– 2001 – February | தன்னம்பிக்கை

Home » 2001 » February (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    வெற்றியின் மனமே

    ஜெயிக்கும் அஸ்திரம்

    அந்தச் சிறுவன் மிகவும் நல்லவன். குடும்பமே வறுமையில் வாடியது. சாப்பிட உணவில்லாமல் சாகும் தருவாயில் இருந்த அவனைப் பார்த்த எமனுக்கு மனமிரங்கியது.

    சிறுவனைப் பார்த்து, “உனக்கு ஒரு சக்தி தருகிறேன். அதன் மூலம் நீ உயர்ந்த நிலைக்குப் போகலாம். நான் யாருடைய உயிரை பறிக்கிறேன் என்பதை தெரிந்து கொள்ளும் மாயக்கண்ணை உனக்குத் தருவேன்.

    Continue Reading »

    வணக்கம் தலைவரே!

    விடுமுறை நாளொன்றில், வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்த அந்த மனிதர், புழுதி பறக்க வந்து நின்ற ஐந்தாறு மோட்டார் பைக்குகளைப் பார்த்துப் பதறிப்போனார். “என்னமோ ஏதோ” என்று அவர் திகைத்து நிற்கும்போதே, வந்த இளைஞர்கள் பவ்யமாய் வினவினார்கள் “தலைவர் இருக்காருங்களா?”

    Continue Reading »

    மனித சக்தி மகத்தான சக்தி

    மனித மனம் லாவகமா கையாளப்பட வேண்டிய ஒரு கருவி. சரியான எண்ணங்களை நாம் அதில் புகுத்தினால் தவிர, அதனை தேவையான முறையில் இயக்க இயலாது.

    இன்று பலரும் தங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்க வேண்டிய விஷயங்களைப் பற்றியே திரும்பத் திரும்ப சிந்தித்து ஒரு பட்டியல் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். என்னென்ன வேண்டாம் என்பதைச் சிந்திப்பதைவிட, என்ன வேண்டும் என்ற எண்ணங்களைப் புகுத்துவதுதான் சரியான அணுகுமுறை.

    Continue Reading »

    மனசுவிட்டுப் பேசுங்க

    கேள்வி – பதில்

    எங்கள் ஊரில் முக்கியமான காரியங்களைச் செய்யும்போது அதைச் செய்யலாமா? வேண்டாமா? என ஒரு சாமியாரிடம் பூ கேட்டுவிட்டுத்தான் செய்கிறார்கள். சில சமயங்களில் அது சரியாகத்தான் நடக்கிறது. இல சமயங்களில் தவறாகிறது. தவறாகும் போது அதிர்ஷ்டமில்லை, நேரம் சரியில்லை என்று சொல்கிறார்கள். அதிர்ஷ்டத்தினாலும் ஒரு சிலர் பணக்காரனாகிறார்களே. அதுவும் முன்னேற்றந்தானே?

    அதிர்ஷ்டம் என்பது சரிதானா? பூ கேட்டு முடிவு செய்வது சரிதானா? இது போன்ற குழப்பங்களுக்கு தீர்வு என்ன?

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    ஈடுபாடுள்ள துறையில் இறங்கினால் வெற்றி பெற்றுவிட முடியும் என்பது பொதுவான நம்பிக்கை. தான் விரும்பும் துறையாக இருந்தாலும் அதில் தயக்கமில்லாமல் இறங்குவதற்குப் பெயர்தான் தன்னம்பிக்கை. நமக்கு விருப்பமான துறையை நெருங்கிப் பார்க்கிறபோது அதிலிருக்கிற நுணுக்கங்கள், வளர்ச்சிகள் அனைத்தும் நம்மை பிரமிக்க வைக்கும்.

    Continue Reading »