Home » Online News » தேடாதே ..! உருவாக்கு…!

 
தேடாதே ..! உருவாக்கு…!


ஆசிரியர் குழு
Author:

 “விதைத்தவன் உறங்கினாலும்

விதைகள் உறங்கியதில்லை”

என்ற பொன்மொழியை அறிந்திருப்போம். என்றோ நம்முள் விதைத்த நம்பிக்கை ,ஒரு நாள் வெற்றியை மரம்போல விளைத்தே தீரும் என்ற வார்த்தைக்கு வடிவமாக தன் வாழ்வை வாழ்ந்து மறைந்தவர் அமரர் அ.பெ.ஜெ. அப்துல் கலாம்.

காலம் கணக்கற்ற மனிதர்களைத் தடயமின்றி கடத்திச்  சென்றிருந்தாலும் சிலர் அதில் விலக்கற்றவர்களாக திகழ்வார்கள். பூமி  அவர்களால் புண்ணியங்கள் பெற்றிருக்கும்.  அவர்களின் நம்பிக்கையும் நேர்மறை எண்ணங்களையும் இணைத்தே மாற்றங்களை கொணர்ந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களுள் தலையாயவர் அப்துல்கலாம்.

தக்கள் ஜனாதிபதி , ஏவுகணை நாயகன், எளிமையின் சிகரம் என எந்த நற்சொல்லை அடைமொழியாக்கினாலும் அதற்கு ஏற்றாற்போல மிகச்சரியாக பொருந்தியவர்.வெற்று கனவுகளோடு பயணித்த பலரை  இலட்சியக் கனவு காண அடிக்கோலிட்டவர். ஆரம்ப வயதிலிருந்தே அனுபவத்தின் வாயிலாக அறச்செயல்களை நிரம்பக் கற்றவர்.

மனிதனை மனிதநேயத்தோடும், மாண்பான எண்ணத்தோடும் அணுகியவர். உலக அமைதிக்காக தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்தவர். செயல்படுத்தவும் முனைந்தவர். இந்தியாவின் வல்லரசு கனவைத் தாம் கண்டதோடு நில்லாமல்  எல்லா மக்களையும்  அதனை நோக்கிய கனவைக்  காணச் செய்தவர்.

இவற்றையெல்லாம் புகழாரங்கள் போல பாவிக்காமல் தனிமனிதனின் தன்னம்பிக்கையால் விளைந்த செயலாக பாருங்கள். ஒற்றை மனிதர் எண்ணினால் எந்த அளவில் மாற்றம் கொண்டு வர முடியுமென்பதன் இரகசியத்தை மறைமுகமாக அவர் நமக்கு உணர்த்தி சென்றிருக்கிறார்.

‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம் ’

என்ற ஆகச் சிறந்த இலட்சியங்களை அûவைரின் அகங்களிலும் பதிந்தவர்.

பெரும்பாலும்  இளைய சமூகத்தின் மீதும்  குழந்தைகள் மீதும் தீரா அன்போடு முழு நம்பிக்கையும் கொண்டிருந்தவர். வார்த்தைகளால் தன்னம்பிக்கை ஊட்டியதோடில்லாமல் அதன்படி வாழ்ந்தும் காட்டியவர். தன் வயதின் மூப்பை ஒருபோதும் பொருட்படுத்தியவரில்லை. குடியரசுத் தலைவர் பதவியைக் காட்டிலும் ஆசிரியர் பணியை பெரிதும் நேசித்தார். அதனால் இறக்கும் தருவாயிலும் ஆசிரியராகவே இறந்தார்.

விவேகானந்தருக்குப் பிறகு இளைய சமூகத்தை நல்வழிப்படுத்த பிறந்த தலைவர். நாட்டின் நலம் ஒன்றே  நம் தேவையென நாளும் போதித்து பின்பற்றிய பொதுநலவாதி.

 ‘‘ நம்பிக்கை நிறைந்த ஒருவர்

யார் முன்னேயும் எப்போதும்

மண்டியிட மாட்டார்’’

என உற்சாகத்தோடு  தன்னம்பிக்கை விதைத்தவர். எளிமையால் எதையும் வென்றவர்

“ஒரு மனுஷன் பிரியும்போது

அவன் தாயழுதா அவனொரு நல்ல மகன்

அவன் பிள்ளைகள் அழுதா அவனொரு நல்ல தகப்பன்

அவன் பிரிவுக்காக ஒரு நாடே அழுதா

அவன் நல்ல தலைவன்”

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைளில் தான் உள்ளது.

இது போன்ற  பல வரிகளின் வாயிலாக அவர் உணர்ந்த முயன்ற ஒற்றை ஆயுதம் ‘தன்னம்பிக்கை’ அதை வெளியெங்கும்  தேடாதே….!! உன்னுள்ளே உருவாக்கு…!

நல்லோரின் செயல்புரிந்து நாயகனாய் உரு கொள்…!

நாடும் உனை நாடும், நம்பிக்கை கொள்….!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2018

தகுதியை அறிந்து கொள்
பேசும் தெய்வம் உலக அன்னையர் தினம் – மே 13
சவால்களை வெல்வது எப்படி?
நரையும் திரையும்
நம்பிக்கை இழக்காமல் இருப்போம்
தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு
வெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்!
உலகில்லை உழவனின்றி
சிறுநீரக கற்களுக்கு உணவு பழக்கம் காரணமா?
சாதுர்யம்
வெற்றி உங்கள் கையில் – 53
வாழ நினைத்தால் வாழலாம் அறிவின் அர்த்தம்
முசோலினியின் செயல்பாடு
முயற்சியே முன்னேற்றம் – 4
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள் -5
சாதனைகளைச் சாதிப்போம்
தன்னம்பிக்கை மேடை
உழைப்பின் ஏற்றம் உயர்வின் முன்னேற்றம்