Home » Articles » கவலையற்றிருத்தலே வீடு

 
கவலையற்றிருத்தலே வீடு


ஸ்ரீதரன் என்
Author:

– டாக்டர் என். ஸ்ரீதரன்

துன்பங்கள் அனைத்தையும் நீக்கிவிட முடியாமல் போனாலும் அவற்றின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளலாம், கடலில் அலைகள் எழுவதைப்போல் வாழ்க்கையில் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. பனைமர உயர அலைகளிடம்தான் நாம் பயப்பட வேண்டும். கால் விரல்களின் இடைவெளியைச் சீண்டும் சிறிய அலைகளைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால் சிலர் பால்காரன் தாமதம், பஸ்ஸில் கூட்டம், வெயில் அதிகம், காப்பியில் சீனி குறைவு போன்ற சிறு தொந்தரவுகளையும் கற்பனை என்ற பூதக்கண்ணாடி கொண்டு பெரிதாக்கிப் பார்க்கின்றனர். இவ்வாறு சிறிய இடைஞ்சல்களிலேயே நமது கவனம் சென்றால், பெரிய பிரச்சினைகளைக் கவனிக்க நேமும், அவற்றைச் சமாளிக்க சக்தியும் நமக்கு இல்லாது போய்விடும்.

ஒரு விஷயம் பிரச்சினையாகவோ பிறகு கவலையாகவோ மாறுவதற்கு அதைப் பற்றிய தெளிவின்மையும் ஒரு காரணம். அதைப்பற்றி அமைதியாகச் சிந்தித்தால் அல்லது அதைப்பற்றி அறிந்தவர்களிடம் ஆலோசனை பெற்றால் தெளிவேற்படும். தேவையானால் காகிதமும் பேனாவும் கொண்டு பிரச்சினையை அலசலாம். காகிதத்தின் ஒருபுறம் ஒரு பிரச்சினையால் என்னென்ன சிரமங்கள் விளையும் என்று குறித்துக் கொள்ளலாம். இன்னொரு புறம், சிக்கலைச் சமாளிக்க என்னென்ன வழிகள் உண்டு என்று எழுதி வைக்கலாம். இவ்வாறு செய்தால், பயங்கரமானது என்று நாம் நினைத்திருந்த பிரச்சினை, காற்று குறைந்துவிட்ட பலூன் போல், அளவிலும தீவிரத்திலும் சிறிதாகிவிடும்.

உதாரணமாக – நாம் வியாபாரம் செய்கிறோம், கவிழ்ந்திவிடுமோ என்று கற்பனையில் நடுங்கிக் கொண்டிப்பதைவிட, தெளிவாக யோசிப்பது நல்லது. கவிழட்டுமே, என்ன ஆகிவிடும் ? பணம் தீர்ந்துவிடுமே. தீர்ந்துபோகட்டும், அதனால் என்ன ? இதுவரை எஜமானனாக இருந்தவன் சம்பள வேலைக்குச் சேரவேண்டுமே. சேரு, அனுபவம் பெறு. பணம் சேமிக்கத் தொடங்கு, கணிசமான தொகை சேர்ந்ததும் வேலையை ராஜிநாமா செய். வியாபாரம் ஆரம்பி, இம்முறை கவிழமாட்டாய். ஏனெனில் முன்பு அடிப்பட்ட அனுபவம் எச்சரிக்கையாக அமைந்து நமது வியாபாரம் சரியான வழியில் செல்ல உதவும்.

ஆழமாக சிந்திக்க சிலர் தயங்குகின்றனர், ஏனெனில் மனத்தில் தெளிவேற்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. வாய்ப்பேச்சாக ” பிரச்சினை நீங்கவேண்டும் ” என்று சொல்வார்களே தவிர உள்மனத்தில் அந்த அளவு தீவரம் இருக்காது. சிலருக்கு மேஜை குப்பையாக இருந்தால் தான் வேலை செய்யமுடியும் ! அதுபோல் சிலருக்கு எதைப் பற்றியும் குழம்புவதும் கவலைப்படுவதும் பிடிக்கும். இதனால் பொழுது நன்றாகப் போகிறது. இருட்டைக் கண்டு அஞ்சுவதுபோல் சிலர் வெளிச்சத்தைக் கண்டும் அஞ்சுகின்றனர். கவலையைப் போக்கிக் கொள்ள விரும்பாத இவர்கள் வேறு நோய் அறிகுறிகளைக் கூறி மருத்துவரிடம் ஆலோசனை கேட்கின்றனர். மருத்துவர் விஷயத்தைப் புரிந்துகொண்டு வைட்டமின் மாத்திரை, தூக்க மாத்திரை, போலி மாத்திரை ( பிளேஸ்போ எனப்படுவது ) கொடுத்தனுப்பிவிடுவார்.

இன்னும் 50 ஆண்டுகளில் தற்போது உமிழப்பட்டு வரும் கார்பன்டை ஆக்சைடு ( கரிஅமில வாயு ) இதே நிலையில் நீடிக்கும்மானால், கோடைக்காலங்களில் உஷ்ணம். ( இப்போது நாம் அனுபவித்தது எப்படி என்று உங்களுக்கு தெரியுமல்லாவா ) தற்போது இருப்பதை விட இரு மடங்காகும் என அறிவியலார் எச்சரித்துள்ளனர். பூமி படிப்படியாக சூடேறி வருகின்றது. காரணம் குளிர்விக்கும் காடுகள் அழிக்கபட்டு வருகின்றன. அதன் மூலம் மரங்கள் மறைவதால், கரிஅமில வாயுவை உட்கொண்டு மனித உயிரினத்திற்கு தேவையான ஆக்ஸிஜனை வெளியிடும் மரங்கள், செடிகளின் தூய பணிக்கு மாற்று ( Substitute ) இல்லை.

இதுவரை எந்த அரசாங்கமோ ( அ ) அரசியல் கட்சியோ, நாங்கள் உங்களுக்கு சுத்தமான காற்றை தருகிறோம் என வாக்குறுதியை அளிக்கவில்லை. வேண்டுமானால் அவர்கள் தற்போதுள்ள Telephone Boothகள் போல, சுத்தமான காற்று கிடைக்கும் Booth – கள் செயல்படுகின்றன ) இயற்கையை மாற்றமுடியாது.

நமக்கு இயற்கையளித்துள்ள ஒரே வசதி, மழைக்காலம் வருமுன், அரசாங்கத்துடன் சேர்ந்து ஆளுக்கொரு மரம், வீதிகள் எல்லாம் மரங்களாக நட்டு வளர்க்கிறோம் என்றால் கண்ணுக்கும் குளிர்ச்சி, கோடையிலும் ஒரளவு நிம்மதி பெறலாம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1998

மனிதாபிமானத்திற்கு ஈடு இணையில்லை
லஞ்சம் வாங்குபவர்களை ஒடுக்க அருமையான யோசனை
உலகம் உங்கள் கையில்
முயற்சி
இதோ . . . உங்கள் வாழ்நாளின் எண்ணிக்கை
பகவத் கீதை படித்தபோது…..
சிந்தனைத்துளிகள்
சிறகுகள் விரித்து. . .
குழந்தை வளர்ப்பு
நெஞ்சோடு நெஞ்சம்
இல.செ.கவின் சிந்தனை
இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்
திருப்பூரில் நடந்த 1 – 2 – 98 அன்று மனித நேய முன்னேற்ற பயிலரங்கம்
கவலையற்றிருத்தலே வீடு
முன்னேற்றப் பாதை
ஆற்று நீரை அணைகட்டி தேக்கி விட்டால்
உஷார் ! உஷார் ! உஷார் !
மனிதர்கள் வாழ்வின் அடிமைகள்
காலம் பொன் போன்றது (Time is Gold )