாடல்கள் முதலியவற்றை அதிகம் ரசிப்பீர்கள், விரும்புவீர்கள்.
 •   நீங்கள் பொய் சொல்லமாட்டீர்கள். யாரும் பொய் சொன்னால், அதைப் பொருத்துக் கொள்ளவும் உங்களால் முடியாது.
 •   நீங்கள் கூடியவரை தவறு செய்யமாட்டீர்கள். அப்படித் தவறெனத் தெரிந்துவிட்டால், உடனே மன்னிப்புக் கேட்டு விடுவீர்கள்.
 •   நீங்கள் மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக இருப்பீர்கள். யாரையும் மோசம் பண்ணமாட்டீர்கள்.
 •   நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருப்பீர்கள். பெரும்பகுதி, பகலில் உறங்கமாட்டீர்கள்.
 •   இந்தப் பிரிவினர்க்கு மிக எளிதாக நுண்கிருமி நோய்கள் (யண்ழ்ன்ள் ஈண்ள்ங்ஹள்ங்ள்) தொற்றிக்கொள்ளும். (எனவே, அம்மை நோய் ஏற்பட்டிருப் பவர்களிடமும் எய்ட்ஸ் நோயாளிகளிடம் இவர்கள் எச்சரிக்கையாகப் பழகவேண்டும்.)
 •   இவையெல்லாம் இப்படி இருக்க, உங்களுக்கான மிக நல்ல செய்தி என்னவெனில்,
 •   உங்கள் இரத்தக் குழாய்களில் எப்போதும் அடைப்புக்கள் (ஹற்ட்ங்ழ்ர்ள்ஸ்ரீப்ங்ழ்ர்ள்ண்ள்) ஏற்படமாட்டா.
 •   உங்களுக்கு இருதய நோய்களும், மாரடைப்பும் எப்போதுமே ஏற்படமாட்டா.
 •   உங்கள் கிட்னிகள் எப்போதுமே கெட்டுப்போய்விடமாட்டா. அவற்றில் கற்கள் உண்டாவது, சுருங்கிப்போவது, மக்கிப்போவது போன்ற எதுவுமே கிட்னியில் நிகழமாட்டா.
 •   இப்பிரிவில் உள்ள ஆண்களுக்கு எப்போதுமே ஆண்மைத்தன்மையில் குறைவு ஏற்படாது. அதேபோல, ஆண் மலட்டுத்தன்மையும் ஏற்படாது.
 •   செவிட்டுத்தன்மை இராது. காதுகளின்வழி ஒலி மிக நன்றாகக் கேட்கும்.
 •   பெரும்பாலான புற்றுநோய்கள் இவர்களுக்கு வரமாட்டா. பெண்களுக்கு மார்புப் புற்று ஏற்படவே ஏற்படாது. டர்ப்ஹ்ஸ்ரீஹ்ள்ற்ண்ஸ்ரீ ஞஸ்ஹழ்ஹ் எனும் சினைமுட்டைமீது படரும் கட்டிகளும் ஏற்படமாட்டா.
 • இந்தப் பிரிவிலிருந்து மாறிவிடாது இருப்போர்க்கு, எப்போதுமே இரண்டாம் வகை இனிப்புநீர் நோய் (பஹ்ங்ல்-2 ஈண்ஹக்ஷங்ற்ங்ள் ம்ங்ப்ப்ண்ற்ன்ள்) வராது.
 • பிறப்பு உறுப்பில் பெரும்பகுதி வெள்ளை படாது. வெள்ளை படுவது என்றால் என்ன என்று இந்தவகைப் பெண்களுக்குத் தெரியாமல்கூட இருக்கலாம்.
 • இந்தப் பிரிவினர்க்கு, காயங்கள் ஏற்பட்டால், புண்கள் வெகு விரைவில் ஆறிவிடும்.

இந்தப் பிரிவினர், தங்களது வாழ்க்கை நெறிமுறைகளை மாற்றிக் கொண்டால், இவர்கள் “செம்மையானோர்” (டங்ழ்ச்ங்ஸ்ரீற் இஹற்ங்ஞ்ர்ழ்ஹ் ‘ “ட”) என்ற நிலைக்கு மாறமுடியும்.
அவ்வாறு மாறினால், இவர்களுக்குள்ள ஏறத்தாழ எல்லாக் குறைபாடுகளையுமே நீக்கிக் கொண்டுவிடலாம்.
எப்படி மாறுவது என்ற விவரங்களைப் பின்னர் தருவதுதான் முறையாக இருக்கும். எனவே அதுவரை நீங்கள் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.
* * * * * *
இந்தக் கட்டுரையைப் படிக்கும் “எலும்பும் -தோலுமாய் உள்ளோர்’அனைவரும், இதில் தரப்பட்டுள்ள விவரங்களில் எண்பது விழுக்காட்டிற்குமேல் (80%) மிகச் சரியாக இருப்பதை எண்ணியெண்ணி வியந்துபோவார்கள்.
அதேபோல, மற்றவர்கள், இப்போதைக்கு, “இவையாவும் அளப்புகள்” என்று நையாண்டி செய்வதற்கும் வாய்ப்பு மிகுதியாக இருக்கிறது.
அனைவரையும் பற்றிய விவரங்கள் வெளியானபின்னர், அனைவருமே வியப்புறுவர்தான். “இவ்வளவு விவரங்களையும் எப்படி மிகச்சரியாகக் கூற இயலும்?” எனும் கேள்விக்கு, அறிவியலினின்று சிறிதும் பிறழாதவாறு, யாவருக்கும் ஏற்புடைய விளக்கத்தைப் பின்னர், இம்மலரின்வழி உங்களுக்கு விளக்குகிறேன். அதுவரை பொறுத்திருப்பீர்களாக.

(தொடரும்)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2011

வெற்றி பெறும் வித்தை இதோ!
நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்…..
நம்பிக்கையின் சக்தி
அறிவோம் அறிவியல்
வறுமை ஓர் உந்துசக்தி
வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!!
உள்ளத்தோடு உள்ளம்
நெடுஞ்சாலை நந்தவனங்கள்