May, 2018 | தன்னம்பிக்கை - Part 2

Home » 2018 » May (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  நரையும் திரையும்

  அன்பு நண்பர்களே! நான் இதுவரை சொன்னது எல்லாம் உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ. ஆனால், இப்பொழுது உங்களுக்கு நான் சொல்லப்போவது மிகவும் பிடிக்கும். காரணம், நான் உங்கள் நரைத்த முடியை நிரந்தரமாக இயற்கையான வழியில் கருமையாக்க அல்லது நரைப்பதைத் தள்ளிப்போட வழி சொல்லப் போகிறேன். இப்பொழுது என் கைகளை குலுக்க ஆசைதானே? எனக்கும் இதை எழுதுவதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அதற்கு முன் உங்கள் நரைக்குத் திரையாகப் பூசும் இரசாயனத்தின் அபாயத்தைத் தெரிந்து கொள்வோம்.

  நரைப்பருவம் வருமுன்னரே நரைத்துவிட்ட முடிக்கு அடிக்கும் இரசாயன கருப்பிற்கு பின்னால் ஒரு பயங்கரம் இருக்கிறது. அது என்னவென்றால் நம் ஆயுளை அதிரடியாக குறைக்கும் புற்றுநோய் ஆபத்துதான். இரசாயன முடிச் சாயத்தின் கருமை நிறமியானது நம் வழுவழுப்பான முடியில் ஒட்டுவதற்காக மிகத் தீவிரமான இரசாயன ஒட்டுப்பொருளை சேர்த்துள்ளனர். இந்த இரசாயன ஒட்டுப்பொருளே நம் உடல் செல்களை எதிர்வினை யாக்கமாக (Reaction) செயல்பட்டு சிதைவை உண்டாக்கு கின்றன. இப்படி அடிக்கடி நிகழும் எதிர்வினையாக்கமே நீடித்த காலத்தில் புற்று வளர்வதற்கு அடிப்படைக் காரணமாகிவிடுகிறது. அன்பு நண்பர்களே!  இளமையிலேயே வந்துவிட்ட நரையை இப்படி திரைபோட்டு மறைக்கத்தான் வேண்டுமா? அப்படி மறைத்து நமக்குள்ளே மறைவாக வளரும் புற்றுநோய் வேண்டுமா? ஆகவே, முடியின் நரையை இயற்கையான முறையில் கருப்பாக்க முனைவதே நல்லது என்று புரிகிறதா?

  அடுத்து, நாம் முடி நரைப்பதை எப்படி குறைப்பது அல்லது தள்ளிப்போடுவது என்று பார்ப்போம். நம் முடி நரைப்பதற்குக் காரணம். நம் கல்லீரலின் நீர்த்துப்போன பித்தமே காரணம். போதிய சத்தும் சக்தியும் இல்லாத நிலையில் கல்லீரலால் தரமான பித்தத்தைச் சுரக்கமுடியாமல் திணறும். நீர்த்துப்போன பித்தநீரால் மலைபோல் இருக்கும் புரதம் மற்றும் கொழுப்பைச் செரிக்கமுடியாமல்  தடுமாறும். இந்தச் சூழலில் நம் மூளையானது நம் கல்லீரலை இன்னும் அதிகமாக பித்தத்தைச் சுரக்கச் சொல்லி கட்டளையிடும். இப்படிச் சுரக்கும் பித்தமும் போதிய ஊட்டமில்லாமையால் வீணாகத்தான் போகும். இப்படி அதிகமாகத் தேங்கி விட்ட நீர்த்துப்போன பித்தப் பொருள்தான் நம் முடி வழியாக வெள்ளி வெளுப்பாக வெளிப்படுத்தப்படுகிறது. ஆக, நம் கல்லீரலை உயிர்ப்புப் பெற வைத்தால் நம் முடி நரைப்பது குறையும்.

  இந்த இதழை மேலும்

  நம்பிக்கை இழக்காமல் இருப்போம்

  சமீபத்தில் ஒரு நண்பரைச் சந்திக்க காஞ்சிபுரம் சென்றிருந்தேன். நான் மூன்று வருடங்கள் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் படித்திருக்கிறேன். காஞ்சிபுரம் எனக்கு மிகவும் பிடித்தமான ஊர். காரணம் நிறைய கோயில்கள். மற்ற ஊர்களைக் காட்டிலும் விலைவாசி குறைவு. நானும் எனது நண்பன் இராமமூர்த்தியும் விடுமுறை நாட்களில் கோயில்களுக்குச் செல்லுவோம். நண்பனுக்கு வெளிநாட்டுக்காரர்களிடம் பேசி அவர்களின் நாணயங்களை சேகரிப்பது பொழுது போக்கு. படிக்கும்போதே நிறைய வெளிநாட்டு நாணயங்களை சேகரித்து வைத்திருந்தான். எனக்கு அதிலெல்லாம் பெரிதாக ஆர்வமில்லை. படிக்க வேண்டும் என்ற ஆர்வமே பத்தாம் வகுப்பிற்கு வந்த பின்னால்தான் தோன்றியது.

  என் நண்பரைச் சந்தித்து முடித்து கோயிலுக்கெல்லாம் சென்று தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்தேன். நல்ல பசி. ஏதாவது ஒரு நல்ல ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டே ஆகவேண்டும் என்று தோன்றியது. காஞ்சிபுரத்தில் இருந்த பிரபலமான அந்த ஓட்டலுக்குள் நுழைந்து அமர்ந்தேன். உணவை ஆர்டர் செய்து விட்டுக் காத்திருந்தேன். அந்த ஓட்டலில் ஸ்வாமி கிருபானந்த வாரியரின் புகைப்படத்தை மாட்டி வைத்திருந்தார்கள்.

  கிருபானந்த வாரியர் மீது எனக்கு எப்போதுமே ஒரு பெரிய பற்று உண்டு. நான் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த போது எங்கள் பள்ளி ஆண்டு விழாவிற்கு அவரைத்தான் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். வழக்கம்போல் பிரமாதமாகப்பேசி எங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார். எனது முதல் கவிதைப்புத்தகத்தை அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்தேன். பழைய நினைவுகளில் மூழ்கி எழுந்தபோது ஒரு சம்பவம் நினைவிற்கு வந்தது.

  ஒருநாள் சிறுவன் ஒருவன் தனது வீட்டில் உட்கார விரும்பினான். அவன் உட்கார விரும்பிய இடத்தில் தூசுகள் படிந்திருந்தன. உடனே அதை சுத்தம் செய்துவிட்டு அந்த இடத்தில் உட்கார்ந்தான். இதை கவனித்துக் கொண்டிருந்த அவனது தாயார் மகனிடம் விசாரித்தார்.

  சற்று முன்னர் நீ என்ன காரியம் செய்தாய்?

  அம்மா, தரை தூசியாக இருந்தது. அதனால் அந்த தூசியை தட்டிவிட்டு உட்கார்ந்தேன்                 இப்போது அந்த அம்மையார் தனது மகனிடத்தில் சொன்னார்.

  இந்த இதழை மேலும்

  தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு

  (Persistent diarrhea)

  வரையறை

  ஒரு குழந்தைக்கு 14 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக பேதி இருந்தால் அதை நாம் தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு என்று கூறுகிறோம்.

  நீண்ட வயிற்றுப்போக்கு (Protracted Diarrhea)

  வயிற்றுப்போக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் வந்து, குழந்தை வாய் வழியாக உணவு எடுக்காமல் ஊட்டச்சத்து குறைந்து இரத்தக்குழாய் வழியாக ஊட்டச்சத்து கொடுத்தால் அது Protracted Diarrhea என கூறப்படும்.

  நாள்பட்ட வயிற்றுப்போக்கு (Chronic Diarrhea)

  உணவு ஒழுங்காக ஜீரணம் ஆகாததாலும் ஓழுங்காக உறிஞ்சப்படாததாலும் திடீரென்று எந்த ஒரு தொற்றலும் இல்லாமல் வயிற்றுப் போக்கு 14 நாட்களுக்கு மேல் இருந்தால் அதை நாள்பட்ட வயிற்றுப்போக்கு என்று கூறப்படுகிறது.

  நோய் தொற்று காரணங்கள்

  • பாக்டீரியா ( ஷிஜெல்லா)
  • ஒட்டுண்ணி ( என்டமிபா ஹிஸ்டாலிட்டிகா)
  • வைரஸ்
  • ஹச்.ஐ.வி
  • ஊட்டச்சத்துக் குறைபாடு
  • பாரம்பரியம்
  • மாட்டுப்பாலினால் ஏற்படும் ஒவ்வாமை
  • லேக்டோஸ் ஒத்துக் கொள்ளாததால்

  அறிகுறிகள்

  • தொடர்ச்சியாக வயிற்றுப்போக்கு
  • சோம்பிக் காணப்படும்
  • ஊட்டச்சத்து குறைபாடு
  • நீர் பற்றாக்குறை
  • ஜிங்க் (Zinc) பற்றாக்குறையால் ஏற்படும் வீக்கம்

  கண்டறியும் முறை

  • முழு இரத்தப் பரிசோதனை
  • மலப்பரிசோதனை
  • இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் யூரியா, கிரியேட்டினின் தாது பொருட்கள், முதலியவை கண்டறிய வேண்டும்.
  • எண்டோஸ்கோப்பி (Endoscopy)
  • கொலனோஸ்கோப்பி (Colonoscopy)சில சமயங்களில் நாம் இந்த நோய்க்கான காரணத்தைக் கண்டறிய முடியாது.

  இந்த இதழை மேலும்

  வெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்!

  நீங்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெற வேண்டுமானால், “வெற்றி பெற வேண்டும்” என்ற குறிக்கோளை மனதில் கொண்டு, அந்த எண்ணத்திலேயே ஆழ்ந்திருக்க வேண்டும். அந்த எண்ணத்தை நீங்கள் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். முதலை, ஒரு விலங்கைப் பற்றிக் கொண்டால், அவ்வளவுதான்!  அதன் வாயில் மாட்டிக் கொண்ட விலங்கு தப்பிக்கவே முடியாது. முதலை தான் பிடித்த பிடியையும் விடாது. அதுவோல நீங்களும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.

  உங்களுடைய வெற்றி உங்களால் உண்டு பண்ணப்படுகின்றது. மற்றவர்களால் அல்ல என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். “இந்தச் செயலில் நான் வெற்றி பெறுவேன்” என்று நீங்கள் கூறுவதோடு உங்களை நீங்கள் நம்ப வேண்டும். நம்பிக்கை ஒன்றுதான் உங்களுடைய வெற்றியின் படிக்கட்டுகளாக அமையும்.

  வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றுவதற்கு இடைவிடாமல் முயற்சி செய்யுங்கள்!  கடுமையாக உழையுங்கள், உங்களைத்தேடி வெற்றி என்ற காதலி ஓடோடி வருவாள். “வெற்றி மகத்தானதுதான். ஆனால் தோல்வி அதை விட மனத்தானதாக இருக்கும்” என்று கூறுகிறான், வால்ட் வில்மன் ஏனென்றால் அனுபவங்களை நமக்குக் கற்றுத் தருகின்ற ஆசானாகத் தோல்வி விளங்குகிறது.

  நீண்ட காலமாக ஒருவர் உழைத்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் அவர் எதிர்பார்த்த வெற்றிகிட்டவில்லை. காரணம் என்ன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் செக்குமாடு  போல ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்தாரே தவிர அவரிடம் திட்டமிட்ட உழைப்பு இல்லை. திட்டமிட்ட உழைப்பு அவரிடம் இருந்திருந்தால், வெற்றிக்கன்னி அவரை வட்டமிட்டு வளைத்துக் கொண்டிருப்பாள்!

  இந்த இதழை மேலும்

  உலகில்லை உழவனின்றி

  இந்திய இளைஞர்களே உழவன் என்பவன் அவனுக்காக மட்டும் உழைப்பவன் அல்ல.

  இந்த உலகத்துக்காக வியர்வை சிந்தி உழைப்பவன் ஆவான். உழவனது உழைப்பு உழவனுக்கு மட்டும் பயன்படுவதில்லை.

  இந்த உலகத்துக்கும் பயன்படுகிறது.

  இப்படி இருக்கையிலும் உழவன் மனித சமுதாயத்தாலும், அரசாங்கத்தாலும் மதிக்கப்படுவதில்லை. மாறாக மிதிக்கப்படுகிறான்.

  உலகின் உயிர்த்தொழிலான பயிர்த்தொழில் இன்றைய சூழ்நிலையாலும், தவிர்க்க முடியாத பல காரணங்களினாலும் நாளுக்கு நாள் நலிவடைந்து கொண்டே வருகிறது.

  விவசாயத்தைக் கண்டுகொள்ள சரியான சட்டமும் இல்லை; முறையான திட்டமும் இல்லை.

  தான்  உற்பத்தி செய்த பொருள்கள் பல்வேறாகப் பின்னப்பட்டு, வடிவமைக்கப்பட்டு நம் முன் இருக்கின்ற நவீனப் பொருட்கள் எல்லாம் விவசாய உற்பத்தியின் பிரதிபலனாக உருவானவையாகும்.

  மதிக்கப்பட வேண்டிய உழவன் ஏன் மிதிக்கப்படுகின்றான்? இதற்கெல்லாம் காரணம் என்ன? உழவனுக்குள்ளும் உழவுக்குள்ளும் இருக்கும் மகிமையையும், சிறப்பையும், பெருமையையும், அவசியத்தையும், இதுவரை யாரும் அறிந்ததில்லை அதனால் தான்.

  உழவனின் பெருமையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

  அவ்வாறு நாம் அனைவரும் தெரிந்து கொண்டோமானால், உழவனையும், உழவுத் தொழிலையும் வணங்கத் தொடங்கி விடுவோம்.

  உழவுக்குள் எத்தனை விசயங்கள் மறைந்துள்ளன; அடங்கியுள்ளன.

  தாழ்வு மனப்பான்மையுடன் உழவர்கள் தொழில் செய்யக்கூடாது.

  முதலில் இவ்வுலகத்திற்கும், உலக வளர்ச்சிக்கும், உழவுத் தொழிலுக்கும் என்ன தொடர்பு என்பதையும், இதன் தேவையையும் முதலில் உழவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

  அப்படித் தெரிந்து கொண்டு, உங்கள் தொழிலை நீங்கள் செய்யும் போது தான் உங்களுக்குள் இருக்கும் ஆர்வம் அதிகரிக்கும், தாழ்வு மனப்பான்மை ஒழியும். உழவுத் தொழிலே உலகில் உயர்ந்தது என்பதை நாம் அனைவருமே அறிந்து கொள்ள முடியும்.

  விவசாயத்தில் எத்தனை எத்தனை சிறப்பம் சங்கள் அடங்கியுள்ளன.

  உலகையும் உழவையும் உழவனையும் மனதில் கொண்டு, உழவனின்றி உலகில்லை என்ற தலைப்பில் யாம் எழுதிய தனிப் புத்தகத்திலிருந்து இதோ ஒரு சில பக்கங்களை உங்களுக்குக் காண்பிக்கின்றேன்.

  உலகின் முதுகெலும்பாக விவசாயம் தான் அன்று முதல் இன்று வரை இருக்கின்றது என்பதைப் பெரும்பாலானோர் உணர்ந்து கொள்ளவில்லை.

  கம்ப்யூட்டரிலும், இன்டர்நெட்டிலும் நாமெல்லாம் வேலை பார்த்து வாழ்க்கையை நாகரீகமாக நடத்துகிறோம், காட்டிலும் சேற்றிலும், மேட்டிலும் அநாகரீகமாகத் தொழில் செய்து வாழ்கிறார்கள் உழவர்கள் என்ற நகரவாசிகள் விவசாயிகளை அலட்சியமாக எடுத்துக் கொள்கின்றனர்.

  இந்த இதழை மேலும்

  சிறுநீரக கற்களுக்கு உணவு பழக்கம் காரணமா?

  மனித உடலில் சிறு நீரகங்களின் பங்கு அபரிமானதாகும். அவை உடலில் சேரும் கழிவுகளை சுத்திகிரித்து ஆரோக்கிய வாழ்வை தருகிறது. இந்த சிறுநீரகங்களில் கற்கள் ஏற்பட என்ன காரணம்? என்பது தொடர்பாக டாக்டர் கௌரி சங்கர் செந்தில்வேலிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

  சிறுநீரகங்கள் எந்த பகுதியில் உள்ளன?

  எல்லோருக்கும் 2 சிறுநீரகங்கள் செயல்படுகின்றன. சிறுநீரகம் முதுகுதண்டின் இருபுறமும் விலா எழும்பின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது. ரத்தத்தில் உள்ள நட்சுப்பொருட்கள் மற்றும் உடலில் உள்ள தேவைக்கு அதிகமான நீரை வெளியேற்றுகிறது.

  சிறுநீரக கற்கள் உருவாவதற்கான காரணங்கள் என்ன?

  கால்சியம் ஆக்சலேட், யூரிக் அமிலம் போன்ற பொருட்களின் அளவு சிறுநீரில் அதிகமானால் கற்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. இவை படிக உருவம் பெற்று, பெரிதாகி சிறுநீரக கற்களாகிவிடுகிறது.

  சிறுநீரக கற்களுக்கான அறிகுறிகள் யாவை?

  சிறுநீரக கல் சிறுநீர்க்குழாய் நோக்கி (UR-WTER) நகரும் போது துடிக்க வைக்கும் வலி, விட்டு விட்டு வரும். வலி, ஒற்றை முதுகு வலி மற்றும் கற்கள் நகர்கவதை பொருத்து விலா எலும்புகளின் நடுவிலோ, வயிற்று பகுதியின் கீழோ, பிறப்பு உறுப்புகளின் பக்கமாகவோ ஏற்படலாம். சிறுநீரில் ரத்தம் கழிதல், வலி அதிகமானால் வாந்தி ஆகியவை ஏற்படும். சிலருக்கு வலி இல்லாமல் வேறு பரிசோதனையின்போதும் தெரிய வரலாம்.

  சிறுநீரக கற்கள் உள்ளதா? என்பதை உறுதி செய்வது எப்படி?

  சி.டி ஸ்கேன் அல்லது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் சிறப்பு எக்ஸ்ரே மூலமாகவும் கண்டு பிடிக்கலாம்.

  அறுவை சிகிச்சை இல்லாமல் சிறுநீரக கற்களை அகற்ற முடியுமா?

  முடியும். 5-7 மி.மீ. அளவிலான கற்கள் வேறு சிகிச்சையின்றி வெளியேறிவிடும். 9 மி.மீ மேலான கற்கள் சிறுநீர்க்குழல் வழியாக வெளியேறுவது கடினம். அப்போது மின் அலைகளை செலுத்தி கல் நொறுக்குதல் சிகிச்சை (Eswl -லித்தோடிரிப்ஸி) கற்கள் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்க்குழல் (மேல்பகுதி)யில் இருக்கும் போது பரிந்துரைக்கப்படலாம்.

  இந்த இதழை மேலும்

  சாதுர்யம்

  அப்பா

  என்னை பேஸ்கட்பாலில் சேர விடுங்கப்பா

   என்று சிணுங்குகிறாள் செல்ல மகள்.. ‘

  இங்கே பார் ஒழுங்கா தர்சாதம் எல்லாம் சாப்பிட்டு கொஞ்சம் சதைப்பிடி கொஞ்சம் பலமாயிரு உடனே சேர்த்துக்கலாம்.. பேஸ்கட் பாலில் வேகம் ரிஃபளக்ஸ், எனர்ஜி எல்லாமே தேவைப்படும்.. நீங்க காலை நேரத்தில் பி.வி. சிந்து மாதிரி முனரைக்கெல்லாம் எழுந்திரிக்காட்டியும் அட்லீஃஸ்ட் ஐந்தரைக்காவது தானா கண் விழிச்சு உடற்பயிற்சி செய்ய போலாம்ங்க அப்பானு நாம பயிற்சி செய்யலாம். அதன்பிறகு உனக்கு ரிப்ஃளக்ஸ் கூடும்.. இல்லைன்னா அக்கா மாதிரி ரிஸ்ட்ல( மணிக்கட்டு) ஃபராக்சர் ( எலும்பு முறிவு) ஆகிடும் என்று அப்பா சைன்ஸ் ( அறிவியல் ) கலந்து மகளின் உணர்வுகளோடு மோதுகின்றார். இது நிறைய வீடுகளில்  நிகழ்கின்ற சமாச்சாரங்கள் தான்…

  ரீஃப்ளக்ஸ் (உடன் பிரதி செயல் வினை ஆற்றல்- என்று ஒரு முழத்திற்கு தயக்கத்தோடு தமிழ்படுத்தி திருப்தி அடையலாம்.) ரிஃப்ளக்ஸ் என்பது நமது உடலின் மீது மூளை செலுத்தும் ஆதிக்கம். மூளை  நினைக்கும் வேகத்தில் உடலால் செயல் புரிய வைக்கும் ஆற்றல். மகாகவி பாரதியோட நல்லதோர் வீணை செய்தே பாட்டில் விசையறு பந்தினை போல மனசு சொல்ற இடம் நோக்கி பாய்கின்ற உடல் வேண்டும் என்று சொல்லி இருப்பார் அது விளையாட்டு வீரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

  தொடர்ந்து பயிற்சி அத்தகைய ஆற்றலை உடல்மன காம்போ (இணை)க்கு கொடுக்கின்றது. கிரிக்கெட்டில் வீராட்கோலியை ப்ரண்ட் புட் ஆஃப் ட்ரைவ் ஆடுவது மாதிரி ஒரு கச்சிதமான ரிஃப்ளக்ஸ் வர.. பலமுறை ஆடிய நினைவாற்றல் அப்புறம் அதைத் தொடர்ந்து இது அப்படி பிரில்லியண்ட் என்று சொல்லப்படும் மெச்சப்படும் அதி அற்புதமான மெமரி லாஜிக் காம்பினேஷன் இதைத்தான் சமயோஜிதம் என்று பாராட்டுகின்றார்கள் பெரியோர்கள்.

  மிச்சிகன் பல்கலைக்கழகத்திலே ஆராய்சியாளர்கள் மெமரிஸ்டர் அப்படீன்னு ஒரு சிலிக்கான் அடிப்படை யிலான எலக்ட்ரானிக் பொருளை கண்டு பிடிச்சிருக்காங்க.. இதை கொள்கலன் கணினி செயல்பாட்டு முறையின் புத்தம் புது வெளியீடு என்று சொல்லலாம். இந்தக் கொள்கலன் கணினி முறைகள் தகவல்களை சேகரித்து நினைவகமாக மாறி கிட்டத்தட்ட மூளை நரம்புமாதிரி மாறி இயந்திரங்களை மனுசங்க மாதிரி யோசிக்க கத்துக் கொடுக்கின்றதாம்.

  இந்த இதழை மேலும்

  வெற்றி உங்கள் கையில் – 53

  தீர்வு எங்கே

  வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் பிரச்சினைகள் வந்து கொண்டு தான் இருக்கின்றது. “ஏழையாய் இருப்பதுதான் எனக்குப் பிரச்சினை. நோய் வந்தால்கூட தீர்க்க முடியவில்லை. நன்றாக சாப்பிட முடியவில்லை. படுத்தால் தூக்கம் வரவில்லை. குழந்தைகள் கேட்பதை வாங்கித் தர முடியவில்லை. சொந்தமாக வீடு இல்லை. உறவுக்காரர்களின் உதவி இல்லை” என ஒரு பக்கம் வறுமையில் வாடுபவர்களும், ஏழ்மை நிலையில் இருப்பவர்களும் கவலைக்கொள்கிறார்கள்.

  “வாழ்க்கையில் பணக்காரனாகி விட்டால் எந்தக் கவலையும் இல்லை. பிரச்சினைகளும் இல்லை” என்று அவர்களில் சிலர் நினைக்கிறார்கள்.

  பணக்காரனாகி விட்டால், பிரச்சினைகளும், கவலைகளும் ஓடிவிடுமா? இது சிலரது கேள்வி.

  இந்தக் கேள்விக்கு விடை காண உலகிலுள்ள முக்கிய உளவியல் வல்லுநர்கள் முயன்றுள்ளார்கள். அவர்களின் ஆய்வுப்படி “ஏழைகளுக்கு மட்டுமல்ல, பணக்காரர்களும் கண்ணீர் வடிக்கிறார்கள். கவலைப்படுகிறார்கள். பிரச்சினைகளோடுதான் வாழ்கிறார்கள்” என்று கண்டறியப்பட்டுள்ளது.

  “அக்கறைக்கு இக்கறை பச்சை” என்பதைப்போல மனிதர்களில் சிலர் ஒருவர் வாழ்வை எண்ணி பொறாமைப்படுகிறார்கள். ஏழையாய் இருப்பவர்களில் சிலர்,“பணக்காரர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்” என்று நினைக்கிறார்கள். அதேவேளையில் பணக்காரர்களாக இருப்பவர்களில் பலர் “ஏழையாய் இருந்தால் இந்த தொந்தரவு இல்லை. பணத்தையும் பாதுகாக்க முடியவில்லை. உறவுகளையும் அரவணைத்துச் செல்ல முடியவில்லை. யாரையும் நம்ப முடியவில்லை” என்று வேதனைப்படுகிறார்கள்.

  எது சிறந்த வாழ்க்கை?.

  “பணக்கார வாழ்க்கையா?”“பரம ஏழை வாழ்க்கையா?” என்பது இப்போது விடை காண முடியாத கேள்வியாக மாறிவிட்டது. எந்த வாழ்க்கை வாழ்ந்தாலும், பிரச்சினை என்பது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது. இதனால், பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதைப்பற்றிதான் நமது சிந்தனை அமைய வேண்டும். மாறாக,“ஐயோ எனக்குப் பிரச்சினை இருக்கிறது” என்று அலறி துடிப்பவர்களின் வாழ்க்கை பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகிறது.

  இந்த இதழை மேலும்

  வாழ நினைத்தால் வாழலாம் அறிவின் அர்த்தம்

  “பல்லாக்கை தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு”

  என்பதே உங்கள் வாழ்வை உயர்த்தும் ஒரே வழி.

  வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

  குருகுல காலம் தொட்டு ஆசிரியர்களும், ஞானிகளும் அறிவைப்பற்றி எத்தனையோ விஷயங்களை, விளக்கங்களை நமக்கு அளித்துள்ளார்கள்.  அவைகளில் பல அறிவுரைகளாகவும், போதனைகளாகவும் நம் கருத்துக்களத்தில் பொதிந்து கிடக்கின்றது.  சில படிப்பினைகளாகவும் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

  அறிவாளியாக இருப்பது எப்படி என்று மட்டும் நாம் தெரிந்துகொள்ளாமல், சாமர்த்தியக்காரனாக இருப்பது எப்படி என்றும் நம் புத்திக்குப் புகட்டி இருக்கிறோம்.  அவற்றை சரியான விதத்தில் நமது வளர்ச்சிக்கு உதவும் வகையில் பயன்படுத்துகிறோமா? என்ற கேள்விக்கு ஒவ்வொருவரின் மனசாட்சியே பதில் சொல்ல முடியும்.

  கண்ணன் அர்ச்சுனனுக்கு போர்களத்தில் சொன்ன விஷயங்கள் – படிப்பினையா?

  சகுனி போர் நடக்கும் முன்பும், நடக்கும் போதும் சொன்ன விஷயங்கள் – படிப்பினையா?

  முன்னது, அறிவின் சரியான பாதை – பின்னது அறிவின் அழிவுப்பாதை!

  ஒருவரது புத்திக்கூர்மை – மற்றவரை ஏமாற்ற உதவும் ஒரு வழியாக இருந்தால் – அந்தப்பாதை அழிவுப்பாதை தான்.

  ஆயிரமாயிரம் ஆண்டுகால வரலாறு கொண்ட மனித இனத்தின் இன்றைய பிரஜைகளே நீங்களும் நானும். வரலாறு படைக்கும் பொறுப்பும் நமக்கும்  இருக்கின்றது.

  ஆதிவாசியாக, காட்டில் விலங்கோடு விலங்காக வாழ துவங்கிய மனித இனம், அதே விலங்கிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள போராடியதும், விலங்கையே தனது உணவாக எண்ணினால் – ஆச்சரியம்தான் நமக்கு விடையாக.

  ஆக! ஆனந்தமான வாழ்வுக்கு “அறிவு” அவசியம் என்று அறிக!

  இன்றைய சூழலில் அறிவு எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும்?

  “அறிவு” தனிமனித வாழ்க்கையின் தரத்தை உயர்த்துவதாய்

  “அறிவு” சிக்கல்களை தீர்க்கும் சிறப்பான யோசனையாய்

  “அறிவு” அவலங்களைப் போக்கும் அற்புத ஆசானாய்

  இந்த இதழை மேலும்

  முசோலினியின் செயல்பாடு

  முதல் உலகப்போரிலே தீவிரமாக ஈடுபட்ட இத்தாலிக்கு போரின் விளைவு கொடுமையாக இருந்தது. இந்தப் போரிலே நேச நாடுகள் வெற்றி பெற்றும் கூட்டாளியான இத்தாலிக்கு சரியான பங்கு தரவில்லை.

  தன்மானம் உணர்வு கொண்ட இத்தாலி மக்களுக்கு இந்த அவமானம் பெரிய வேதனையைத் தந்தது. ஒரு பக்கம் தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடியால் வேலை நிறுத்தம் செய்தனர்.

  மறுபக்கம் போரில் ஈடுபட்டு வீடு திரும்பிய வீரர்கள் சலுகை கேட்டு கிளர்ச்சி செய்தனர். தொழிலாளர்கள் தொழிற்சாலைகளை கைப்பற்றிக் கொண்டு புரட்சி செய்தார்கள். தொழிற்சங்கங்கள் தொழிற்சாலைகளை நடத்த முடியாமல் திணறினார்கள்.

  இந்தச் சமயத்தில்தான் முசோலினி கருப்புச் சட்டை தொண்டர்களை உருவாக்கி வைத்திருந்தார். இந்த இயக்கத்திற்கு முதலாளிகள் ஆதரவு தந்தார்கள்.

  முசோலினி சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய இயக்கத்தை தீவிரப் படுத்தினார். ராணுவ வீரர்கள் முசோலினிக்கு ஆதரவு தந்தனர்.

  சமதர்மவாதிகளை இரும்புக்கரம் மூலம் நசுக்கினார் முசோலினி. அதன்பயன் பாஸிசவாதிகள் இத்தாலியில் ஆட்சியை கைப்பற்றினார்கள். முசோலினி ஏழைகளை பணக்காரர்களுக்கு எதிராகவும் மோதவிட்டு தன்னுடைய செல்வாக்கை அதிகரித்துக் கொண்டார்.

  இந்த இதழை மேலும்