– 1998 – May | தன்னம்பிக்கை

Home » 1998 » May (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    நெஞ்சோடு நெஞ்சம்

    வாழ்க்கை என்பது ஒரிரு நாட்களில், ஓரிரு நிகழ்ச்சிகளோடு முடிந்து விடுவதில்லை. வாழ்க்கையில் நாம் சாதிக்க வேண்டிய சாதனைகள் ஏராளம். அதைவிடுத்து அற்ப விசயங்களுக்கு ஆசைப்பட்டு, வாழ்க்கையை ஒரே நாளில் தொலைத்துவிடக்கூடாது. அப்படித் தொலைத்துவிட்டு அதைச் சரி செய்வதற்கே வாழ்நாள் முழுவதும்

    Continue Reading »

    இல.செ.கவின் சிந்தனை

    நடைமுறைக்கு ஏற்றதாயும் மக்கள் மேம்பாட்டிற்குத் தேவையானதாயும் வருங்காலத்தில் நிகழ இருப்பதை தொலை நோக்கில் சிந்தித்து அதற்கு தேவையானதாக உள்ள திட்டங்களை இனி தீட்ட வேண்டும். எல்லாம் தேவையானபோது கண்டு பிடிக்கப்படும்

    Continue Reading »

    இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்

    இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்.

    அமெரிக்காவில், நியுயார்க் நகரில் நடந்த விழாவில் மிகச்சிறந்த ராஐதந்திர என்ற விருது பாராத நாட்டு ஜனாதிபதி திரு K.R. நாரயாணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

    Continue Reading »

    திருப்பூரில் நடந்த 1 – 2 – 98 அன்று மனித நேய முன்னேற்ற பயிலரங்கம்

    பாரத விடுதலைப் பொன்விழாவின் ஒரு அங்கமான திருப்பூர் மக்கள் மாமன்றமும், ” தன்னம்பிக்கை ” இதழும் இணைந்து மனிதநேய முன்னேற்றப் பயிலரங்கம் நடத்தியது.

    Continue Reading »

    கவலையற்றிருத்தலே வீடு

    – டாக்டர் என். ஸ்ரீதரன்

    துன்பங்கள் அனைத்தையும் நீக்கிவிட முடியாமல் போனாலும் அவற்றின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளலாம், கடலில் அலைகள் எழுவதைப்போல் வாழ்க்கையில் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. பனைமர உயர அலைகளிடம்தான் நாம்

    Continue Reading »

    முன்னேற்றப் பாதை

    நேர நிர்வாகம்

    எது முக்கிய நேரம் ? Dr.G. இராமனாதன், M.D.,

    வாழ்க்கையில் பலவகையான மனிதர்களை சந்திக்கிறோம். சிலர் கடுமையாக உழைத்தும் முன்னேற முடியாமல் தவிக்கிறார்கள். சிலர், தன் உழைப்பிற்கு மேல் முன்னேற்றமடைந்து உயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அது எப்படி? இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது, நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவதுதான்.

    இதைப்பற்றி இத்தாலியைச் சேர்ந்த பரேடா என்ற பொருளாதார அறிஞர், 80 – 20 விதிமுறையை உருவாக்கினார். இதன்படி நமது உழைப்பிற்கான பலன்களின் மதிப்பைப் கிடைக்கிறது. மீதமுள்ள 20 சதவீத பலன்கள், 80 சதவீத செயல்களினால் கிடைக்கிறது. ஒரு திட்டத்தில் எந்த 20 சதவீத செயல்களைச் செய்தால், அதன் 80 சதவீத பலன்கள், 20 சதவீத செயல்களினால் கிடைக்கிறது. ஒரு திட்டத்தில் எந்த 20 சதவீத செயல்களைச் செய்தால், அதன் 80 சதவீத பலன்களைப் பெற முடியும் என்பதை நன்கு ஆராய வேண்டும். அந்த 20 சதவீத செயல்களை முடிக்க வேண்டிய வழிமுறைகளை வகுத்து செயல்பட்டால் நிச்சயம் வெற்றி எளிதில் கிட்டி விடும். இதற்கு பல உதாரணங்களை சொல்லாம். ஒரு பெண்ணிற்கு திருமணம் செய்ய வேண்டுமானால், அதில் முதன்மையான 10 காரியங்களை நிறைவேற்ற வேண்டும். அவை :

    1. திருமணத்திற்கான செலவிற்கு பணம் வேண்டும்.

    2. தகுதியான மாப்பிள்ளை வேண்டும்.

    3. திருமணத்தை உறுதி செய்யும் நிச்சய தாம்பூலம் செய்தல் வேண்டும்.

    4. அழைப்பிதழ் அச்சிட வேண்டும்.

    5. உறவினர்கள், நண்பர்களை அழைக்கவேண்டும்.

    6. திருமண மண்டபத்தை நிர்ணயித்து உறுதி செய்யவேண்டும்.

    7. திருமணத்தை நடத்தும் வேலையை செய்யும் புரோகிதர் மற்றும் பொருட்களை பெற வேண்டும.

    8. விருந்து அம்சங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.

    9. பெண்ணிற்குத் தேவையான சீர்வரிசை செய்யவேண்டும்.

    10. மாப்பிள்ளை சீர்வரிசை மற்றும் திருமண ஜவுளிகளை பெறவேண்டும்.

    இவை – 10 காரியங்களுமே அவசியமானது என்றாலும், அவற்றில் அதிக முக்கியமான 2 காரியங்களை ஆற்றினாலே 80 சதவீத வேலைகள் முடிந்துவிடும்.. அதாவது 1.) திருமணத்திற்கு பணம் சேர்த்தல், 2.) தகுதியான மாப்பிள்ளை பார்த்தல், இவையிரண்டையும் செய்வதன் மூலம் திருமணத்தில் 80 சதவீத செயல்களை செய்வதன் மூலம் திருமணத்தில் 80 சதவீத செயல்களை செய்துவிட்டதாகி விடும்.

    இதே பரேடாவின் தத்துவத்தை எல்லா செயல்களுக்கும் எல்லா துறைக்குமே பயன்படுத்திப் பார்க்லாம். உதாரணத்திற்கு. மளிகை கடையை எடுத்துக் கொள்ளலாம். காலை 7 மணியிலிருந்து மாலை 7 மணிவரை ஒருவர் கடையை பார்க்கிறார். அதில் உள்ள வியாபார நேரத்தைப் பார்த்தால் சுமார் இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் 80 சதவீதம் விற்பனை நடக்கும் ( காலையில் 7 முதல் 8 மணி வரை, மாலை 5 முதல் 7 வரை ) மற்ற நேரங்களில் மிதமான விற்பனை இருக்கும். இந்த நேரம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஆகவே மளிகை கடை வியாபாரம் செய்பவர் அந்த முக்கியமான மூன்று மணி நேரத்தை, திறமையான ஊழியர்களை வைத்து, வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்தால் மேன்மேலும் வியாபாரம் பெருகும்.

    இதேபோல அலுவலக வேலை செய்பவர்களுக்கு தமது தொழிலில் உள்ள முக்கிய கோப்புகளை உற்சாகமான நேரத்தில் ( 20 சதவீத நேரத்தில் ) செய்து விட்டால், 80 சதவீத வேலை நிறைவேறிவிடும். மீதி வேலைகளை நிதானமாக செய்துவிடலாம்.

    இந்த 80 – 20 விதிப்படி, ஒவ்வொருவரும் தம்முடைய அதிமுக்கியமான 20 சதவீத காரியங்களை தேர்ந்து அதை அவ்வப்போது செய்து முடித்தால், 80 சதவீதப் பலன்களை பெற முடியும். இதையே முன்னேற்றத்தின் ரகசியம் எனலாம்.

    எது முக்கியம் ?

    நமக்கு அன்றாடம் பல பொறுப்புகள், நிர்ப்பந்தங்கள் உண்டாகின்றன. அவற்றில் எதைச் செய்வது ? எதைத் தவிர்ப்பது ? போன்ற குழப்பங்கள் வரத்தான் செய்கின்றன.

    பல்வேறு சமயங்களில் மற்றவர்களின் கட்டாயத்தினாலும் நமது சொந்த விருப்பு வெறுப்புகளினாலும் சிலவற்றை செய்கிறோம். சிலவற்றை விட்டுவிடுகின்றோம். ஆனால் பல காரியங்களைச் செய்யும்போதும், இதைச் செய்வதா? அதைச் செய்வதா? என்ற குழப்பம் வரும்போது ” முக்கியத்துவம் கொடுக்கும் முறையினை ” வளர்க்கவேண்டும். உதாரணத்திற்கு இரண்டு தொழிலை செய்து கொண்டிருப்பவருக்கு, எந்த தொழிலைத் தொடர்ந்து என்ற குழப்பம் வரலாம். அல்லது எந்த தொழிலைப் பெருக்குவது என்ற கேள்வி எழலாம். சிலருக்கு மேற்படிப்பு படிக்கலாமா? அல்லது தொழிலை தொடரலாமா? என்ற குழப்பங்கள் உண்டாகலாம்.

    இவர்கள், தம்முடைய வாழ்க்கையின் லட்சியம் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொண்டு, அதற்கு உதவும் செயலையே தொடரவேண்டும்.

    மற்ற சமயங்களில், குழப்பம் ஏற்படும்போது, ” முக்கியத்துவம் கொடுப்பதை ” பின்வருமாறு அறியலாம்.

    நமது பல்வேறு காரியங்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

    1.) அ – வகை : ” மிகவும் முக்கியம் : அவசரம் ”

    இந்த வேலைகளை உடனுக்குடன், அவ்வப்போதே செய்யவேண்டும்.

    இவைகளை தள்ளிப்போடவே கூடாது. தொழிலில் உள்ள சட்டம் மற்றும் அரசு சம்பந்தப்பட்ட செயல்கள் இதில் அடங்கும்.

    2.) ஆ – வகை : ” முக்கியம் : ஆனால் அவசரமில்லை”.

    தொழிலில் காலத்திற்கேற்ப செய்யவேண்டிய முன்னேற்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

    3.) இ – வகை : ”அவசரம் : ஆனால் முக்கியமில்லை ”.

    நமது தொழிலில் பல சமயங்கறில் ‘ மிகவும் அவசரம் ‘ என்று பலர் குறுக்கிடுவார்கள். ஆனால் அந்த அவசரம், நமக்குத் தேவையில்லாதது போல தோன்றும். அது போன்றவைகளை, சம்பந்தப்பட்ட நபர் மற்றும் சூழ்நிலைகளை அனுசரித்து முக்கயத்துவம் கொடுத்து செய்யவேண்டும்.

    4.) ஈ – வகை : ” முக்கியமில்லை : அவசரமில்லை ”

    நமது செயலில், பலவேறு சூழ்நிலைகளில் இதுபோன்ற முக்கியமில்லாத அவசரமில்லாத வேலைகளினால் நேரம், பணம் போன்றவற்றை வீணடிக்கிறோம். இது போன்றவற்றை முற்றிலும் ஒதுக்கிவிட வேண்டும்.

    நமக்கு தேவையான படிப்பு, தொழில், குடும்பம், பணம், புகழ், உடல்நலம், பயணங்கள் போன்ற பல்வேறு அம்சங்களை இந்த ” முக்கியத்துவம் கொடுக்கும் முறையினை ” பயன்படுத்தி தேர்வு செய்து செயல்படவேண்டும்.

    நடைமுறையில் ஆய்வு செய்தால், நான்காவது ( ஈ – வகை ) செயல்களை அதிகமாக செய்பவர்கள் முன்னேறாமல் பின் தங்குகிறார்கள். பெரும்பாலும் இந்த வகை ( ஈ – வகை ) செயல்கள், நமக்கு தெரிந்ததாக இருக்கலாம். அல்லது பிறரால் திணிக்கப்பட்டதாக இருக்கலாம்.

    அ – வகை செயல்கள் : சிரமமாக இருக்கும், புதியவர்களை சம்பந்தபட்டதாக இருக்கும், நமக்கு தெரியாததாக இருக்கும், மேலும் நமக்கு பிடிக்காததாக இருக்கும் இதை நாம் ஒதுக்காமல் செயல்படுத்தினால்

    முன்னேற்றம் வளரும்.

    (தொடரும் )

    ஆற்று நீரை அணைகட்டி தேக்கி விட்டால்

    ஆற்று நீரை அணைகட்டி தேக்கி விட்டால் அபாரமான வேலைகளைச் செய்யகூடிய பெரிய சக்தியுடைதாக ஆகிவிடுகிறது. அதேபோல் நாமும் நம்முடைய சக்திகளை உபயோகித்தால், அரிய பெரிய காரியங்கள் செய்யமுடியும்.

    Continue Reading »

    உஷார் ! உஷார் ! உஷார் !

    ஏற்கனவே, இந்த பகுதியில், வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தச் செல்லும்போதே ( அ ) வாடிக்கையாளர்களின் மேலாடைகளை அசிங்கப்படுத்தி, அவர்கள் சுதாரிப்பதற்குள் பணப்பையை எடுத்து சென்று விடும் ” நிபுணர்களைப்” பற்றி

    Continue Reading »

    மனிதர்கள் வாழ்வின் அடிமைகள்

    மனிதர்கள் வாழ்வின் அடிமைகள்
    அடிமைத்தனம் தான், அவர்களது நாள்களுக்குள்
    துன்பங்களையும், துயரங்களையும்
    இட்டு நிரப்புகின்றது.
    அவர்களது இரவுகளை,
    கண்ணீர் வெள்ளத்தாலும், வேதனைப் பெருக்காலும்
    நிறைக்கின்றது.
    – கலீல் ஜிப்ரான்.

    காலம் பொன் போன்றது (Time is Gold )

    சொல்லுங்கள் பார்க்கலாம் / ஒரு நிமிட நேரத்தில் உலகத்தில் என்னென்ன நடக்கும்

    1.) பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதில் 950 மைல் தூரம் கடந்திருக்கும்.

    2.) 6000 விண்கலங்கள் ( Satellites ) பூமியை நோக்கி பார்க்கின்றன.

    Continue Reading »