Home » Articles » உலக வேளாண்மைப் பொருட்காட்சி

 
உலக வேளாண்மைப் பொருட்காட்சி


தாமரைச்சந்திரன் ஆ
Author:

இஸ்ரேல் நாட்டில் 1990 மார்சு இறுதியில் நடைபெறுகின்றது

இஸ்ரேலில் டெல்அவி என்ற நகரில் நடைபெறும் இந்தப் பொருட்காட்சியில் உலகின் பல்வேறு வளர்ந்த நாடுகள் கலந்து கொள்கின்றன.

உலக வேளாண்மையின் முன்னேற்றங்கள் அனைத்தையும் ஒரு சேரக் கண்டுகொள்ள ஓர் அரிய வாய்ப்பு

வேளாண்மை அறிஞர்கள், முன்னோடி விவசாயிகள் வேளாண் பொருள் வணிகர்கள் ஆகியோர்க்கு இக் கண்காட்சி பெரிதும் பயனுடையதாக இருக்கும்.

இந்தக் கண்காட்சியையும் கருத்துக் காட்சிகளையும் பார்க்க மட்டும் நான்கு நாட்கள் முழுமையாகத் தேவைப்படும்.

பாரத விவசாயிகள் மன்றம் தமிழ்நாட்டு உழவர் பெரு மக்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்து வருகிறது.

சிதா என்ற உலகப் பயண நிறுவனம் இந்தப் பயண ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.

1990 மார்ச்சு 24 ஆம் தேதி டில்லியில் இருந்து புறபடும் இந்தப் பயணக் குழு 4 நாட்கள் இஸ்ரேலில் இருந்து விட்டு எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் 2 நாட்களும் இத்தாலி நாட்டின் தலை நகரான புகழ்பெற்ற ரோம் நகரில் 2 நாட்களும் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் மாநகரில் 2 நாட்களும் (லண்டன் செல்ல விருப்பமில்லாதவர்கள் அந்த இரண்டு நாட்களைப் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸூக்குச் சென்று வரலாம்) போக்கு வரத்தில் மூன்று நாட்களுக்குமாக 13 நாட்கள் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கு ஆகும் செலவு விமானப் பயணத்திற்கு மட்டும் ரூ. 24,600. இது தவி, தங்குவதற்கும் காலை, இரவு உணவிற்கு 200 டாலர் அதாவது ரூ 3200 அவர்க்கட்குக் கொடுக்க வேண்டும். நமக்குரிய சில்லரைச் செலவினங்கள் மதிய உணவு ஆகியவற்றிற்கு நமக்கு 300 டாலர் வைத்துக் கொள்ளவேண்டும். அதற்கான தொகை ரூ. 4, 800 ஆக மொத்தம் தொகை ரூ. 33,000 இருந்தால் இந்தப் பயணத்தை மேற்கொள்ளலாம்.

பொருளாதார வசதியும் சூழ்நிலையும் உள்ளவர்கள் பங்கு கொண்டு – அங்கே காணும் புதுமைகளை நம் இந்திய நாட்டிலும் செய்து, நம் நாட்டை வளங்கொழிக்கும் நாடாகச் செய்யலாம். பயணத்தில் பங்குகொள்ள விரும்புகின்றவர்கள் உடனே பாஸ்போர்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்கள் அறிய

SITA world Travel (India Ltd)
26, Commander – in – cheif Road,
Madras – 6000 105


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 1990

தோழனே!
சிந்தனைத் துளிகள்
உலக வேளாண்மைப் பொருட்காட்சி
இளைஞர்களிடையே காதலும் காமமும்
வேலை இருக்கிறது… வேலை செய்யும் ஆட்கள் தான் இல்லை
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது….
நமக்கு வந்த கடிதங்கள்
புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்
பெண்மை வாழ்கவென்று