Home » Articles » திருப்பூரில் நடந்த 1 – 2 – 98 அன்று மனித நேய முன்னேற்ற பயிலரங்கம்

 
திருப்பூரில் நடந்த 1 – 2 – 98 அன்று மனித நேய முன்னேற்ற பயிலரங்கம்


admin
Author:

பாரத விடுதலைப் பொன்விழாவின் ஒரு அங்கமான திருப்பூர் மக்கள் மாமன்றமும், ” தன்னம்பிக்கை ” இதழும் இணைந்து மனிதநேய முன்னேற்றப் பயிலரங்கம் நடத்தியது.

திருப்பூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் திரு. என். கந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் திரு.சி. சுப்பிரமணியம் அனைவரையும் வரவேற்றார்.

பயிலரங்கம் நடத்திய கோவை ஜி. ஆர். மருத்துமனை டாக்டர் ஜி. இராமநாதன் மக்கள் வாழ்வில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு கூறுகளை விவரித்தார். மாணவர்கள், வணிகர்கள், குடும்பத் தலைவர்கள், தொழில்முனைவோர் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்றப்படிகளை ஒளிபெருக்கிக் கருவிகள். அட்டவனை மூலம் விளக்கினார்.

இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து மாற்றுச் சீறுநீரகம் பொருத்த உள்ள வெள்ளகோயில் மருந்தாளுநர் திரு. ராஜகோபாலின் மனைவிடம் சிகிச்சை நிதியாக 5,116 /- வழங்கப்பட்டது.

திருப்பூர் மனவளக்கலை மன்றச் செயலாளர் திரு. சுப்பிரமணியம், டாக்டர் டி.வி. ஸ்ரீதர், திரு . எம்.எஸ். சிவம் ஆகியோர் பேசினார்.

விழாக்களுக்கான ஏற்பாடுகளை வி.ஐ.பி. டெய்லர் திரு.எம். தியாகராஜன் , திரு. தங்கவேலு – அகியோர் செய்திருந்தனர்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1998

மனிதாபிமானத்திற்கு ஈடு இணையில்லை
லஞ்சம் வாங்குபவர்களை ஒடுக்க அருமையான யோசனை
உலகம் உங்கள் கையில்
முயற்சி
இதோ . . . உங்கள் வாழ்நாளின் எண்ணிக்கை
பகவத் கீதை படித்தபோது…..
சிந்தனைத்துளிகள்
சிறகுகள் விரித்து. . .
குழந்தை வளர்ப்பு
நெஞ்சோடு நெஞ்சம்
இல.செ.கவின் சிந்தனை
இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்
திருப்பூரில் நடந்த 1 – 2 – 98 அன்று மனித நேய முன்னேற்ற பயிலரங்கம்
கவலையற்றிருத்தலே வீடு
முன்னேற்றப் பாதை
ஆற்று நீரை அணைகட்டி தேக்கி விட்டால்
உஷார் ! உஷார் ! உஷார் !
மனிதர்கள் வாழ்வின் அடிமைகள்
காலம் பொன் போன்றது (Time is Gold )