Home » Articles » மனசுவிட்டுப் பேசுங்க

 
மனசுவிட்டுப் பேசுங்க


admin
Author:

கேள்வி – பதில்

எங்கள் ஊரில் முக்கியமான காரியங்களைச் செய்யும்போது அதைச் செய்யலாமா? வேண்டாமா? என ஒரு சாமியாரிடம் பூ கேட்டுவிட்டுத்தான் செய்கிறார்கள். சில சமயங்களில் அது சரியாகத்தான் நடக்கிறது. இல சமயங்களில் தவறாகிறது. தவறாகும் போது அதிர்ஷ்டமில்லை, நேரம் சரியில்லை என்று சொல்கிறார்கள். அதிர்ஷ்டத்தினாலும் ஒரு சிலர் பணக்காரனாகிறார்களே. அதுவும் முன்னேற்றந்தானே?

அதிர்ஷ்டம் என்பது சரிதானா? பூ கேட்டு முடிவு செய்வது சரிதானா? இது போன்ற குழப்பங்களுக்கு தீர்வு என்ன?
(ஆர். திவாகர், தூத்துக்குடி)

இதற்கு இன்டர்நெட் ஜோக் ஒன்றைச் சொல்கிறேன்.

அது இறுதியாண்டுத் தேர்வு.

தனது இடத்தைத் தேடி அமர்ந்த மாணவன், கேள்வித்தாளை எடுத்துப்படித்தான்.

அத்தனையும் ஆம்/இல்லை என்றை வகையில் பதிலளிக்க வேண்டிய கேள்விகள், கேள்வித்தாளை படித்தவன், அடுத்த தன் பாக்கெட்டிலிருந்த ஒரு நாணயத்தை எடுத்து சுண்ட ஆரம்பித்தான்.

தலை விழுந்தால் ஆம், பூ விழுந்தால் இல்லை என்று ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தொடங்கினான்.

தேர்வு முடிய சில நமிடங்கள் மிச்சமிருந்த கடைசி நேரம். நாணயத்தை திரும்பத் திரும்பச் சுண்டுவதும் மோட்டு வளயைப் பார்ப்பதுமாக டென்ஷனாக இருந்த அவனைப் பார்த்த எக்ஸாமினர் ஏதோ விபரீதம் என்று ஓடோடி வந்தார்.

“உங்களுக்கு என்னாச்சு இப்ப என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க?” என்று கேட்ட அவருக்கு மாணவன் சொன்ன பதில் “அரை மணி நேரத்திலே எக்ஸாம் முடிச்சுட்டன். எழுதின பதில்களை சரிதானான்னு செக் பண்ணினா ஒரே குழப்பமா இருக்கு!”

அதைப் போன்றதுதான் “பூ” கேட்பதும். ஏதேனும் ஒன்றுதான் வருமே தவிர சரியானது வராது.

ஆகவே, எந்த ஒரு காரியத்திலும் அதனுடைய காரணங்களையும் விளைவுகளையும் – அறிவு நுட்பத்துடன் ஆராய்ந்து முடிவெடுப்பதுதான் சரி.

அதிர்ஷ்டம் என்பது லாட்டரி சீட்டில் கோடி பரிசு விழுவது போல, அது சூதாட்டம், எப்போதாவது ஒரு முறை வரும் அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து செயல்படாமல் இருப்பது வாழ்க்கையை வீணாக்கும்.

மேலும் திட்டமிட்டு கடுமையாக உழைக்கும் போது கிடைக்கும் அனுபவத்திற்கும், பணத்திற்கும் ஈடாக எதையும் ஒப்பிட முடியாது.

சூதாட்டத்தினால் யாரோ ஒருவன் பணத்தைப் பெறலாம். ஆனால் முன்னேற்றம் என்பது பணம் மட்டும் அல்ல. அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வரனானவனைவிட உழைப்பால் பணம் சம்பாதித்தவனுடைய வாழ்க்கைதான் எல்லா அமசங்களிலும் உயர்வாக இருக்கும். ஆகவே அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து ஏமாறாமல் திட்டமிட்ட உழைப்பயும் அதன் அனுபவத்தையும் பெறுவதற்கு தயராகுங்கள். குழப்பத்தை நாடவேண்டாம்.


Share
 

1 Comment

  1. p.anantha vel says:

    thank you

Post a Comment


 

 


February 2001

வாசகர் கடிதம்
இந்தியா 2020
பெற்றோர் பக்கம்
நிறுவனர் பக்கம்
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவது எப்படி?
பொதுவாச் சொல்றேன்
ஆயிரம் நூல்களில் எழுதிவை!
சிரிப்போம்! சிறப்போம்!
நம்பிக்கையும் நானும்
முயற்சி கொள் நண்பனே!
வெற்றியின் மனமே
வணக்கம் தலைவரே!
மனித சக்தி மகத்தான சக்தி
மனசுவிட்டுப் பேசுங்க
உள்ளத்தோடு உள்ளம்