![]() |
Author: ஆசிரியர் குழு
May 2018 | Posted in Online News |
தி.ரே. மோனிசா
வெற்றி என்பது வாழ்வின் எளிதாக கிடைக்கும் கனியல்ல! தோல்வி என்னும் பல மரங்களைக் கடந்து, தடைகளை தாண்டி எட்டிப் பறிக்கும் கனியே வெற்றி. ஒருவன் வாழ்வில் எத்தனை முறை தோல்வி அடைகிறானோ, அந்த அளவிற்கு அவன் வாழ்வின் உயரத்திற்கு செல்லப் போகின்றான் என்று தான் அர்த்தம்.
நம் எண்ணங்கள் தான் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும். வாழ்வில் இலட்சியம் கொண்டு பாதையைக் கடக்க வேண்டும். இலட்சியம் அற்ற மனிதனின் வாழ்வானது சேரும் இடம் அறியாமல் பயணத்தை தொடங்குவது போன்றது. செல்லும் இடம் அறியாமல் வேகமாய் பயணிப்பதில் பலன் ஏதுமில்லை.
ஒரு செடியை நட்டு அதற்கு நாம் தண்ணீர் ஊற்றாமல் இருந்தால் அது பட்டுபோய் விடும். அதே நாம் அதற்கென்று தனி நேரம் செலவிட்டு அதை பராமரித்து வந்தால் தான் அது வளர்ந்து நல்ல பயன் அளிக்கும். அது போல் நாம் வாழ்வில் ஒரு செயலைத் தொடங்கி அதற்கான எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தால் வெற்றி இலக்கை அடைய முடியாது.
வாழ்வில் வெற்றிக் கனியை பறிக்க ஓடும் இந்த வேளையில் எந்த செயலையும் நாளை என்று தள்ளி போடுபவரை நிறுத்தினாலே வெற்றியின் உச்சியை அடையலாம். நம்மால் ஒரு செயலை முழுமையாக செய்ய முடியுமா? என்ற கேள்விக்கே மனதில் இடம் கொடுக்க கூடாது நம்மால் முடியும் என்று நினைத்து செய்ய வேண்டும்.
வெற்றி ஒருவருக்கு மட்டுமே சொந்தமன்று என்பதை உணர்ந்து அதை நம் வசப்படுத்த நல்ல இலட்சியத்தோடு தோல்வியைத் தூண்டுகோலாக கொண்டு உழைத்துய எடுக்கும் செயல் அனைத்தும் வெற்றியில் தான் முடியும் என்று முழுதாக நம்பினால் வெற்றிக் கனி நம் வசப்படும்.
“முயற்சி என்ற பூட்டை தன்னம்பிக்கை என்னும் திறவுகோலால் திறந்தால் வெற்றி என்றும் உங்கள் கையில் தான்”
தன்னம்பிக்கையோடு முயன்று வெற்றி பாதைக்கு செல்வோம்!! வெல்வோம்!!

Share

May 2018


















No comments
Be the first one to leave a comment.