– 2017 – December | தன்னம்பிக்கை

Home » 2017 » December

 
 • Categories


 • Archives


  Follow us on

  எண்ணியதை செய்யுங்கள்

  என்றாவது கொலை  செய்வதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா? நெஞ்சம் படபடக்காமல்,கைகள் தளர்ந்து போகாமல் கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு கொலை   செய்யும் கலையை உங்களுக்கு சொல்லித்தரப்போகிறேன்.

  தினம் தினம் கண்ணனுக்குத் தெரிந்த மனிதர்கள் பலரை கொலை செய்ய வேண்டும் என உங்கள் மனம் குழம்பி இருக்கலாம். உங்களோடு வாழ்கின்ற கண்ணனுக்குத் தெரியாத ஒருவனை நீங்கள் கொலை செய்ய வேண்டும்.

  அதிசயம் என்னவென்றால் இந்தச் செயலுக்கு சட்ட அத்தியாயங்களில் தண்டனைகள் குறிப்பிடவில்லை, மாறாக உலகம் உங்களுக்கு பூமாலை சூடலாம். அந்த “ஒருவனை” அறிந்துகொள்ள வேண்டுமெனில் என் கடைசி வரிகளுக்காக நீங்கள் காத்திருக்க வேண்டும்.

  மனிதா! நீ எச்சில் செய்த தேநீர் ஆறி போவதற்குள் உன்னோடு சில சூடான விவாதங்கள் செய்ய எத்தனிக்கிறேன்.

  உலக வாழ்க்கை என்னும் புத்தகத்தில் பிறப்பு, வாழ்வு, இறப்பு என்பவை சொல்லப்படாத சூத்திரங்களக இருக்கும் பொழுது, வரலாற்று புத்தகத்தில் வெகுசிலரே இடம் பிடிக்க முடிகிறது. இங்கே சிலரின்  கனவுகள் மட்டுமே நிஜமாகிறது, பல கனவுகள் நினைவாகின்றன!

  அச்சம், நாணம், தோல்வி, குடும்ப சூழல்,ச முதாயம் இவற்றுள் ஒன்று மேலே குறிப்பிட்டதற்கு நிச்சயக்கரணமாக இருக்கலாம்.

  எப்போது எங்கயோ தோற்று விட்டோம் என்பதற்காக இப்போது முகம் தெரியாத தோல்விகளிடம் தினம் தினம் தோற்று கொண்டு பத்தோடு பதினொன்றாக வாழ்வதில் அர்த்தம் என்ன?

  இந்த உலக வட்டத்தையே வெற்றி கொள்ள பிறந்தவர்கள் நீங்கள், குறிகிய வட்டத்திற்குள் உங்களை நீங்களே ஏன் சுருக்கி கொண்டீர்கள்?

  வரலாறு உங்கள்  பெயரை குறிப்பெடுக்க காத்திருக்கிறது, ஆனால் நீங்கள் இன்னும் கவலைகளிடம் மண்டியிட்டு கொண்டிருக்கிறீர்கள் என்பது தான் என் ஆதங்கம்.

  இந்த இதழை மேலும்

  வாழ நினைத்தால் வாழலாம் -11

  நிதானம்

  வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

  பரபரப்பான வாழ்க்கை பயணத்தில் ஒரு நாள் சிறிது நேரம் ஓய்வெடுத்து, சீரழிந்துவரும் இந்த சமூகத்தின் அவலங்களை சற்றே சிந்தித்து கொண்டிருந்தேன்.

  என் வீட்டு நிலைப்படியில் நிழலாடியது.  ஓடிச்சென்று பார்ப்பதற்குள் ஒசைப்பட்டது அழைப்பு மணி.

  கதவை திறந்து கண்டபோது – நிழல் நிஜமானது.

  நான் வசிக்கும் பகுதியிலுள்ள, எனக்கு தெரிந்த சில முகங்களும், தெரியாத சில முகங்களுமாக வணக்கம் வைத்தார்கள்.  பதில் வணக்கத்துடன் உள்ளே வாருங்கள் என்று கூறி அவர்கள் வசதியாக அமர்வதற்காக நாற்காலிகளை நகர்த்திப்போட்டேன்.

  வயதில் மூத்த பெரியவர் ஒருவர் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஆரம்பித்தார்.

  அருகில் உள்ள ஆலயத்தில் விழா எடுப்பதாகவும், அன்னதானம் ஏற்பாடு செய்ய இருப்பதாகவும், பண உதவியாக என் பங்களிப்பு இருந்தால் பயனாக இருக்குமென்றும் – நான் போகும் காலத்தில் கிடைக்கும் புன்னியதுடன் கூடவே – வாழும் காலத்திலேயே  பலரின் வாழ்த்தும் கிடைக்கும் என்று பீடிகை போட்டார்.

  வேதாத்திரி மகரிஷியின் சீடன் நான்.  முறையான வாழ்க்கை முறையே முன்னேற்றத்தின் முதுகெலும்பு என்ற கொள்கை கொண்டவன்.  அதனால் தான் பலரின் வாழ்க்கை வளமாக அமைய பயிர்ச்சி வகுப்புகளையும்  எழுத்துப்பணியையும் இரு கண்களாக கொண்டிருக்கிறேன்.  ஆகவே தான் எப்போதும் நான் கொடுக்க நினைப்பது அறிவு தானமே என்று அறிவுறுத்தினேன்.

  முகத்தில் ஏமாற்றம் தொனிக்க – தன் துண்டால் துடைத்துக்கொண்டு -“மிகவும் நல்லது.  ஒரு மணி நேரம் சிறப்பு சொற்ப்பொழிவுக்கு ஏற்பாடு செய்கிறேன்” – என்று சொல்லி தேதியை குறித்துக்கொண்டு திருப்தியுடன் சென்றார்.

  அவர் அன்னதானம் என்று சொன்ன வார்த்தை என் சிந்தனையின் செல்களை சீண்டிவிட்டது.

  “தானம்” – இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு என்ற வாசகத்தின் சிறிய வடிவம்.

  “தானம்” – இளகிய மனது கொண்டவர்களின் இதய துடிப்பு

  “தானம்” – அகங்காரமற்ற மனிதர்களின் அறிவு கொடை.

  “தானம்” – கொடுத்தவனின் மனதில் தோன்றும் மகிழ்ச்சி.

  “தானம்” – எடுத்துக்கொள் என்று சொல்லும் மனிதாபிமானத்தின் மறு பெயர்.

  “தானம்” – என்னாலும் முடியும் என்ற எண்ணத்தின் எதிரொலி.

  ஒருபுறம்,

  ஆயிரமாயிரம் வருடங்களாக நமது அறிவுக்குள் திணிக்கப்பட்ட தகவல்களின் அணிவகுப்பு.

  கண்ணனின் “தானத்தால்” குசேலனின் வாழ்வில் குதூகலம் என்ற பக்தி வாசகம்.

  கர்ணனின் “தானத்தால்” யுகங்கள் கடந்த புகழ் என்ற எதார்த்தம் சொல்லும் வாசகம்.

  பாரியின் “தானத்தால்” முல்லைபூ மலர்ந்தது என்ற மன மகிழ்ச்சி வாசகம்.

  பேகனின் “தானத்தால்” மயிலும் மகிழ்ந்தது என்ற இறக்க உணர்ச்சி வாசகம்.

  மன்னர்களின் “தானத்தால்” கவிதையும், கவிஞனும் நிலைதார்கள் என்ற வரலாற்று வாசகம்.

  ஞானிகளின் “தானத்தால்” அறிவும், அமைதியும் ஆன்ம தெளிவும் கிடைத்தது என்ற ஆன்மீக வாசகம்.இவையெல்லாம் “யாசகங்கள்” பெருமைப்படும் “வாசகங்கள்” அல்லவா.

  மறுபுறம்,

  இலவசாமாக கல்வி போதிக்கும் ஆசிரியர்கள்.

  கல்வியுதவி அளிக்கும் கார்பரேட் நிறுவனங்கள்.

  இரத்த தானம் என்ற பெயரில் எத்தனையோ உயிர்களை காப்பாற்றும் இளைய நெஞ்சங்கள் – இளகிய நெஞ்சங்கள்.

  தானத்தை பல்வேறு பெயர்களிலும், வடிவங்களிலும் அறிந்தாலும், அனைத்திலும் அடி நாதமாக இருப்பது ஒன்று தான்.

  நிதானம்– என்பதே நிதர்சனமாக தெரியும்!

  உணர்ந்தவர்கள் உண்மையை உணர்வர்.

  கண்ணனின் “நிதானம்” குசேலனின் பாக்கியம்.

  கர்ணனின் “நிதானம்” புகழின் மேன்மை

  பாரியின் “நிதானம்” மலர்களின் மகரந்தம்

  பேகனின் “நிதானம்” உயிர்களின் உயிர்ப்பு

  மன்னனின் “நிதானம்” கலையின் வாழ்வு.

  ஞானியின் “நிதானம்” ஆன்ம வெளிச்சத்தின் வளர்ச்சி.

  நிலையில்லாத வாழ்வில் நிதானத்தை கடைபிடித்தால் கிடைக்கும் நிச்சயமான வெற்றி – புகழ்!

  ஆக, தானத்தில் சிறந்ததுநிதானம்என்பதே என் ஒரு வரி உத்தரவாதம்.

  நிதானமாக இருந்தால் சிறக்க முடியுமா? என்ற சிறு கேள்வி சில சஞ்சலப்பட்ட மனங்களை சந்திக்கலாம்.

  விடை இதோ!

  “முடியும்” “நிச்சயமாக முடியும்”

  இந்த இதழை மேலும்

  நிர்வாகம் ஒரு நடைமுறை சார்ந்த அறிவியல்

  மகாத்மா காந்தி அவர்களால் வியாபாரத்தின் ஆதாரம் என்று வர்ணிக்கப்படுகிற, வாடிக்கையாளர் ஒரு பொருளை வாங்கும்போது எவற்றை மதிப்பிடுகிறார்?

  இந்த பொருள் தரமானதே!

  தயாரித்த நிறுவனம் தரமானதே! என்று உறுதிசெய்து கொள்கிறார்.

  “ஒரு நிறுவனத்தின் தரம்” என்பது அந்நிறுவனத்தின் உற்பத்தி அல்லது சேவையின் மேல் வாடிக்கையாளர் கொண்டுள்ள நம்பிக்கை, அந்நிறுவனத்தின் செயல்பாட்டின் மேல் கொண்டுள்ள மதிப்பு, அந்நிறுவனத்தின் அணுகுமுறையின் மேல் பதித்துள்ள பற்று ஆகியவற்றின் கூட்டுத்தொகை ஆகும். நீண்டநாள் அடிப்படையில் படிப்படியாக தர நிர்ணயத்தைப் பெறுவது, அதை நிரந்தரமாகத் தக்கவைத்துப் பாதுகாப்பது என்பது வியாபாரத்தின் அளவினாலோ, வியாபாரம் குறித்த பணக்குறியீடுகளாலோ அடையப்படுகிற வெற்றி அல்ல.

  பணத்தைக் கொண்டு பகட்டான அலுவலகங்களையும், பெருமை பேசும் பணியாளர்களையும், பிரமிக்கவைக்கும் இயந்திரங்களையும் வாங்க முடியும். ஆனால் வாடிக்கையாளர் மனத்திலும், பொதுமக்கள் மனத்திலும் தரமான நிறுவனம் என்னும் இடத்தைப் பிடிப்பது, அந்நிறுவனம் உயர்வாகக் கருதும் ஒழுக்கக்கோட்பாடுகள் (Values), குறிக்கோள்கள் (Purposes), கொள்கைகள் (Policies) மற்றும் அந்நிறுவனத்தின் நீண்டகால அடிப்படையான செயல்முறை (Execution) ஆகியவற்றின் உயர்ந்த தரத்தினால் மட்டுமே சாத்தியமாகிறது.

  சீரான கலாச்சாரம் (Culture), நேர்மை மற்றும் நன்னெறிக் கோட்பாடுகள் (Ethical Values), அனைவரும் விரும்பும் அணுகுமுறைகள் (Approaches), உறுதியான கூட்டமைப்பு (Strong Relationship), அர்ப்பணிப்புடன் (Involvement), அடையப்படுகிற உற்பத்தி, வாடிக்கையாளரை வியக்கவைக்கும் சேவை (Services, Securing Customer Delight) முதலிய உயர்தரச் சின்னங்களின் ஒருங்கிணைப்பைப் பெறுவதில் நிறுவனம் வெற்றியடைய வேண்டும்.

  இந்த இதழை மேலும்

  சத்துச் சேமிப்புக் கூடங்கள்

  ஒரு நாட்டில் பஞ்சம் ஏற்பட்டால், சேமிப்புக் கிடங்குகளில் சேமிப்பாக இருக்கும் உணவு தானியங்களை வைத்துச் சமாளிக்க முடியும். சிறிய அளவு உணவுத் தட்டுப்பாடு வரும்போது குறுகிய கால சேமிப்பாக இருக்கும் அரிசியையும், கொங்சம் கடுமையான பற்றாக்குறை ஏற்படும்போது இடைப்பட்ட காலச் சேமிப்பாக இருக்கும் கோதுமையையும், கடுமையான பஞ்சம் ஏற்படும் போது நீண்ட காலச் சேமிப்பாக இருக்கும் கேழ்வரகு, திணை மற்றும் வரகையும்  ஆளும் அரசாங்கம் வெளிக்கொணர்ந்து மக்களைக் காக்கும். அதுபோலவே, நமக்கு ஏற்படும் சத்து பற்றாக்குறைகளைச் சமாளிக்க மூன்று விதமான சத்து சேமிப்புக் கிடங்குகள் நம் உடலில் இருக்கின்றன. அது பற்றி இனி பார்ப்போம்.

  மூன்று விதமான சத்து சேமிப்புக் கிடங்குகள் நம் உடலில் இருக்கின்றன. அது பற்றி இனி பார்ப்போம்.

  கல்லீரல் கிளைக்கோஜன்: நம் மண்ணீரல் செரிமானம் மூலம் கிடைக்கும் குளுக்கோஸ் மாவுச்சத்தில் உடல் உழைப்பிற்கும் உடல் உறுப்பிற்கும் போக மீதம் உள்ளதை கிளைக்கோஜனாக (Glycogen) உருமாற்றம் செய்து கல்லீரலில் சேமித்து வைத்துக்கொள்ளும். இதிலும் தரமான மண்ணீரல் செரிமானத்தால் உண்டான தரமான குளுக்கோஸைத்தான் கிளைக்கோஜனாக மாற்றம் செய்ய முடியும். தரமற்ற மண்ணீரல் செரிமானத்தால்  உண்டான தரக் குறைவான குளுக்கோஸானது உடலுக்கும் சக்தியளிக்க முடியாமல், கிளைக்கோஜனாகவும் மாற்றமடையாமல், வெறுமனே இரத்தத்தில் தேங்கிக்கிடக்கும் தன்மைக்குத் தான் நீரழிவு நோய் என்று கூறுகிறார்கள். இதனால்தான் நீரழிவு நோயாளி சாப்பிட்ட சற்று நேரத்திற்கெல்லாம் பசி எடுக்க ஆரம்பிக்கும். காரணம், செரிமானம் மூலம் நல்ல குளுக்கோஸும் கிடைக்காமல், சேமிப்பாக கிளைக்கோஜனும் இல்லாமல் தவிப்பதுவே நீரழிவு நோயாளியின் வெளிப்பாடாகும். சரி, நாம் விஷயத்திற்கு வருவோம். கல்லீரலில் சேமிப்பாக இருக்கும் கிளைக்கோஜன்தான் நம் தற்காலிக ஒரு வேளை உண்ணா விரதத்திற்கு ஈடுசெய்ய குளுக்கோஸாக மாற்றம் ஆகி நம் உழைப்பிற்கும் உள் உறுப்புகளுக்கும் சக்தியளிக்கிறது.

  இந்த இதழை மேலும்

  மற்றவர்களைத் தாழ்வாக நினைக்காதீர்கள்

  நீங்கள் ஒரு திருமணத்திற்குச் செல்கிறீர்கள் உங்களை வரவேற்பவர் “வாங்க!” என்று வாய் நிறைய, மனம் நிறைய அழைத்தால் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.  அதை விட்டு விட்டு வரவேற்பில் நிற்கும் உங்கள் சொந்தக்காரப் பெண், உங்கள் மனைவியின் பெயரைச் சொல்லி “கமலா வரவில்லையா?” என்று கேட்கிறார். அதைக் கேட்ட உங்களுக்கு எப்படி இருக்கும்?  “என்னை வாங்க என்று வரவேற்காமல், திருமணத்திற்கு வராத என் மனைவியை வரவில்லையா? என்று கேட்கிறாரே!”  என்று நீங்கள் நினைப்பீர்களா? இல்லையா?

  “வாங்க, வாங்க!…” என்று வாய் நிறைய உங்களை அழைத்து விட்டு, “உங்கள் மனைவி ஏன் வரவில்லை?” என்று கேட்டால் கூட நாகரீகமாக இருக்கும். வராத உங்கள் மனைவியை மட்டும் வராதது குறித்து விசாரிப்பது நாகரீகக் குறைவாகத் தெரியவில்லையா?

  சில பேருக்கு எப்படிப் பேச வேண்டும் என்பது தெரிவதில்லை. சில பேர் உங்கள் மேல் இருக்கும் பொறாமையின் காரணமாகவோ அல்லது உங்களை மிகவும் தாழ்வாக நினைப்பதன் காரணமாகவோ உங்களை “வாங்க!” என்று அழைக்கவே மாட்டார்கள். நீங்கள் பலமுறை கவனித்துப் பாருங்கள். உங்களுக்குக் காரணம் தெளிவாகப் புரியும்.

  இந்நிகழ்ச்சி உளவியல் ரீதியாகவோ அல்லது உதாசீன மனப்பான்மையின் காரணமாகவோ நடந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் தவறு தவறுதான்! உங்கள் சொந்தக்காரப் பெண், உங்களைத் தாழ்வாக நினைப்பதுதான், உங்களை வரவேற்காததற்கு முக்கியக் காரணமாகும்.

  கணவனும், மனைவியும் வாழ்க்கையில் நொந்து நொடிந்து போன ஒரு விதவையின் வீட்டுக்குச் செல்கிறார்கள். கணவனை இழந்த அந்த விதவை “வாம்மா! வா… நன்றாக இருக்கிறாயா? ரமேஷ் எப்படி இருக்கின்றான்?” என்றெல்லாம் விசாரித்தவர், கணவனைச் சரியாகவே மதிக்கவில்லை. தலையை அசைத்து “வா” என்பது போல ஜாடை காட்டினாள். அவனை அந்த விதவை மிகவும் தாழ்வாக நினைத்ததுதான் காரணமாகும். அவனை அவள் கொஞ்சம் கூட மதிப்பதில்லை.

  பல நாட்கள் கழித்து நன்கு பழகிய உறவினரைச் சந்திக்கின்றீர்கள். வீட்டில் அவர் மட்டுமே இருந்தார். மனைவியும் மகனும் கடைவீதிக்குச் சென்றிருந்தார்கள். அப்போது அவரைப் பார்த்து “நலமாக இருக்கிறீர்களா?” என்று அன்போடு விசாரிக்கிறீர்கள். அவர் மூன்று வருடங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். இது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் மேல் இருக்கும் அன்பின் காரணமாக, அவரது நலம் குறித்து விசாரிக்கிறீர்கள். ஆனால் அந்த உறவினரோ “இப்படித் தான் என்னைக் கேட்பதா? எனக்கு ஒன்றும் இல்லை. நான் நன்றாகத்தான் இருக்கிறான். இனி நீர் இப்படி எல்லாம் கேட்கக் கூடாது. இது நாகரீகமற்ற பேச்சு” என்று பொரிந்து தள்ளிவிட்டார். நான்கு பேருக்கு முன்னால் நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்டிருந்தால் உங்களைக் கடித்திருப்பார். உங்கள் கன்னத்தில் ‘பளார்’ என்று அறைந் திருப்பார். அவருக்குக் கௌரவம்தான் முக்கியம். உடல் நலமெல்லாம் பிறகுதான்.

  இந்நிகழ்ச்சிக்குப் பின் ஒரு வாரம் கழித்துப் பெருஞ்செல்வந்தர் ஒருவர் தன் மனைவியுடன் இவரைப் பார்ப்பதற்கு வந்திருந்தார். நண்பர்கள் புடைசூழ அவர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். “உங்கள் உடம்பு நன்றாக இருக்கின்றதா? மருந்துகளைச் சாப்பிட்டு வருகின்றீர்களா?…. மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வருகின்றீர்களா? இந்த மருந்துகளை ஆயுள் முழுவதும் சாப்பிட வேண்டுமே!…” என்றார், இவரிடம். உங்கள் உறவினர், அவர் பேசியதைக் கேட்டுக் கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை. “டாக்டர் சொன்னபடி சாப்பிட்டுத் தானே ஆக வேண்டும்?” என்று முக மலர்ச்சியோடு கூறினார்.

  செல்வந்தர் கேட்டது நாகரீகமுள்ள பேச்சு! நீங்கள் கேட்டது நாகரீகமற்ற பேச்சாம்!…. எப்படியிருக்கிறது பாருங்கள். உங்களை உங்கள் உறவினர் மிகவும் தாழ்வாக நினைத்துவிட்டார். வாழ்க்கையில் உயரத் துடிப்பவர்கள், மற்றவர்களை மிகவும் தாழ்வாக நினைக்கவே கூடாது.

  மற்றவர்களைத் தாழ்வாக நினைப்பவர்களால் எந்தக் காலத்திலும் முன்னுக்கு வரவே முடியாது. வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர்களை, “நீங்கள் மற்றவர்களைத் தாழ்வாக நினைத்தது உண்டா?” என்று கேட்டுப் பாருங்கள். “என்னுடைய உயர்வைப் பற்றியே நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். மற்றவர்களைத் தாழ்வாக நினைப்பதற்கு எனக்கு நேரமேது?” என்று தான் அவர்கள் சொல்வார்கள்.

  எனவே நீங்கள் எவரையும் தாழ்வாகவோ, இழிவாகவோ நினைக்கக் கூடாது. உயர்ந்த எண்ணமுடையவர்; மற்றவருக்கு மதிப்புக் கொடுத்துக் கம்பீரமாக வாழ்பவர், எவரையும் தாழ்வாக நினைக்கவே மாட்டார்.

  ஒருமுறை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், ரஷ்ய நாட்டு அதிபர் ஸ்டாலினைச் சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருக்கும் போது டாக்டர் இராதாகிருஷ்ணன், ஸ்டாலின் முதுகை மெல்லத் தடவிக் கொடுத்தார். ஸ்டாலின் நெகிழ்ந்து போனார். “இதுவரை எத்தனையோ தலைவர்கள் என்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள். அவர்கள் என்னை சர்வாதிகாரியாகத் தான் பார்த்தார்கள். அவர்கள் என்னைத் தாழ்வாக நினைத்தார்கள். நீங்கள் ஒருவர் மட்டுமே என்னை மிகவும் உயர்வாக நினைத்து, மதிப்புக் கொடுத்ததோடு, மிகவும் அன்பாகப் பழகுகின்றீர்கள். நீங்கள் என்னைத் தொட்டதும் ஒரு புத்துணர்ச்சி என்னுள் தோன்றியது” என்றார்.

  இந்த இதழை மேலும்

  மனமாற்றமும், மகத்தான வெற்றியும்

  நமது மூளை

  மருத்துவ வல்லுநர்கள் நமது உடலைப் பற்றியும், உள் உறுப்புகள் இயக்கத்தைப் பற்றியும் நன்கு ஆய்ந்து பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளனர். பழுதுபட்ட உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் இயங்க வைக்கின்றனர். ஆனால் மூளையின் முழு அமைப்பையும் அதன் ஒன்றிணைந்த இயக்கம் பற்றியும் முழுமையான செய்திகளை அவர்களால் பெற இயலவில்லை.

  • அறியப்படாத பல இரகசியங்களை தன்னுள் கொண்டுள்ளது நமது மூளை. அதன் அடிப்படை செல்களை நியூரான்கள் என்கிறோம். 10,000 கோடி நியூரான்களால் ஆக்கப்பட்டது நமது மூளை. இதன் நிறை 1.4 கி.கி. கனஅளவு 1400 கி.கி.
  • உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளில் மூளையின் எடை, உடலின் எடை நமக்குத் தான் அதிகம். அதனால் தான் பகுத்தறிவின் துணைகொண்டு, பல டன்கள் எடை கொண்ட மிகப்பெரிய யானையையும் அடக்கி வேலை வாங்குகிறோம்.
  • நினைவாற்றல், அறிவாற்றல், படைப்பாற்றல், சாதனைகள் எல்லாம் நியூரான்களுக்கிடையே ஏற்படும் இணைப்புகள் சம்பந்தப்பட்டது. மூளையை வலது பக்கம், இடது பக்கம் என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
  • பாடம் படித்தல், தேர்வுகள், மொழியறிவு, எண்கள், தர்க்க அறிவு, பிறரின் கண்டுபிடிப்புகளை அறிதல், சோதனைகள் போன்றவை மூளையின் இடதுபக்க இயக்கம் சார்ந்தது.
  • கற்பனை, நுண்கலைகள் (ஆடல், பாடல், கவிதை, ஓவியம்), இசைக் கருவிகள் இயக்கம், புதிய கண்டுபிடிப்புகள், சாதனைகள் போன்றவை மூளையின் வலதுபக்க இயக்கம் சார்ந்தது.
  • நமது பள்ளிகள், கல்லூரிகள் இடது பக்க மூளை இயக்கம் சார்ந்த பயிற்சிகள் தருகின்றன.
  • தனிப்பட்டவரின் அதீத ஆர்வம், விடாமுயற்சிகள் மூலம் வலது பக்க மூளையை சிறப்பாக இயக்குகின்றனர் சிலர்.
  • மகத்தான வெற்றி பெற இரண்டு பக்க மூளையின் ஒன்றிணைந்த இயக்கம் அவசியம்.

  குளத்து நீரும், அலைகளும்:

  நீர் நிறைந்த குளம். நண்பகல் நேரம். குட்டையின் கரையிலிருந்து நீரினுள் பார்வையைச் செலுத்தும்போது அதன் 5 மீட்டர் ஆழத்தில் உள்ள மீன்கள், நண்டுகள், தவளைகள், கிளிஞ்சல்கள், நீர்வாழ் தாவரங்கள், தரை போன்றவை தெளிவாகத் தெரிகிறது.

  ஒரு கல்லை எடுத்து அக்குளத்தின் நடுவில் தொப்பென்று போட என்ன நடக்கிறது? அலைகள் நீரின் மேற்பரப்பில் பரவுகின்றது. இப்போது நீரினுள் பார்க்கும்போது ஏதும் தெரிவதில்லை. ஏன்? அலைகளினூடே நீரினுள் இருப்பதைப் பார்க்க முடிவதில்லை. அலைகள் அடங்கினால் மீண்டும் நீரினுள் இருப்பது நன்கு தெரியும்.

  அதுபோலவே, நமது மனதில் ஏற்படும் குழப்பங்கள், பயம், மனஇறுக்கம், கோபம் காரணமாய் மூளையில் அலைகள் ஏற்படுகின்றன. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

  மூளையின் அலைகள்:

  மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கு அதிக இரத்த ஓட்டம் தேவை. அதன் இயக்கத்திற்கு பிராண வாயு (Oxygen), குளுக்கோஸ் அவசியம் தேவை. நுரையீரலால் நமது சுவாசத்திலிருந்து பிராணவாயு பிரிக்கப்பட்டு இரத்தத்தில் கலக்கிறது. உற்பத்தியாகின்ற பிராண வாயுவில் 20% மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்குத் தேவை. எனவே நுரையீரல் சிறப்பாக இயங்க வேண்டும். மூளைக்குத் தேவையான இரத்த ஓட்டத்தை இருதயம் தர வேண்டும்.

  மூளையில் உள்ள செல்களுக்கு செலுத்தப்படுகின்ற இரத்த ஓட்டத்தால் மின்னோட்டம் (Current) ஏற்படுகிறது. அதனால் மின்புலம் (Electric Field) உண்டாகிறது. எங்கெல்லாம் மின்புலம் உள்ளதோ அங்கு காந்தப்புலம் (Magnetic Field) ஏற்படும். இவை மின்காந்த அலைகளை (Electromagnetic Waves) உண்டாக்குகின்றன.

  இந்த இதழை மேலும்

  தீவிர மூச்சுப்பாதை சுவாச மண்டல நோய்கள்

  நம் நாட்டில் ஏற்படும் குழந்தை இறப்பிற்கு தீவிர சுவாச மண்டல நோய்களும் ஒரு முக்கியக் காரணமாகும். இவைகளில் நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா நோயே மிக முக்கியக் காரணமாக அமைகிறது. நிமோனியா நோய்க்கிருமிகளால் ஏற்படுகிறது. ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகளும், தட்டமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் பெரும்பாலும் பாதிக்கப்படுவர்.

  நோயின் அறிகுறிகள்

  அதிகரித்த சுவாசம் (See Box) மூச்சுதிணறல், காய்ச்சல், அள்ளுமாந்தம் மற்றும் ஏங்கல். மதிப்பீட்டுப் பட்டியலை உபயோகித்து நோயை

  வகைப்படுத்துதல்

  2 மாதத்திற்குள் உள்ள குழந்தை

  அறிகுறிகள்

  • திரவ உணவு உட்கொள்ளமுடியாத நிலை  வலிப்பு
  • அளவுக்கு மீறிய தூக்கம் அல்லது எளிதில் எழுப்ப முடியாத நிலை
  • அமைதியாக இருக்கும் குழந்தைக்கு வெளி சுவாசத்தின் போது வரும் சத்தம்
  • காய்ச்சல் அல்லது உடல் குளிர்ந்து இருத்தல்

  வகைப்படுத்துதல்

  அதிக கடுமையான நோய் நிலை

  மருத்துவம்

  உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்புதல். முதல் தவணை நுண்ணுயிர்க்கொல்லி மருந்தைக் கொடுத்தல்.

  வேகமான சுவாச எண்ணிக்கை வீதம், மார்பு உள்ளிழுத்தல் மற்றும் திரவ உணவு உட்கொள்ள முடியாமை போன்றவை நிமோனியாவின் அறிகுறிகள் என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்கள். மிகக் கடுமையான நோய் அல்லது கடுமையான நிமோனியா வைக் குறிக்கும் கூடுதலான அறிகுறிகள்.

  • குழந்தை திரவ உணவு உட்கொள்வதை குறைத்துக் கொண்டது
  • குழந்தை அளவுக்கு மீறிய தூக்கநிலை அல்லது எளிதில் எழுப்ப முடியாத நிலை
  • அமைதியாக இருக்கும் குழந்தைக்கு உள்சுவாசத்தின் போது வரும் சத்தம்
  • வலிப்பு
  • கடுமையான ஊட்டச்சத்துக் குறைவு

  காய்ச்சல் அல்லது தொடும்போது குளிர்ந்திருக்கும் இரண்டு மாதத்திற்கு உட்பட்ட சிசு

  இந்தக் குழந்தைகளை உடனடியாக மருத்துவ மனைக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்.

  குறிப்பு: மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட அல்லது குறைமாத குழந்தைகளுக்கு, கோடிரைமாக்சசோல் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

  இந்த இதழை மேலும்

  முந்தின கை ஜெயிக்கும்

  Faith is believing in things, when common sense says not to – George Seaton

  If  I  am  honest  in  all my  attempts ,  I  can never  experience  fear   and  failure.

  வேகமான   இந்த  நவீன யுகத்தில்  இளம் தொழில் முனைவோட்ன பலர் என்ன தொழில் தொடங்குவது? என்ற தேடலில் தீவிரமாக இருக்கிறாட்னகள்,  எல்லோருக்கும், எல்லா நேரங்களிலும் இதே சிந்தனை, இதே தேடல் இருந்து கொண்டே இருக்கிறது. ஒரே நேரத்தில்  பலருக்கு ஒரே தொழிலைப்பற்றி மின்னலென சிந்தனைகள் வருவதுண்டு.

  அந்த குறிப்பிட்ட தொழில் வெற்றி பெறும் என்ற எண்ணம் வலுப்பெறும்போது ஒரு சிலான வேகமாக செயல்பட்டு முனைப்போடு, மற்றவானகள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே இந்த தொழிலைத் தொட்டுத் தொடங்கி விடுவார்கள். அந்த வேகம்தான்  சிந்திப்பதிலும் சரி, செயல்படுத்துவதிலும் சரி  எதிட்னபார்த்த வெற்றியைத் தருகிறது.

  ஒரு சிலர் என்ன தொழில் தொடங்கலாம் என்பது பற்றி தீவிரமாக சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள்.   தொழில் தொடங்கக்கூடிய வாய்ப்பும், அமைப்பும் அவர்களுக்கு வந்து  அமைந்திருக்காது.  எந்த நேரமும் தொழிலைப்பற்றி  சிந்தித்துக் கொண்டே இருக்கும் போது நமக்கு மேலே இருக்கும் சக்தி ஒன்று நம்மை வழி நடத்தும்.   திடிரென்று  சில சமயங்களில் வாய்ப்புகள் நம் கண் முன்  அமைவதுண்டு.  நம்பிக்கைதான் வாழ்க்கை.

  இந்த பிரபஞ்சத்தின் அளவிடற்கரிய சக்தியை யாரும் குறைத்து மதிப்பிடல் கூடாது. அந்த பிரபஞ்ச சக்தி உங்களுடன் பேசிக் கொண்டே இருக்கிறது. உங்களுக்கு செய்தியை அளித்துக் கொண்டே இருக்கிறது.

  “இந்த பிரபஞ்ச சக்தி பேசுவதைக் கேட்கிறார்களா?  அல்லது  அங்கிருந்து வரும் செய்திகளை கவனிக்கிறார்களா?   என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி.

  ஒவ்வொரு மனிதனுக்கும் பிரபஞ்சத்திலிருந்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.  நாம் தான் அதில் கவனம் செலுத்தாமலும், அந்த செய்தியைக் கேட்காமலும் இருக்கிறோம்.

  ஒரு தொழில் தொடங்க இருந்த  இளம் தொழில் முனைவர் ஒருவருக்கு  ஏற்பட்ட அனுபவம் விசித்திரமானது.  அந்த  இளம் தொழில் முனைவர்  ஒரு தொழில் துவங்க யோசிக்கிறார். அவருக்கு ஐந்து வாய்ப்புகள் அதாவது ஐந்து தொழில்களை அவர் பட்டியலிடுகிறார். ஆனால் ஒன்றை மட்டும் அவர் பட்டியலில் சேர்க்கவில்லை.  ஏற்கனவே அவர்  பகுதி நேரத் தொழிலாக செய்து கொண்டிருக்கிற, அந்த நுட்பங்களை அறிந்த, அதன் நலன் தீங்கு இரண்டையும் புரிந்து கொண்ட, அவருக்கு விருப்பமான   போட்டோகிராபியை அந்த பட்டியலில் இணைக்கவில்லை.

  அந்த போட்டோகிராபி தொழிலை ஒரு தொழிலாகவே அவர் கருதவில்லை ஆனாலும் கூட  இவான மிகச் சிறந்த போட்டோகிராபர்.  அந்த தொழில் அவருக்கு அளவு கடந்த மகிழ்ச்சியையும் தந்து கொண்டிருந்தது.  அந்தத்  தொழிலை  அவர் பொழுது போக்காக நினைத்துக் கொண்டிருந்தார். அது  நல்ல லாபம் தரும் தொழில் என்று  அவர் நினைக்கவில்லை. மேலும் அந்தத் தொழில் அவருக்கு வாழ்க்கைக்குரிய வருமானத்தைத் தராது என்றும்  நினைத்து வந்தார்.

  இதனால் அந்தத் தொழிலை விட்டு விட்டு மற்ற வாய்ப்புகளான வேறு தொழில்களில் ஏதாவது ஒன்றைத் தொடங்கலாம் என்று ஆர்வப்பட்டார்.

  போட்டோகிராபி    என்ற  ஒரு தொழில் இருப்பதை அவர் மறந்து விட்டார்.  அதைப்பற்றி  அவர் நினைக்கவும் இல்லை.

  அந்த சமயத்தில் இன்னொரு  போட்டோகிராபர்   இவருடைய  போட்டோகிராபியில் இவருடைய தனித்தன்மையையும், தொழில் திறமையையும்,  தொழில் நுணுக்கத்தையும் பார்த்து  வியந்து போனார். இவருடைய   திறமையில் அவருக்கு ஆர்வம் உண்டாயிற்று. இவரைத் தன் தொழில் கூட்டாளியாக சோனத்துக் கொள்ள விருப்பப்பட்டார்.   திருமணங்களுக்கு, விசேஷ நிகழ்வுகளுக்கு  போட்டோக்கள் எடுக்க  வைத்துக் கொள்ளலாம் என எண்ணினார்.  அதில் இவர் இணைந்து  கொள்ள   சம்மதித்தார்.

  யாரும் எதிர்பாராத வகையில் இவருடைய  உறவினர்    ஒருவர்  பிறந்தநாள் பரிசாக இவருக்கு ஒரு உயர்ரக கேமரா ஒன்றை பரிசளித்தார்.

  யாரும் நினைக்காத நேரத்தில், பிரபஞ்சத்திலிருந்து வந்த தெளிவான செய்தி போல புதுத் தொழிலுக்கு அச்சாரம் இட்டது போல, அந்த நவீன கேமரா இவருக்கு  பரிசாக கிடைத்தது.

  இந்த இதழை மேலும்

  உங்கள் ஆசைகள் நியாயமானதா? முறையற்றதா?

  அலைபாயும் நெஞ்சத்தில் ஆசைகள் பல உண்டு. ஆசை என்பது நமக்கு எது தேவையோ அதனை கொண்டு வருவதற்கான உணர்வாகும். மனிதனுக்கு மனிதன் தேவைகள் மாறுபடலாம். ஆனால், ஏதாவது தேவைகள் நிச்சயமாக மனிதர்களுக்கு இருந்து கொண்டே இருப்பதால் அதை அடைய வேண்டும் என்ற ஏக்கம் மனதை குடைந்து கொண்டே இருக்கிறது.

  கிடைக்காத வரை பெரிதாக தோன்றுகிறது. கிடைத்ததும் அற்பமாக தோன்றுகிறது. மேலும், கிடைக்காதா என்று ஏங்கச் செய்வது எதுவோ, அதுவோ ஆசையாகும். பிறக்கும் போதும் ஆசை இல்லை. மனிதன் இறக்கும் போதும்  ஆசை இருப்பதில்லை. இந்த உலகில் வேரில்லாமலும், நீரில்லாமலும் வளரக் கூடிய ஒரே செடிதான் ஆசை. வராமல் இருக்காது. வந்தால் விடாது. எல்லையற்ற உலகில் எல்லையில்லாதது. நமது அழிவிற்கும், வளர்ச்சிக்கும் காரணம் ஆசை. எது அன்றாடத் தேவையோ அதை மறக்க வைப்பதே ஆசை.

  புத்தாடைகள் அணிய வேண்டும். புதிய ஊர்களை சுற்றிப்பார்க்க வேண்டும். பிடித்தமான உணவை உண்ண வேண்டும் என்பது மனதில் சுமக்கும் சின்ன ஆசைகள். தனக்கு பிடித்த கதாநாயகன் நடித்த படம் எங்கோ ரீலிஸ் ஆகிறது. சிரமம் பார்க்காமல் போய் பார்க்கிறான் ரசிகன். டிக்கெட்டின் விலை கூடுதலாக இருந்தாலும் பொருட்படுத்துவதில்லை. மேட்சில் இந்திய அணி ஜெயிக்க  ஆசைப்படுகிறோம். கிரிக்கெட் பார்க்கும் ஆசையால் விடுப்பு எடுப்பவர்கள் உள்ளனர். முழு உலகையும் விமானத்தில் சுற்றி வர ஆசை. வாழ்ந்து காட்ட ஆசை. வசதியான வாழ்வுக்கு ஆசை.

  மனதுக்கு பிடித்தவர்களை பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அந்த நொடிக்காக காத்திருக்கிறோம். அழகாக இருக்க ஆசை. இயற்கை அழகை ரசிக்க ஆசை. புது செல்போன் வாங்க ஆசை. கப்பலில் பயணிக்க ஆசை. தன் மனம் கவர்ந்த ஞானிகளை நேரில் தரிசித்து ஆசி பெற ஆசை. கண்ணாடியை எங்கு பார்த்தாலும் ஒரு நொடி நின்று தன் பிம்பத்தைப் பார்க்க ஆசை. சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல ஆசை. பெற்ற தாயை மகாராணிப் போல கவனித்துக் கொள்ள ஆசை. அமாவாசை அன்று நம் பித்ருக்களை நினைப்பதை விட அன்று படையலிட்ட பாயசத்தின் மீது ஆசை. வார விடுமுறையில் மாமிச உணவு சாப்பிட ஆசை. பால்வாடியில் டீச்சராக ஆசை.

  பெண் பார்க்க வந்து விட்டு தன்னை வேண்டாம் என நிராகரித்த வரன் அவன் வாழ்க்கையில் ஒரு முறையாவது நம்மை ஒதுக்கியது தவறு என்று நினைப்பது போல் வாழ வேண்டும் என்று ஆசை. மணமாகாதவர்களுக்கு கல்யாண ஆசை. பேருந்து, ரயில் பயணங்களின் போது, ஜன்னலோர இருக்கையில் அமர அசை. கொட்டும் மழையில் நனைந்திட ஆசை. பிரிவே இல்லாத உறவைக் காண ஆசை. ஜல்லிக்கட்டு காளையை அடக்கிட ஆசை. உலக அழகியாய் வலம் வர ஆசை.

  ஆள வேண்டும் என்பது தலைவனின் ஆசை. வாழவேண்டும் என்பது சாமான்யனின் ஆசை. உண்ண உணவு, வசிக்க சொந்த வீடு, நிம்மதியான தூக்கம் என்பது சராசரி மனிதனின் ஆசை. மரண வலி, பிரசவ வேதனை என்று தெரிந்தும் குழந்தை ஈன்றெடுத்து தாயாக புது மனைவிக்கு ஆசை. கணவன் தன்னிடம் மற்ற யாரையும் விட அதிக அன்புடன் இருக்க வேண்டும் என்பது மனைவியின் ஆசை. ஆசையையே துறக்க வேண்டும் என்பது புத்தனின் ஆசை.

  ஒரு பெண்ணின் குறைந்தபட்ச ஆசை தன்னை மட்டும் விரும்பும் ஒரு ஆணை கணவனாக பெறுவது, தன் கணவன் தன்னை உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும் என்பது மனைவியின் ஆசை.  ஊஞ்சலில் ஆட சிறுவர்களுக்கு ஆசை. சுதந்திரமாக வாழ பெண்களுக்கு ஆசை. சினிமா கதாநாயகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரசிகர்களுக்கு ஆசை.

  தாய் மடியில் தூங்க வேண்டும் என்பது குழந்தையின் ஆசை. காதலியிடம் வரம்பு மீற காதலனின் மனம் துடிக்கிறது. நோய் குணமாக வேண்டும் என்பது நோயாளியின் ஆசை. நோயாளிகள் நிறைய தன்னிடம் சிகிச்சைக்கு வர வேண்டும் என்பது மருத்துவரின் ஆசை. ஜஸ் கிரிம் சாப்பிட குழந்தைகளுக்கு ஆசை. மேட்டூர் அணை நிரம்ப வேண்டும். கர்நாடகா காவிரி நீரை தமிழகத்திற்கு தந்திட வேண்டும் என்பது தமிழக விவசாயிகளின் ஆசை. ஒரே செமஸ்டரில் அரியர் வைக்காமல் எல்லா பேப்பர்களையும் பாஸ் பண்ண கல்லூரி மாணவனுக்கு ஆசை. ஆற்றில் நீச்சலடிக்க சிறுவர்களுக்கு ஆசை. பூக்கள், புடவைகள், தங்க நகைகள், ஸ்மார்ட் போன் மீது பெண்களுக்கு ஆசை. தீவிரவாதிகளின் மிரட்டல் இல்லாத சுதந்திர தினம் வர வேண்டும் என்பது தேசபக்தர்களின் ஆசை. இரவில் கதை கேட்டு தூங்க குழந்தைகளுக்கு ஆசை. தான் சார்ந்த அரசியல் கட்சியே தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பது தொன்டனின் ஆசை.

  ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி முதலீட்டை இழந்தவர்களும், கற்பை கயவர்களிடம் பறிகொடுத்தவர்களும் உண்டு. அவர்கள் நல்ல மனிதர்களின் அன்பான வார்த்தையை மட்டும் புரிந்து கொள்வதில்லை.

  ஆசை, பேராசை, மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை,  நப்பாசை, விபரித ஆசை, தகுதிக்கு மீறிய ஆசை, நிறைவேறாத ஆசை, நிராசை என ஆசைகள் பல விதம். சிலந்தி தன் வலைக்குள்ளேயே சுற்றுவதைப் போல் மனிதர்கள் ஆசைக்குள்ளேயே கட்டுண்டிருக்கிறார்கள்.

  ஆசை என்பது வெட்கமறியாது. ஆல்கஹால் என்பது அவமானம் அறியாது. நமக்கு கிடைக்கவே கிடைக்காது என்று உறுதியாக தெரிந்தாலும் அதன் மேல் தீராத எதோ ஒரு ஆசை தோன்றினால் அது நப்பாசை.

  இந்த இதழை மேலும்

  எண்ணத்தின் மேன்மை கொள்…

  நாம் நாள்தோறும் கால்மணி நேரம் கருத்தூன்றி கடுமையாக கற்றால் எந்தக் கலையைக் கற்றிறோமோ அந்த கலையில் பத்து ஆண்டுகளில் அறிஞராக திகழ முடியும்.

  இதன் மூலம் நம்முஐடய ஆற்றலை உணர்ந்து இருக்கும் பொழுது சாதாரண கவலையை விட்டு ஒழிக்க முடியாதா…? கவலையை சுழற்றி எறிய முடியாதா என்ன…?

  கட்டாயம் நம்மால் முடியும்…!

  குப்பையிலே கிடக்கிற நம் வாழ்வு கோபுரக்கலசமாவது எப்போது என்ற ஏக்கம் இனிமேலும், வேண்டாம். நம்மால் எந்தக்காரியத்தையும் சாதிக்க முடியும்.

  நம்முடைய மூளை பெரிய வயல். அதில்  இயற்கை எண்ணங்களை விதைக்காளாகத் தூவுகிறது.

  பயிர் வளரும் அழகு, சூழ்நிலையாகிய  மண்ணையும், சிந்தனையாகிய எருவையும் பொருத்தது விதைக்க வேண்டும்.  விதைக்காவிட்டால் அறுவடை செய்ய முடியாது.

  நல்ல விதையை விதைத்தால் நல்ல பயிர் வளர்ந்து பயன் கொடுக்கும்.

  ஒன்றும் செய்யாமல் சோம்பி உட்கார்ந்து கொண்டு கீதை, குரான், பைபிள் இவற்றைப் படித்துக் கொண்டிருப்பதினால் மட்டும் எந்தவித முன்னேற்றமும் அடைய முடியாது.

  காலையில் எழுந்ததும் இன்று நாம் மகிழ்ச்சியுடன் இருக்கப் போகிறோம் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.

  இதனை மனத்திற்குள் பல தடவை சொல்ல வேண்டும். அப்பொழுது முக மலர்ச்சி ஏற்படும். சோர்வு ஏற்படாது.

  மகிழ்ச்சியுடன் பணியாற்றினால்  கவலை கொண்டிருக்கும் பொழுது, கடவுள் இல்லை என்ற கட்டுரையை ஆணித்தரமாக எழுதினார்.

  இதனை அறிந்த கல்லூரி நிர்வாகிகள் அவரை கல்லூரியை விட்டு வெளியேற்றினார்கள். கல்லூரிப்படிப்பை பாதியில் இழந்தற்கு  துளியும் கவலைப்படவில்லை…

  தன்னுடைய லட்சிய வாழ்வுக்க குறுக்கே நின்ற தடைகளை எல்லாம் தகர்த்து எறிவதில் சற்றும் அவர் பின்வாங்கவில்லை.

  தனக்கு விருப்பமான கவிதைகளை தொடர்ந்து இயற்சி சாகாவரம் பெற்றார். அவர் செய்யும் பணியில் ஆர்வம் காட்டுவதை நிறுத்தவில்லை.

  ஷெல்லி, இறக்கும் வரையிலும் இன்புற கவிதைகளை இயற்றினார். எதையும் மகிழ்ச்சியுடன் கற்றுக்கொண்டால் கவலை எப்படி உள்ளே வரமுடியும்…?

  இந்த உலகை பார்க்க முடியாதவர்களும், நடக்க இயலாதவர்களும், பேச முடியாதவர்களும் இருக்கும் போது நாம், உலகை பார்க்கவும்,  விரைவாக நடக்கவும், அன்பாக பேசவும் வரம் அருளப்பட்டு இருக்கிறது.

  இந்த இதழை மேலும்