– 1990 – January | தன்னம்பிக்கை

Home » 1990 » January

 
 • Categories


 • Archives


  Follow us on

  தோழனே!

  தோழனே!
  தோல்வியும் உனக்கொரு
  தூண்டுகோலாகும்.
  உழைப்பின் உயர்வால்

  Continue Reading »

  சிந்தனைத் துளிகள்

  ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.

  – விவேகானந்தர்.

  மனிதன் முன்னேற ஏழு பாதைகள்

  பகுத்தறிவு
  கல்வி
  சிந்தனையில் உண்மை
  அன்புடமை
  நன்னடத்தை
  கட்டுப்பாடு உள்ள குடும்பம்
  நல்ல ஆட்சி
  – சீன அறிஞர் கன்பூசியஸ்

  “வேதனையைத் தாங்கி
  பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”

  – தாகூர்

  உலக வேளாண்மைப் பொருட்காட்சி

  இஸ்ரேல் நாட்டில் 1990 மார்சு இறுதியில் நடைபெறுகின்றது

  இஸ்ரேலில் டெல்அவி என்ற நகரில் நடைபெறும் இந்தப் பொருட்காட்சியில் உலகின் பல்வேறு வளர்ந்த நாடுகள் கலந்து கொள்கின்றன.

  உலக வேளாண்மையின் முன்னேற்றங்கள்

  Continue Reading »

  இளைஞர்களிடையே காதலும் காமமும்

  (கடந்த சில ஆண்டுகளாக எனது தன்முன்னேற்ற நூல்களைப் படித்துவிட்டு, எனக்கு வருகின்ற கடிதங்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு கடிதங்கள் காதல் – காமம் – தவறான உறவுகள் – கணவன் மனைவிக்குள்ளே எழுந்துள்ள சந்தேகங்கள் – இப்படிப்பட்ட கடிதங்களே அதிகமாக இருக்கின்றன. குறிப்பாக

  Continue Reading »

  வேலை இருக்கிறது… வேலை செய்யும் ஆட்கள் தான் இல்லை

  எதிர்பார்க்கின்ற அளவுக்கு நாடு முன்னேற்றம் அடையவில்லை என்றாலும் ஓரளவாயினும் முன்னேற்றம் இல்லாமல் இல்லை. படிக்காத பெண்கள் கூட பல்வேறு தொழில் பயிற்களைப்பெற்றுத் தொழில் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

  Continue Reading »

  ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது….

  வாழ்க்கையில் எல்லாம் இருந்தால்தான் முன்னேற முடியும் என்பதில்லை. இருப்பதை வைத்துக் கொண்டும், ஏன்? இல்லாமையையே மூலதனமாக்கிக் கொண்டும் உயர்ந்தவர்கள்தான் நாட்டில் அதிகம். அவர்கள் தாம் சாதனையாளர்களாக விளங்கி உள்ளார்கள். அரிய சாதனைகளையும் நிகழ்த்தி உள்ளார்கள்.

  Continue Reading »

  நமக்கு வந்த கடிதங்கள்

  உழைப்பை, செல்வத்தை சுரண்டுவது போல் உணர்ச்சியைச் சுரண்டுகிற இன்றைய இதழ்களுக்கு மத்தியிலே தங்களின் “தன்னம்பிக்கை” இதழின் பணி இனிதே சிறக்கட்டும்”.

  இன்றைய இளைஞர்களுக்கு, என்ன நடக்கிறதென்றே தெரியாத வகையில், எங்கும் ம்பொய்மை, கவர்ச்சிகரமான சோகங்கள், ஆபாசங்கள், ‘செக்ஸ்’ விவகாரங்கள், ‘கிரைம்’ நாவல்கள் என்று சிந்தனையைச் சிதறவிட்டு, உணர்ச்சிகளைத் தூண்டிப் பணம் பண்ணுவதோடு அழிவிற்கும் கேட்டிற்கும் இட்டுச் செல்கின்றன. ‘கதை’, ‘இலக்கியம்’ என்ற பெயரில் இன்றைய பத்திரிக்கைகள்.

  இவற்றுக்கிடையே தங்களின் எழுத்துக்கள், ‘தன்னம்பிக்கை’ விடா முயற்சி, உழைப்பு என்று தன்முன்னேற்ற நூல்கள் மிக அற்புதமானவை.

  அமெரிக்க கவிஞர் ராபர்ட் பிராஸ்ட் எழுதிய நேருவின் நெஞ்சம் கவர்ந்த “எனக்கு ஆயிரம் கடமைகள், வேண்டும், துயில் கொள்ளுமுன்பு முடித்திட வேண்டும்” என்று கவிதையும்,

  சினிமாவைக் காட்டிலும் தேசத்தை நேசிக்கிய அன்று தான்… கவிதையும்,

  விலகி நிற்காதே எதிர்த்து நில், தயங்கி தநிற்பின் தரணியுனை தவிக்கவிடும் துணிந்து நிற்பின் துவண்டு போகும், “கவிஞர் சீத்தாபாரதி கவிதையும்,

  நம்பிக்கை நார்மட்டும் நம் கையில் இருந்தால் உதிர்ந்த பூக்களும் ஒவ்வொன்றாய் வந்து ஒட்டிக் கொள்ளும்” என்ற மேத்தாவின் கவிதையும் பால்கார்ர் விவசாயிஇன் தொழிலின் அனுபவ ஆராய்ச்சியும் அனைத்தும் அருமை.

  – கே. சாமிநாதன்
  ஆச்சிப்பட்டி – 642 002.

  மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

  இன்றைய இளைஞர்கள் சமுதாயம், திரைப்படத்தால் திருத்தப்படுகிறார்கள் என்பதை விட திசை திருப்பப்படுகிறார்கள்.

  காதலையும், இருமலையும் மறக்க முடியாது என்பது பழமொழி. இளைஞர்கள் சமாதயம் இந்தியாவை வழி நடத்த வேண்டும், அவர்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்றால் கட்டுப்பாடற்ற காம இச்சைக்கு அலைமோதும் காதலர்களாகத் திரியாமல் கட்டுப்பாட்டுடன் கூடிய சமுதாயம் மதிக்கும்படியாக காதலைக் கைக்கொண்டு கலந்துரையாடி, பின்பு பலர் சமத்த்துடன் கலந்துறவாட நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். என்றது என்னுள் எழுந்த எண்ணம்.

  எஸ். கே. திரு மணிவண்ணன்
  சேலம் – 636007.

  நேற்று என்பது செத்துவிட்டது. நாளை என்பது வரப்போவதில்லை. ஆகவே சிந்தியுங்கள்! இன்றே உழையுங்கள்! இன்றே உழையுங்கள் நேர்மையான சமுதாயம் உருவாகட்டும்! அசையாதிருக்கும் தண்ணீரில் சிறு கல்லை எறிந்தால் அது எண்ணற்ற அலைகளைத் தோற்றுவிக்கும். தாங்கள் முதல் கல்லை எறிந்துள்ளீர்கள்! இது நம்பிக்கை அலை! தன்னம்பிக்கை அலை வீசட்டும்; புயலாக மாறாட்டும்!

  எம்.எஸ். அருண்குமார்
  சிவகாசி – 626123.

  புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்

  திட்டமிட்டுச் செயலாற்றுவோம்

  காலம் சுழன்று கொண்டே இருக்கின்றது. ஆண்டுகள் உருண்டோடுகின்றன. நேரம் பறந்து கொண்டு இருக்கின்றது. 1990 பிறந்து விட்டது.

  கடந்த ஓராண்டில் என்னென்ன செய்தோம் என்று எண்ணிப்பாருங்கள். சென்ற ஆண்டிலேயே என்னென்ன செய்ய நினைத்தோம்.

  Continue Reading »

  பெண்மை வாழ்கவென்று

  ‘பெண்மை வாழ்கவென்று
  கூட்டிடுவோமடா’ – என்று
  எங்களால் பாடிக் களிக்க
  முடியாது பாரதி!

  Continue Reading »