Home » Articles » உங்கள் ஆசைகள் நியாயமானதா? முறையற்றதா?

 
உங்கள் ஆசைகள் நியாயமானதா? முறையற்றதா?


சுவாமிநாதன்.தி
Author:

அலைபாயும் நெஞ்சத்தில் ஆசைகள் பல உண்டு. ஆசை என்பது நமக்கு எது தேவையோ அதனை கொண்டு வருவதற்கான உணர்வாகும். மனிதனுக்கு மனிதன் தேவைகள் மாறுபடலாம். ஆனால், ஏதாவது தேவைகள் நிச்சயமாக மனிதர்களுக்கு இருந்து கொண்டே இருப்பதால் அதை அடைய வேண்டும் என்ற ஏக்கம் மனதை குடைந்து கொண்டே இருக்கிறது.

கிடைக்காத வரை பெரிதாக தோன்றுகிறது. கிடைத்ததும் அற்பமாக தோன்றுகிறது. மேலும், கிடைக்காதா என்று ஏங்கச் செய்வது எதுவோ, அதுவோ ஆசையாகும். பிறக்கும் போதும் ஆசை இல்லை. மனிதன் இறக்கும் போதும்  ஆசை இருப்பதில்லை. இந்த உலகில் வேரில்லாமலும், நீரில்லாமலும் வளரக் கூடிய ஒரே செடிதான் ஆசை. வராமல் இருக்காது. வந்தால் விடாது. எல்லையற்ற உலகில் எல்லையில்லாதது. நமது அழிவிற்கும், வளர்ச்சிக்கும் காரணம் ஆசை. எது அன்றாடத் தேவையோ அதை மறக்க வைப்பதே ஆசை.

புத்தாடைகள் அணிய வேண்டும். புதிய ஊர்களை சுற்றிப்பார்க்க வேண்டும். பிடித்தமான உணவை உண்ண வேண்டும் என்பது மனதில் சுமக்கும் சின்ன ஆசைகள். தனக்கு பிடித்த கதாநாயகன் நடித்த படம் எங்கோ ரீலிஸ் ஆகிறது. சிரமம் பார்க்காமல் போய் பார்க்கிறான் ரசிகன். டிக்கெட்டின் விலை கூடுதலாக இருந்தாலும் பொருட்படுத்துவதில்லை. மேட்சில் இந்திய அணி ஜெயிக்க  ஆசைப்படுகிறோம். கிரிக்கெட் பார்க்கும் ஆசையால் விடுப்பு எடுப்பவர்கள் உள்ளனர். முழு உலகையும் விமானத்தில் சுற்றி வர ஆசை. வாழ்ந்து காட்ட ஆசை. வசதியான வாழ்வுக்கு ஆசை.

மனதுக்கு பிடித்தவர்களை பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அந்த நொடிக்காக காத்திருக்கிறோம். அழகாக இருக்க ஆசை. இயற்கை அழகை ரசிக்க ஆசை. புது செல்போன் வாங்க ஆசை. கப்பலில் பயணிக்க ஆசை. தன் மனம் கவர்ந்த ஞானிகளை நேரில் தரிசித்து ஆசி பெற ஆசை. கண்ணாடியை எங்கு பார்த்தாலும் ஒரு நொடி நின்று தன் பிம்பத்தைப் பார்க்க ஆசை. சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல ஆசை. பெற்ற தாயை மகாராணிப் போல கவனித்துக் கொள்ள ஆசை. அமாவாசை அன்று நம் பித்ருக்களை நினைப்பதை விட அன்று படையலிட்ட பாயசத்தின் மீது ஆசை. வார விடுமுறையில் மாமிச உணவு சாப்பிட ஆசை. பால்வாடியில் டீச்சராக ஆசை.

பெண் பார்க்க வந்து விட்டு தன்னை வேண்டாம் என நிராகரித்த வரன் அவன் வாழ்க்கையில் ஒரு முறையாவது நம்மை ஒதுக்கியது தவறு என்று நினைப்பது போல் வாழ வேண்டும் என்று ஆசை. மணமாகாதவர்களுக்கு கல்யாண ஆசை. பேருந்து, ரயில் பயணங்களின் போது, ஜன்னலோர இருக்கையில் அமர அசை. கொட்டும் மழையில் நனைந்திட ஆசை. பிரிவே இல்லாத உறவைக் காண ஆசை. ஜல்லிக்கட்டு காளையை அடக்கிட ஆசை. உலக அழகியாய் வலம் வர ஆசை.

ஆள வேண்டும் என்பது தலைவனின் ஆசை. வாழவேண்டும் என்பது சாமான்யனின் ஆசை. உண்ண உணவு, வசிக்க சொந்த வீடு, நிம்மதியான தூக்கம் என்பது சராசரி மனிதனின் ஆசை. மரண வலி, பிரசவ வேதனை என்று தெரிந்தும் குழந்தை ஈன்றெடுத்து தாயாக புது மனைவிக்கு ஆசை. கணவன் தன்னிடம் மற்ற யாரையும் விட அதிக அன்புடன் இருக்க வேண்டும் என்பது மனைவியின் ஆசை. ஆசையையே துறக்க வேண்டும் என்பது புத்தனின் ஆசை.

ஒரு பெண்ணின் குறைந்தபட்ச ஆசை தன்னை மட்டும் விரும்பும் ஒரு ஆணை கணவனாக பெறுவது, தன் கணவன் தன்னை உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும் என்பது மனைவியின் ஆசை.  ஊஞ்சலில் ஆட சிறுவர்களுக்கு ஆசை. சுதந்திரமாக வாழ பெண்களுக்கு ஆசை. சினிமா கதாநாயகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரசிகர்களுக்கு ஆசை.

தாய் மடியில் தூங்க வேண்டும் என்பது குழந்தையின் ஆசை. காதலியிடம் வரம்பு மீற காதலனின் மனம் துடிக்கிறது. நோய் குணமாக வேண்டும் என்பது நோயாளியின் ஆசை. நோயாளிகள் நிறைய தன்னிடம் சிகிச்சைக்கு வர வேண்டும் என்பது மருத்துவரின் ஆசை. ஜஸ் கிரிம் சாப்பிட குழந்தைகளுக்கு ஆசை. மேட்டூர் அணை நிரம்ப வேண்டும். கர்நாடகா காவிரி நீரை தமிழகத்திற்கு தந்திட வேண்டும் என்பது தமிழக விவசாயிகளின் ஆசை. ஒரே செமஸ்டரில் அரியர் வைக்காமல் எல்லா பேப்பர்களையும் பாஸ் பண்ண கல்லூரி மாணவனுக்கு ஆசை. ஆற்றில் நீச்சலடிக்க சிறுவர்களுக்கு ஆசை. பூக்கள், புடவைகள், தங்க நகைகள், ஸ்மார்ட் போன் மீது பெண்களுக்கு ஆசை. தீவிரவாதிகளின் மிரட்டல் இல்லாத சுதந்திர தினம் வர வேண்டும் என்பது தேசபக்தர்களின் ஆசை. இரவில் கதை கேட்டு தூங்க குழந்தைகளுக்கு ஆசை. தான் சார்ந்த அரசியல் கட்சியே தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பது தொன்டனின் ஆசை.

ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி முதலீட்டை இழந்தவர்களும், கற்பை கயவர்களிடம் பறிகொடுத்தவர்களும் உண்டு. அவர்கள் நல்ல மனிதர்களின் அன்பான வார்த்தையை மட்டும் புரிந்து கொள்வதில்லை.

ஆசை, பேராசை, மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை,  நப்பாசை, விபரித ஆசை, தகுதிக்கு மீறிய ஆசை, நிறைவேறாத ஆசை, நிராசை என ஆசைகள் பல விதம். சிலந்தி தன் வலைக்குள்ளேயே சுற்றுவதைப் போல் மனிதர்கள் ஆசைக்குள்ளேயே கட்டுண்டிருக்கிறார்கள்.

ஆசை என்பது வெட்கமறியாது. ஆல்கஹால் என்பது அவமானம் அறியாது. நமக்கு கிடைக்கவே கிடைக்காது என்று உறுதியாக தெரிந்தாலும் அதன் மேல் தீராத எதோ ஒரு ஆசை தோன்றினால் அது நப்பாசை.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2017

எண்ணியதை செய்யுங்கள்
வாழ நினைத்தால் வாழலாம் -11
நிர்வாகம் ஒரு நடைமுறை சார்ந்த அறிவியல்
சத்துச் சேமிப்புக் கூடங்கள்
மற்றவர்களைத் தாழ்வாக நினைக்காதீர்கள்
மனமாற்றமும், மகத்தான வெற்றியும்
தீவிர மூச்சுப்பாதை சுவாச மண்டல நோய்கள்
முந்தின கை ஜெயிக்கும்
உங்கள் ஆசைகள் நியாயமானதா? முறையற்றதா?
எண்ணத்தின் மேன்மை கொள்…
தோல்வியைத் தொடர விடலாமா?
டிசம்பர் மாத உலகதினங்கள்
மணவயல்
வெற்றி உங்கள் கையில்
துபாய்க்கு வாங்க!
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
மாற்றமே நம் முன்னேற்றம்…
தன்னம்பிக்கை மேடை
நினைத்ததை முடித்திடு… நிலவிலும் கால் பதித்திடு…
உள்ளத்தோடு உள்ளம்