– 2016 – January | தன்னம்பிக்கை

Home » 2016 » January (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    ஒரு பானை சோற்றுக்கு

    ஒருபானை சோற்றுக்கு “ஒரு சோறு பதம்” என்பது நம் முன்னோர் சொன்ன பொன்மொழி. அனுபவ அறிவினால், அரிசியை பாத்திரத்தில், அடுப்பில் வேக வைக்கும் போது, அது சாப்பிடுவதற்குரிய பக்குவத்திற்கு வந்து விட்டதா…? என்பதை அறிந்து கொள்வதற்கு அந்தப் பாத்திரத்தின் உள்ளே ஒரு கரண்டியை விட்டு நன்கு கலக்கியபின், ஒரு சோறை எடுத்து, விரலால் நசுக்கிப்பார்ப்பார்கள்.

    இதற்காகச் சொல்லப்பட்டதுதான் மேலுள்ள பழமொழி. இந்தப் பழமொழியை இன்றைய வாழ்க்கை நிகழ்வுகளுக்கும் உபயோகிக்கலாம். பொதுவாகவே நம் முன்னோர்கள் சொல்லியவை எல்லாம், எல்லாக் காலத்துக்கும் ஏற்புடையதாகவே இருக்கும்.

    இன்றைய காலகட்டத்தில் அன்றாட வாழ்வில் தவறான செய்திகள் இடம் பெற்றுக் கொண்டே உள்ளன. ஊழல் என்பது அரசாங்கத்திலும், திருட்டு, கடத்தல் என்பது வசதியுள்ளோர்களுக்கு எதிராகவும், பாலியல் தொந்தரவு என்பது பருவப் பெண்களை, ஆண்கள் பலவந்தப்படுத்துவதுடன் சின்னஞ்சிறு பள்ளிக் குழந்தைகளையும் மிருகமாகித் தாக்கும் சூழல் கல்வி நிலையங்களிலும் தொடர் கதையாகி விட்டது.

    என்ன காரணத்தால் இக்குற்றங்கள் தொடர்கின்றன…? என்று சிந்திக்க வேண்டும்.

    ஊழலுக்கு காரணம் வாக்களிக்கும் மக்கள்தான். பொதுமக்கள் மேல் அக்கறையுள்ளவர்களுக்கு வாக்கை அளிக்காமல், தற்காலிக ஆதாயத்துக்காவும், தான் சார்ந்த அரசியல் கட்சிக்காவும், தவறான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் நிலையால், அவ்வாறு வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள், தாம் செய்த செலவு மற்றும் தன் குடும்பச் செலவு, எதிர்காலச் சந்ததிக்கான சேமிப்பு என ஊழல், லஞ்சத்தில் ஈடுபடுகிறார்கள்.

    நீதி நிலை நாட்டப்படுபோது இந்த லஞ்சமும், ஊழலும் குறையும். தலைமை, நேர்மையாக அமையுமானால், இவை முழுமையாக நேர்மையாக கட்டுப்படுத்தப்படும். அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. நல்லதே நடக்கும் என நம்புவோம்.

    திருட்டு, கடத்தல் இரண்டுமே ஒருவருக்கு உரிய பொருளையோ, நபரையோ தெரியாமல் எடுத்துச் செல்வது. ஏன் எடுத்துச் செல்கின்றனர்…? அவர்களது பணத்தேவைக்கு என்று சொல்லலாம். ஆனால், திருடும் எல்லோருமே அப்படியா என்றால் இல்லை என்பதேதான் பதில்.

    மழை

    கதிரவனுக்கு மழை என்றால் மிகவும் பிடிக்கும். எந்த ஒரு கூற்றையும் ஒரு காலம் சார்ந்த பொருள் உள்ள வாக்கியமாகப் பார்க்க வேண்டி உள்ளது. இரண்டாயிரத்து பதினைந்தாம் ஆண்டின் வடகிழக்கு பருவமழைக்குப் பின் கதிரவனுக்கு மழை என்றால் ‘பயம் பிடிக்கும்’ என்று சொற்றொடரை மாற்றிக் கொள்ளலாம். “அஞ்சுவது அஞ்சாமை பேதமை’ என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். அதாவது அச்சப்படுவதற்கு அச்சப்படாமல் இருப்பது அறிவு உள்ளவர் செய்கின்ற செய்கை இல்லையாம். அதனை தொடர்ந்து அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என்று முடித்திருப்பார். அஞ்சல் துறை குறித்து ஏதோ சொல்ல வருகிறார் என்று நகைச்சுவையாக நாம் நினைத்து விடக்கூடாது. அச்சத்தைக் குறித்து அறிந்து கொண்டே அச்சப்படுதலில் பட்டப்படிப்பு படித்திருக்கின்ற திறமை வாய்ந்தவர்கள் தேவையான தருணங்கள் அச்சம் முறைப்படி அனுபவிப்பார்கள் என்று பொய்யா மொழியார் பொருள் கூறியுள்ளார். ஆங்கில பொன்மொழி, மழை அச்சம் உருவாக்குவதற்குப் பதிலாக, அதில் இருந்து நமக்கும் நமது உடமைகளுக்கும் முக்கியமாக உள்ளத்திற்கும் சேதம் விளைவித்து விடாமல் பாதுகாத்துக் கொள்வதற்கான காரியம் குறித்த ஞானத்தை ஏற்படுத்த வேண்டும்.

    அப்படி ஏற்படுத்தியது என்றால் அத்தகைய நபர் தைரியசாலி என்று கூறலாம். கதிரேசன் கடும் மழைபொழிவில் தன் வங்கியில் அகப்பட்டுக் கொண்ட பொழுது அவர் குடும்பத்தினர் தொலைதூரத்தில் தொடர்பின்றி அகப்பட்டு இருந்தனர். முதலில் வங்கிக்கு வெளியே முழங்கால் அளவு தண்ணீர் ஓடிக்கொண்டு இருப்பதாக அலுவலர் ஒருவர் கூறினார். அந்தக் கிராமம் மூழ்கடிக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைகளால் பத்திரிக்கைகளில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று. இந்த முறை கதிரேசன்,

    தானே இங்கே அகப்பட்டுக்கொள்வோம் என கணப்பொழுதும் எதிர்நோக்கவில்லை உடனிருந்த அலுவலர்களில் ஒரு இளம் அதிகாரியும் இருந்தார். வழக்கத்திற்கு மாறாக அந்த திருமணமாகாதா இளைஞர் படபடப்புடனும், கலவரம் வரலாமா…? என்று அனுமதி கோரும் முகத்துடனும் இருந்தார்.

    ஐயா, எப்படியாவது ஹெலிகாப்டரோ…? படகோ…? பிடிச்சு வெளியே போயிடனும் என்றார். உடனடியாக அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மெதுவாக தெரிய வந்த பொழுது கொஞ்சம் அவநம்பிக்கை எட்டிப் பார்க்கத் தொடங்கியது.

    வங்கியின் சுவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மழைநீரோடு சாவகாசம் வைத்துக் கொண்டு உள்ளே சுவர்ப்பரப்பில் வியர்வை முத்துக்களைப் போல நீர் பூக்க ஆரம்பித்தது. அவை, ஒன்றாக சேர்ந்து கீழே வழிய ஆரம்பித்தன. வெளியே மழை கொட்டு கொட்டென கொட்டித் தீர்த்துக் கொண்டு இருந்தது. கதிரேசனின் நெற்றியிலும் கவலை வியர்வைத் துளிகள் அரும்பியிருக்க வேண்டும். அங்கே இருந்த ஈரமான சூழ்நிலையால் அவர் அதை மழைத்துளிகளில் இருந்து வித்தியாசப்படுத்திப் பார்க்க வில்லை.

    ஒரு வாரமாக தினந்தோறும் மழையில் நனைவதும் உடைமாற்றிக்  கொள்வதுமாக பழக்கப்பட்டு போயிருந்தது. கையோட ஒரு பையில் மாற்றுடை, உள்ளாடைகள் என எடுத்து வந்தும் காலில் இரப்பர் செருப்பு அணிந்து வந்தும் கதிரேசனின் அன்றாட பழக்க வழக்கத்துக்குள் வரத்துவங்கியிருந்தது. மடிப்புக் கலையாத சட்டைகளுக்குப் பதில் விளையாட்டு மைதானத்தில் அணியும் எளிதில் நனைந்து உலரும் உடைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. சூழ்நிலைக்கேற்ப தகவலைமைத்துக் கொள்வது நல்லது தானே.

    அந்த ஊரை அணுகும் போதும் எல்லா சாலைகளிலும் வெள்ளம் அதிகரித்து நான்கிலிருந்து ஏழு அடிவரை ஏறியிருப்பதாக ஆழமான செய்தியை கொண்டு வந்தார் மாலா என்ற உதவியாளர். கதிரேசன் தனது கைபேசியில் ஒரு தகவலைப் படித்தார். மனித சக்தியால் மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளும் ஆற்றல் அளவையும் தாண்டி மழை ஏற்படுத்திய தாக்கம் பரவி வருவதாக அது கூறியது. தெய்வம் உள்ளதா…? இல்லையா…? என்கிறகேள்வி மிகவும் பிரபலமானது. ஆனால், அச்சப்படுவதால் பலன் அதிகமாக இருப்பதாக தோன்றவில்லை.

    தன்னம்பிக்கை மேடை

    உங்கள் புத்தகம் மூலம் உங்கள் செயல்பாடுகள் மூலம் உங்களை என் முன்மாதிரியாக வைத்துள்ளேன். சமீபத்தில் 7 கிலோ மீட்டர் தொலைவை நீங்கள் நீந்தி கடந்த சாதனையையும் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது மீட்புப் பணியில் நீங்களே நேரடியாக ஈடுபட்டதைப் பத்திரிக்கை வழியாக அறிந்தேன். என் போன்ற இளைஞர்களுக்கு நீங்களே முன் உதாரணம் ஐயா.

    அரசின் உயர்ப்பதவியில் வளர விரும்பும் இளைஞர்கள் விரைந்து முடிவெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?

    நேர நிர்வாகத் திறன் வளர்த்துக் கொள்வது எப்படி?

    டி.யோகானந்தன்

    திருப்பூர்

    எனது புத்தகங்களைப் படித்து விட்டீர்கள் என்பதை அறிந்து மிகிவும் மகிழ்ச்சி அடைகிறேன். புத்தகங்கள் படிப்பது ஒரு நல்ல பழக்கம். தொடர்ந்து வாசியுங்கள். அரசுப் பணிக்கு வரவிரும்பும் இளைஞர்கள், அது ஒரு காவலர் வேலையாக இருந்தாலும் சரி, இளநிலை உதவியாளர் வேலையாக இருந்தாலும் சரி, ஒரு IAS அதிகாரிப் பதவியாக இருந்தாலும் சரி, நிறையப் புத்தகங்கள் வாசித்து பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    அதே வேளையில் சில நூல்கள் எழுதியுள்ளேன் என்பதாலோ அல்லது அரசு உயர்ப் பதவியில் இருக்கிறேன் என்பதாலோ என்னை ஒரு முன் மாதிரியாக நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இன்னும் சொல்லப்போனால் எவரையும் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஒருவரின் சாதனையைப் பார்த்து வியப்படையலாம் அல்லது பாராட்டலாம். ஆனால், அவரைப்போலவே வரவேண்டும் என்று நினைப்பது பயனற்றது. ஏனென்றால் நீங்கள் வேறு, அந்தச் சாதனையாளன் வேறு. அந்தச் சாதனையாளன் திறமைகள் வேறு துறையிலும், உங்களது அடிப்படை திறமைகள் வேறு துறையிலும் இருக்கலாம். சில வேளைகளில், நீங்கள் முன்மாதிரியாக ஏற்றுக் கொண்டவரை விட அதிகமான திறமை உங்களிடத்தில் இருக்கும், அதை வைத்து அதிகமாக  உங்களால் சாதிக்க முடியும். இவரைப்போல் செயலாற்றுகிறார் என்று மற்றவர்கள் சொல்வதை விட ‘தனித்தன்மையுடன் ஜொலிக்கிறார்’ என்று இருப்பதே சிறந்தது என்று நான் கருதுகிறேன். உங்களுக்கென்று ஒரு ஆளுமையை (Personality) உருவாக்குங்கள். அப்போது உலகம் உங்களைத் திரும்பிப் பார்க்கும். உங்களுக்கு மகிழ்ச்சியும், மனநிறைவும் ஏற்படும்.

    (அ)நீச்சல்…

    சிறுவயது முதல்  ஆற்றில் நீந்துபவன் நான். எங்கள் ஊரில் எல்லோருக்குமே நீச்சல் தெரியும். ஆறு, குளம், கிணறு என்று நீந்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நான் தேசியப் போலீஸ் அகாடமியில் சேர்ந்த போது நீச்சல் தெரிந்திருந்தாலும் போட்டிகளில் வெற்றி பெற முடியவில்லை. அதன் பின்னர், நீச்சல் வீரர் செல்வராஜ் என்ற போலீஸ் காவலரிடம் முறையாக Free Style, Breast stroke, Back stroke, Butterfly  ஆகிய நீச்சல்களைக் கற்றுக்கொண்டேன்.  அதே போலீஸ் தேசிய நீச்சல் வீரர் செல்வராஜ் 1993ம் ஆண்டு சந்தனக்கடத்தல் வீரப்பனால் சத்தியமங்கலம் வனப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. அவர் தந்த பயிற்சிக்குப் பின்னர் ஐதராபாத் தேசிய போலீஸ் அகாடமியில் நடைபெற்ற நீச்சல் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று ‘RD Single Cup for Swimming’ என்ற கோப்பையை வென்றேன். அன்று முதல் இன்றுவரை நீச்சலை விடவில்லை.

    கடந்த ஓராண்டுகளாக 45 நீச்சல் வீரர்களுக்கு கமாண்டோ  பயிற்சி அளித்து வருகிறேன். இதில் 15 பேர் தேசிய நீச்சல் வீரர்கள். இவர்களுக்கு உயிர்காக்கும் பயிற்சியும் தரப்படுகிறது. மெரினா கடற்கரையில் தண்ணீரில் மூழ்குபவர்களைக் காப்பாற்ற இந்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். கடந்த அக்டோபர் மாதம் பாம்பன் பாலத்திலிருந்து குருசடி தீவுவரை 7 கி.மீ., தூரத்தை இரண்டுமணி நேரத்தில் கடந்தோம். கடந்த நவம்பர் மாதம் வான் தீவுக்கும் தூத்துக்குடி நகருக்கும் இடையிலான 8கி.மி., தொலைவை மூன்றரை மணிநேரத்தில் நீந்திக்கடந்தோம். இந்த நீச்சல் பயிற்சி, எங்களுக்கு சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கிய போது 1000த்திற்கும் மேற்பட்டவர்களைக் காப்பாற்ற உதவியது. அதுவும் எந்த இயந்திரப்படகும், இராணுவமும் வருவதற்கு முன்னரே 300க்கும் மேற்பட்டோரை எங்களது உயிர் மீட்பு படகுகள் மூலமாக நீந்திச் சென்று  காப்பாற்றினோம்.சென்னைக்கு அருகில் உள்ள மணப்பாக்கம் என்ற இடத்தில் இரண்டாவது மாடியிலும் தண்ணீர் புகுந்தது. குடும்பத்தினர் அனைவரையும் சின்னப் படகில் அழைத்து வந்து பெரியப் படகில் ஏற்றினோம். ஒரு பெண்மணி மட்டும் எனக்கு நீச்சல் தெரியும், நீந்தி வருகிறேன் என்று சொல்லி வீட்டிலிருந்து பெரியப் படகுவரை நீந்தியே வந்தார். ஆச்சரியமாக விசாரித்தேன். அவர், பெங்களூரில் பிறந்தவர், தேசிய வீராங்கனை என்று கூறினார்.நீச்சல் மட்டும் சென்னை மக்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தால், அவர்களை மீட்க இராணுவம் தேவைப்பட்டிருக்காது. வெள்ளப்பெருக்கு கூட ஒரு நீச்சல் குளமாயிருக்கும்.

    (ஆ)முடிவெடுக்கும் திறன்…

    உள்ளத்தோடு உள்ளம்

    மறக்க முடியாத பல்வேறு நினைவுகளை, சாதிப்புகளை நம்மிடையே விட்டு விடை பெற்று விட்டது 2015.

    கடந்த ஆண்டு எடுத்த உறுதி மொழிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டது. எது எது நிறைவேற்றப்படவில்லை என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்து, 2016 புத்தாண்டில் எடுத்திருக்கும் புது தீர்மானங்களை செயல்படுத்துவதற்கான வல்லமையை வளர்த்துக் கொண்டு வெற்றியாளர்களாக வலம் வருவோம்.

    “ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களோடு உலா வந்து கொண்டிருக்கிறார்.  வழியில் ஓரிடத்தில் வந்தபோது பருவநிலைமாறி, சட்டென வானவில் தோன்றுகிறது”.

    மாணவர்கள் வானவில்லை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். உடனே ஆசிரியர், “வானவில்லை” இப்படி ரசிக்கிறீர்களே, அதில் ஏதாவது லாபம் இருக்கிறதா? என்றார்.

    அதெல்லாம் ஒன்றுமில்லை ஐயா, பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது அவ்வளவுதான் என்றார்கள் மாணவர்கள்.

    “சில நிமிடங்கள் மட்டுமே தோன்றி மறையும் வானவில், பார்ப்பவர்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சியைத் தரும்போது நாம் நம் ஆயுட்காலத்தில் பிறருக்காக எவ்வளவு நல்லனவற்றை செய்ய வேண்டும் என்கிற பாடத்தை நமக்கு வானவில் தருகிறது” என்றார். உண்மையை உணர்ந்த மாணவர்கள் நிச்சயம் நாங்கள் நன்மை செய்தே வாழ்வோம் என்று உறுதி அளித்தார்களாம்.

    எந்தச் சூழலிலும் நாம், ஒவ்வொருவரும் பயனுள்ள ஒரு வாழ்க்கையை நம்மில் வாழ வேண்டும் என்கிற உறுதியான தீர்மானத்தோடு 2016 – புத்தாண்டை வரவேற்போம்! என்று ஒன்றாக நின்று நன்றாக சாதிப்போம்!

    நாகர்கோயிலில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்

    நாகர்கோயிலில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் விரைவில் துவங்க உள்ளது

    தொடர்புக்கு:

    திரு N. இதர்/ ராஜா ஸ்ரீ பூஜாலயம் கோட்டார் நாகர்கோயில், செல் : 9443109790.

    திரு R. சுரேஷ்குமார் ஆடிட்டர், நாகர்கோயில், செல் : 9443925818

    நினைப்பது நிறைவேறும்

    திருநெல்வேலி தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 31.1.2016; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.30 மணி

    இடம் : ஜாய் பட்ஸ் பள்ளி, உலக அம்மன் கோவில் அருகில், மீனாட்சிபுரம், திருநெல்வேலி

    தலைப்பு   :”நினைப்பது நிறைவேறும்”

    சிறப்புப் பயிற்சியாளர்: அருள்நிதி Jc. S.M. பன்னீர்செல்வம்

    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், கோயம்முத்தூர்

    போன் : 9566665327

    தொடர்புக்கு:

    Shanmuga sundaram – 99442 01914

    Ms. Padma – 99423 59108

    இலக்கை வெல்வோம்

    சேலம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் JCI சேலம் மெட்ரோ இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 24.1.2016; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.30 மணி

    இடம் : லட்சுமி அரங்கு, சாமுண்டி காம்ப்ளெக்ஸ்

    4 ரோடு, சேலம்-7.

    தலைப்பு   :”இலக்கை வெல்வோம்”

    சிறப்புப் பயிற்சியாளர்: திரு. சீனிவாசகர்,

    முதல்வர் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா

    தன்னம்பிக்கைப் பயிற்சியாளர்

    தொடர்புக்கு:

    Jc. G. தாமோதரன், M.Com., M.Phil. – 93601 22377

    வாழ்க்கைக் கொண்டாட்டம்

    பள்ளிபாளையம் கிளை (ஈரோடு), தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 8.1.2016; வெள்ளிக்கிழமை

    நேரம் : மாலை 6 மணி

    இடம் : M.G.V. மெட்ரிக்பள்ளி (G.V. மஹால் அருகில்)

    திருச்செங்கோடு ரோடு, பள்ளிபாளையம்

    தலைப்பு   : “வாழ்க்கைக் கொண்டாட்டம்”

    சிறப்புப் பயிற்சியாளர்: Jc. பா. திருவேங்கடம் எம். காம்

    JCI. TIRUCHENGODE KINGS, பட்டய தலைவர் 2016 மற்றும்

    மண்டல பயிற்சியாளர், திருஞ்செங்கோடு

    செல் 98432 11012

    தொடர்புக்கு:

    ஒருங்கிணைப்பாளர்: திரு. சீனிவாசன் செல்: 98435 45986

    இணைச் செயலாளர்:திரு. M. ராதாகிருஷ்ணன் செல் : 99657 95856

    PRO: JC. வைரவேல் – 73733 33777

    சென்னை தன்னம்பிக்கை வாசகர்வட்டம்

    சென்னை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் பதஞ்சலி யோகா சமிதி,

    சென்னை இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள், நேரம், இடம், தலைப்பு, சிறப்புப் பயிற்சியாளர் பற்றிய தொடர்புக்கு:

    தலைவர் R. பாலன்  94442 37917

    செயலாளர்  “மித்திரன்” ஸ்ரீராம் A.N.  94440 69302

    PRO – யமுனா கிருஷ்ணன் – 94440 29827

    ஆசைகளை அடையும் அற்புதப் பயிற்சிகள்

    திருப்பூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம், திருப்பூர் அரிமா சங்கம் மற்றும் செல்வக்குமார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், திருப்பூர் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்நாள் : 10.1.2016; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: காலை 10-30 மணி

    இடம் : அரிமா சங்க அரங்கம்

    குமரன் சாலை, திருப்பூர்

    தலைப்பு: “ஆசைகளை அடையும் அற்புதப் பயிற்சிகள்!”

    சிறப்புப் பயிற்சியாளர்: அருள்நிதி Jc. S.M. பன்னீர்செல்வம்

    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், கோயம்முத்தூர்

    போன் : 9566665327

    தொடர்புக்கு

    திரு. A. மகாதேவன் 94420 04254

    திரு. S. வெங்கடேஸ்வரன் 94423 74220