வாழ்க்கை என்பது பூந்தோட்டமல்ல, கல்லும் முள்ளும், கரடுமுரடான பாதைகளும், சோதனைகளும் கலந்தது தான் வாழ்க்கை. இருள், ஓளி இரண்டும் கலந்தது காலம், சுகம், வலி இரண்டும் கலந்தது தேகம் அது போல நலம், தீங்கு இரண்டும் கலந்தது வாழ்க்கை. அலைகள் இல்லாத கடல், விண்மீன்கள் இல்லாத இரவு வானம், மேடு பள்ளமில்லாம மலை உலகில் எங்குமே இல்லை.
அதுபோல வெற்றி தோல்வி, இன்பம்,துன்பம், சாதனைகள், வேதனைகள், ஏற்றம், இறக்கம், பிறப்பு, இறப்பு, அதிருப்தி, நல்லவை, கெட்டவை, உயர்வு, தாழ்வு, பிரச்சனை, தீர்வு இவைகள் இல்லாத வாழ்க்கை இல்லை.
இந்த வாழ்க்கைப் பயணத்தில் சவால்களை, பிரச்சனைகளை, தோல்விகளை, சறுக்கல்களை ஒவ்வொருவரும் கட்டாயம் சந்தித்தாக வேண்டும்.
வாழ்க்கையிலே வெற்றி பெற்றவருக்கும், தோல்வியடைந்தவருக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் ஒன்றே ஒன்று, சவால்களை சரியான முறையில் சந்திக்கக்கூடிய திறமை படைத்தவர்கள் வெற்றியாளர்கள், திறமை இல்லாதவர்கள் தோல்வியாளர்கள்.
வலிமையான மன உறுதி பெற்ற மனிதர்கள் கூட சில நேரங்களில், மற்றவர்களைப் போல பிரச்சனைகளுக் குள்ளாகிறார்கள். சற்று அவர்கள் அயர்ந்தாலும் மீண்டும் எழுந்து துணிவுடன் சவால்களோடு மோதத் தயாராகிறார்கள். சவால்களை எதிர்கொள்ளக்கூடிய சாமர்த்தியம் உள்ள அவர்கள், வெற்றி பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துகிறார்கள்.
தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை அவர்களின் திறமையைப் பாதிக்கிறது. சவால்களை முதல் முறையிலே வெற்றி காண்பது என்பது மிகவும் கடினமானது. இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தோல்வியடைகிறார்கள்.
மனிதர்களை இரண்டு வகையைச் சார்ந்தவர்கள் சவால்களை எதிர்கொள்வதில் பலவீனமானவர்கள். தோல்வி கண்டவுடனே துவண்டுவிடுவார்கள். பல வழிகளில் பலமுறைமுயற்சி செய்ய வேண்டும் எனத் தெரியாதவர்கள்.
சவால்களை எதிர்கொள்ளும் போது ஒருவனுடைய உணர்வுகள் அவன் மன உறுதியை நிலை குலையச் செய்கிறது. தான் பலவீனமானவன் என்றும், தனக்கு உதவுவதற்கு யாரும் இல்லை என்றும் எண்ணுபவர்கள் ஒருமுறை தோல்வி கண்ட பின்பு அடுத்த முறைஅந்த முயற்சியை கை விட்டு காணாமல் போய் விடுகிறார்கள்.
ஆனால் தோல்வி அடைந்தாலும் துவண்டுவிடாமல் மீண்டு எழுந்து, தொடர்ந்து முயற்சித்து தோல்வியடைந்து வழிமுறையைத் தவிர்த்து, மாற்று வழிகளில் புதிய யுக்தியோடு தன்னபிக்கையுடன் முயற்சிப்பவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள்.[hide]
சவால்களை சந்திப்பதற்கு எளிதான வழிமுறைகள்
- எந்த வழி வெற்றி தரும் எனக் கண்டறிந்து பின் அதன்படி முயற்சித்தல்
- வழி முறைகளை மாற்றி மாற்றி புதிய யுக்திகளைப் பின்பற்றுதல்
- தோல்வியில் வீழ்ந்தாலும், மீண்டு எழுந்து தொடர்ந்து முயற்சித்தல்.
சவால்களை எதிர்கொள்ளும் முறைகள்
- ஒவ்வொரு பிரச்சனைகளையும் தன்னம்பிக் கையோடு முயற்சிக்க வேண்டும்.
- பிரச்சனைகளை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்.
- ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும்.
- பெற்றஅனுபவங்களின் படி வெற்றியின் சூத்திரத்தைக் கண்டறிய வேண்டும்.
- பொறுப்புணர்வும், விழிப்புணர்வும் ஒருவனை வெற்றிப் பாதைக்கு இட்டுச்செல்லும், ஒவ்வொரு வாய்ப்புகளையும் தாழ்வு மனப்பான்மையில்லாமல் தன்னம்பிக்கையோடு முயற்சிக்க வேண்டும்.
- பிரச்சனைக்குரியவர்கள் தான் தீர்வைக் கண்டறிய வேண்டும். உதவிக்கு வருகிறார்கள் யோசனை சொல்ல முடியுமே தவிர அவர்கள் பிரச்சனையை தனக்காக எதிர்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தல் கூடாது.
வள்ளுவர் அழகாகச் சொல்வார்,
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல் என்கிறார்.
செய்யப் போகின்றகாரியத்தின் வலிமையும், தன்னுடைய வலிமையும், எதிரியின் வலிமையும், தன் துணைக்கு வருகிறவலிமையும், எதிரியின் துணைக்கு வருகிறவலிமையும் ஆய்ந்து எது வலிமை வாய்ந்தது என்று கண்டறிந்து, அதற்குப் பின் அந்தச் செயலைத் தொடங்க வேண்டும் என்று கூறுகிறார்.
சவால்களை சந்திப்பதிலே வள்ளுவர் தரும் வழியைப் பின்பற்றினால் வெற்றி நிச்சயம்.
சவால்களை நாம் வளர்வதற்குரிய வாய்ப்புகள் என்றும் சொல்லலாம். அந்த வாய்ப்புகளை வெற்றிகரமாகப் பயன்படுத்தி அளவிடற்கரிய தன் திறமைகளின் மூலம் வெற்றியைப் பெற்றால் தான் வளர்ச்சி அடைய முடியும். தன்னுடைய திறமையை தான் அறிந்து கொள்வது அவசியம்.
கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று சொல்வதைப் போல சவால்களை சந்திக்கிறபோது விளைவுகளைப் பற்றி சிந்திக்கக் கூடாது. கவனம் முழுவதும் காரியத்திலேயே இருக்க வேண்டும். உணர்ச்சிகளுக்கு இதில் இடம் கொடுத்தால், உணர்ச்சிகள் உங்களை ஆட்சி செய்யும். உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்பட்டால் அனைத்து நிகழ்வுகளும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
சவால்களை சந்திக்க மனதைத் தயார்படுத்தும் 7 காரணிகள்
- உண்மையான நிலையை உணர்தல் வேண்டும்.
- விரும்பும் வாழ்க்கையை விடுத்து, இருக்கும் வாழ்க்கையை நேசிக்க வேண்டும்.
- அவசரப்படாமல் நிலையாக நிதானமாக முன்னேறவேண்டும்.
- நல்லவர்கள் மற்றும் நல்லவைகளை நன்றியுடன் அங்கீகரித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
- வெற்றியையும் தோல்வியையும் சமமாகப் பாவிக்க வேண்டும்.
- உறவுகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த வழிமுறைகளை உங்களுக்கு சவால்களை எதிர்கொள்ளும் மனோ தைரியத்தையும் கொடுத்து தன்னம்பிக்கையும் அளித்து, முயற்சிகளுக்கு உத்வேகம் தந்து வெற்றிக்கு வழி காட்டும்.
புதிய எண்ணங்களை வரவேற்பது, புதிய கருத்துக்களை உருவாக்குவது, புதிய உத்திகளைப் பின்பற்றுவது, வெற்றிக்கு ஒரு உந்து சக்தியாக அமையும். சாதாரண ஒன்றியிலிருந்து அசாதாரணமான ஒன்றைவெளிபடுத்துபவர்கள் தான் வெற்றிக் கோப்பையைத் தட்டிச்செல்வார்கள்.
பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது, இன்னொரு கோணம், இன்னொரு தீர், இன்னொரு செயல்முறை. இன்னொரு அணுமுறைஇருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
சவால்களில், பிரச்சகைகளில் வாய்ப்புகளில் எப்படி எதிர் செயல்புரிய வேண்டும் என்பதை அனுபவம் உங்களுக்கு கற்றுத்தரும். சிறிய கத்தி விரைந்து பாயும்.ஆனால் மேலோட்டமாகப் பதியும், பெரிய கத்தி நிதானமாகப் பாயும், ஆனால் ஆழமாகப் பதியும் என்பது பழமொழி. இது உங்களுக்கு அனுபவம் வரும் போது தெரியும்.
ஒவ்வொரு பறவைக்குமான உணவை இறைவன் வைத்திருக்கிறான். ஆனால் பறவையின் கூட்டுக்குள் வைப்பதில்லை என்பது ஆங்கில பழமொழி. பறவை வெளியே வந்து தான் இரையை தேடிக் கொள்ள வேண்டும் என்பது நியதி. அதைப்போல ஒவ்வொரு பிரச்சனைக்குள்ளும் தீர்வு இருக்கிறது. தீர்வு நம்மைத் தேடி வராது. தீர்வை நோக்கித்தான் நாம் போயாக வேண்டும்.
ஒவ்வொரு சவாலும் வாய்ப்புகளோடு வருகிறது. ஒவ்வொரு வாய்ப்பும் சவால்களை தன்னகத்தே கொண்டுள்ளது. எப்போதும் இன்னொரு செயல்முறை உண்டு என்ற தன்னம்பிக்கையோடும் துணிவோடும் செயல்பட வேண்டும்.
சவால்களை சிரித்த முகத்துடன் எதிர்கொள்ள வேண்டும். எந்த வழி முறை அதைச் சந்திப்பதற்கு சிறந்த முறை என்று ஆய்ந்து அந்த வழியை ஒருமுறைஅல்ல, பலமுறைமுயற்சித்து மீண்டும் மீண்டும் போராடினால் தான் வெற்றி பெறமுடியும். போராட்டம் தான் வாழ்க்கை.
சலியாத தொடர் முயற்சியும் அதற்குரிய கடுமையான உழைப்பும் மட்டும் தான் சவால்களை வெல்வதற்குரிய சரியான வழியாகும். 18 முறைதோல்வி கண்டு, 19 வது முறைவெற்றி பெற்றகஜினி முகமது கதை நமக்குத் தெரியும். முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் என்பது முயற்சி ஒன்றுதான் வெற்றிக்குரிய தாராக மந்திரம் என்பதும் தெரியாதது அல்ல.
மரணம் என்பது என்ன? என்று கேட்டஒரு மாணவனுக்கு மாண்புமிகு அப்துல்கலாம் அவர்கள் மூச்சு நின்றுவிடுதல்ல மரணம், முயற்சி நின்று விடுவதே மரணம் என்றார்.
தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றிக் கொண்டிருக்கிறபூமி. நமக்கும் சொல்லுகிற பாடம் இறுதி வரை இயங்கிக் கொண்டே இரு என்பது தான்.
கடுமையான உழைப்பு ஈடு இணை இல்லை
ஓய்வில்லா கடும் உழைப்பும், தளர்வில்லா முயற்சியும்
உச்சிக்கு இட்டுச் செல்லும் தாரக மந்திரங்கள்
ஆதலின் முயற்சிப்போம், உழைப்போம், வெற்றியடைவோம், உயர்வடைவோம்.[/hide]
இந்த இதழை மேலும்