Home » Editorial » புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்

 
புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்


admin
Author:

திட்டமிட்டுச் செயலாற்றுவோம்

காலம் சுழன்று கொண்டே இருக்கின்றது. ஆண்டுகள் உருண்டோடுகின்றன. நேரம் பறந்து கொண்டு இருக்கின்றது. 1990 பிறந்து விட்டது.

கடந்த ஓராண்டில் என்னென்ன செய்தோம் என்று எண்ணிப்பாருங்கள். சென்ற ஆண்டிலேயே என்னென்ன செய்ய நினைத்தோம். அதில் எதை எதைச் செய்து முடித்தோம். எதை எதைச் செய்ய முடியாமல் விட்டுவிட்டோம் என்று எண்ணிப்பாருங்கள். ஏன் செய்ய முடியவில்லை என்றும் எண்ணிப்பாருங்கள்.

இந்த வகையில் எண்ணிப்பார்ப்பது இந்த ஆண்டுத் திட்டம் தீட்டிச் செயல்படுவதற்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.

  • பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வழி என்ன?
  • தொழிலில், தோட்டத்தில் வீட்டில் செய்ய வேண்டிய மாறுதல்கள் மராமத்துக்கள் என்ன?
  • பொதுக் காரியங்களில் நாம் எந்த அளவு பங்கு கொள்ள வேண்டும்?
  • நாம் எண்ணுவதும் பேசுவதும் செய்வதும் சரியானதாக இருக்கிறதா? என்று நம்மை நாமே சுய சோதனை செய்தல்
  • இந்த வகையில் உங்கள் சிந்தனையைச் செலுத்துங்கள் – திட்டமிடுங்கள் – செயல்படுங்கள்.

அமைச்சரவைக்கு வரவேற்பும் வேண்டுகோளும்

நாட்டின் மக்கள் தொகையில் 70% மக்கள் செய்யும் வேளாண்மைத் தொழிலுக்கும் கிராமப்புற மேம்பாட்டிற்கும் இந்திய நாட்டின் வருமானத்தில் 50% ஒதுக்கிச் செயல்படுவோம் என்ற புதிய அமச்சரவையின் கொள்கையை வரவேற்போம்.

வேளாண்மைக்கு இன்றியமையாது வேண்டப்படுவது நீர். இந்திய நதிகளை ஒருங்கிணைப்பதும் நீர்வள ஆதாரங்களைத் தேசிய உடமையாக்குவதும் முன்னுரிமை கொடுத்துச் செயல்படுத்தப்பட வேண்டிய முதன்மையானத் திட்டம் என்பதை நினைவூட்டுவோம். வேளாண்மையில் அடிப்படையாக்க் கவனிக்க வேண்டிய மற்றொன்று விளைபொருள்களுக்கு உருயி வலிஐ. இதனை அரசு நினைத்தால், அரசு முனைந்தால் கட்டுப்படுத்திவிடலாம். இதனால் பொது மக்களுக்கும் நன்மை, உற்பத்தியாளர்க்கும் நன்மை. அதற்கான திட்டம் தீட்டிச் செயலாற்ற வேண்டுகோள் விடுப்போம்.

மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தாத வரை எவ்வளவு திட்டங்கள் தீட்டினாலும் சாண் ஏற முழம் சறுக்குகின்ற நிலையாகத்தான் இருக்கும். ஆதலின் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டிற்கு சாதி மத, இனங்கள் என்று பாராமல் இந்தியாவிற்கு என ஒரு கொள்கை வகுக்க ஆரதவு நல்குவோம்.

இனாம்கள், சலுகைகள், ஒதுக்கீடுகள் என்று தங்கள் நாற்காலிகளை கெட்டிப்படுத்துகின்ற நிலையிலிருந்து விடுபட்டு, எவ்வளவு காலம் இருந்தோம் என்பதைவிட, மக்கட்கு என்னென்ன நன்மைகள் செய்தோம் என்று எண்ணும் வகையில் உற்பத்தி சார்ந்த தொழிகளை உருவாக்கி இளைஞர்களுக்கு உழைக்கும் வாய்ப்பினை நல்கும் செயல்பாடுகளை மேற்கொள்ளக் கேட்டுக்கொள்வோம்.

எல்லாவற்றுக்கும் அடிபடையானது கல்வி. இலவசக் கல்வியிலிருந்து இனி 5 ஆம் வகுப்பு வரையேனும் கட்டாயக் கல்வி என்ற நிலைக்கு நாம் வரவேண்டும்; வளரவேண்டும். இதற்கான திட்டங்களைத் தீட்டக் கருத்துரை வழங்குவோம்.

ஒரு சிக்கலுக்குத்தீர்வு காண்பது எப்படி?

மதப்பிரச்சாரம் செய்யத் தன்னைத்துறப்பதா? அல்லது தனது தாய், இரண்டு சகோதரர்கள் ஆகிய மூவரையும் காபாற்றக் கொள்கையைத் துறப்பதா? என்ற சிக்கலில் ஒரு மாபெரும் செயலுக்காக இந்த மூவரையும் துறப்பது என்ற் முடவு எடுத்தார் விவேகானந்தர். தியாகம் செய்யயாமல் எந்த நன்மையும் நிகழ்வதுதி்ல்லை.

உங்கள் கொள்கைகளை பிறர் மீது திணிக்காதீர்கள். நீங்கள் வாழ்ந்து காட்டுவதன்மூலம் உங்கள் கொள்கைகளைப் பரப்புங்கள்.

“இன்றைய பொழுதை
நன்றாகக் கழி
ஒவ்வொரு நாளும்
ஒரு வரலாறாகும்.”

அமைச்சர் பெருமக்கள் ஆடம்பரங்களை விடுத்து, மாலை மரியாதைகளையும் மலர்க்கிரீடங்களையும் விடுத்து, மக்களுக்கு நன்மை செய்வது ஒன்றையே குறிக்கோள்களாக்க் கொண்டு, செயல்படவேண்டும். மக்கட்குத் தொண்டு செய்யும் தலைமைத் தொண்டர் என்று தங்களை எண்ணிக்கொள்ள வேண்டும். இவ்வாறு உண்மையாகச் செயல்பட்டால் அவர்கள் நாற்காலியில் நிலைத்திருப்பார்கள். அதுவே ஆடாத நாற்காலிகளை அமைத்துத் தரும்.

இதக்கருத்துக்கள் எல்லாம் அறிவுரைகளல்ல. நியாயமான எதிர்ப்பார்ப்பு – புத்தாண்டில் இக் கருத்துக்கள் செயல் வடிவம் பெற புத்தாண்டு வாழ்த்துக்களோடு பொங்கல் வாழ்த்துக்களையும் தரணிக்கு நல்குவோம்.

-ஆசிரியர் குழு


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 1990

தோழனே!
சிந்தனைத் துளிகள்
உலக வேளாண்மைப் பொருட்காட்சி
இளைஞர்களிடையே காதலும் காமமும்
வேலை இருக்கிறது… வேலை செய்யும் ஆட்கள் தான் இல்லை
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது….
நமக்கு வந்த கடிதங்கள்
புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்
பெண்மை வாழ்கவென்று