ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களது வாழ்வில் ஏதோ சில, மிக சிறப்பான, அற்புதமான விஷயங்கள் தானாகவே தேடி வந்திருக்கும். அவர்கள்தான் அதை நினைத்து பார்ப்பதில்லை. பொருட்படுத்துவதில்லை. அதன் மகத்துவம் அறிவதில்லை.
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ, எதன் மீதோ, மிகத்தீவிர அதீதமான ஆசை இருக்கவே செய்கிறது. பணம், பதவி, அதிகாரம் என பெரிய அளவில் ஆசைப்பட்டவர்கள் பெரிய அளவில் முன்னேறுகிறார்கள். சிறிய ஆசைகளே குறிக்கோள்களே வாழ்வில் நம் சிறகுகளை முடக்கி விடுகிறது. சிறிய ஆசை, சிறிய இலக்குகள் மிகச்சிறிய வாழ்வைத்தான் அமைத்துத் தருகிறது.
சூரியனை சுற்றி பூமி வலம் வருவது போலவே, மனிதனுக்கு எதன் மீது அதிக ஆசையோ, அதைச் சுற்றியே தன்னை அறியாமல் வாழ்நாள் முழுவதும் வலம் வருகிறான் என்பது உண்மை.
நம் நிறம் வாழ்நாள் முழுதும் நம்மால் மாற்றிக் கொள்ள முடியாதது. ஆனால், தீயப் பழக்கங்களை தவிர்த்து உடற்பயிற்சியின் மூலம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அது நம் கையில்தான் உள்ளது.
நேர்மறையான நல்ல, எளிமையான விஷயங்களுக்கு உலகில் அதிக கவர்ச்சி ஈர்ப்பு இருப்பதில்லை. எதிர்மறையான தீய விஷயங்களுக்கு வரவேற்பு ஏராளமாய் அபரிதமாய் இருக்கிறது. ஊடகங்களும் அதில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றன.
நூறு சதவிதத்திற்கு இலக்கு வைத்தால் தான் நாற்பது சதவீதமாவது அடைய முடிகிறது. அந்த நாற்பது சதவீதத்தை எட்டுவதற்கே நூறு சதவீதத்திற்கு இலக்கை நிர்ணயிக்க வேண்டியுள்ளது. மலையளவு முயற்சி செய்தால் தான் துளியளவாவது முன்னேற முடிகிறது. துளியளவு முன்னேறவே மலையளவு முயற்சிக்க வேண்டியுள்ளது.
பட்டம், பதவி, பணம், திருமணம், குழந்தை, சொந்த வீடு, அதிகாரம் என்று நாம் விரும்பிய ஆசைப்பட்ட ஏதேதோ கிடைத்துவிட்டால் மட்டும் சந்தோஷமாக இருக்கிறோமா என்றால் அதுதான் இலலை. புதிய இலக்குகளுடன் ஏக்கங்களுடன் ஏதோ முடிவில்லாத போராட்டத்துடன் வாழ்வு நகர்கிறது.
இன்றைய நவீன உலகில், பைக், கம்ப்யூட்டர், வண்ண தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றை நாம் மிகச்சாதாரணமாகப் பயன்படுத்துகிறோம். நம் முன்னோர்கள் காலத்தில் இத்தகைய நவீன வசதிகள் இல்லவே இல்லை.
மனிதன் தான்; விரும்பியதை, ஆசைப்பட்டதை அடைய முழுமூச்சுடன் செயலாற்றும் போது அது கஷ்டமாக தெரிவதில்லை. வெற்றி பெற்றபின் சிலர் பாராட்டு மழையில் நனைக்கும் போது, தன்னை மறந்து, கண்மண் தெரியாமல் நடந்து கொள்கிறான். நம்மைவிட வலியவர்கள் நம்மை குட்டும்போதுதான் நம் நிலை நமக்குப் புரிகிறது. வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் போராட்டங்கள், பிரச்சினைகள், நெருக்கடிகள் நம்மை வலிமை பெற வழிச் செய்கின்றன. எதிரிதான் நம் நரம்பை முறுக்கேற்றுகிறான். நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் நமது எதிர்ப்பார்ப்பை நிராகரிக்கும் போது அதைவிட பல மடங்கு உயரத்தை இலக்கை அடைவதற்கு மறைமுகமாக உதவுகிறார்கள். புதிய தடம் அமைத்துத் தருகிறார்கள். புதிய சிந்தனைக்கு முயற்சிக்கு வழிவகை செய்கிறார்கள்.
பணி இழப்பு, திடிர் நோய்த்தாக்குதல், தொழிலில் நஷ்டம் என எவ்வளவோ சிக்கல்கள் நம்மை முடக்கி போடுகிறது. இது தவிர, நாம் நம்மை அறியாமலேயே நம்மை சுற்றி இருப்பவர்களிடம் வரம்பு மீறி நடக்க நேரிடும் போதுதான் மோதல்கள் உருவாகிறது.
நம் வாழ்வு ஒரு நாள் முடியப் போகிறது. நாம் உயர்நிலை அடையவே ஆசைப்படுகிறோம். உயர்நிலை அடைந்து விட்டாலும் அதை தக்க வைத்துக் கொள்ளவும் திறமை வேண்டும். நாம் வீழ்த்தப்படாமல் இருப்பதற்கு நமக்கு கீழ் உள்ளவர்களின் அங்கீகாரமும் வேண்டியுள்ளது.
ஜாதகப் பொருத்தம் பார்த்து செய்யப்பட்ட திருமணங்கள் சில விவாகரத்தில் முடிவதில்லையா? நியூமராலஜிபடி பெயரில் எழுத்துக்களை மாற்றிக்கொண்டு விட்டால் மட்டும் தொழிலில் நஷ்டம் ஏற்படுவதில்லையா? ராசியான எண் என்று வாங்கிய வாகனம் விபத்துக்குள்ளாவதில்லையா? ஜாதகம், ஜோசியம், நியூமராலாஜி, ராசியான எண், ராசியான கற்கள் நம் வாழ்வை எப்படி மாற்றியமைத்து விட முடியும்? ஆனாலும் மனித நம்பிக்கை தொடர்கிறது.
வாழ்க்கை என்கிற விளையாட்டில் எதிர் அணியை சந்திக்க வேண்டியுள்ளது. வெற்றி பெற்றால்தான் வாழ்வு. அரசியலில் எதிர்க்கட்சியை சந்திக்க வேண்டியுள்ளது. தொழிலில், வாழ்வில் நமக்கு எதிராக ஒரு அணி இருக்கவே செய்கிறது. நம் பணியை தரமாகச் செய்தால் பலன் நிச்சயமாக உண்டு. நம் அணி உறுதியாக வெற்றி பெறும்.[hide]
வலிமை வாய்ந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை மகாத்மா காந்தியால் எப்படி தகர்க்க முடிந்தது? அவருக்குப் பின்னால் இந்தியர்கள் ஒன்றுப்பட்டு அணி வகுக்க திரண்டது அவரது மன வலிமைக்குச் சான்று.
புயல், பூகம்பம், சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களில் கால அளவு மிகக் குறுகியதே. ஆனால், அதன் தாக்கம் மிக அதிகம். ஒவவொரு மனிதனும் தன் வாழ்வில் மிகவும் நெருக்கடியான தருணங்களை சந்திக்கிறான். சில மணி நேரங்களோ, சில நாட்களோ நீடித்த அந்த நெருக்கடிகளை வாழ்நாள் முழுவதும் அசை போடுறான்.
இவரை திருமணம் செய்து கொண்டால் இந்த வசதி கிடைக்கும் அந்த வசதி கிடைக்கும் என மனக்கணக்கு போட்டு செய்து கொள்ளும் உண்மையான அன்பில்லாத திருமண உறவுகளைவிட நிபந்தனையற்ற, வசதிகளுக்கு அதீத முக்கியத்துவம் தராத திருமண உறவுகள் நிச்சய வெற்றியை தருகிறது.
நம் நெருங்கிய உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, அண்டை வீட்டார்களுக்கு மனித நேயத்துடன் எவ்வளவோ உதவிகளை செய்திருப்போம். ஆனால், ஒரு சிறு தவறு தெரிந்தோ, தெரியாமலோ அவர்களுக்கு நாம் தவறுதலாக சூழ்நிலை காரணமாக செய்தது முக்கியத்துவம் பெற்று உறவு முறிந்து போன சம்பவங்கள் அனுபவங்கள் ஏராளம்.
சலிப்பில்லாமல் உழைத்தவர்கள்தான் ஆள்கிறார்கள். உழைக்காத போதும் களைக்காத போதும், வியர்க்காத போதும் ஓய்வு எடுத்தவர்கள் அடிமை வாழ்வையே வாழ்கிறார்கள். நாம் தயாராக இல்லாதவரை நம் வாழ்க்கையை யாராலும் மாற்ற முடியாது. உதவிகளும், அறிவுரைகளும் வீண்தான்.
எதிரியை பழி வாங்க வேண்டும் என துடிக்கும்போது நாம்தான் பலிகடா ஆகிறோம். அடுத்தவரை, எதிரியை துன்புறுத்துவதுதான் நமக்கு சந்தோஷம் என சிந்திக்கும் போது, நம் வாழ்வு அதல பாதாளத்துக்கு சறுக்கத் தொடங்குகிறது. பழி வாங்கும் உணர்வுதான் நமது முதல் எதிரி.
நம் எண்ணங்களே நம் வாழ்வை தீர்மானிக்கின்றன. நாம் யாரிடமும் சண்டையிடவோ, பிறரை அழிக்கவோ பிறக்கவில்லை. அது நம் நேரத்தைத்தான் வீணடிக்கும்.
நமக்கு கைகளும், கால்களும் கடவுள் கொடுத்துள்ளான். யாரிடமும் போய் நிற்க வேண்டியதில்லை. சொந்த காலில் நிற்பதே சிறந்தது. எந்த மிருகமும் அடுத்த மிருகத்தை நம்பி இருப்பதில்லை.
எவ்வளவு வசதிகள் கிடைத்த போதிலும், இன்னும் ஏதோ ஒன்றுக்கு ஏங்கிக் கொண்டுதான் மனித இனம் இருக்கிறது. இறைவனிடம் பிரார்த்திக்கிறது.
நல்ல மனிதர்கள் உலகில் தனித்து விடப்படுகிறார்கள். தனிமைப்படுத்தப் படுகிறார்கள். உலகம் நம்மை நல்லவராக கருத வேண்டும் என்பதற்காக உண்மையானவராக, தூய்மையானவராக துவக்கத்தில் நடிக்கத் தொடங்கியவர்கள் கூட காலப்போக்கில் உண்மையிலேயே துட்ய்மையானவர்களாக ஆகி விடுகிறார்கள். மனிதனின்; திறமையும் சக்தியும் முழுமையாக பயன்படுத்தப்படுவதில்லை.
மனிதன் தவறுகளுக்கு அப்பாற்பட்டவனல்ல. செய்த தவறை ஒப்புக்கொள்ள யாரும் முன் வருவதில்லை. குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரம் இருக்காத பட்சத்தில்.
பழிவாங்கும் உணர்வை கட்டுப்படுத்தி அமைதியாக இருப்பதும், எதிர் மறையாக செயல்பட துடிக்கும் உணர்வுகளை அடக்குவதும், மற்றவர்களிள் மனம் புன்படுமாறு பேசாமல் இருப்பதும், தம் தவறுகளை மற்றவர்கள் பட்டியலிடும் போது, நேர்மையாக ஒப்புக்கொண்டு விடுவதும் நம்மை வாழ்வில் மேன்மேலும் உயர வழி வகுக்கிறது. இன்றைய நவீன உலகில் பர்ழ்ற்ன்ழ்ங், பங்ய்ள்ண்ர்ய், நற்ழ்ங்ள்ள் என்பவைகளே அதிகம் பேசப்படுகிற வார்த்தைகளாக உள்ளது.
மதம் மாறினால் இன்னொரு மதத்தில் ஒரு எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர நம் தனிப்பட்ட வாழ்க்கையில் வேறெந்த மாற்றமும் ஏற்பட்டு விடுவதில்லை.
ஆணைவிட பெண் தாழ்ந்தவளுமில்லை. பெண்ணைவிட ஆண் உயர்ந்தவனுமில்லை. பெண்களுக்கு எதிரான அநியாயத்தை, அடக்குமுறையை, வன்முறையை, வஞ்சகத்தை நாளும் ஆண்வர்க்கம் செய்து கொண்டுதான் இருக்கிறது. பெண்களை மதிக்கின்ற குடும்பங்களின் தரம் உயர்கிறது. டி.வி.சீரியல், புதிய ஆடைகள், ஆபரணங்கள், பியூட்டி பார்லர் என்கிற குறுகிய வட்டத்திற்குள்தான் பெரும்பாலான பெண்களின் வாழ்வு சுழல்கிறது. பெண்கள் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. தங்களுடைய உண்மையான சக்தியை உணர்ந்த பெண்கள்தான் மிக உயரத்திற்கு செல்கிறார்கள்.
இளம் வயதினருக்கு கனவு மிக அதிகம். வயதாக, வயதாக சாதிக்க வேண்டும் என்கிற துடிப்பு ஆர்வம் குறைந்து விடுகிறது. உச்சியை அடைவதற்கான வலுவும், சக்தியும் இளம் வயதினர்க்கு மிக அதிகம்.
திருடர்கள் இருந்தால்தான் காவல்துறைக்கு வேலை, நோயாளிகள் இருந்தால்தான் மருத்துவர்களுக்கு, மருத்துவமனைகளுக்கு, மருந்தகங்களுக்கு வேலை. பக்தர்கள் கூடினால்தான் பூசாரிக்கு வேலை. கொடுக்கல் வாங்கல் இருந்தால்தான் பணத்திற்கு வேலை.
சிலர் நேர்மறை எண்ணம் கொண்டவர்களாக வீண் சண்டையை, வீண் சச்சரவை தவிர்ப்பவர்களாக பழிவாங்கும் குணம் அற்றவர்களாக, பொறாமைப்படாதவர்களாக இருக்கிறார்கள். சிலர் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களாக, பழிவாங்கும் வெறி பிடித்தவர்களாக மனித நேயமற்றவர்களாக, கொடூர குணம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். கொய்யா செடியில் காய்ந்த கொய்யா பழம் இனிக்கிறது. பாவை கொடியில் காய்த்த பாகற்காய் கசக்கிறது. கரும்பு இனிக்கிறது. வேம்பு கசக்கிறது. குடும்ப பிண்ணனியும் மனிதனை கட்டமைப்பதில் முக்கிய காரணி என்பதை மறுப்பதற்கில்லை.[/hide]
இந்த இதழை மேலும்