Home » Articles » உஷார் ! உஷார் ! உஷார் !

 
உஷார் ! உஷார் ! உஷார் !


admin
Author:

ஏற்கனவே, இந்த பகுதியில், வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தச் செல்லும்போதே ( அ ) வாடிக்கையாளர்களின் மேலாடைகளை அசிங்கப்படுத்தி, அவர்கள் சுதாரிப்பதற்குள் பணப்பையை எடுத்து சென்று விடும் ” நிபுணர்களைப்” பற்றி எழுதியிருந்தோம். ஒரு நிமிட அசிரத்தை / அஜாக்கிரதை, சொல்லொன்ன துயரத்தில ஆழ்த்தி விடுகிறது. விழிப்போடு இருப்பீர்கள் என நம்புகிறோம்.

இப்போது, தமிழ்நாட்டின் தலைநகரான, ” படித்தவர்கள் ” மிகுந்த சென்னை மாநகரத்தில், ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் டாக்டராக நடித்தாரம். 4 – 5 கிளினிக்குகள் நடந்து கொண்டு வந்தாராம், அதில் ஒரு 24 – மணிநேர மருத்துமனையும் அடங்கும். அவருடைய ‘ தொழில் ‘ நிரம்ப படித்தவர்கள் மத்தியில் நன்றாக ஓடிக் கொண்டிருக்க, ஒரு சிறுவனுக்கு ‘ ஊசி ‘ போட, சில மணித்துளிகளில் அவன் இறந்ததானால், அந்த போலி டாக்டர் பிடிப்பட்டார். ஒரு வேளை, அந்த சிறுவன் பிழைத்து விட்டிருந்தால், மக்களுக்கு சந்தேகம் வந்திருக்காது, அவர் ” டாக்டர் ” ஆக இயங்கி கொண்டிருந்திருப்பார்.

இதைப் போல, எத்துணை போலி டாக்டர்கள், போலி அதிகாரிகள், போலிகள்….. இருக்கிறார்கள் என்பது ஆண்டவனுக்குதான் வெளிச்சம். இன்றைய இளைய சமுதாயம் சினிமா மயக்கத்திலும், நடுத்தர வயதினர் மதம் / சாதிப்பிரிவினை சச்சரவிலும், முதியவர்கள் முதுமைக்கால நோய்களிலும் / பிரிவுகளிலும் வாழும்போது, இந்த போலிகளை சந்தேகிக்க / தட்டி கேட்க யார் இருக்கிறார்கள். ஆனால் சிந்தப்படுவதோ மனித கண்ணீர் மனித ரத்தம் !


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1998

மனிதாபிமானத்திற்கு ஈடு இணையில்லை
லஞ்சம் வாங்குபவர்களை ஒடுக்க அருமையான யோசனை
உலகம் உங்கள் கையில்
முயற்சி
இதோ . . . உங்கள் வாழ்நாளின் எண்ணிக்கை
பகவத் கீதை படித்தபோது…..
சிந்தனைத்துளிகள்
சிறகுகள் விரித்து. . .
குழந்தை வளர்ப்பு
நெஞ்சோடு நெஞ்சம்
இல.செ.கவின் சிந்தனை
இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்
திருப்பூரில் நடந்த 1 – 2 – 98 அன்று மனித நேய முன்னேற்ற பயிலரங்கம்
கவலையற்றிருத்தலே வீடு
முன்னேற்றப் பாதை
ஆற்று நீரை அணைகட்டி தேக்கி விட்டால்
உஷார் ! உஷார் ! உஷார் !
மனிதர்கள் வாழ்வின் அடிமைகள்
காலம் பொன் போன்றது (Time is Gold )